தளிர் - 7
அந்திமாலை நேரம் என்பதை உணர்த்தும் விதமாக ஆதவன் மெல்ல மெல்ல மறையத் தொடங்க , காற்றும் மிதமாக தழுவிச் செல்ல , மாமரத்தடியில் இருவரும் நின்று இருந்தனர். அவன் வந்தவுடன் ஊஞ்சலில் இருந்து குதித்து இறங்கிய தென்றலோ அவனை பார்த்து என்ன சார் எதாவது வேணுமா என்று கேட்க
பாண்டியனோ அதுலாம் ஒன்னும் இல்ல என்று அவன் அங்கு சுற்றி பார்க்க தொடங்க , தென்றலோ அங்கு இருந்து நடக்கத் தொடங்க.
போகும் அவளையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்த பாண்டியனோ தென்றல் என்று அழைக்க .
அவளோ என்ன என்பது போல் திரும்ப ஏன் உன் முகம் வாடி இருக்கு என்று கேட்டுவிட
அதை கேட்ட தென்றலின் முகம் மீண்டும் சோர்வை தத்தெடுத்துக்கொள்ள , தொடர்ந்த தென்றலோ அது ஒன்னும் இல்ல சார் நான் வளர்த்த நாய் குட்டி இரண்டு நாளா காணும் சார் அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு என்க.
பாண்டியனோ அவளை ஆச்சர்யத்துடன் பார்க்க
ஒரு நாய்க்கு இவ்ளோ வருத்தப்படுற அளவு அந்த நாய் என்ன பண்ணிடுச்சு
என்று நக்கலாக கேட்க .
அதை எல்லாம் எங்கு கவனித்தால் எதும் பண்ணாதான் அதை பத்தி யோசிக்கனுமா , அது எதுவும் செய்யல அப்படின்னாலும் அது எனக்கு பிடிக்கும் சார் என்று அங்கிருந்து அகன்றால் .
போகும் அவளையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் . மனதிலோ மனிதர்களே எவ்வளவு செய்தாலும் அதை மறந்து விட்டு சென்று விடுகிறார்கள் , எதுவுமே செய்யாத ஒரு வாயில்லா உயிருக்கு இவ்வளவு வருத்தம் கொள்வது ஏனோ ?
It's different என்று அவளை நினைக்காமல் இல்லை .
இதை எல்லாம் யோசித்த வண்ணம் இருக்க அவனது மற்றொரு மனமோ அவளை பத்தி நீ ஏன் யோசிக்கிற இங்க எல்லாரும் துரோகிகங்க தான் யாரையும் நம்பாத என்று வேதம் ஓத , அதை கேட்டவனின் மனமோ மீண்டும் கடுமையை தத்தெடுத்துக்கொண்டது .
வீட்டிற்கு வந்த அவளை வரவேற்றது அவளது பாட்டியோ அவளை விழி அகலாமல் பார்க்க .
தென்றலோ அவரை கண்டு கொள்ளாமல் அனைத்து பணிகளையும் செய்ய .
அவளை அழைத்த பாட்டியோ தென்றல் உனக்கு இது சரியா படுதா , நீ பண்றது தப்புன்னு தோணலயா என்று கேட்க .
அவளோ எனக்கு எதுவும் தப்புன்னு தோணல , எனக்கு இது எவ்ளோ முக்கியம் அப்படின்னு உனக்கே தெரியும் , அப்புறம் எதுக்கு இதை பத்தி மறுபடியும் பேசுற என்று சற்று சினத்துடன் பேச .
பாட்டியோ வேற எதாவது முறையில கூட முயற்சி பண்ணிக்கலாம் , ஆனா இது தப்பு தென்றல் என்று அவர் கூற .
தென்றலோ வேற எப்படி இதை சரி பண்ண முடியும் சொல்லு , வேற எல்லா முயற்சியும் நான் செஞ்சு பார்த்துட்டேன் எனக்கு இருக்க ஒரே வழி இது ஒன்னுதான் என்ற சொன்னவளின் கண்களில் அவ்வளவு தீவிரம் . அதன் பின் எப்போதும் போல் அனைத்து வேலைகளும் முடித்து படுக்க சென்றவளுக்கு ஒரு போன் அழைப்பு .அதை எடுத்து காதுக்கு கொடுத்தவளோ சொல்லுங்க என்று கேட்க
அந்த பக்கம் இருந்த நபரோ எப்படி போய்ட்டு இருக்கு என்று கேட்க .
தென்றலோ எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு என்று சொல்ல .
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை முடிக்கனும் என்று அந்த நபரோ தீவிரமாக அதை சொல்ல அவளும் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டால் .
அதன் பின்னான நாட்களில் எப்போதும் போல் செல்லத்தொடங்கியது, அன்று ஒரு நாள் காலையில் தனது நடை பயிற்சியை முடித்துவிட்டு வந்தவனோ அங்கு வாசலில் கோலம் இட்டுக் கொண்டிருந்தவளை கண்டு ஒரு நொடியேனும் அசந்து தான் போனான் .
ஒரு தங்கநிற புடவை அணிந்து , தலையை தளர பின்னி இருக்க , அதிலோ மல்லிகை மலர் சூடி , அதுவோ அவள் முன்பக்கம் வந்து விழுந்தவாறு இருக்க, வேளை செய்வதற்கு ஏற்றார் போல் புடவை இடையில் ஏற்றி கட்டி இருக்க , கொடி இடை என்று சொல்வார்களே அதுபோல் வளைந்து தங்க நிறமாக மின்ன , மறைத்தும் மறையாத பெண்ணழகு, வேலையினால் வேர்த்து அவள் கழுத்தில் அங்கங்கு வழிந்தோடும் நீர்த்துளிகள் , காலை நிற குளிரில் சிவந்த இதழா , கோலத்தில் தவறு செய்ததால் உதட்டை கடித்திருப்பாளோ என்று எண்ணும் அளவிற்கு சிவந்த இதழ்கள் , அதிசயமாக மூக்கில் ஒரு வெள்ளை நிற கல் வைத்த மூக்குத்தி , அது இன்னும் அவள் முகத்திற்கு அழகை கூட்ட , கூர்தீட்டிய விழிகளுக்கு மேலும் மெருகேற்ற மைதீட்டி இருக்க அது இன்னும் பேரழகு , இரு வில் போன்ற புருவங்கள் மத்தியில் ஒரு கருப்பு பொட்டு அதன் மேல் ஒரு சந்தன கீற்று , வெயில் பட்டதால் தங்க நிறமாக மின்னும் கோதையின் மதிமுகம் இவ்வாறாக பாண்டியனின் பார்வை அவளை பார்த்த வண்ணம் இருக்க .
அதை கவனிக்காமல் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்த தென்றலோ தன் முன் தெரிந்த பாதத்தை கண்டு அவன் முகம் பார்த்தால் , முதன் முதலாக அவனை இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறால், ஆறடி உயரம் , அடர்ந்த சிகை அதுவோ அவனின் நடைப்பயிற்சியால் கலைந்து காணப்பட அதுவும் அவனுக்கு அழகுதான் , அடர்ந்த புருவம் , கூர் நாசி , இந்த முகத்தில் புன்னகை மலருமா மலராதா என்று சந்தேகம் கொள்ளும் அளவு அழுத்தமான உதடுகள் , முகம் முழுவதும் லேசாக வளர்ந்த தாடி , குளிருக்கு ஏற்ப ஆடை அணிந்து இருக்க அதுவும் அவனுக்கு பொருத்தமாகவே இருக்க தென்றலின் பார்வையோ அவனையே பார்க்க .
அவளின் பார்வையை உணர்ந்த பாண்டியனோ அவள் முன் சொடக்கிட அப்போதுதான் அவளுக்கு நினைவே வந்தது , சட்டென கீழ் இருந்து எழுந்தவளோ அவனும் குனிந்தபடி இருந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொள்ள , பின் சுதாரித்த பாண்டியனோ அவளை விட்டு விலகி வீட்டிற்குள் சென்றான் .
தென்றலுக்கு மனதில் படபடப்பு அதிகமானது , என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் அவரை இப்படியா வைத்த கண் வாங்காமல் பார்ப்பது என்னைப்பற்றி என்ன நினைத்து இருப்பார் என்று நினைத்தவளுக்கோ கன்னங்கள் இரண்டும் சிவந்து போனது .
அதே இங்கு தன் அறைக்குள் வந்த பாண்டியனுக்கு என்றும் இல்லாத ஒரு வித்தியாசமான ஒரு உணர்வு , அவனுக்கும் மனதில் ஒரு இனம் புரியாத படபடப்பு அவனிடம் .
என்றும் மலராத புன்னகை அவனின் இதழ்களில் தோன்றி மறைந்தது .
அவனும் பின் தயாராகி கீழ் இறங்கி வர தென்றலோ அனைத்தையும் எடுத்து வைத்தவாறு இருக்க, அவளோ வந்தமர்ந்த அவனிடம் முதலில் ஒரு கிண்ணத்தை நீட்ட , அவனோ என்ன என்பது போல் பார்க்க
தென்றலோ எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் சார் அதான் ஸ்வீட் என்று புன்னகை முகமாக கூற .
பாண்டியனின் முகத்திலோ எந்த ஒரு உணர்வும் இல்லாமல் வாழ்த்துக்கள் என்று அதை வாங்கி அருகில் வைத்துவிட்டு சாப்பிட தொடங்க .
தென்றலுக்கோ சப்பென்று ஆனது . அதன் பின் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு அவள் சென்றுவிட .
அவனும் சாப்பிட்டு விட்டு அங்கிருக்கும் தோட்டத்தை சுற்றிவர வெளியே சென்றான் அவனும் அப்படியே அவனது போனில் பாடலை ஒலிக்க விட்டு நடக்க தொடங்க அவன் இருக்கு இடத்திற்கு ஏற்ப ஒரு பாடல் அதை கேட்ட வண்ணம் அங்கு இருக்கும் இடங்களை சுற்றி பார்க்க தொடங்கினான் .
அதே நேரம் தென்றலும் அவனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று அவனை தேட அவன் இடம் கண்டவளோ அவனை நோக்கி நடக்க தொடங்க
அவனோ அங்கு இருக்கும் மரத்தின் மீது சாய்ந்தவாறு இருக்க அவன் காதிலோ ஒரு பாடல் வரிகள்
காவி த்துறவிக்கும் ஆசை வளர்ப்பவள்
அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் , மரணம் இரண்டும் தருபவளே
என்ற கடைசி இரண்டு வரிகளுக்கும்
காலையில் தென்றலை ரசித்ததே அவன் மனக்கண்ணில் ஓடி மறைய , இதழ்களில் அவனையே அறியாமல் ஒரு புன்னகை . அதே நேரம் அவன் அருகில் வந்த தென்றலோ அவனை அழைக்க.
அதே புன்னகையுடன் கண்கள் திறந்தவன் முன் நின்றவளை புன்னகையுடன் கைபிடித்து தன்னோடு அணைத்துக்கொண்டவனோ அவள் என்ன என உணரும் முன் இரு கைகளிலும் அவள் கன்னம் தாங்கி இதழில் அழுந்த முத்தமிட்டு , கழுத்து வளைவில் முகம் புதைத்துக்கொண்டு மல்லிகையோடு அவள் மணத்தையும் நாசியில் முகர்ந்தவாறு இருக்க , கைகளோ காலையில் இருந்து அவனை இம்சித்த இடையில் அழுந்த பதிய .
அவளிடம் அசைவு தெரிய அப்போதுதான் ஒன்றை உணர்ந்தான் இது கனவு அல்ல நிஜம் என்று .
பெண்ணவளுக்கோ அவன் அவளை தன்னோடு சேர்த்தணைத்து இதழில் முத்தமிடும் போதே அவளுக்கோ உடலில் ஒரு அதிர்வு . அவனின் இவ்வாறான நடவடிக்கையில் நடுக்கம் உண்டாக அவனை உதறித்தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்தால்.
அதன் பின்னே பாண்டியன் தான் செய்த மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் , அவனும் என்ன தான் செய்வான் ஏதோ ஒரு வேகத்தில் கனவு என்று நினைத்து நிஜத்தில் இவ்வாறு நடந்து கொண்டான் .
அவன் மனதோ என்ன செய்து இருக்கிறேன் நான் அவள் தன்னை பற்றி என்ன நினைப்பால் .
பாண்டியனோ அவளை திரும்ப அழைக்கும் முன் அங்கிருந்து ஓடியிருந்தாள் தென்றல் . அதன் பின்னான நாட்களில் அவள் அவன் வீட்டிற்கே வரவில்லை .
இதற்கு மேல் முடியாது என்றுணர்ந்த பாண்டியனோ அவள் இருக்கும் வீடு தேடி செல்ல அங்கு தென்றல் இருக்கும் நிலையை கண்டவனுக்கோ ஏகத்துக்கும் கடுப்பு ஏறியது .
தொடரும் ....
படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்கப்பா, updates சீக்கிரம் கிடைக்கும் .
