தளிர் - 12
செழியனோ அவள் இருந்த அறையை விட்டு வெளியே வந்தவனோ முன் வாசல் வழியாக செல்ல . அப்போது ஹாலில் இருந்த நபரை கண்ட இதழுக்கு தூக்கி வாரிப்போட்டது .
செழியனோ ஹாலில் இருந்த நபரை ஒரு அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றான் .
இதழோ ஹாலில் இருந்த நபரையே ஒரு பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்க .
அந்த நபரோ அங்கு இருந்து தனது அறைக்குள் செல்ல பார்க்க .
இதழோ தமிழ் என்று போகும் அவளை அழைக்க . ஆம் ஹாலில் அமர்ந்து இருந்தது அவளது தங்கையான தமிழே ஆகும் .
அவளது சித்தியோ இரவே ஒரு கல்யாணத்திற்கு சென்று விட்டார் . தமிழோ எப்போதும் போல் விடியற்காலை எழுந்து படித்துக் கொண்டிருக்க , அப்போது அங்கு வந்த செழியனை கண்டவளுக்கோ சற்று அதிரச்சியே மேலிட்டது . அவன் பின்னோடு வந்த இதழை கண்டவளோ அவளையே அழுத்தமாக பார்த்தபடி அங்கிருந்து செல்ல பார்க்க .
அவளை அழைத்த இதழோ அவளிடம் பேச வேண்டும் என்க.
இருவரும் அங்கிருந்து வீட்டின் மாடிக்கு சென்று பேசத் தொடங்க .
இதழோ அனைத்தையும் கூறிவிட்டு தமிழின் முகத்தை தவிப்பாக பார்க்க.
தமிழோ அவள் கூறியதை கேட்க கேட்க அதிர்ச்சியே ஏற்பட்டாலும் தன்னை சமாளித்துக் கொண்டு இதழை ஆழ்ந்து நோக்கியவளோ என்ன இருந்தாலும் நீ பண்ணது தப்புதான் அக்கா என்று அவள் கூற .
இதழின் உதட்டிலோ ஒரு விரக்தி புன்னகை , அது தான் எனக்கு நல்லா தெரியுமே என்று அங்கிருந்து அகன்றால் .
போகும் அவளையே விழிகளில் பார்த்தபடி இருந்த தமிழின் மனதிலோ ஆனா நீ பாவம் தான் அக்கா என்று எண்ணம் எழாமல் இல்லை .
மெல்ல மெல்ல இருள் விலகி சூரியன் மேல் எழும் நேரம் என்பதை உணர்த்தும் விதமாக அடிவானம் பொன்நிறமாக சிவந்து காட்சி அளித்தது . அதே போல் இதழும் தனது அன்றாட வீட்டு வேலைகளை அனைத்தையும் முடித்து விட்டு தனது பணிக்கு கிளம்பி செல்லத் தயாராக. அவளையே பார்த்துக் கொண்டிருந்த தமிழோ அக்கா என்று அழைக்க .
இதழோ என்ன என்பது போல் தனக்கான உணவை தனது பையில் எடுத்து வைத்தபடி பார்க்க .
தமிழோ நீ ஏன் அவர் கிட்ட இதை எல்லாம் சொல்லி அவரோட சேர முயற்சி பண்ண கூடாது என்று கேட்க
இதழோ ஒரு மென் புன்னகையுடன் எப்படி போய் சேர சொல்ற தமிழ் அவர நான் சுக்கு நூறா உடைச்சுட்டு தான் போனேன் , அந்த மனுசன் இனி எந்த விதத்துல என் மேல நம்பிக்கை வைப்பாரு சொல்லு , அவரு என்ன முழுசா நம்பினார் . ஆனா நான் என்று சொன்னவளின் கண்களோ அவனது நினைவில் சட்டென கலங்கி விட .
அவளது அருகில் வந்த தமிழோ விடு அக்கா எல்லாம் சரி ஆகிடும் என்று அவளது கையைப்பற்றிக் கொள்ள .
இதழோ கண்களை துடைத்துக் கொண்டவளோ சரி ஆகுறதுக்கு எந்த வாய்ப்பும் இல்ல தமிழ் , ஆனாலும் அவரோட இருந்த அந்த நினைவுகளோடவே நான் நல்லா தான் இருக்கேன் என்று கூறிவிட்டு புன்னகையுடன் அங்கிருந்து செல்லத் தொடங்கினால் .
வீடு என்பதை விட சிறு மாளிகை என்றே சொல்ல வேண்டும் இன்றைய நவீன கால கட்டத்திற்கு ஏற்ப சிறப்பாக வடிவமைத்து கட்டப்பட்டிருந்தது . அதன் பின் புறம் கடல் , வீட்டின் முன்புறம் பச்சை பசேலென தரைகள் , அதனை எல்லாம் கடந்து சென்றால் வீட்டிற்குள் செல்ல சில படிகள் மேலே செல்ல வேண்டும் . வெள்ளை நிறம் கொண்ட வீட்டின் வடிவமைப்பு முன்புறம் கண்ணாடி வேலை பாடுகளுடன் அதில் சில அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய மின் விளக்குகளும் , வீட்டின் அழகை மேலும் மெருகேற்றியது .
அதனுள் இருந்த அறையோ இருட்டாக காணப்பட்டது . அதே போல் தான் அவனது மனமும் . அவனது எண்ணங்களோ அவளுடன் பழகிய நாட்களை எண்ணிப்பார்த்தது. அழகிய நாட்கள் அல்லவா அவை . அவனும் ஒருத்தி மேல் அளவுக்கு அதிகமான அன்பை வைத்தான் என்றால் அது அவள் மீது தான் அல்லவா . ஆனால் அவளும் மற்றவர்கள் போல் தன்னை ஏமாற்றி விட்டாள் அல்லவா . இதுவரை அவன் யாரின் மேலும் அவ்வளவு நம்பிக்கை வைத்தது இல்லை ஆனால் அவள் மேல் வைத்தான் . அதுவும் பொய் என்று சொல்லிவிட்டு சென்றால் அல்லவா .
செழியனுக்கே புரியா நிலை நான் குடிபோதையில் ஏன் அவள் இருக்கும் வீட்டிற்கு சென்றேன் . அவளிடம் ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன் என்று நினைக்க நினைக்க அவனுக்கு அவ்வளவு கோபம் ஏறியது .
அவனது எண்ணத்தை கலைத்தது போனின் சத்தம் , அதை எடுத்து காதுக்கு கொடுத்தவனோ சொல்லுடா என்று தன் நண்பனிடம் கேட்க .
கதிரோ டேய் நைட்டு எங்கடா போன இப்போ எங்கடா இருக்க என்று சற்று குரலை உயர்த்தி கேட்க .
செழியனோ டேய் முதல்ல கத்தறது நிறுத்திட்டு எதுக்கு போன் பண்ண அதை சொல்லுடா என்று சற்று கடுப்புடன் கேட்க .
கதிரோ இப்போ எங்க இருக்க என்று கேட்க .
செழியனோ படுத்திருந்த படுக்கையில் இருந்து எழுந்தபடி ஜன்னல் அருகே சென்றவனோ அங்கிருந்து கடலை வெறிக்கத் தொடங்கின அவனது விழிகள் .
கதிரோ மீண்டும் அந்த பக்கம் கத்த செழியனோ நான் பீச் ஹவுஸ்ல இருக்கேன் என்று கூற .
கதிரோ நைட் எங்க போன என்று கேட்க
அது எதுக்கு உனக்கு , stay your limit கதிர் என்று மூஞ்சில் அடித்தபடி சொல்லிவிட .
கதிருக்கோ இது ஒன்றும் புதிது இல்லை அல்லவா , இவனை பற்றி நன்கு அறிந்தவன் அல்லவா. இவனது பேச்சு மட்டும் தான் இப்படி இருக்கும் என்று .
கதிரோ டேய் அதுலாம் இருக்க முடியாது எங்க போன சொல்லு என்று மீண்டும் கேட்க .
அதை விட மாட்டிய நீ , நான் போன வைக்கிறேன் என்று போனை வைக்கப்போக.
அந்த பக்கம் கதிரோ டேய் டேய் இருடா வச்சு தொலைச்சுராத இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு தயவு செஞ்சு வந்து சேரு என்று கூற .
செழியனோ வரேன் என்று போனை வைத்துவிட .
சிறுது நேரம் கடலையே வெறித்த வண்ணம் இருந்தவன் குளித்து தயாராகி அலுவலகம் சென்றான் .
அலுவலகம் வரும் வழியில் அவனது ஆபிஸிற்கு சிறிது தூரம் முன் ஒரு பெண்ணிடம் யாரோ வம்பு செய்து கொண்டிருக்க . அதை கண்ட செழியனோ நிறுத்தலாம் என்று நினைக்க அங்கு இருந்தவளை கண்டவனோ என்ன நினைத்தானோ கண்டும் காணாமல் சென்றுவிட .
இதழோ பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கி நடந்துவர அப்போது அவளது மாமன் ரகு மீண்டும் அவளிடம் வம்பு செய்யப் பார்க்க , அவளோ அவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்க . அப்போது தூரத்தில் இருந்து வரும் கார் செழியனுடையது என்று அறிந்து கொண்டவளோ அவன் நிறுத்துவான் என்று பார்க்க , அவனோ அவளை கடந்து சென்றுவிட . இது அவள் எதிர்பார்த்தது தான் ஆனால் நிற்பான் என்ற ஒரு குட்டி எதிர்பார்ப்புதான்.
அதன் பின் இதழோ அவனை கண்டபடி திட்டிவிட்டு அங்கிருந்து அலுவலகத்திற்குள் நுழைந்தால் .
எப்போதும் அவளது வேலை தொடங்கியது . கட்டிடத்தின் மேல் பகுதியில் தான் கேன்டீன் இருக்கிறது . Shift முறையில் வேலை நடப்பதால் அனைத்து நேரங்களிலும் உணவு இருக்கும்.
அதே போல் கேன்டீனும் shift முறையில் வேலை செய்வார்கள் . இதழின் பணி என்னென்ன உணவுகளை தயார் செய்வது , அதற்கான பொருட்கள் என்னென்ன , அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று அதனை எல்லாம் மேற் பார்வை பார்ப்பது . சில நேரங்களில் அவளும் சமைத்து கொடுப்பால் . இன்று வந்த இதழை வரவேற்றது அவள் உடன் வேலை செய்யும் கனகா என்று ஒரு முப்பத்தைந்து வயது தக்க ஒரு பெண்மணி .
குட் மார்னிங் இதழ் என்று அவர் புன்னகை முகமாக வரவேற்க .
இதழும் குட் மார்னிங் அக்கா என்ன அக்கா இன்னைக்கு உங்க முகம் என்னைக்கு இல்லாத அளவு ரொம்ப பளிச்சுன்னு இருக்கே என்று ஒரு வித கிண்டலுடன் கேட்க.
அவரோ அட போ இதழ் அப்டிலாம் ஒன்னும் இல்ல என்ன கிண்டல் பண்ணாதே என்று அவர் சிறு வெட்கம் கலந்து புன்னகை கொடுக்க .
இதழோ அட என்னக்கா இருக்கிறத சொன்னேன் என்றுவிட்டு அன்றைய பணிக்கு தாவிவிட்டனர் .
இதழோ அக்கா இன்னைக்கு மதியம் மெனு இதுதான் என்று அவளிடம் பேப்பர் ஒன்றை நீட்ட , அதை பார்த்த கனகாவோ சரி இதழ் நான் பார்த்துக்கிறேன் என்று அவர் தனது பணிக்கு தாவி விட .
அதே நேரம் அங்கு வந்த கேன்டீன் ஊழியர் ஒருவனோ மேடம் இன்னைக்கு மெனு டேஸ்டிங் என்று அவளின் முன் ஒரு தட்டை வைக்க .
இதழும் அதனை சாப்பிட்டு சரிபார்த்துவிட்டு ஓகே தம்பி எல்லாம் சரியா இருக்கு என்க. அதன் பின் அன்றைக்கான பணி பரபரப்புடன் தொடங்கியது . மூன்று நேரமும் இங்கு தான் உணவு என்பதால் கேன்டீன் எப்போதும் பரபரப்புடன் தான் இருக்கும் . அதே போல் இதழுக்கும் பணிகள் அதிகமாகத்தான் இருக்கும் .
இது செழியனின் ஏற்பாடு தான் யாரும் பசியுடன் வேலை பார்க்க கூடாது என்பது அவனது எண்ணம் .
செழியனும் அலுவலகத்தில் நுழைந்து தனது அன்றாட பணிக்கு தாவி விட .
அப்போது கதவை திறந்து கொண்டு உள் நுழைந்த கதிரோ சார் மீட்டிங் ரெடி என்று அவனை அழைக்க .
செழியனும் ஓகே என்று தனது கோர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு , கையில் இருந்து வாட்சசை சரி செய்தபடி , அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவனோ அங்கிருந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தான் .
அங்கு இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவனோ குட் மார்னிங் என்றுவிட்டு மீட்டிங் ஆரம்பித்துவிட .
ஒவ்வொருவராக தங்களது கருத்துக்களை சொல்லிக் கொண்டே வர . அதை எல்லாம் விழிகளில் ஒரு அழுத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன் .
அப்போது அங்கிருந்தவர்களுக்கு டீ மற்றும் காபி கெடுப்பதற்காக இதழும் , அவளது ஊழியர்களும் உள் நுழைந்தனர் .
இப்போது செழியனின் பார்வை இதழின் மீது அழுந்த படிந்தது .
அவனது பார்வை மட்டும் இன்றி இன்னும் ஒரு ஜோடி விழிகளும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது .
இதழோ இதை எல்லாம் எங்கு கண்டு கொண்டால் அவள் தனது பணியில் ஈடுபட்டு விட .
செழியனின் அருகில் வந்தவளோ அவனுக்கும் ஒரு கப்பை வைக்க .
செழியனோ அதை கையில் எடுத்தவனோ வேண்டும் என்றே கைத்தவறி இதழின் காலின் மேல் போட்டுவிட . கிளாஸ் விழும் சத்தம் கேட்டு அனைவரும் ஒருகணம் திரும்பி பார்க்க . அவனோ சாரி என்றுவிட்டு இருக்கையில் இருந்து எழுந்து வேறு பக்கம் சென்றுவிட . அங்கு இருந்தவர்களுக்கு கிளாசின் சத்தம் மட்டுமே கேட்டது அது இதழின் காலின் மேல் விழுந்தது தெரிய வில்லை .
இதழுக்கோ காலில் சூடான டீ பட்டவுடன் உயிர் போகும் வலி . அவளுக்கோ கண்களில் நீர் கோர்த்துவிட்டது . அனைவர் முன்னும் அதை காட்டிக் கொள்ளாதவளோ கீழ் விழுந்த கப்பை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மெதுவாக நடக்கத் தொடங்கினால் . போகும் அவளையே விழிகளில் ஒரு வித வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன் .
இதை எல்லாம் செழியனின் அருகில் இருந்தபடி கதிர் கவனித்துக் கொண்டிருந்தான் . ஆனால் செழியனின் இவ்வாறான நடவடிக்கை தான் அவனுக்கு குழப்பத்தை கொடுத்தது .
அதே நேரம் இங்கு கேன்டீன் உள் நுழைந்த இதழை கண்ட கனகாவோ என்ன இதழ் உன் முகம் ஏன் இப்படி இருக்கு என்று கேட்க .
அதே நேரம் அங்கு வந்த ஊழியன் ஒருவனோ அது அந்த சார் மேடம் கால்ல டீ கொட்டிட்டாரு என்று சொல்லிவிட .
கனகாவோ அப்போதுதான் அவளது காலைப் பார்த்தால் ஏற இதழ் கால் என்ன இப்படி சிவந்து போய் இருக்கு என்று அவளது கையைப்பிடித்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவரோ . அவளது காலுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்க .
இதழோ அக்கா அவ்வளவு ஒன்னும் வலி இல்லக்கா என்று அவரிடம் இருந்து காலை விலக்க பார்க்க .
கனகாவோ அட சும்மா இரு இதழ் கால பாரு எப்படி சிவந்து போய் இருக்கு என்று ஒத்தடம் கொடுக்க .
சரிக்கா போதும் , நான் பார்த்துக்கிறேன் என்று அவரிடம் இருந்து காலை விலக்கிக் கொள்ள .
கனகாவோ ஏன் அந்த சாருக்கு கிளாசை கொஞ்சம் பார்த்து எடுக்க தெரியாதா என்று அவனையும் ஒரு பக்கம் திட்ட .
இதழோ அவரு மீட்டிங்கள இருந்தாரு அக்கா தெரியாம தான் கைத்தவறி விழுந்துடுச்சு என்று சமாளிக்க .
கனகாவும் என்னுமோ போ பாரு இப்போ உனக்கு தான் வலி அதிகம் என்று அவர் கூற .
அவர் வலிய விட இது ஒன்னும் பெருசு இல்லக்கா என்று குரலில் ஒரு வித வேதனை கலந்து கூற .
கனககவோ அவள் கூற வருவது புரியாமல் என்ன இதழ் சொன்ன என்று குழப்பமாக கேட்க .
அதன் பின் தான் கூறியதை உணர்ந்த இதழோ அது ஒன்னும் இல்லக்கா மதிய மெனு ரெடியாகிடுச்சா என்று அவரின் கவனத்தை திசை திருப்ப .
கனகாவோ அதை மறந்து விட்டு ஹான் எல்லாம் ரெடி நீ கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து இரு எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யாத சரியா என்று அவர் உள்ளே சென்றுவிட .
காலில் இருக்கும் காயத்தை பார்க்க பார்க்க இதழுக்கு வேதனையே மிஞ்சியது . சிறிது நேரம் அமர்ந்து இருந்தவள் அதன் பின் தனது வேலையை செய்யத் தொடங்கினால் .
நேரம் ஆக ஆக இதழுக்கோ காலில் இருந்த காயம் வலியை அதிகப்படுத்திக் கொண்டே செல்ல . ஒரு கட்டத்தில் முடியாமல் அப்படியே அமர்ந்துவிட . அவள் அருகில் இருந்த ஒருவனோ மேடம் நீங்க ஓகேவா என்று கேட்க .
இதழும் நான் ஓகே என்று விட்டு பில் போடும் வேலையை செய்யத் தொடங்க . இப்படியே மாலை நேரமும் நெருங்கியது .
கேன்டீன் அடுத்த shift ஆட்களும் வந்து சேர்ந்தனர் .
கனகாவோ சரி இதழ் நாங்க கிளம்புறோம் , நீயும் எங்க கூடவே வா காலு வேற இப்படி இருக்கு எப்படி போவ அதான் எல்லா வேலையும் முடிஞ்சு தான , நைட் மெனுவும் கொடுத்தாச்சு தான இனி அவங்க அதை பார்த்துபாங்க என்று அவர் கூற .
இதழோ இன்னும் கொஞ்சம் தான் பில் மட்டும் செக் பண்ணிட்டு நானும் கிளம்பிடுவேன் அக்கா , நீங்க கிளம்புங்க என்று சொல்ல .
கனகாவோ நான் உனக்கு துணையா இங்க இருக்கவா என்று கனிவாக
கேட்க .
இதழோ அதுலாம் ஒன்னும் பிரச்சனை இல்லக்கா நான் பார்த்துக்கிறேன் என்று அவர்களை அனுப்பி வைத்தவளோ தனது பணியில் மூழ்கி விட .
சிறிது நேரம் கடந்து இருக்கும் அவளது போன் அடிக்கும் சத்தத்தில் அது யார் என்று பார்க்க . அது செழியன் என்று அறிந்து கொண்டவளோ அழைப்பை ஏற்க .
செழியனோ சாப்பாடு எடுத்துட்டு வா என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட.
இதழோ அவள் செய்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அவனது அறைக்கு சாப்பாடு எடுத்து செல்ல .
அவளுக்கு காலின் வலியோ அதிகரித்துக் கொண்டே சென்றது . மெதுவாக நடந்து ஒருவழியாக அவனது அறைக்கும் வந்து சேர்ந்தால் .
அவனது அறை தனி அறை என்பதால் அவ்வளவு சீக்கிரம் யாரும் வரமாட்டார்கள் , அதே நேரம் ஆள் நடமாட்டமும் அவ்வளவு அங்கு இருக்காது .
அறையின் கதை தட்டிய இதழோ அவனது பதிலுக்காக காத்திருக்க .
செழியனோ உள்ள வாங்க என்று அழைக்க .
இதழும் மெது மெதுவாக நடந்து சென்று அங்கிருந்த டேபிளில் சாப்பாட்டை வைத்தவளோ அங்கிருந்து செல்லப் பார்க்க . அதுவரை லேப்டாப்பில் கவனமாக இருந்த செழியனோ
அவளை சொடக்கிட்டு அழைத்து நான் உன்ன போக சொன்னேனா என்று அவளை அழுத்தமாக பார்க்க .
இதழோ இல்லை என்பது போல் தலையாட்ட .
அதன் பின் செழியன் அவளை கண்டு கொள்ளவே இல்லை . அவன் தனது வேலையில் மூழ்கிவிட .
இதழுக்கோ காலையில் இருந்து வேலைப்பார்ததால் ஏற்பட்ட கலைப்பு , அதோடு சேர்த்த கால் வலி என்று நிற்க முடியாமல் அவள் தடுமாற .
செழியனோ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க . ஒரு கட்டத்தில் முடியாமல் அவள் துவண்டு விழும் நேரம் சட்டென ஒரு வலிய கரம் அவள் இடையில் கரம் கொடுத்து தூக்கி நிறுத்தியது .
இதழும் அவனது சட்டையை இறுக பற்றிக் கொள்ள . இருவரது பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது .
அவளை தன் கைகளில் குழந்தை போல் தூக்கிச் சென்றவனோ அங்கிருந்த சோபாவில் அமர வைத்து , அவளின் கால் பக்கம் சென்று காலை தூக்கி மடியில் வைத்தபடி காயத்தை ஆராய . காயம் பட்ட இடம் சிவந்து கொப்பளங்கள் போட்டு இருக்க .
செழியனோ அங்கிருந்த மெடிக்கல் பாக்சை எடுத்து காயத்திற்கு மருந்து தடவி விட .
இதழோ அவனிடம் இருந்து காலை விலக்க பார்க்க .
செழியனோ ஏய் இப்ப என்னடி உனக்கு என்று ஒரு அதட்டல் போட .
அவளும் அமைதியாகிவிட . விழி அகலாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க .
அதை கவனித்த செழியனோ என்னடி என்று கடினக் குரலில் கேட்க .
இதழோ இல்லை என்பது போல் தலையாட்ட .
அதே நேரம் அறையை திறந்து கொண்டு உள் நுழைந்த நபரை கண்ட இதழுக்கோ சற்று பதட்டம் கூடிப்போனது .
தொடரும் ....
கதை எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க .
எனது மற்ற கதைகள்
அரசனோ என் அரக்கனோ
மாறனின் மலரிவள்
