Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 5

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 9 months ago
Messages: 9
Thread starter  

தளிர் - 5 

 

இவ்வாறாக பூஞ்சோலையில் பாண்டியனின் நாட்கள் கழிய . அன்றைய தினத்திற்கு பின் தென்றல் ஒவ்வொரு விதமாக அவனை ஈர்க்கத் தொடங்கினால். அவனே அறியாமல் அவளிடம் வீழத்தொடங்கினான். அவனே ஒரு புரியாத புதிர் அதில் அவளும் ஒரு விடை தெரியா புதிராக அல்லவா இருக்கிறாள் .

 

அன்று காலை சூரியன் உதயமாகி அவனின் பணிகளை செவ்வனே தொடங்கிவிட , அந்த வீட்டை சுற்றிலும் தென்னை மரங்கள் , அதன் ஒரு பகுதியில் ஒரு பெரிய மாமரம் , வீட்டின் பின் ஒரு கிணறு , அதன் பின் சுற்றிலும் காடு , அதன் மத்தியில் ஒரு பழங்கால வடிவிலான ஒரு வீடு , பார்ப்பதற்கு அழகாகவும் அதே சமயம் பிரம்மாண்டமாகவும் காட்சி அளிக்கும் . 

 

இரவில் அந்த வீட்டை யாரேனும் பார்த்தால் கண்டிப்பாக பயந்து தான் போவார்கள் , காரணம் இரவில் அதன் தோற்றம் அப்படி இருக்கும் , அதுவும் ஊரின் ஒதுக்கு புறம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி இன்னும் கொஞ்சம் மிரட்ட தான் செய்யும் .

 

 

அந்த வீட்டின் உள் நுழைந்தால் முதலில் ஒரு பெரிய ஹால் , அங்கு அமர்வதற்கான இடங்கள் , அதில் சுற்றிலும் அழகிற்கு வைக்கப்பட்டு இருக்கும் பொருட்கள் , ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் பூ ஜாடிகள் அதிலும் அன்றைய மலர்கள் காலை நேரத்திற்கு ஏற்ப புத்துணர்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருந்தன .

 

அதன் ஓரம் மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு அதனை கடந்து மேல் சென்றால் அங்கு மூன்று அறைகள் அதில் இரண்டாவது அறையில் தலையணை அணைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தான் பாண்டியன் . 

 

அவனின் நாசியை ஏதோ ஒரு நறுமணம் தழுவ லேசாக கண் விழித்து பார்க்க , விடிந்தது என்பதை உணர்த்தும் விதமாக சூரிய வெளிச்சம் அந்த அறையில் உள் நுழைந்து கொண்டிருந்தது , அதே போல் அந்த தோட்டத்தில் இருந்த பறவைகளின் சத்தம் காலை நேரத்திற்கு ஏதோ கானம் பாடுவது போல் காதிற்கு இனிமையை தந்தது . 

 

அதை எல்லாம் உணர்ந்து எழுந்தவனோ லேசாக கண்விழித்து படுக்கையில் இருந்து எழுந்தவனோ அங்கிருந்த ஜன்னல் அருகே சென்று ஜன்னல் துணியை விலக்கி வெளி உலகத்தை எட்டி பார்த்தான் .

 

அதுவும் சுற்றிலும் தென்னை மரம் என்பதால் குளிர்ந்த காற்று இதமாக அவனை தழுவிச் சென்றது , அதை கண் மூடி ரசித்தவனோ , சிறிது நேரம் அப்படியே நிற்க . 

 

மீண்டும் அவனின் கவனத்தை கலைத்தது அந்த மணம் , அது வந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான் பாண்டியன் . அவன் மேல் இருந்து கீழ் இறங்கி வர வீடே ஏதோ புகைமூட்டம் சூழ்ந்தது போல் காட்சி அளித்தது . அதை கண்டவனுக்கோ சுர் என்று ஒரு கோபம் ஏறத் தொடங்கியது . அதுவோ சாம்பிராணியின் மணம் அதுவோ வீடே முழுவதும் மணம் பரப்பிக் கொண்டிருக்க , மற்றவர்களுக்கு அது நல்ல மனநிலையை கொடுக்கும் . ஆனால் பாண்டியனுக்கோ அது எரிச்சலைத்தான் கொடுத்தது .

 

அதே எரிச்சலோடு தென்றல் என வீடே அதிரும் படி சத்தமிட .

 

தென்றலோ அப்போதுதான் வாசலில் கோலம் இட்டுவிட்டு உள் நுழைய , அவன் சத்தத்தில் அப்படியே ஓடி வர , தரையில் போடப்பட்டு இருக்கும் கால் மிதி தடுக்கிவிட பொத்தென மலர் குவியல் போல் அவன் மேல் சரிந்தால் .

 

எரிச்சலில் கண்களை கசக்கி கொண்டிருந்த பாண்டியனோ , அவள் வருவது தெரியாமல் இருக்க , திடீரென யாரோ தன் மேல் சாய்வது உணர்ந்து சற்று நிலைத்தடுமாறி பின் சுதாரித்து அவளை இடையோடு தூக்கிக் கொண்டான் . 

 

தென்றலோ தான் விழுந்து விடக் கூடாது என்று அவன் டீ சர்ட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்கள் மூடியபடி இருக்க .

 

பாண்டியனோ அவள் முகத்தை அவ்வளவு அருகில் இப்போதுதான் பார்க்கிறான் . வட்ட முகம் , நிலவை பாதி வெட்டி வைத்தது போல் ஒரு நெற்றி , அதிலோ மழைச்சாரல் அடித்தால் நீர்த்துளிகள் விழுமே அது போல் வியர்வை அரும்பி இருக்க. 

திருத்தப்படாமல் அவ்வளவு நேர்த்தியாக வில் போன்று வளைந்து இருக்கும் புருவம் , அதன் கீழ் விழிகளுக்கு உவமை பல உண்டு அதில் இவள் விழிகளோ மான் விழி போல் மருண்ட விழி , பனியால் சிவந்து போன நாசி , செந்தாமரை போல் சிவந்து காணப்பட்ட இதழ் , தொட்டால் நான் சிவந்து விடுவேன் என்பது போல் கன்னம் , பாண்டியனின் பார்வை இவ்வாறு இருக்க 

 

தென்றலோ அப்போது தான் உணர்ந்தால் தான் இன்னும் விழவில்லை என்று , மெதுவாக கண் திறந்தவளோ பாண்டியனின் முகம் .

 

இருவரது விழிகளும் ஒரு நொடி ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டன. 

 

அவ்வளவு நெருக்கத்தில் கண்டவளோ சட்டென அவனிடம் இருந்து பிரிந்து நின்று கொண்டால். 

 

அதன் பின்னே பாண்டியன் உணர்ந்தான் தான் ஒரு பெண்ணை இவ்வளவு ஆழ்ந்து நோக்குகிறேனா என்று.

 

அதன் பின்பே உணர்ந்தான் தான் எதற்கு அவளை அழைத்தோம் என்று 

மீண்டும் கோபத்தை தத்தெடுத்துக் கொண்ட அவனது முகமோ . 

 

ஏய் என்ன இது வீடு முழுக்க புகைய போட்டு வச்சிருக்க என்று அவன் அவளை திட்ட .

 

அவன் அதட்டலில் பயந்த தென்றலோ அது அது என்று தடுமாற. 

 

அவனோ என்ன அது அதுன்னு சொல்லு என்க 

 

சார் அது இன்னைக்கு வெள்ளிக்கிழமை சார் அதான் சாம்பிராணி போட்டேன் என்று தட்டு தடுமாறி கூறிவிட 

 

அவனோ அதுலாம் உன் விட்டோட இருக்கட்டும் இங்க அதுலாம் இருக்க கூடாது , என் வீட்டுல அதுலாம் இருக்க கூடாது, உனக்கு என்ன வேலையோ அதை மட்டும் செய் என்று அவளை கடுமையாக எச்சரித்து விட்டு அங்கிருந்து அகன்றான் . 

 

அவளுக்கோ அவனின் பேச்சில் முகமோ தொட்டாச்சிணுங்கி போல் வாடிப்போனது . அதன் பின் அவளும் தன் அன்றாட வேலைகளில் ஈடுபடத் தொடங்கினால் .  

 

அங்கு இருந்து மேல் வந்தவனுக்கோ தன்னை நினைத்தே ஆச்சர்யம் , என்ன செய்கிறேன் நான் என்று , தன்னையும் மீறி அவளை அவன் மானம் நாடிச் செல்கிறது அல்லவா அதனால் தான் இந்த சினம் . 

 

அதே நேரம் தென்றலோ நான் நல்லதுதான் தானே பண்ணேன் , எதுக்கு இந்த மனுசன் எதுக்கு திட்றாரு என்று முனகி கொண்டே அங்கிருந்து அகன்றால் . 

 

இவ்வாறாக நாட்கள் கழிய அவளோ அவனிடம் எதற்காகவது திட்டு வாங்கி கொண்டே இருக்க .

 

ஒரு அளவிற்கு மேல் பொறுக்க முடியாத தென்றலோ எதுக்கு சார் சும்மா திட்டுறீங்க நான் எல்லாத்தையும் நல்லாதான் செய்வேன் நீங்க அதுல குறை கண்டு பிடிக்காதீங்க என்று அவனிடம் கோபத்துடன் கூற 

 

பாண்டியனோ ஆமா எங்க செய்ற எல்லாத்துலயும் எதாவது ஒரு குறை இருக்க தான் செய்து அப்புறம் அதை சொல்லாம என்ன பண்றது என அவன் கூற , அவனே அறியாமல் அவளை திட்டிக் கொண்டும் , சீண்டிக் கொண்டும் இருக்க அவனுக்கு அவ்வளவு பிடித்து இருந்தது . 

 

அவனுக்கே தெரியும் பெண்ணவள் அனைத்து வேலைகளிலும் சரியாக இருக்கிறால் என்று , இருந்தும் அவளை வம்புக்கு இழுப்பான் .

 

அவனுக்கே தன்னை நினைத்து ஆச்சர்யம் தான் , தான் ஒரு சிறு பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொள்வேன் என 

 

அவளின் சிறு பிள்ளைத்தனமான செயல்கள் , கள்ள கபடம் இல்லாத சிரிப்பு, பிறரிடம் காட்டும் பரிவு , என அனைத்தும் அவனை ஈர்த்துக் கொண்டது . 

 

அன்று மாலை நேரம் அந்த மாமரத்தில் இருக்கும் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தால் அவள் , அவளை மேல் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் பாண்டியன் பெயருக்கேற்றார் போல் தென்றல் போலத்தான் அவளது தோற்றம் , ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைந்தாட அவள் ஆடுவதற்கு ஏற்ப அவளது கூந்தலும் மயில் தோகை போல் விரிந்தாடியது, பூவிரல்களோ ஊஞ்சலின் கையிற்றை இருபக்கமும் பற்றி இருக்க , பாதமோ செந்தாமரை பாதமோ நிலமகள் நோக்கி தலைவணங்கி இருக்க , பாண்டியனோ மேல் இருந்து கீழாக அவளை பார்வையால் வருடிக்கொண்டே வர அவனின் பார்வையோ ஒரு நொடி அவளின் மேகத்தில் மறைந்து கொண்டு தெரிந்தும் தெரியாமல் காட்சி கொடுக்குமே நிலவு அதுபோல் தெரிந்தும் தெரியாமலும் இருந்த இடையில் ஒரு கணம் பார்வை படிந்து மீண்டது .

 

பாண்டியனோ அவனே அவன் தலையில் தட்டிக்கொண்டு இது தவறான செயல் யாரென்று கூட தெரியாத பெண்ணை இவ்வாறு பார்ப்பது தவறு என்றுரைத்தாலும்,  

 

மனமோ நான் ரசிக்க தானே செய்தேன் தவறாக பார்க்கவில்லையே என்று சமாதானம் செய்ய , அவனது மூலையோ இது தவறு என்று மீண்டும் அவள் முகம் நோக்கினான் .

 

அவளது முகத்தில் ஏதோ ஒன்று குறைந்து காணப்பட்டது . ஆம் அவள் முகத்தில் சிறிதும் புன்னகை என்ற ஒன்று இல்லை , எப்போதும் சூரியன் கண்ட தாமரை போல் பூவாக மலர்ந்து சிரிப்பாலே இன்று அதை காணவில்லை அல்லவா . அவனும் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறான் காலையில் இருந்து ஏதோ ஒன்றை இழந்தது போல் அல்லவா அவளது முகம் வாடிக்காணப்படுகிறது. 

 

மேல் இருந்து கீழ் இறங்கி அவளிடம் வந்தவனோ என்ன ஆயிற்று என்று கேட்க .

 

அவளோ அதனை கூற . பாண்டியனுக்கோ அதை கேட்க கேட்க அதிர்ச்சியே மேலிட்டது .

 

தொடரும் ... 

 

Full story பிரதிலிபி ல இருக்கு ... படிக்கிறவங்க அங்கயும் படிக்கலாம் friends 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top