தளிர் - 6
ஏய் இதழு இன்னும் என்னடி பண்ற என்ற அவளின் சித்தியின் சத்தத்தில் தான் கண்விழித்தால் .
அதன் பின் கண் விழித்து அன்றைய பணிகளை எல்லாம் செய்யத் தொடங்கினால் . அன்று அனைத்து பணிகளும் முடிந்து அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தால் அவள் .அதே போல் அன்று தனது வேலைக்கு செல்வதற்காக பஸ்டாப் நோக்கி நடந்து கொண்டிருந்தால். அவள் சிறிது தூரம் நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டும் . அப்போது யாரோ அவளை பின் தொடர்ந்து வருவது போல் இருக்க , திரும்பி பார்க்க அவளது சித்தியின் தம்பியான சிவா அவளை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான் . அவளோ அவனை கண்டு கொள்ளாமல் நடக்க தொடங்க அவனோ வேகமாக வந்து அவள் கையை பிடிக்க
இதழுக்கோ ஒருகணம் திடுக்கிட்டுப் போனது , என்ன செய்கிறான் இவன் என்று அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளபோராட அவனோ மேலும் அவள் கைகளை இறுக்கி பிடிக்க அவனோ ஏய் இப்ப எதுக்குடி ஓவரா பண்ற நான் உன் மாமன் தான என்று அவளை பார்க்க
இதழோ ஏய் இப்ப கைய விடுறியா இல்ல, கத்தி யாரயாவது கூப்பிடவ என்று கோபமாக பேச .
அவனோ ஏய் என்னடி ரொம்ப பண்ற , என்று அவளிடம் வரம்பு மீறி பேசத்தொடங்க.
இதழோ இதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனிடம் இருந்து தனது கையை அவனிடம் இருந்து பிரித்து எடுத்து ஓங்கி அவன் கன்னத்தில் அடிக்க .
சிவாவிற்கோ அதிர்ச்சி என்னையே அடித்துவிட்டால் அல்லவா , மீண்டும் அவளிடம் ஏய் என்று நெருங்க அவளோ இப்போ போறீயா இல்ல கத்தி எல்லாத்தையும் கூப்பிடவா என்று சத்தம் போடத் தொடங்க.
அவனோ அவளையே கண்களில் கனல் பொங்க பார்த்தவாறு அங்கிருந்து அகன்றான் .
அதன் பின் இதழுக்கோ தன்னை நினைத்தே வேதனை மிஞ்சியது , அவனை தைரியமாக அடித்து துரத்தி விட்டால் தான் ஆனாலும் மீண்டும் வீட்டிற்கு சென்றால் அவன் இருப்பான் அல்லவா , மீண்டும் கண்டிப்பாக அவன் தன்னிடம் வம்பு செய்வான் என்றும் தெரியும் அல்லவா , இது இன்று நேற்று அல்ல அவள் இந்த வீட்டிற்கு வந்த நாளில் இருந்தே நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு தான் .
அதன் பின் அங்கிருந்து பஸ் பிடித்து அவள் வாரம் ஒரு முறை செல்லும் இடத்திற்கு சென்றால் அவள்.
அது ஒரு மருத்துவமனை என்பதை உணர்த்தும் விதமாக பரப்பாக இயங்கி கொண்டிருந்தது . அதன் உள் நுழைந்த இதழோ அங்கிருந்து மூன்றாவது தளத்திற்கு சென்றால் அங்கிருந்த ஒரு அறையில் சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு , உடலில் இதற்கு மேல் வலுவில்லை என்பது போல் ஒரு நபர் படுத்திருக்க
அவர் அருகில் சென்றவளோ அவரின் கைகளை பிடித்துக்கொண்டு அவர் அருகில் அமர்ந்தவளோ அவரின் முகத்தையே கண்களில் கண்ணீருடன் பார்க்க
இதழோ கண்ணீரை துடைத்துக் கொண்டு நீ எப்ப மறுபடியும் திரும்பி வருவ , இங்க கண்ட கண்டவன் எல்லாம் என்கிட்ட தப்பா பேசுறான் , நடந்துக்கிறான் என்று அந்த நபரிடம் புலம்ப அவரோ நீ சொல்வதையெல்லாம் என் ஆழ்மனம் உள் வாங்கி கொண்டுதான் இருக்கிறது என்பது போல் இமை மூடி இருக்க .
இதழோ சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு அவளது அன்றாட பணிகள் நோக்கி ஓடத் தொடங்கினால் .
அவள் வேலை செய்யும் இடத்திற்கு வர அங்கு வரவேற்ற அவரது முதலாளி நந்தன் அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து அகன்று தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள தொடங்கினால் அவள் .
அவளது வேலையோ சமைப்பதை மேற்பார்வை பார்ப்பது , பார்சலுக்கான உணவினை சரிபார்ப்பது, சில நேரம் பில் போடுவது என அனைத்தையும் செய்து கொடுப்பது தான் அவளது வேலை . சிறிய ஹோட்டல் தான் என்றாலும் உணவின் சுவை, தரம் , இரண்டும் நன்றாக இருக்கும் . அதனால் தான் அவ்வளவு பெரிய கம்பெனிக்கு கேன்டீன் ஆர்டரும் கிடைத்தது .
இதழோ அவளது இடத்தில் அமர்ந்தவாரு அன்றைய பணிகளை செய்து கொண்டிருக்க , அப்போது போன் அடிக்கும் சத்தம் கேட்க .
அதை எடுத்து காதுக்கு கொடுத்தவளோ
வணக்கம் நந்தன் ஹோட்டல்ஸ் உங்க ஆர்டர் சொல்லுங்க சார் என்று எப்போதும் போல் அவள் கேட்க
எதிர் புறம் இருந்தவனோ ஆர்டர் தான சொல்றேன் என்று நக்கல் புன்னகையில் கேட்க
அவனோ ஒரு ஐந்தரை அடியில , பாக்க சும்ம அழகா இருக்க மாதிரி ஒரு பொண்ணு வேணுமே மேடம் என்று கேட்க .
இதழுக்கோ யார் இவன் என்று தெரியாமல் , சார் நீங்க ஏதோ தப்பா நினைச்சுகிட்டு பேசுறீங்க இது ஹோட்டல் சார் என்று கூற .
அவனோ மேடம் நான் சரியாதான் கேட்கிறேன் , அங்க தான் பணத்துக்கு வேலை செய்ற நிறையா பேர் இருக்காங்க அப்படின்னு சொன்னாங்களே என்று ஒன்றும் தெரியாதவன் போல் பேச .
இதழுக்கோ அப்போதுதான் பேசுவது யார் என்று புரிந்தது . பின் சட்டென சாரி சார் நீங்க நினைக்கிற இடம் இது இல்ல என்று பட்டென போனை வைத்துவிட .
அதன் பின் மீண்டும் ஒரு போன் இது யாரோ வேறு ஒரு நபரிடம் இருந்து , இப்படி தொடர்ந்து போன் கால் வர . இதற்கு மேல் முடியாது என்று உணர்ந்தவளோ தனது போனை எடுத்துக்கொண்டு ஓய்வு அறைக்குள் நுழைந்தவளோ அவனிற்கு அழைக்க .
அவனா எடுப்பான் , வில்லாதி வில்லன் ஆயிற்றே அவளின் எண்ணையே அழுத்தமாக பார்த்தவாரு இருக்க .
பத்து முறைக்கு மேல் முயற்சி செய்தவளோ இதற்கு மேல் முடியாது என்பது போல் கடைசி முறையாக அவனின் எண்ணிற்கு அழைக்க .
இப்போது எடுத்த செழியனோ சொல்லுங்க மேடம் , யார் நீங்க எதுக்கு எனக்கு கால் பண்றீங்க என்று அவன் கேட்க .
இதழோ நான் தான் என்க
ஹலோ நான் தான் யாரு நீ முதல்ல பேர சொல்லு என்று அவன் கேட்க
கண்களை அழுந்த மூடி திறந்தவளோ நான் இதழினி பேசுறேன் என்று கூற
செழியனின் இதழ்களில் ஒரு நக்கல் புன்னகை இழையோடியது அட நீங்களா மேடம் என்று அதே நக்கலாக கேட்க
இதழோ எதுக்கு இப்படி போன் பண்ணி தொந்தரவு கொடுக்கிறீங்க என்று கேட்க .
அவனோ அட என்ன மேடம் ஹோட்டலுக்கு எதுக்கு போன் பண்ணுவாங்க ஆர்டர் கொடுக்க தான அதான் ஆர்டர் கொடுத்தோம் என்று கேட்க .
அவளோ நீங்க நினைக்கிற மாதிரி ஹோட்டல் இது இல்ல என்று கூற .
செழியனோ ஆனா நான் கேள்விபட்டவர அந்த ஹோட்டல் அப்படிதான்னு நினைச்சேன் என்று ஒரு நக்கலோடு கூற .
தொடர்ந்த செழியனோ நீ இங்க வரனும் வரல வர வரைக்கும் இப்படிதான் என்று ஒரு அழுத்தத்துடன் கூற .
இதழோ என்னால முடியாது .
ஹாஹா என்று சிரித்த செழியனோ உன்ன வான்னு சொன்னேன் என்று வில்லத்தனமாக கூற.
அவளோ என்னால முடியாது சார் என்று போனை வைத்துவிட .
அதன் பின் சிறிது நேரத்தில் அவளது ஹோட்டல் முதலாளிக்கு போன் கால் வர அவரோ என்ன செய்வதென்றே தெரியாமல் இதழிடம் வந்தவரோ .
எம்மா இதழு யாரோ போன் போட்டு நம்ம ஹோட்டல பத்தி தப்பு பேசுறாங்க மா இங்க என்ன நடக்குதுன்னு தெரியலயமா என்று அவர் புலம்ப .
இதழோ இதற்கு மேல் முடியாது என்பது அங்கிருந்து முதலாளியிடம் சொல்லிவிட்டு அவனது அலுவலகம் நோக்கி புறப்படத்தொடங்கினால் .
சிறிது நேரம் கழித்து அவனது அலுவலகம் வந்து சேர்ந்தவளோ அங்கிருக்கும் கேன்டீன் நோக்கி சென்றவளோ அங்கிருக்கும் இடத்தில் அமர்ந்து கொள்ள
அதன் பின் சிறிது நேரம் கழித்து , அவளின் போனிற்கு அழைப்பு அதை எடுத்து பேச , மறுபக்கம் இருந்தவனோ ரூமுக்கு வாடி என்ற அதட்டலோடு போனை வைத்துவிட
இவளுக்கோ எரிச்சலே மிஞ்சியது அவன் பேச்சில் . ஒரு காபி எடுத்துக் கொண்டு அவனின் அறைக்குள் செல்ல .
அவன் அறையின் முன் நின்று இருந்த அவன் நண்பன் கதிரோ சார் மீட்டிங்கள இருக்கார் நீங்க இங்க நில்லுங்க என்று அவளை வெளியே நிற்க வைத்துவிட்டு அவன் உள்ளே சென்றுவிட .
இதழுக்கோ அவனது நடவடிக்கையில் கோபமும் அழுகையும் ஒரு சேர வர பார்க்க, அதை உதட்டை கடித்து கட்டுப்படுத்திக் கொண்டவளோ அப்படியே நிற்க . கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் அப்படியே நின்று இருக்க அவளுக்கோ கைகளில் ஒரு டிரேவுடன், அப்டியே நிற்க நிற்க கால்களில் வலியே மிஞ்சியது . அங்கு அமர்வதற்கு கூட எதுவும் இல்லை என்பதை விட , எதையும் அவன் அங்கு இருக்க விடவில்லை என்பதே உண்மை .
இதழோ கால்களை மாற்றி மாற்றி நின்று கொண்டு இருக்க . அதே நேரம் அவளை அறையின் உள் இருந்த கேமராவில் பார்த்துக் கொண்டிருந்த செழியனின் முகத்தில் அப்படி ஒரு கோபம் கலந்த பார்வை .
அதை கண்ட கதிரோ ஏன்டா இப்படி பண்ற பாவம் இல்ல உள்ள கூப்பிடுடா என்று அவன் கூற .
அவனை அழுத்தமாக பார்த்த செழியனோ உள்ள வாங்க என்று அவளை அழைக்க .
இதழோ உள்ளே வந்து அவனிடம் காபியை கொடுக்க .
அதை வாங்கிய செழியனோ அதை குடித்துவிட்டு இது என்ன காபி சூடு இல்ல , எனக்கு வேற காபி வேணும் , கோபத்துடன் கத்திவிட்டு அதை அங்கிருந்த குப்பை தொட்டியில் வீசியவனோ அவளையே கண்களில் கனல் பொங்க பார்க்க .
அவளோ அவனையே பார்த்தவாரு மீண்டும் கீழே சென்று அடுத்த காபியை எடுத்துக் கொண்டு வர . அதை வாங்கி குடித்தவனோ அவளையே விழி அகலாமல் மேல் இருந்து கீழாக பார்க்க . அவளோ அவனின் பார்வையில் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள .
கதிரிடம் வேலை சொல்லி அவனை வெளியே அனுப்பியவனோ ,சேரில் இருந்து எழுந்து அவள் இருக்கும் இடம் நோக்கி நடந்து வர அவளோ அவன் வர பின்னோக்கி நடந்து சென்றவளோ சுவரில் முட்டி நிற்க .
செழியனோ அவளின் இருபக்கமும் கைகளை வைத்தவனோ அவள் முகத்தையே பார்க்க .
இதழோ தலையை குனிந்தவாறே இருக்க.
செழியனோ அவள் முகம் நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவனோ . அவள் கண்ணோடு கண் பார்த்து .
தன் ஒற்றை விரல் கொண்டு அவள் நெற்றி தொட்டு மெல்ல மெல்ல அவள் கண்கள் வருடி , கன்னம் தொட்டு , இதழின் மென்மை அறிந்து , அவள் கழுத்தில் கோடாக கீழ் இறங்கி அவள் கழுத்தில் ஒழிந்து இருக்கும் ஒரு பொருளை வெளியே எடுத்து போட .
இதழுக்கோ அவன் தன்னருகில் வர வரவே உடல் அதிரத் தொடங்கியது . அவன் அவள் நெற்றி தொடும்போதே கண்கள் இறுக மூடிக் கொள்ள. சிறிது நேரம் கழித்து எந்த அசைவும் இல்லை என்பதை உணர்ந்த இதழோ கண்களை திறக்க
செழியனின் பார்வை முழுவதும் அவளின் கழுத்தில் இருந்து மார்பு வரை நீண்டு இருக்கும் அவளது தாலி மீதே நிலைத்து இருந்தது .
அவனின் பார்வை சென்ற இடத்தை கண்ட இதழுக்கோ தூக்கி வாரிப்போட்டது , அவளோ அதிர்ச்சியுடன் அவனை நோக்க .
செழியனோ அவளின் தாலியை கைகளில் எடுத்து கல்யாணம் ஆகிடுச்சா என்று அவளை அழுத்தமாக பார்க்க.
இதழுக்கோ என்ன சொல்வதென்றே தெரியா நிலை
தொடரும்...
