பயந்து பதட்டத்தோடு இருந்த தன் மனதை ஓரளவு சமன் படுத்திக்கொண்டு வானதி தோள் மீது கை வைத்தாள் பத்மா. அதில் அவள் பக்கம் திரும்பினாள் வானதி
"சொல்லுங்க அம்மா" என்றவாறே தன் காதில் இருந்து ப்ளூ டூத்தை கழட்டினாள். அதை பார்த்த பிறகு தான் அவளுக்கு உயிரே வந்தது
"நீ இப்போ பேசிட்டு இருந்தீயே!"
"ஆமாம்! போனில் பேசிட்டு இருந்தேன்"
"யாரு?"
"என் கிளைன்ட் போன் பண்ணி இருந்தாங்க. நான் அவங்ககிட்ட தான் பேசிட்டு இருந்தேன் ஏன் கேக்கறீங்க அம்மா?"
"இல்லை கோபமா பேசிட்டு இருந்தியே அதான் கேட்டேன்"
"அது சின்ன ப்ரச்சனை அம்மா அதனால் தான் பேச வேண்டியதா போச்சு. மேனகா வந்துட்டாளா"
"ஆஹ் வந்துட்டா"
"எங்கே?"
"அவளை ரூமில் போட்டு பூட்டி இருக்கேன். நீ கதவை திறந்து விட்டுவிடாதே அப்பறம் தப்பித்துவிடுவாள்"
"நான் அந்த ரூம் பக்கம் போகவே இல்லை நீங்களே அவளை பாருங்க எனக்கு இங்கேயே வேலை சரியா இருக்கு"
"வானதி"
"சொல்லுங்க அம்மா"
"நாம எப்போ போறோம் சொன்ன?"
"அதுக்கு இன்னும் நாலு நாள் இருக்கு"
"வேண்டாம் கல்யாணம் முடிந்து அடுத்த நாள் போகலாம் உடனே டிக்கெட் புக் பண்ணு" பத்மா அவசரப்படுத்த அவளும் சரி என்று தலை அசைத்தாள் அவளை பொறுத்த வரை சீக்கிரம் இங்கிருந்து செல்ல வேண்டும் அது எப்படி நடந்தால் தான் என்ன அதான் உடனே சரி என்று சொல்லிவிட்டாள். வேலை எல்லாம் மிக சிறப்பாகவே நடந்து கொண்டிருந்தது. இன்று ஈவ்னிங் ரிசப்ஷன் என்பதால் மேனகா அறை உள்ளே அழகு கலை நிபுணர்கள் போக அவர்களை தொடர்ந்து பத்மாவும் சென்றாள். அதை எதிர்பாராத மேனகா கோபத்துடனே அமர்ந்திருந்தாள். முகத்தில் கொஞ்சம் கூட புன்னகை இல்லை அதற்கு பதில் தன் தாயை கொலை செய்ய வேண்டும் என்ற அளவிற்கு கொலை வெறி மட்டும் தான் இருந்தது. அதெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாத பத்மா அவளை அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்தாள். இங்கே மண்டபத்தில் வேலை எல்லாம் படுபயங்கரமாக இருந்தது பவன் தான் மாப்பிள்ளையின் துணை என்பதால் ராஜா கணக்காக தயாராகி அங்கிருந்தவர்களை வேலை வாங்கி கொண்டிருந்தான். அப்பொழுது உள்ளே வானதி நுழைந்தாள் யார் கண்ணையும் உறுத்தாத சுடிதார் அணிந்திருந்தாள். அவளுக்கு இது ஒரு சாதாரண நிகழ்வு மட்டும் தான் அதான் இப்படி தயாராகி வந்திருந்தாள். அவளை பார்த்த உடனே கண்டு கொண்டான் அன்று அவர்களிடம் சண்டை வாங்கி பெண் என்று ஆனால் அதே சமயம் அவளுக்கு இங்கே என்ன வேலை என்ற சந்தேகம் வந்தது அதை உடனே பூர்த்தி செய்ய அவளருகே வந்தவன்
"ஹலோ" அவன் முன்னே வந்து நிற்க ஏறிட்டு பார்த்தவள்
"என்ன?"
"நீ இங்கே எப்படி?"
"இதென்ன உங்க அப்பா மண்டபமா வரக்கூடாதுன்னு சட்டம் இருக்கா?"
"இது என் அப்பா மண்டபம் இல்லை இங்கே என் ப்ரண்ட் மேரேஜ் ஆனால் நீ இங்கே என்ன பண்ற?"
"அது உங்களுக்கு தேவையில்லாத கேள்வி"
"எனக்கு தேவையான கேள்வி தான் நீ யாரு? யாருன்னு ஊர் பெயர் தெரியாத ஒரு பெண்ணை இந்த மண்டபத்திற்குள் விட எனக்கு விருப்பம் இல்லை"
"உன் விருப்பத்தை எல்லாம் யாரு கேட்டா? நகரு" அவனை அசால்டாக தள்ளி விட்டு பெண்ணவள் முன்னே செல்ல
"யேய்!" என்று பவன் கத்த அதே சமயம் எதிரே வந்த கண்ணன் "வானதி!" என்று பாசத்தோடு கையை நீட்ட அவர் இரு கைக்குள் புதைந்து கொண்டாள் வானதி.
'என்ன ஆங்கில் இவளை கட்டி பிடிக்கிறாரு?' என்ற கேள்வியோடு அவர்களை பார்த்தவாறு அருகே வந்தான்
"என்னடா உன் அக்கா கல்யாணத்துக்கு நீ இவ்வளவு சிம்பிலா ரெடியாகி வரலாமா?"
"நான் அலங்காரம் பண்ணிட்டு வந்தா கல்யாண பொண்ணு யாருன்னு தெரியாமல் போய்டும் அதான் சிம்பிலா வந்தேன்"
"ஆங்கில் இந்த பொண்ணு" பவன் ஆச்சரியமாக அவளை பார்த்து வினவ
"டேய்! பவன் உனக்கு இவளை பார்த்தா தெரியலை நம்ம வானதிடா. மேனகா தங்கச்சி நம்ம பாலாஜி கடைசி பொண்ணு"
"ஆஆஆ! இது வானதியா? யாரு நம்ம குட்டியா?" சந்தோஷத்தில் அவன் அவளை பார்க்க
"நானே தான்டா குண்டா" அவள் செல்லமாக அவன் கன்னத்தை பிடித்து கில்லினாள்
"யேய்! நீ சரியான ஆளு நான் தான் வானதின்னு சொல்லி இருக்கலாம் இல்லை"
"நான் யாருன்னு சொல்லி தான் உனக்கு தெரியனுமா? நான் யாருன்னு நீ கடையிலே கண்டு பிடிப்பேன்னு நினைச்சேன் பட் நீ ப்யில் ஆகிட்ட"
"எனக்கென்ன ஜோசியமா தெரியும் நீ திடிரென்று என் முன்னாடி வந்து நிப்பேன்னு பட் ஹாப்பியா இருக்கு உன்னை திரும்பவும் பார்த்தாச்சு" பவன் அவளை சிநேகமாக அணைக்க அவளும் அவனை நண்பன் என்ற நிலையில் அணைத்து பிரிந்தாள்.
"வானதி! இவனே உன்னை இப்போ தான் பாக்குறான் அப்போ சிம்மனுக்கு நீ வந்து இருப்பது தெரியாதா?" கண்ணன் வினவ
"அட ஆங்கில் எனக்கே இப்போ தான் தெரியுது அப்படி இருக்க அவனுக்கு மட்டும் எப்படி தெரியும்?" பவன் சொல்ல
"அப்போ வானதி நீ இவனோடு போய்ட்டு சிம்மனை பாரு"
"இல்லை ஆங்கில் நான் போகலை யாரும் சொல்லாமல் உங்க பையன் என்னை கண்டு பிடிக்கிறானா பார்க்கலாம். டேய்! குண்டா நீ அவன்கிட்ட சொல்ல கூடாது புரியுதா. அப்படி சொன்ன முதல் பலி ஆடு நீ தான்"
"நான் இந்த கல்யாணம் முடிகிற வரைக்கும் நீ யாருன்னு சொல்ல மாட்டேன். அதுக்குள்ள அவன் கண்டு பிடிக்கலைன்னா கண்டிப்பா உண்மையை சொல்லிடுவேன்"
"நீ என்ன உண்மையை சொல்றது நானே சொல்றேன்."
"இந்த டில் ஓகே அப்பறம் வா நாம பேசுவோம். வெளியூர் இருந்தியே உன் ஊரிலாவது பொண்ணுங்க நல்லா இருக்குமாடி" அவன் விளையாட்டாக வினவியபடி அவளை அழைத்து செல்ல கண்ணன் அவன் தலையில் அடிக்க வானதி அவன் இடையை கில்லி வைத்தாள். " நீ எல்லாம் கடைசி வரைக்கும் சிங்கில் தான் ஓவரா கனவு கானாதே" என்று அவனை அழைத்து சென்றாள் அவர்களுக்கு பேச ஓராயிரம் கதை இருந்தது அதெல்லாம் பேச இந்த இரவு பத்தாது என்று தோன்றியது. ஆனாலும் இதில் வேலை வேறு இருக்க இருவரும் ஒன்றாகவே அதை முடித்தனர். நேரம் ஆக வீரசிம்மன், மேனகா இருவரும் மணமேடையில் வந்து நின்றனர். இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்து பலர் வாழ்த்தி மகிழ்ந்தனர். ஒவ்வொருவராக அவர்களுக்கு கை குலுக்கிவிட்டு சென்றனர். இருவரும் மேடையில் நின்றாலும் அவர்கள் பார்வை எல்லாம் வேறு இடத்தில் தான் இருந்தது. மேனகா இவனிடமிருந்து எப்படி தப்பிக்க என்று நினைத்திருக்க அவனோ இந்த திருமணம் தடை ஏதும் இல்லாமல் நடக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினான் இதற்கு நடுவில் பவன், வானதி சிரித்து பேசி கொண்டிருப்பது கண்ணில் பட அது அவனுள் கேள்வியை எழுப்பி இருந்தது. அவளிடம்
ஏன் இவ்வளவு சிரிப்பு? அவளை அவன் ஏன் இப்படி தாங்குகிறான்? என்று கேள்வி எழுந்தது.
