எதிலும் சிந்தனையற்று யாரிடமும் பேசாமல் வீட்டிற்கும் போகாமல் தன் அலுவலகமே கதி என்றிருந்தாள் மேனகா. வீரசிம்மன் சொன்னது போல அவள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சிந்தனை அற்று தான் இருந்தாள். பல நூறு யோசனை கொண்டாள் அவள் இப்படி செய்வானா? அப்படி செய்வானா என்று நூறு திட்டத்தை அவளே யோசித்திருந்தாள். அதெல்லாம் அவளை யோசிக்க விடாமல் செய்திருந்தது. அதுவும் நாளை காலை திருமணம் ஏற்பாடு எல்லாம் பலமாக நடந்து கொண்டிருந்தது. இன்று இரவு ரிசப்ஷன் காலை திருமணம் எல்லா ஏற்பாடும் தடையின்றி நடந்து கொண்டிருந்தது இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்பது பத்மா, வானதி, கண்ணன் மூவரின் குறிக்கோள் அதான் அவர்கள் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தனர். காலை பத்து மணி என்பதால் அவள் இன்னும் உணவு உண்ணவில்லை அதை கொண்டு வரும் வீட்டு வேலையாள் வருவதற்கான நேரம் என்பதால் அறையின் காலிங் பெல் அடித்த உடனே அவள் கதவை திறந்தாள். அவள் எதிர்பார்த்து வேலையாள ஆனால் அங்கே நின்றிருந்தது பத்மா. தன் அன்னை என்று தெரிந்த உடனே கதவை அடைக்க நினைக்க உடனே பத்மா உள்ளே வந்து கதவை தாழிட்டிருந்தாள்.
"உங்களை யார் வர சொன்னா?"
"இங்கே வர நான் யார் அனுமதி கேட்கனும்"
"என்னோட அனுமதி கேக்கனும்" அவளை நக்கலாக பார்த்த பத்மா நேராக தன் கணவன் இதுவரை அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
"ஓஓஓ! பதவி ஆசை வந்துடுச்சா?"
"அது இருந்தால் இந்நேரம் நீ இங்கே இருக்க முடியாது"
"இனியும் இருக்க முடியாது என்பதால் தானே என்னை அந்த வீர சிம்மன் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குற"
"யேய்! அது மட்டும் தான் காரணம் அப்படின்னு நீ நினைக்கிறீயா?"
"வேற என்ன காரணம் இருக்க முடியும்? எனக்கு அவனை பிடிக்கலை"
"உன் விருப்பத்தை நான் கேட்கலை"
"அம்மா!" அறை அதிர கத்த
"வாயை மூடு இங்கே எங்கிட்ட கத்தி பேசற வேலை எல்லாம் வேண்டாம். அப்பறம் வீட்டில் உன் மிரட்டலுக்கு நடுங்குற அம்மா பத்மா இல்லை நான் எதையும் எதிர்த்து போராடிய பாலாஜியோட பொண்டாட்டி நான் வார்த்தையை பார்த்து பேசு"
"அதுக்கு முன்னாடி நீ என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பண்ற?"
"எல்லாம் உன் நல்ல எதிர்காலத்தை மனசில் வச்சிட்டு தான் பண்றேன். நீ போற வழி தப்பு அந்த பழனி நல்லவன் இல்லை உனக்கு வீரசிம்மன் தான் சரியாக இருப்பான். உன் அப்பா இறந்து போனதுக்கு அவனால் மட்டும் தான் பழியும் வாங்க முடியும்"
"அம்மா! நீ என்ன பைத்தியமா அப்பா தப்பு பண்ணார் அதான் அதோட அசிங்கத்தை சுமக்க முடியாமல் வேதனையில் போய் சேர்ந்துட்டாரு"
"மேனகா! நான் மனுஷியா இருக்க மாட்டேன். இன்னொரு முறை அவரை பற்றி தப்பா பேசின பொண்ணு கூட பார்க்காமல் சாகடிச்சுடுவேன். அவர் என் புருஷன்டி அவரை பற்றி எனக்கு தெரியாது"
"இந்த சென்டிமென்ட் கதை எல்லாம் உன் சின்ன பொண்ணு அவகிட்ட சொல்லு நம்புவா "
"எதுக்கு அவளோட நிம்மதியை கெடுக்கவா? அவளை பொறுத்த வரைக்கும் உன் அப்பா உடம்பு முடியாமல் செத்து போனதாகவே இருக்கட்டும். அதை மாற்ற வேண்டாம் "
"அதென்ன அவளை மட்டும் தள்ளி வைக்கிற"
"நான் தள்ளி வைக்கலை நீ தான் அவளை இங்கே இருந்து நம்ம குடும்பத்து கிட்ட இருந்து தள்ளி வச்ச. அப்போ தனியா சுக போகத்தை அனுபவைக்க தெரிந்த உனக்கு இந்த கஷ்டத்தையும், போராட்டத்தையும் அனுபவைக்கிற உரிமை இருக்கு அதனால் நீ தான் இதெல்லாம் செய்யனும்"
"அம்மா! என்னால் அவனை கல்யாணம் பண்ண முடியாது"
"யேய்" என்ற பத்மா படார் என்று அவள் கன்னத்தில் இரண்டு அடி வைத்தவள்
"உங்கிட்ட நான் அனுமதி கேட்கலை நீ அவனை கல்யாணம் பண்ணி தான் ஆகனும். பழனி என்னைக்கு நம்ம குடும்பத்துக்கு எதிரி தான். அவன் பின்னாடி நீ போக நினைச்ச பொண்ணு கூட பார்க்க மாட்டேன். நாளைக்கு நீ வீரசிம்மனுக்கு கழுத்தை காட்டுற"
"அம்மா!"
"ஸ்சு.. வாயை திறந்த அவ்வளவு தான் வா" என்று அவள் கையை பற்றி தர தரவென இழுத்து சென்றாள் பத்மா. கதவை திறந்து பார்க்க அங்கு ஏற்கனவே அவளை பார்க்க பழனி வந்திருந்தான். அவனை தீயாக முறைத்த பத்மா தன் மகளை இழுத்து சென்றிருந்தாள். இங்கே வீட்டில் நடந்த ஏற்பாட்டை வானதி பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு இங்கே இருந்து செல்ல இன்னும் இரண்டு நாள் மட்டும் தான் அவகாசம் இருந்தது. அது கூட பத்மா வற்புறுத்தவே இரண்டு நாட்களாக்கி இருந்தாள். நடு கூடத்தில் நின்றிருந்தவளுக்கு உள்ளே வரும் பத்மா, மேனகா கண்ணில் பட அவர்களை கண்ட வானதி எதுவும் சொல்லாமல் தன் வேலையை பார்க்க அது பொறுக்காத மேனகா
"நீ இவ்வளவு பண்றது எல்லாம் எதுக்கு? இவளுக்கு உண்மை தெரிய கூடாதுன்னு தானே" அவள் கத்த
"மேனகா! வாயை மூடு"
"நான் வாயை மூட மாட்டேன். யேய்! வானதி நம்ம அப்பா எப்படி செத்தாரு தெரியுமா?" அவளிடம் எந்த அசைவும் இல்லை அதற்குள் பத்மா அவள் வாயை மூடியவாறே அறைக்குள் போட்டு அடைத்து விட்டு வெளியே வந்தே வானதி அருகே வர
"நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை. எனக்கு இப்படியொரு துரோகத்தை பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு? நான் இவ்வளவு தூரமா இருந்தா எதுவும் தெரியாதுன்னு நினைச்சீங்களா? எல்லாம் எனக்கு தெரியும்" இந்த வார்த்தையை கேட்டு பத்மா அதிர்ச்சி அடைந்தாள். எது தெரிய கூடாது என்று நினைத்தாலோ அது தெரிந்து விட்டதா? இனி தன் பெண்ணை பார்க்க முடியாதா? இந்த உறவு அவ்வளவு தானா? என்று பல கேள்வி அவளுள் எழுந்து அதற்கே பதில் வானதி எப்படி சொல்லுவாள் என்பது மனக்கண் முன் வந்து போக பத்மா உலகம் சுழல ஆரம்பித்தது. மனம் பதட்டம் கண்டது இருந்தாலும் அதை சமப்படுத்தி கொண்டு தன் மகள் தோள்களை பற்றினாள்.
( அது என்ன உண்மை? வானதி என்ன செய்வாள்? 🤔🤔🤔🤔🤔)
