யட்சன் 9

 

(@manvi-aathreesh)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 35
Thread starter  

அத்தியாயம் : 9

 

சென்னை மகாபலிபுரத்தின் பிரலமான ரிசார்ட். ஆம் இராவணனின் ரெசார்ட் தான் அது. அங்கு இருக்கும் ஒரு அறையில் தான் அதுவும் அவனுக்கு என்று பிரத்தியேகமாக செய்யப்பட்ட அறையின் பால்கனியில் கண்ணாடி தடுப்புகளுக்கு பின்னால் நின்று அலையடிக்கும் அந்த காரிருள் கடலை தான் வெறித்துக் கொண்டிருந்தான் இராவணன்.

 

மனமெல்லாம் யட்சிணி யட்சிணி என்று கூவ.. கையில் இருக்கும் விஸ்கி பாட்டிலை அப்படியே வாயில் கவுத்தான். அவன் உற்ளுக்குள் ஏதோ ஒரு பாரம் வெறுமை சூழ்ந்திருந்தது.

 

என்ன இல்லை அவனிடம்? பணம் புகழ் பாரம்பரியம் என்று அனைத்தும் இருக்கிறது. ஆனாலும் அதையும் தாண்டி மனது ஏதோ ஒன்றை தேடி தவிக்கிறது. அலையடிக்கும் கடலாய் அலைபாய்கிறது.

 

ஒரு ஃபோனை தாத்ரிக்கு போட்டிருந்தால், இராத்திரி வேளை என்றும் பார்க்காமல் அவள் பறந்து வந்திருப்பாள். இவனது தனிமையை போக்கி வெறுமையை தள்ளி தாம்பத்தியத்தின் இனிமையை கொடுத்து இருப்பாள்.

 

ஆனால் அவளிடம் ஏனோ மனம் ஒன்ற மறுக்கின்றது இராவணுக்கு. அவளை நெருங்கினாலே தானாக மனதிற்குள் யட்சிணி வந்து புகுந்து எச்சரிக்கை மணி அடிக்கிறாள். அவனை மேலே முன்னேற விடாமல் தடுக்கிறாள். தாத்ரியை பற்றி நினைவையே பறிக்கிறாள். இப்படி நித்தமும் அவனை கொல்கிறாள்.

 

ஏன் ஏன் ஏனென்று ஆயிரம் முறை திரும்பத் திரும்ப அவனை அவனே கேள்விகள் கேட்டுக் கொண்டாலும், பதில் ஏதும் அவனிடத்தில் இல்லை.

 

அந்த யட்சிணி யார்? என்ன? எதுக்கு அவளின் ஞாபகம் இடைவிடாது இவனை தொடர்கிறது? என்று இதுவரையுமே அவனுக்குத் தெரியவில்லை. 

 

அப்படிப்பட்ட பெண்ணுடன் நான் எப்பொழுதாவது பழகி இருப்பேனோ என்று எண்ணம் தோன்ற.. அவன் பழகிப் பார்த்த பெண்களை மனதில் நிறுத்தி பார்த்து விட்டான்.

 

"இல்லை அவள் இல்லை.."

 

"இவள் இல்லவே இல்ல.. அவளின் நளினமே தனி தான்"

என்று மீண்டும் அவனுள் புகுந்து ஆட்டி வைப்பாள்.

 

இராவணன் ஆந்திராவையே ஆட்டி வைக்கிறான் என்றால்… இவனையே ஒரு ஆள் ஆட்டி வைக்கிறாள் என்றால்... அது அவன் உள் மன யட்சிணி தான்.

 

'ஆனால் எங்கிருந்து வந்தாள் இந்த யட்சிணி? புதிதாக என் மனதில்? அனுக்ஷனமும் என்னை பாடாய் படுத்துகிறாள்' என்று அவளை திட்டி தீர்த்து விடுவான்.

அவளின் நினைப்பு அவனை விட்டு அகலம் மறுக்கிறது.

 

இன்று நடந்தது அவனை வெகுவாக குழப்பி இருந்தது. அவன் பார்க்காத பெண்கள் இல்லை. பழகாத பெண்களும் இல்லை.. சில சமயம் காமம் தேவை என்றால் கல்யாணத்திற்கு முன்னால் பெண்ணை நாடியதும் அவன் உண்டு. 

 

அதெல்லாம் தப்பு என்றோ தவறு என்றோ அவன் நினைத்ததே கிடையாது. ஆனால் திருமணத்திற்கு பின்பு மனைவிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, இதனால் வரை மற்ற பெண்களை ஏறெடுத்ததில்லை அவன். ஆனால் இன்று இந்த சித்ரலேகா அவனை மனதளவில் சலனப்படுத்தினாள்.

 

அனுக்ஷனமும் அவனை ஆட்டுவிக்கும் அந்த யட்சிணி இன்று சித்ரலேகாவோடு இருக்கையில் எங்கு சென்றாள்?

 

அந்த அறையின் உள்ளே நுழையும் வரை அவன் மனதில் எந்தவித தப்பிதமான எண்ணமும் இல்லை அதிலும் சித்ரலேகா மீது கொஞ்சமும் நாட்டம் இல்லை.

 

அவ்வப்போது அவ வீடியோவில் காலில் வந்து அந்த வீட்டை சுற்றிக் காட்டும் போதெல்லாம் பெரும்பான்மையாக அந்த வேலைகளை மட்டும் தான் காட்டுவாள்.

 

அத்திப்பூத்தாற்போல் அவளது சிரித்த முகமும் சிவந்த உதடுகளும் சில நேரம் அந்த திரையினுள் தோன்றும் போது, 

அவனை ரசிக்க சொல்லி தூண்டி இருக்கிறது. வெறும் ரசிப்பு என்று சில நேரம் கடந்து விட முடியாமல் வீடியோவை ஃப்ரீஸ் செய்து பார்க்கவும் செய்திருக்கிறது. அதற்கெல்லாம் உச்சமாக இன்று உள்ளே நுழைந்தவனை காந்தமாய் இழுத்தது அவளது பின்னழகு அவனையும் அறியாமல்…

 

இரும்பாய் இருந்தவனை காந்தமாய் அவள் இழுக்க பின்னே சென்று அவள் உடலோடு உடல் உரச ஒட்டி நிற்க முடியாமல் அதே சமயம் அவளில் இருந்து தள்ளி நிற்க முடியாமலும்.. போனால் போகுது என்று காற்றுக்கு மட்டும் இடைவெளி விட்டு அவளை அணைத்தது போல் நின்று இருந்தான்.

 

ஆனால் திடீரென்று இவன் இப்படி செய்தால்.. அக்கா கணவன் தவறாக நடக்கிறான் என்று கூப்பாடு போடுவாளோ? என்று நினைத்தவன் அவள் கையில் இருந்த பிரஷ்சை பிடுங்காமல் அவள் கையோடு தன் கையை கோர்த்து அந்த ஓவியத்தை அவன் தீட்டினான்.

 

மனம் எங்கே ஓவியத்தில் குவிந்தது. அழகோபமாய் தன் முன்னேற்றிருக்கும் இந்த ஐந்தடி ஓவியத்தை தான் ஆட்கொள்ள அத்தனை ஏங்கியது. அதிலும் அவளது பின்னழகும் மெல்லிடையும் அவனை வாவென்று அழைக்க.. அதனை தவிர்க்க முடியாமல் அதை ஒட்டியும் ஒட்டாமல், கையை இடுப்பு வழியாக கொண்டு வரைவது போலவே பாசாங்கு காட்டினான்.

 

சித்ராவும் மிகப்பெரிய திகைப்பில் பயத்தில் இருந்திருப்பாள் போலும், இல்லை என்றால்.. இவன் அவள் கைகளை பிடித்து தூரிகை கொண்டு வெறும் கோடிட்ட இடத்தை நிரப்புவது போல அங்கங்கே வரைப்படாமல் இருந்த இடத்தில் வெறும் பிரஷால் வர்ணத்தை நிரப்பி மட்டும் கொண்டிருந்தான் என்பதை கண்டுபிடித்து இருப்பாள்.

 

பாவம் பேதைபெண் பயத்தில் இருக்க அவளுக்கு இது கருத்தில் ஏறவில்லை. ஆனாலும் செய்வது தப்பு தான், தவறு தான் என்று அவனுக்கு அப்போது புரிந்தாலும் ஏனோ அந்த தப்பை தப்பு இல்லாமல் சரியாக செய்ய மனம் விழைந்தது இராவணனுக்கு.

 

மனைவியே சலனப் படுத்தாத முடியாத இந்த இரும்பு மனதை இந்த சிறு பெண் எப்படி கரும்பாய் மாறி சலனப்படுத்தினான் என்று பெரும் வியப்பு இப்போது அவன் யோசித்து பார்க்கையில்.

 

இது எதுவரை செல்லும் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும் இந்த அவளுடனான நெருக்கமும் அதில் காணும் சொர்க்கமும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று மனம் கூப்பாடு போட, கண்களை மூடி யட்சிணி என்று அவன் முணுமுணுக்க இப்பொழுது அழகாய் அந்த கண்களுக்கு இடையே வந்து மோகனமாய் சிரித்தாள், யட்சிணியாய் சித்ரலேகா!!

 

அதே இரவின் கனவில் யட்சனாய் வந்து அவளை பயமுறுத்தினான் இராவணன்.

 

சிவபிரசாத் வந்ததும் இவளை ஓவியத்தின் முன்னே நிற்க வைத்துவிட்டு அவன் சிவப்பிரசாத்தை எதிர்கொண்டு சில வேலைகளை சொல்லி நில்லாமல் திரும்பி சென்று விட்டான். எப்பொழுதுமே காலில் காற்றை கட்டிக் கொண்டு பறப்பது போல தான் அவனது நடவடிக்கைகள் இருக்கும் என்பதால் சிவப்பிரசாத்துக்கு எந்த சந்தேகமும் எழவில்லை.

 

இராவணன் வாயிலை கடக்கும் நேரத்தில் அவனது கூர்ப்பார்வை இன்னும் ஓவியத்தின் முன் நடுங்கி கொண்டு இருக்கும் அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு சென்றதை பாவம் சித்ரா அறியவில்லை. அப்படி அறிந்திருந்தால் இன்னும் பயந்து இருப்பாள் அவன் கண்களில் கண்ட வேட்கையை எண்ணி..

 

ஏற்கனவே யட்சனாய் ஒருத்தன் வந்து தொந்தரவு செய்ய.. இப்பொழுது இராவணனாய் ஒரு அரக்கனும்

சேர்ந்து கொண்டால் பெண்ணின் பாடு திண்டாட்டம் தான்.

 

தொடரும்…

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top