இராவணா 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 216
Thread starter  

அத்தியாயம் 3

 

 

“ம்ம.. மா.. மாமா..” என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவே இல்லை. 

 

அவன் எதற்கு தன்னை இப்படி முறைத்து பார்க்கிறான் என்று அவளுக்கு தெளிவாக புரிந்ததினால்..!

 

“அது.. வந்து.. ஹான்.. நீங்க தான்.. விசா அக்காவை என்கேஜ்மென்ட் பண்ணிக்க போறேன்னு சொன்னீங்க இல்ல.. அதான்.. நான்.. தனி ரூம்..” என்று ஒரு வழியாக தான் செய்ததற்கான காரணத்தை அவள் கூறி விட...

 

அப்பொழுதும் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. அவளை கூர்ந்து பார்த்தபடி அழுத்தமான காலடிகளோடு அவளை நெருங்கினான்.

 

‘ம்ப்ச்.. ஏன் டி பிரக்யா இப்படி பண்ணி அவர்கிட்ட வசமா மாட்டிக்கிற? இப்ப என்ன பண்ணி வைக்கப் போறார்னே தெரியல.. எப்ப என்னை கூப்பிட அமெரிக்கா வந்தாரோ அப்பத்தில இருந்து அவரோட நடவடிக்கைகளில் நிறைய மாற்றம்..! எதிர்த்து கேள்வி கேட்க முடியாத சிட்சுவேஷன்ல நானு..! பிரகதீஷா…!’ என்று அவள் மனதில் அந்த சிவனை துணைக்கு அழைக்க..

 

“வேண்டுதல் எல்லாம் முடிச்சிட்டியா?” என்றபடி அவளை நெருக்கமாக நெருங்கி நின்றவன்,

 

“நீ ஒப்பலைனாலும் நானும் நீயும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் தான்..! 

 

உன்கிட்ட இப்ப இல்ல மூணு வருஷம் முன்னாடி நம்ம கல்யாணம் முடிஞ்ச போதே சொல்லி இருந்தேன்.. இதுதான் உன்னுடைய ரூம். ஐ மீன் அவர்ஸ்..! அதை எக்காலத்திலும் நீ மறக்கக்கூடாது..! மறுக்க கூடாதுனு..!” அவனின் வார்த்தைகளில் வேக வேகமாக அவள் தலையாட்டினாலும்..

 

அவளின் மனதோ 'நாளைக்கு விசாக்காவை கல்யாணம் பண்ணி இந்த ரூமுக்குள்ள நீங்க குடித்தனம் நடத்தினாலும் நானும் இங்கே தான் வந்து ஸ்டே பண்ணனுமா மாமா?' என்று அவனுக்கு கவுண்ட்டர் அடிக்க தவறவில்லை..!

 

ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தவன், “அந்த கவலை உனக்கு வேணாம். அவளை வேற ரூம்ல நான் வைச்சுக்குவேன். இந்த வீட்ல ரூமுக்கு பஞ்சமா என்ன?” என்று கேட்டான் கதிர்நயனன்.

 

‘வழக்கம் போல மைண்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணிட்டாரு.. அவ்வ்..!’ என்று முணுமுணுத்தவள், 

 

ஒரு அசட்டு சிரிப்போடு “நான் குளிக்கப் போறேன்” என்று அவசரமாக குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

“திங்ஸ் எடுக்காம குளிக்க போறா லூசு.. இதுல இவெல்லாம் ஒரு டாக்டர்..!” என்று இடவலமாக தலையாட்டிக் கொண்டான், 

 

‘குளித்து முடிச்சு ஃப்ரஷா அவள் வரும்போது இருக்கலாமா? அவள் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?’ என்று மனம் ஒரு புறம் அவனை சலனப்பட வைக்க..

 

“சாமி போதும் கிளம்பு..! மூணு நாளா நீ அவளை போட்டு படுத்துற பாடு..!” என்று அறிவு எச்சரிக்கை செய்ய.. சிகையை கோதிக்கொண்டவன் அவளுக்கு கொஞ்சம் தனிமை கொடுக்க வேண்டி வெளியே சென்று விட்டான்.

 

“நயனா..!” என்ற தாயின் அழைப்பில் அவர் அறைக்கு சென்றவனை கைகளை நடுங்க இறுக பற்றிக் கொண்டு 

 

“இனிமே சின்னு நம்ம கூட தானே இருப்பா?” என்று அதிக எதிர்பார்ப்போடு கண்களில் அன்பை தேக்கி கேட்டவரை கண்டவன் கண்களை ஒரு வினாடி மூடி திறந்து “கண்டிப்பா நம்ம கூட தான் இருப்பா.. உமையா..!” என்றான்.

 

அவருக்குமே இவ்வளவு நாட்களாக பிரிந்து இருந்த பேத்தி தன்னோடு இருந்தால் போதும் என்றே இருந்தது..! 

 

“அது போதும் நயனா.. அவளை மறுபடியும் விட்டுடாத..!” என்று மகனின் கைகளை இறுக்கமாக பற்றிக் கெஞ்சுதலாக கேட்டார்.

 

“ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு மறதி ஆகாது மா..! என்னவோ நான் அவளை விட்டு விட்ட மாதிரி பேசுறீங்க.. அவதான் என்னை விட்டுட்டு இத்தனை வருஷம் போய் இருந்தா?” என்று சற்று கோபமாக பேசியவனை கண்டதும் பர்வதம் முகத்தில் வருத்தம் இழையோட..

 

“நீங்க கவலைப்படாதீங்க மா. நான் பார்த்துக்குறேன். உங்க செல்லப்பேத்தி இனிமே உங்க கூட தான் இருப்பா.. சரியா? இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிட இறங்கி வருவா.. அவளுக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சு வைக்க சொல்லுங்க..!” என்றவன் தாயின் கன்னத்தை வருடி சென்றான்.

 

பிரக்யா அவரின் பேத்தி தான்..! ஆனால் அதை தாண்டியும் உரிமையான உறவாக அவள் தன் மகனின் மனைவி அல்லவா? தன் மருமகள் அல்லவா?

 

கல்யாணம் எந்த சூழ்நிலையில் நடந்திருந்தாலும் தன் மகனின் மனைவி அவள் என்பது மறுக்க முடியாத நிதர்சனம்..!

 

ஆனால் இவர்களுக்குள்ளே எல்லாம் சரியாகி விட்டதா என்ன? என்ற கேள்விக்கும் அவரிடம் இப்பொழுது பதில் இல்லை..!

 

அதை மகனிடம் கேட்கவும் அத்தனை தயக்கம் அவருக்கு..!

 

எது எப்படி ஆகினும்,மகனுக்கு மனைவியாக இல்லாவிட்டாலும் தனக்கு மருமகளாக இருக்காவிட்டாலும் பரவாயில்லை, தன் செல்லப்பேத்தி தன்னுடனே இருந்து விட வேண்டும் என்ற பேராசை அந்த முதியவருக்கு.

 

“சுகந்தி..” என்று அழைத்துக் கொண்டே சமையலறைக்கு சென்றவர் பேத்திக்கு பிடித்த பதார்த்தங்கள் எல்லாம் தயாரா என்று பார்த்தார்.

 

“ம்மா.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க பேத்தியோட வீட்டுக்கு வந்துருவேன்” என்று அவருக்கு மகன் ஃபோன் பண்ணி சொல்லும்போதே..

 

‘என் பேத்தி மட்டும் தானா நயனா? உன் பொண்டாட்டி இல்லையா?' என்று நாக்கு துடித்தது கேட்க..!

 

ஆனால் இம்மட்டிலும் இருவரும் சேர்ந்து வருகிறார்களே.. அதுவும் பேத்தி எந்த வம்பும் பண்ணாமல் கணவனோடு வருகிறாளே.. இப்போதைக்கு இதுவே போதும் என்று எதையும் கேட்கவில்லை அவர்.

 

அப்பொழுதே அவளுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் செய்ய சொல்லி ஆவணம் செய்து விட்டார். 

 

“பெரியம்மா நீங்க சொன்னது மாதிரியே நம்ம சின்ன பாப்பாவுக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சு 

வைச்சுட்டேன்..” என்று அங்கிருந்த பதார்த்தங்களை எல்லாம் மூடி வைத்திருந்த தட்டை நீக்கி சுகந்தி காட்ட, எல்லாம் திருப்தியாக இருந்தது அவருக்கு.

 

“நான் பக்கத்துல கோயில் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்.. பிள்ளைங்க சாப்பிட வந்தா அவங்களுக்கு நீயே பரிமாறு சுகந்தி” என்றவர் செல்ல..

 

“பெரியம்மா உங்களுக்கு துணைக்கு..” என்று சுகந்தி அவர் பின்னே வர..

 

“அடி போடி..! இனிமே எனக்கு எதுக்கு துணை? நான் நல்லா தான் இருக்கேன்.. அதான் என் பேத்தி என்கிட்ட வந்துட்டாளே..” என்றபடி வயது குறைந்தது போல வேக நடையோடு கோவிலுக்கு செல்பவரை பார்த்து புன்னகையோடு நின்றார் சுகந்தி, அந்த வீட்டில் பல ஆண்டுகளாக பணிபுரியும் நம்பிக்கையான ஆள்.

 

“சொல்லுக்கா.. ஹான்.. வந்துட்டோம் வந்துட்டோம்..! இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தோம். உமையாவா? அவ ரூம்ல இருக்கா?” என்று பேசிக்கொண்டே அன்னையின் அறைக்கதவினை திறந்து, உள்ளே சென்று பார்க்க அவர் அங்கே இல்லை.

 

“அம்மாவா? ஃபோன் எடுக்கலையா? தெரியலையே நான் இப்பதான் வீட்டுக்குள்ள வரேன் வெளியில போயிருந்தேன்..” என்றவன்,

 

“சுகந்தி அக்கா..” என்று அழைக்க சமையலறையில் இருந்து எட்டி பார்த்தவரிடம் ‘அம்மா எங்கே?’ என்று சைகையால் கேட்டான். 

 

“அவங்க கோயிலுக்கு போய் இருக்காங்க தம்பி” என்றார் அவரும் மெதுவாக..!

 

"இவங்கள.." என்று பல்லை கடித்தவன் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ..

 

“விடு விடு..! நீ ரொம்ப பொறியாத.! அவங்களே வந்துருவாங்க இப்ப நான் அங்க போனாலும் அவங்களா நினைச்சா தான் வருவாங்க.. நிறைய வேண்டுதல் வைச்சிருக்காங்க அதை எல்லாம் அந்த சிவன் கிட்ட இறக்கி வைச்சிட்டு தான் வருவாங்க..! சரி அப்புறம் பார்க்கலாம்..” என்று ஃபோனை வைத்து விட்டான் கதிர்நயனன்.

 

பின்பு போனை இரு விரல்களில் சுற்றிக்கொண்டே மாடி ஏறி தங்கள் அறையின் முன் வந்து நின்றவன்,

 

‘திறக்கலாமா? வேண்டாமா?’ என்று ஒரு நொடி யோசித்தவன் பின்பு வேகமாக கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவன், மனைவியின் அழகில் ஒரு நொடி ஸ்தம்பித்தான்.

 

குளித்துவிட்டு வந்த பிரக்யா அன்றலர்ந்த மலர் போல் இருந்தாள். புடவையில் அதீத பூரிப்பில் மிளிர்ந்தாள் பெண்..!! 

 

மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இப்பொழுது அவளது அங்க லாவண்யங்களில் அதிக மாற்றங்கள்..! சிறு பெண் தோற்றத்திலிருந்து இப்பொழுது குமரி என்ற வசீகரத்தோடு தோற்றமளிக்க.. தன்னவளை கண்களால் விழுங்கியப்படியே அவளை நெருங்கினான் கதிர்நயனன்.

 

புடவையில் அவள் மென்மைகள் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு விலகி நின்றன..!

 

இடையின் இடைவெளியில் தெரிந்த அந்த இளமையின் செழுமைகள் பெண்மையின் திரட்சியுடன் இருக்க.. அது நயனை பெரு மூச்சுவிட வைத்தது. 

 

இன்னும் கூடலில்லா வாழ்வு மட்டுமே அவர்கள் வாழ்ந்தது அல்லவா?

 

மனைவியின் பெண்மையின் மென்மையை உணர அவனின் ஆண்மை வெகுவாக ஏங்கியது..!!

 

சேலையின் இடைவெளியில் தெரிந்த அவள் ஆலிலை வயிறும் அதன் நடுவில் ஆழமாக குழிந்திருந்த அவள் நாபி குழியும் அவனை மெய்மறக்க வைத்தது.. அவற்றை ருசிக்க நாவில் எச்சில் ஊற வைத்தது..!!

 

ஏற்கனவே சற்று பூசினாற் போல் தான் இருப்பாள். இப்போது அவையெல்லாம் கரைந்து சிற்றிடை அவனைப் பார்த்து சிரிக்க.. அவளின் சிவந்த இடையோ ‘என்னைக் கிள்ளிப் பாரேன்!’ என்று அழைத்தது அவனை..

 

அவள் திரும்பி நடக்க அவளுடைய பின் அழகுகள் மேலும் கீழும் மாறி மாறி அசைந்து பைத்தியக்காரன் ஆக்கியது அவனை..! 

 

விரித்துப் போட்ட அவள் கற்றை கூந்தலிலிருந்து வடிந்த நீர் அவள் முதுகு பிரதேசத்தில் வழிந்து அதன் செழிப்பை படம் போட்டு காட்டி அலைகழித்தது அவனை..!

 

அவளோ முடியை முன்னால் போட்டு துண்டால் துவட்டிக் கொண்டிருக்க..

 

பரந்த மெல்லிடைப் பிரதேசம் என்னை தடவிப் பார் என்று பல அழைத்து அவனை..!

 

“என்ன இவ.. இப்படி பாடாய்படுத்துறா பார்த்த இரண்டு நாளிலேயே..” என்று சிகையை கோதிக் கொண்டவன் “இது சரி வராது..” என்று திரும்பிப் போக எத்தனிக்க..

 

“மாமா..” என்றவளின் செவ்விதழ்களின் அழைப்பில் திரும்பி பார்த்தான் நயனன்.

 

“ஆதிராவும் ஆர்யாவும் எங்கே? இங்க இருக்காங்களா அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்களா?” என்று அவள் கேட்டாள்.

 

ஆனால் அவனின் கவனம் எல்லாம் அசைந்த அந்த சிறு இதழ்களில் தான் இருந்தது.

 

நீர் திவலைகளுடன் இருந்த அவளுடைய ஈர உதடுகள் அவனை சுவைக்க சொல்லி அழைத்தன அவனை..!

 

“அவங்க.. அவங்க ரூம்ல இருப்பாங்க..” என்றான் உள்ளத் தவிப்பை கட்டுப்படுத்திய படி..!

 

“அப்ப சரி நான் அவங்கள பார்த்துட்டு வரேன்..” என்று வேகமாக சென்றவளின் இடையை வலது கையால் இழுத்து தன்னோடு வேகமாக அணைத்தவன், அவளின் முகத்தில் பறந்த கூந்தலை மறு கையால் சரி செய்ய முனைய, அதில் அப்பட்டமாய் தெரிந்தது அவனது தவிப்பு தகிப்பு எல்லாம்..!

 

அந்தத் தவிப்பின் வெளிப்பாடாய்..

காதலின் ஏக்கமாய்..

தாபத்தின் விளைவாய்…

 

அவள் கண்களை பார்த்தவனோ, அடுத்து அவளின் உதடுகளைக் கடித்துக் குதறுவது போல வெறித்தான்.

 

அடுத்த நிமிடம் கவ்விச் சுவைத்தான்!! 

அனைத்தையும் மறக்க.. 

அவளுள் தன்னை துறக்க!!

 

நயனன் கணவன் தான்..! அதுவும் பல வருடங்களாக அவளின் பெயரில் மட்டுமே கணவன் அவன்.

 

ஆனாலும் பார்த்த மூன்று நாட்களில் அவனின் இந்த அத்துமீறல் அவளுக்குள் ஒரு பெரும் பிரளயத்தையே உண்டாக்கியது.

 

கூடவே விசாவை நிச்சயதார்த்தம் செய்யப் போகிறேன் என்று கூறியவன், தன்னிடம் ஏன் இந்த அத்துமீறல் என்று புரியவே இல்லை அவளுக்கு..!

 

மன அதிர்ச்சியில் அவள் கண்கள் விரிய..

அவனுடைய கைகள் அவள் இடையை பிசைய.. 

அவளுடைய மென்மைகள் அவன் வன் மார்பில் அழுந்த…

அவள் அணிந்திருந்த மெல்லிய புடவையோ எக்குதப்பாக விலக.. அவளின் இடுப்பின் மென்மையையும் காட்டி அவனுக்கு அழைப்பு விடுத்தது. 

 

இடுப்பிலிருந்த அவனது ஒரு கை அவளின் ஆலிலை வயிற்றை மெதுவாய் வருட..

 

அதுவரை உணர்ச்சியின் பிடியில் கண்களை மூடி இருந்தவளோ சற்றென்று கண்களை திறந்து அவனிடமிருந்து வேகமாக பிரிந்தாள்..!

 

அவள் எவ்வளவு வேகமாக பிரிந்தாளோ அதே வேகத்தில் அவளை திரும்பவும் தன்னோடு சேர்த்து அணைத்தவனின் கைகள் இப்பொழுது உரிமையாக அவளது ஆழிலை வயிற்றை வருடியபடி அவள் கண்களை ஆழ்ந்து பார்க்க..

 

அவளுக்கோ அவனது செயல்களில் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது..!

 

“இருந்திருக்கலாம்ல.. இந்நேரம் இருந்தால் மூணு வயசு இருந்திருக்கும் இல்ல..” என்ற அவன் குரல் மென்மையாக ஒலிக்க..

 

வேகமாக அவனின் கையை உதறிவிட்டவள் “அதுதான் இல்லையே..!” என்று தன் வயிற்றை பிடித்துக் கொண்டு வெடித்து கதறியவள்,

 

“சும்மா வருத்தம் போல நடிக்காதீங்க..‌ அந்தக் குழந்தை தான் உங்களது இல்லையே..!” என்று இப்பொழுது அமிலத்தை அவன் மீது வாரி இறைத்தாள்.

 

அவள் கொட்டிய அந்த அமில வார்த்தைகளை விட அவளின் கண்ணீர் அவனுக்கு வலித்தது..!

 

“உங்களுக்கும் என் குழந்தைக்கு தான் எந்த சம்பந்தமும் இல்லையே..! அப்புறம் ஏன் வருத்தப்படுவது போல நடிக்கிறீங்க? போங்க.. போங்க.. என்னிடமிருந்தும்.. என் வாழ்க்கையில் இருந்தும்..!” என்று அவனின் நெஞ்சத்தில் அவளின் தளிர் கரங்களால் அவள் வலிக்க அடிக்க, அவனுக்கு அது வலித்தாலும், 

 

அவளின் வருத்தத்தைக் கண்டு வருந்தியவன் வேகமாக அவள் பின்னத் தலையை பற்றி தன் மார்பிலேயே வைத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். 

 

அவனின் அணைப்பை அவள் ஏற்க மறுத்து முரண்டு செய்து விலக பார்க்க.. இன்னும் இன்னும் அவனது பிடி அழுத்தமாக அவளது தலையை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டது..!

 

“அழதுடு டி சின்னு.. அழுதுடு.. மனசுல பாரம் ஏத்தாதடி..!” என்றவனின் அழுத்தமான அணைப்பும்.. அதற்கு எதிர்மாறாக அவனின் மெல்லிய வருடலும்.. அவளின் உள்ளக் கொதிப்பை வெளிக் கொணர, 

 

“ஆஆஆஆ….!” என்று அன்றைய நாளின் இழப்பை இன்று வாய் விட்டு கதறி அழுது துடித்தாள் பாவை..!

 

வெகு நாட்கள்.. வெகு ஆண்டுகள் பிறகு அவனின் கண்கள் கண்ணீரில் நனைய அவ

ளை வலியோடு பார்த்தான் கதிர்நயனன்..!

 

தான் கொண்ட பெண்ணுக்காக.. ஒரு ஆண் சிந்தும் கண்ணீரென்பது அவன் தன் பெருங்காதலைச் சொல்லும் பேராண்மை மொழி.!!

 

கண்ணீரும்.. தித்திக்கின்றதே…!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top