தளிர் - 32
கதிரோ தன் இருக்கையில் சுழன்றபடி டேபிளில் இருந்த போனையே வெறித்து கொண்டிருக்க . அதை எடுத்தவனோ தமிழிடம் இருந்து வந்த மெஸ்சேஜ் பார்த்தபடி இருக்க.
அதிலோ ஹலோ என்ன பண்றீங்க , சாப்பிட்டீங்களா , எனக்கு இன்னைக்கு எக்ஸாம் , எதாவது பேசுங்களேன், என்று கெஞ்சுவது போல் ஒரு பொம்மை படம் வந்திருக்க . அதன் பின் ஒரு இதய வடிவ பொம்மை வந்திருக்க .
அதை வருடிய கதிரின் இதழில் ஒரு மெல்லிய புன்னகை .
ஏங்க எனக்கு இன்னைக்கு இந்த ஹாஸ்ட்டல் சாப்பாடு பிடிக்கல ,என்று முகம் சுருங்க ஒரு பொம்மை படம் .
எனக்கு ஒரு பையன் பிரபோஸ் பண்ணான் தெரியுமா என்று ஆச்சர்யத்துடன் ஒரு பொம்மை .
இதை கண்ட நாள் அன்று அவனையே அறியாமல் உள்ளுக்குள் ஒரு சிறு கோபம் கூட வந்தது .
எவன் இவளுக்கு பிரபோஸ் பண்ணியிருப்பான் என்று அதையே எண்ணியபடி இருக்க .
ஆனா நான் சொல்லிட்டேன் பா எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு , என் புருஷன் இருக்காருன்னு .
கதிரோ கல்யாணமா என்று திகைத்தபடி அடுத்து வரும் மெஸ்சேஜ்க்காக காத்திருக்க .
தமிழோ என்னை கல்யாணம் சொல்றேன்னு பாக்கிறீங்களா , உங்களோட தான் கல்யாணம் ஆகிடுச்சு , நீங்க தான் என் புருஷன் , அதுவும் கனவுல தெரியுமா என்று வெட்க பொம்மை வர
கதிருக்கோ ஏதோ ஒரு மெல்லிய இன்பச்சாரல் மனதின் ஓரம் அடிக்க . அவனுக்கு அவளது வெட்கம் கலந்த முகம் கண் முன் வந்து போக . தன் தலையை தட்டி சரிசெய்துகொண்டவனோ கதிரே அவ சின்ன பொண்ணு ,ஏதோ அறியாம பேசிட்டு இருக்கா , நீயும் அதுக்கு இடம் கொடுக்காத என்று வேதம் ஓத .
அடுத்து ஒரு மெஸ்சேஜ் எங்க காலேஜ்ல டூர் போறாங்க , நானும் போகவா என்று வந்திருக்க .
கதிரோ எங்க போறாங்க என்ன ஏது என்று அவள் காலேஜில் இருக்கும் தன் நண்பன் மூலம் விசாரித்து பாதுக்காப்பை உறுதி செய்து அவன் மூலம் அவளுக்கு பணம் கொடுத்தது எல்லாம் தனி கதை .
டூர் சென்ற இடத்தில் இருந்து போட்டோக்களாக எடுத்து அவனுக்கு அனுப்பியது , என அவளை சந்தித்த நாட்களில் இருந்து ஒரு மாதமாக ஒவ்வொன்றும் அவள் அவனிடம் சொல்லிவிடுவாள் .
முதலில் அதை கண்டும் காணாமல் இருந்தால் தன்னை மறந்து சென்று விடுவாள் என்றிருக்க ,. ஆனால் நாட்கள் ஆக ஆக அவளின் பேச்சு அதிகமானதே தவிர அவனை விட்டு விலகி செல்லவில்லை என்பதே உண்மை .
ஒவ்வொன்றாக அவள் அனுப்பிய மெஸ்சேஜையும் , அவள் அனுப்பிய புகைப்படங்களையும் பார்த்தபடி இருக்க . அதில் ஒன்றில் சிவப்பு நிற சுடிதார் அணிந்து , தலையை தளர பின்னி, அதை முன் தூக்கி போட்டபடி , நெற்றியில் சிறு சிறு பூனை முடிகள் காற்றில் அசைந்தாட , கண்களில் மையிட்டு , நெற்றியில் சிறு கருப்பு பொட்டு , காதில் சிறு கவரிங் கம்மல் ,இதழில் சிறு புன்னகை , கழுத்தில் எதுவும் இல்லாமல் இருக்க, அவன் மனதோ தங்கத்தல போட்டா நல்லா இருக்கும் என்று எண்ண .
அவனிடம் யார் சொல்வது உரிமை உள்ள பெண்ணை மட்டுமே இவ்வாறு ரசிக்க முடியும் , வேறு எந்த பெண்ணாவது இவனிடம் இவ்வாறு பேசி இருந்தால் அவனது நடவடிக்கையே முற்றிலும் வேறாக இருக்கும் .ஆனால் இவளிடம் மட்டும் ஏன் இவ்வளவு இடம் கொடுக்கிறான் என் அறியவில்லை அல்லவா .
அவன்
" மனமோ டேய் கதிரேசா அந்த புள்ளை தங்கத்துல போட்ட என்ன , வெள்ளில போட்டா என்ன , நீ ஏன் ராசா இவ்வளவு வருத்தப்படுற " என்று கூற .
கதிரோ
" அது நல்லா இருக்கும் , அதைதான் சொன்னேன் வேற எதுவும் நான் சொல்லலயே "
என்றவனது பார்வையோ தடுமாற .
மனமோ
" அப்படியா அப்புறம் ஏன்டா அன்னைக்கு அந்த புள்ளைக்கு சாப்பாடு பிடிக்கலைன்னு சொன்னதும் உங்க வீட்டு சப்பாட அவ friend கிட்ட பொய் சொல்லி குடுக்க சொன்ன "
என்று அடுத்த கேள்வியை கேட்க .
கதிரோ
" அது அது ஹான் பாவம் படிக்கிற புள்ளை , நல்லா சாப்பிட்டதான் நல்லா படிக்க முடியும் அதனால அனுப்பி வைச்சேன் "
என்று சப்பைக்கட்டு கட்ட .
அவன் மனமோ
" அவனை மேல் இருந்த கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு , உனக்கே இது அசிங்கமா தெரியல , பச்சையா இப்படி பொய் சொல்றீயே "
என்று கேவலமாக
ஒரு பார்வை பார்க்க.
கதிரோ
" நான் ஒன்னும் பொய் சொல்லல , நான் வெறும் மனிதாபிமானத்துல தான் எல்லாம் பண்ணிட்டு இருக்கேன் , நீ என்ன குழப்பாத "
என்று அதனிடம் சண்டையிட .
மனமோ
" டேய் உனக்கே இது அநியாயமா தெரியல , எல்லா பொண்ணுங்களுக்கு சார் இப்படி தான் பண்ணுவீங்களோ "
என்று நக்கலுடன் கேட்க.
கதிரோ ஆமா என்றுரைத்தவனோ போனை தூக்கி டேபிள் மீது வீச .
அவனுக்கே தெரியவில்லை , ஏதோ இனம் புரியாத கோபம் மனதில் துளிர்விட .
கதிரே அவ மெஸ்சேஜ் பண்ணா என்ன பண்ணலன்னா என்ன , விடேன் , உனக்கு நல்லது தான ஏன் இவ்ளோ யோசிக்கிற என்று அவனையே அவன் சமாதானப்படுத்திக் கொள்ள .
மற்றொரு புறம் ஒரு வேலை உடம்பு எதாவது சரியில்லாம இருக்குமோ , அப்டின்னா சொல்லியிருப்பாளே , வேற எதாவது பிரச்சனையா இருக்குமோ , ஹாஸ்ட்டல் பக்கத்துல ஏதோ ரவுடி பசங்க அப்ப்போ வரதா சொன்னாலே அதுவா இருக்குமோ என்று அவளை பற்றி சிந்திக்காதே என்றிருந்தவன் முழுவதும் அவளைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க .
மனம் யாரை விரும்பிகிறதோ அவர்களை பற்றி மட்டுமே இவ்வாறு சிந்திக்க முடியும் , காதலின் ஆழமே அவர்கள் நலனை பற்றி சிந்திப்பது தானே . இதோ இவன் உள்ளும் காதல் ஊடுருவி வேர் விட்டு விருட்சமாக வளர்ந்துவிட்டது.
ஆனால் இந்த முட்டா பய கதிரு அது எல்லாம் எனக்கு இல்லை அப்டின்னு ரீல் விட்டிட்டு திரியுரான் மக்களே அவனை நம்பாதீங்க. சும்மா ரீல் ரீல் ஆஆ சுத்துவான் .
இவன் எண்ணம் இவ்வாறு இருக்க . அவன் சிந்தனைக்கு சொந்தகாரியோ கன்னத்தில் கைவைத்து அமர்ந்து இருக்க . அவளது போனோ என்னிடம் இனி பேசுவதற்கு துட்டு இல்லை மகளே என்று பாட்டு பாடி கொண்டிருக்க .
தமிழோ காசு வேற இல்லையே இப்போ என்ன பண்றது , இனிமே அடுத்த மாசம் தானே சம்பளம் வரும் என்று எண்ணிக்கொண்டிருக்க .
அவளோ காலேஜ் முடிந்தவுடன் பார்ட்டைமாக அருகில் உள்ள காபி ஸாப்பில் வேலை பார்த்து கொண்டிருக்க . கதிருக்கு இது மட்டும் தெரியாது இருக்க .
தமழோ சரி பார்த்துக்கலாம் என்றபடி இன்றைய பணிக்கு தயாராகி அவள் கிளம்பி கடைக்கு செல்ல .
அங்கோ என்றும் இல்லாத திருநாளாக கூட்டம் நிரம்பி வழிய .
தமிழோ சரிதான் இன்னைக்கு நம்ம சோலி முடிஞ்சது என்றபடி அன்றைய பணிகள் தொடங்கியது .
அனைத்தும் முடிந்து அவள் வெளியே வரும் நேரம் இரவு ஒன்பது மணி . உடலோ அடித்து போட்டால் போல் வலிக்க . கையை வலியால் தடவியபடி நடந்து கொண்டிருந்தவளோ யார் மீதோ மோதி நின்றுவிட
தலை நிமிர்த்தி பார்க்க கதிரோ அவளை முறைத்தபடி நின்று இருக்க .
அவனை கண்டவுடன் அவளின் முகமோ தாமரை கண்ட சூரியன் போல் பூவாக மலர்ந்து விட .
அவளோ புன்னகையுடன்
ஹாய் ! இங்க என்ன பண்றீங்க ,
கேட்க .
அவனோ
" நீ இங்க என்ன பண்ற "
என்றவனது குரலோ சற்று அழுத்தம் கூடி வர .
தமிழோ
" அது காபி குடிக்க வந்தேன் அதான் "
என்று சமாளிக்க பார்க்க.
அவனோ
" உண்மைய சொல்லுடி "
என்று அவள் முழங்கையை பிடிக்க.
அவளோ சற்று மிரண்டு போய் அவனை பார்த்தவளோ
" வேலை பார்க்கிறேன் "
என்று மெதுவாக முனங்க.
கதிரோ ஏன் என்று அவளை முறைத்தபடி கேட்க.
தமிழோ
" ஏன்னா காசு வேண்டாம , எனக்குன்னு தேவை இருக்கும்ல , அதுக்கு எல்லாம் காசு வேண்டாமா ?
,என்று மெதுவாக தொடங்கி இறுதி வாக்கியத்தில் சண்டைக்கோழியாக சிலிர்க்க.
கதிரோ சுற்றியும் பார்வையை சுழலவிட்டவனோ
" எதுக்குடி இப்போ கத்துற " .....
தமழோ
" பின்ன கேள்வி கேட்டா இப்படிதான் "
என்று முகத்தை திருப்பிக் கொள்ள .
கதிரோ
" எல்லாத்தியும் என்கிட்ட சொல்ல தெரியுதுல்ல , அப்போ இதையும் சொல்ல வேண்டியது தான " என்று பல்லை கடித்தபடி அவளிடம் சண்டைக்கு நிற்க .
தமிழோ
" நான் ஏன் உங்ககிட்ட கேட்கனும் , நீங்க என்ன எனக்கு family , friend , இல்ல lover ஆஆ எதுவும் இல்லதான அப்புறம் எதுக்கு நான் உங்கிட்ட கேட்கனும் "
என்று அவளும் சண்டையிட .
கதிரோ
" ஆமாடி எதுவும் இல்லதான் , ஆனா என்கிட்ட தான் கேட்கனும் , இனி இங்க வேலைக்கு வா அப்புறம் பார்த்துக்கிறேன் "
என்றபடி அவள் கையை பற்றி இழுத்து செல்ல .
தமிழோ
" முதல்ல கைய விடுங்க , எல்லாம் பண்ணுவாராம் அது எல்லாம் காதல்னு சொன்னா நம்ப மாட்டாராம் "
என்று தனக்குள் முனங்கியபடி வர .
கதிரோ என்னடி என்று அதட்ட .
தமிழோ அவன் குரலில் சற்று பயந்தாலும் இல்லை என்று தலையாட்டியபடி அவன் பின் நடக்க .
கதிரோ போன் எங்க என்க .
தமிழோ போனை எடுத்து அவனிடம் நீட்ட .
அதை வாங்கிய கதிரோ அதை ஆன் பண்ண அதில் முகப்பு பக்கத்தில் அவனது புகைப்படம் இருக்க.
அதை கண்டவனோ அவளை முறைத்து பார்க்க.
தமிழோ
" ஹலோ அது என் ஆளு நீங்க ஏன் முறைக்கறீங்க "
என்று கூற .
கதிரோ சலிப்பாக இருபக்கமும் தலையாட்டியவனோ
அவளது போனில் இருந்து தன் போனிற்கு அழைப்பு விடுக்க . அதுவோ பேலன்ஸ் இல்லை என்று கூற .
கதிரோ ஏன்டி போனுக்கு பேலன்ஸ் போடல என்று அடுத்த கேள்வி கேட்க.
தமிழோ
" காசு இருந்தா தான் போட முடியும் , இல்லைன்னா போட முடியாது "
என்று தெனாவெட்டாக கூற.
கதிரோ " வாய் ஓயாம பேசத்தெரியுது இல்லை காசு இல்லை போட்டு விடுங்க சொல்லத் தெரியாதா ? ...
என்று வார்த்தைகள் சூடாக வர .
தமிழோ
" நான் முதல்லயே சொல்லிட்டேன் எந்த உரிமையில நான் கேட்கிறது சொல்லுங்க , சும்மா சும்மா கேட்க மாட்டியா , கேட்க மாட்டியா சொல்றீங்க "
என்று அவளும் அவனிடம் சண்டைக்கு நிற்க.
கதிரோ
" புருஷன் , புருஷன் சொல்லிட்டு திரிவல்ல அந்த உரிமையில கேட்க வேண்டியது தான "
என்று அவளது அக்கவுண்டிற்கு பணத்தை மாற்றியபடி ஒரு சிறு சிரிப்புடன் போனை பார்த்தபடி கூற.
தமிழோ தன் காதில் விழுந்தது என்ன என்று உணர்வதற்கே சிறிது நேரம் எடுத்தது .
அவளோ " நீங்க என்ன சொன்னீங்க!
என்று ஆச்சர்யத்துடன் அவனிடம் கேட்க .
கதிரோ போனை தன் பாக்கெட்டில் வைத்தபடி,
" நான் எதுவும் சொல்லலயே "
என்று அவள் போனை அவள் கையில் கொடுக்க .
தமிழோ இல்லை நீங்க என்னுமோ சொன்னீங்க , அதை மறுபடியும் சொல்லுங்க என்று அவனிடம் மல்லுக்கட்ட .
கதிரோ நான் எதுவும் சொல்லல என்று திரும்பி நடந்தவன் இதழ்களில் கள்ள புன்னகை.
தமிழோ யோசித்தபடி அப்படியே நின்றுவிட .
கதிரோ திரும்பி அவள் யோசிப்பதை கண்டவனோ சிரித்தபடி அவளையே பார்க்க
தமிழ் , வயதோ இருபது , பொறியியல் படிக்கும் மாணவி , சற்று பூசினார் போல் உடல் , உயரமோ அவன் மார்பு வரை மட்டுமே இருப்பாள் , துருதுரு கண்கள் , குண்டு கன்னம் , சிவந்த நிறம் , என்று ஒரு புசு புசு பூனைக்குட்டி போல் ஒரு தோற்றம் . முதல் பார்வையில் அவனை ஈர்த்தால் என்றால் மிகையாகாது . அவள் படித்து முடித்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்றால் விடுவேனா என்கிறாள் அல்லவா . இதற்கு மேல் முடியாது என்பதால் தான் அவன் ஓடி வந்தது .
தமிழோ இவரு என்னுமோ சொன்னாரே, என்று தனக்குள் புலம்பியபடி இருக்க .
கதிரோ சிரிப்புடன்
ஏய் பூனைக்குட்டி என்றழைக்க .
தமிழோ சுற்றியும் பார்த்துவிட்டு
நானா என்று கேட்க.
கதிரோ ஆமாம் என்பது தலையாட்டியவனோ
வா என்பது போல் இரு கையை பருந்து போல் விரித்தவனோ
கட்டிக்கிறியாடி கண்களில் காதலுடன் , இதழில் சிரிப்புடன் , ஆசையாக அவளை அழைக்க.
தமிழோ அவன் அவ்வாறு கேட்டவுடன் கண்களோ சட்டென கலங்கிவிட , இதழோ புன்னகை புரிய
ஆம் என்பது போல் தலையாட்டியவளோ
ஓடி வந்து அவனை அணைத்துக் கொள்ள .
கதிரோ தன்னை அணைத்தவளை தன் உயரத்திற்கு தூக்கி ஒரு சுற்று சுற்றியவனோ , அவள் முகம் பார்க்க.
அவளோ அவன் முகம் பார்க்க முடியாமல் அவன் தோளில் முகத்தை புதைத்தபடி அழுது கொண்டிருக்க .
கதிரோ " இப்போ எதுக்குடி அழுகுற " என்று பதட்டத்துடன் கேட்க.
தமிழோ இல்லை என்பது போல் தலையாட்டியவளோ அப்படியே சிறிது நேரம் இருக்க .
அவர்கள் இருந்தது ஆள் நடமாட்டம் இல்லாப் பகுதி என்பதால் யாரும் வராமல் இருக்க .
தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தவளோ
" நிஜமா என்னை காதலிக்கிறீங்களா "
என்று இன்னும் அவன் தன்னை காதலிப்பதை நம்ப முடியாமல் கேட்க .
கதிரோ
" ஆமாடி , இந்த குட்டி பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு , பூனைக்குட்டி போல சுத்தி சுத்தி வந்தே என்னை அவ பக்கம் இழுத்துட்டா "
என்று அவள் கன்னம் கிள்ள .
தமிழோ அவனையே விழி அகலாமல் பார்க்க .
கதிரோ என்ன என்பது போல் புருவம் உயர்த்த .
அவளோ இல்லை என்பது போல் தலையாட்டியவளோ அவனை இறுக கட்டிக்கொள்ள .
ஆமா எதுக்குடி இப்போ அழுத .
அவளோ அது ரொம்ப சந்தோஷமா இருந்தா எனக்கு அழுகை தான் வரும் , என்று விளக்கம் கூற .
கதிரோ சரிதான் என்று சிரித்தபடி இருவரும் அங்கிருந்து நடக்கத் தொடங்கினர் .
தொடரும் ....
ஒரு வழியா கதிருக்கு ஆள் செட் பண்ணியாச்சு . இனி அடுத்த வேலை பார்க்க வேண்டியது தான் . அது என்ன வேலை அப்படின்னா அது தான் ஆப்பு வைக்கிற வேலை . யாருக்கு வைக்கலாம் சொல்லிட்டு போங்க .
