இரவு ரிசப்ஷன் முடிந்து மணமக்கள் இருவரும் அவர்களின் அறைக்கு சென்றுவிட்டனர். உள்ளே நுழைந்த உடனே கழுத்தில் இருந்த மாலையை எடுத்தவள் அதை பிய்த்து சுவற்றில் விட்டெறிந்தாள். கழுத்தில் போட்டிருந்த நகை, கையில் இருந்த கண்ணாடி வலையல் என்று எல்லாம் அந்த சுவரில் பட்டு உடைந்து சிதறி விழுந்தது அங்கிருந்த ஒரு சில பெண்கள் அதை கண்டு பயப்பட அவர்களை எரிக்கும் அளவிற்கு பார்த்தவள் வலுக்கட்டாயமாக அவர்களை வெளியே தள்ளினாள். அவள் செயல் அறிந்து முன்பே வந்த பத்மா, வானதி இருவரும் உள்ளே வந்து கதவை தாழிட்டனர். வானதி ஒன்னும் விருப்பப்பட்டு உள்ளே வரவில்லௌ பத்மா சொன்னதால் மட்டுமே வந்தாள் விருப்பம் இல்லாமல் வந்ததால் ஓரமாக கட்டிலில் அமர்ந்து அங்கிருந்த எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
"எதுக்கு வந்தீங்க?"
"நீ என்ன பண்ற மேனகா?"
"நான் ஏதோ பண்றேன் அதை பற்றிய கவலை உனக்கு ஏன்? அதான் என்னையும் என் விருப்பத்தையும் மதிக்காமல் அந்த காட்டுமிராண்டிக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க போறீயே"
"வாயை மூடுடி"
"நான் ஏன் வாயை மூடனும்"
"நீ எல்லாம் விருப்பத்தை பற்றி பேசவே கூடாது. ஏன்னா? இத்தனை நாள் வரைக்கும் உன் விருப்பபடி தான் எல்லாம் நடந்துச்சு அதான் நம்ம இப்போ நடாத்தில் நிக்கிறோம்"
"அம்மா!"
"யேய்! இந்த கத்தற வேலை எல்லாம் வேண்டாம். நாளைக்கு காலையில் கல்யாணம் ஒழுங்கா அவன் கூட வாழு அது தான் உனக்கு நல்லது தப்பா ஏதாவது பண்ண நினைச்ச உன் வாழ்க்கையில் அடுத்து நடக்க போற எதுக்கும் நான் பொறுப்பில்லை"
"இப்போ மட்டும் பொறுப்பாவா நடந்துக்கற?"
"பொறுப்பு இருந்ததால் மட்டும் தான் உனக்கு இந்த கல்யாணமே. ஒழுங்கா வீரசிம்மனுக்கு கழுத்தை நீட்டு "
"என்னால் முடியாது அப்படியே என் கல்யாணம் நாளைக்கு நடக்கற மாதிரி இருந்துச்சு கண்டிப்பா நான் செத்துடுவேன்"
"நல்ல முடிவு அதை கூட அவனை கல்யாணம் பண்ணிட்டு செத்து போ "
"நான் செத்து போனா கூட பரவாயில்லையா?"
"ஆனால் நீ சாக மாட்டியே அப்பறம் எதுக்கு கேக்கற?"
"என்னை இவ்வளவு சொல்றீயே இதோ இவளை அந்த காட்டு மிராண்டியை கல்யாணம் பண்ணிக்க சொல்ல வேண்டியது தானே அதென்ன நான் மட்டும்" மேனகா அங்கிருந்த வானதியை வம்பிழுக்க
'வந்துட்டா' என்ற சலிப்போடு அவளை கண்டவள் "இங்கே பாரு நான் வந்த முதல் நாளே சொல்லிட்டேன் என்னை இதில் இழுத்து விடாதேன்னு. நான் இங்கே வந்தது பழைய உறவையும், எனக்கு நடந்த துரோகத்திற்கு பழி வாங்கவோ இல்லை. வந்த முதல் காரணம் அம்மா மட்டும் தான். அவங்களை இங்கே இருந்து நான் கூட்டிட்டு போய்ட்டேனா திரும்ப வர மாட்டேன். அப்பறம் வீரசிம்மனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது உன்னோட கடமை, பொறுப்பு ஏன்னா? அப்பா இடத்தில் அவரோட வாரிசா நீ தானே இருக்க. இந்த பதவியும் அதிகாரமும் வேணும் என்பதால் தானே என்னை கடல் கடந்து போக வச்ச இப்போ என்ன? என்னை பங்கு எடுத்துக்க சொல்ற என்னால் எதிலும் எப்பவும் பங்கு எடுத்துக்க முடியாது. நீ விதைச்ச விதை தான் மேனகா இவ்வளவு தூரம் வந்திருக்கு"
"நான் தான் எல்லாம் பண்ணேன் இனியும் பண்ணுவேன் அதுக்காக எல்லாம் அவனை கல்யாணம் பண்ண முடியாது"
"ஏன் முடியாது? மேனகா நீ பண்ண ஒரே ஒரு விஷயத்தை நான் வீரசிம்மன்கிட்ட சொன்னா உன் நிலமை என்னவாகும் நினைச்சு பாரு?" வானதி அவளை பார்த்து கேட்க அவள் கேள்வியில் மேனகா தொண்டை குழி ஏறி இறங்கியது எச்சில் கூட விழுங்க முடியாமல் நின்றாள்.
"என்ன நான் சொன்ன உடனே அதிர்ச்சியாகி நின்னுட்ட. நீ அன்னைக்கு பண்ண விஷயம் இப்போ வீரசிம்மனுக்கு தெரிந்தது நீ காலியாகிடுவ. அம்மா சொல்ற மாதிரி நீ அவனை கல்யாணம் பண்ணா கூட மனைவி என்ற எண்ணத்தில் உன்னை மன்னித்து விடுவான் நீ மூன்றாவது மனுஷியாக இருந்தா எப்படி சும்மா விடுவான். இதெல்லாம் யோசித்து தான் அம்மா உனக்கு அவனை கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க உனக்கு எல்லாம் வீரசிம்மனே ஓவர் நியாயமா அவன் தான் உன்னை வேணாம் என்று சொல்லி தூக்கி எரியனும் நீ இல்லை அதனால் வாயை மூடிட்டு அமைதியா காலையில் அவனுக்கு கழுத்தை நீட்டு" அவளிடம் அத்தனை அதிகாரமாக பேசிய வானதி தன் அன்னையை கண்டவள் "அம்மா! நான் வீட்டுக்கு போறேன். காலையில் வர்றேன்"
"வானதி! இங்கேயே இரு"
"என்னால் முடியாது இனி இங்கே இருக்க. நான் வீட்டூக்கு போய்ட்டு
கல்யாணம் முடிந்த பிறகு வர்றேன் பாய்" பெண்ணவள் அங்கிருந்து சென்றிருக்க பத்மா தன் மகளை கண்டவள் "உனக்கு வேற வழி இல்லை மேனகா பண்ண தப்பு எல்லாம் ரொம்ப நாள் இருட்டில் இருக்காது அது வெளிச்சத்துக்கு வரும் போது நீ பாதுகாப்பான இடத்தில் இருக்கனும் அதனால் சொலாறதை புரிந்து கொள்" இதற்கு மேல் எதுவும் பேச முடியாது என்ற எண்ணத்தில் பத்மா அங்கிருந்து செல்ல தொப் என்று கட்டிலில் அமர்ந்த மேனகா சிந்தனை எல்லாம் எங்கேயோ இருந்தது அவளால் இப்பொழுது முடிவு எடுக்க முடியவில்லை அது தான் உண்மை. அதிகாலை முகூர்த்தம் ஐந்து டூ ஆறு என்பதால் அனைவரும் தயாராகி இருந்தனர். பத்மா மகளின் அறைக்கு செல்ல அங்கே மேனகா இல்லை அதுவே பேரதிர்ச்சி முதலில் விஷயத்தை கண்ணனுக்கு சொல்ல அவர் பவனிடம் சொல்ல அவன் வீரசிம்மன் காதில் போட்டான். பட்டு வேட்டி சட்டையில் மேனகா அறை முன் பதட்டத்தோடு வந்து நின்றான் வீரசிம்மன்.
"இப்போ என்ன பண்ண பத்மா? இது சாதாரணமான கல்யாணம் மட்டும் இல்லை மானம் மரியாதை இதெல்லாம் சம்பந்தப்பட்டது. இந்த நேரத்தில் பொண்ணுக்கு நான் எங்கே போவேன்" அவர் பர பரக்க வீரசிம்மன் உடனே தன் ஆட்களை அனுப்பி மேனகாவை கண்டு பிடிக்க சொன்னான்.
"அண்ணா! அவள் இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சு பார்க்கலை" பத்மா அழ
"இப்போ அழுது என்ன பிரயோஜனம் டேய்! பவன் உடனே ஏதாவது பொண்ணு கிடைக்குமா பாரு" கண்ணன் அவசரப்படுத்த அந்த நேரத்தில் பத்மாக்கு தன் இளைய மகள் ஞாபகம் வர எங்கே அவள் மண்டபத்திற்கு வந்தாள் வீரசிம்மன் அவளை மணக்க கூடுமோ என்று உடனே அவளை வர வேண்டாம் என்று மெசேஜ் செய்து எச்சரித்திருந்தாள். இங்கே கண்ணன் தன் மகனின் திருமணம் தடை பட்டதாக இருக்க கூடாது என்று அவசர அவசரமாக பெண்ணை தேடினார்.
*********************
டும் டும் என்ற திருமணத்தின் போது எழுப்பப்படும் சத்தம் வெகு தூரம் தனித்து ஓடி வந்திருந்த மேனகா காதில் விழுந்தது அந்த சத்தத்தில் அவள் நிம்மதி கொண்டாலும் அடுத்த நொடியே அவள் மனதில் யார் வீரசிம்மனை திருமணம் செய்திருப்பார்கள் என்ற கேள்வி எழ? அவள் நினைப்பை கலைத்தான் கையை பற்றி இருந்த பழனி
"மேனகா! என்ன யோசிக்கிற? வா போகலாம்"
"இல்லை அந்த சத்தம்"
"மேள சத்தம் கேட்டது அதுக்கு என்ன?"
"பழனி! சத்தம் கேட்குது அப்போ கல்யாணம் முடிந்து விட்டது. நான் இல்லாமல் யார் அவனை கல்யாணம் பண்ணி இருப்பாங்க"
"வேற யாரு உன் தங்கச்சியா இருப்பா"
"அவள் இல்லை ஏன் என்றால அவளை என் அம்மா வீரசிம்மனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க. ஏன்னா? அவள் அந்த குடும்பத்திற்கு மருமகளா போனா அழிவு அவளுக்கு தான்"
"என்ன?"
"ஆமாம் அழிவு அவளுக்கு தான்" என்று மேனகா உறுதியாக சொன்னால்
( என்ன அழிவா? ஏன்? வீரசிம்மன் யாரை திருமணம் செய்தான். மேனகா சுற்றி ஏன் இத்தனை அபாயம் அவள் செய்த தவறு என்ன? இனி வீரசிம்மன் எப்படி இருப்பான்? இத்தனை கேள்விக்கும் பதில் தெரிய இப்பவே படியுங்கள் )
