Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 31

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 11 months ago
Messages: 40
Thread starter  

தளிர் - 31

 

இருவரும் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து இருக்க . 

 

" கதிரோ சொல்லும்மா என்ன விஷயம் பார்க்கனும் சொன்ன ....." 

 

என்று கதிர் கேட்க .

 

தமழோ " எங்க அக்கா எங்க இருக்கா... 

 

என்று வினவ .

 

கதிரோ

 

" ஏம்மா தெரியாத என்ன , அவங்க செழியனோட இருக்காங்க "... 

 

என்றபடி இருவருக்கும் காபியை ஆர்டர் செய்ய .

 

மீண்டும் அவள் புறம் திரும்பியவனோ  

 

" இதை கேட்க தான் வர சொன்னியா ? என்க .

 

தமழோ " இல்லை இல்லை.... 

 

என்று தடுமாறியவளோ ஆழ மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு .. 

 

" எனக்கு உங்கள பிடிச்சு இருக்கு" 

 

என பட்டென்று உரைத்து விட .

 

கதிரோ புரியாமல் குழப்பம் மேலிட அவளை பார்க்க. 

 

தமிழோ

 

" உங்கள நான் விரும்புறேன் சார் " 

 

என்று தயக்கத்துடன் அவன் முகம் பார்க்க. 

 

கதிரோ அவளை அழுத்தமாக முறைத்து பார்க்க. 

 

தமிழோ அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அமைதியாகி, அவன் முகத்தை பார்த்தபடி இருக்க . 

 

குரலை செருமிய கதிரோ 

 

இங்க பாரு

 

  " தமிழ் இந்த வயசுல இது ஒரு ஈர்ப்பு தான் சரியா , இப்போ நீ படிக்கிறத மட்டும் தான் பார்க்கனும் , வேற எதை பத்தியும் யோசிக்க கூடாது" 

 

என்று அவளுக்கு பொறுமையாக எடுத்து கூற .

 

தமழோ

 

  " அதுலாம் எனக்கு தெரியும் சார் , காதல் எது ஈர்ப்பு எதுன்னு , உங்க மேல எனக்கு வந்திருக்கிறது காதல் தான் சார் "

 

என்று அவள் அடித்து கூற .

 

கதிரோ சலிப்புடன் 

 

" ம்மா நான் சொல்றத கேளு , உனக்கு சின்ன வயசு , இது எல்லாம் இப்போ வேண்டாம்" ..

 

என்க .

 

தமழோ அவன் சொல்ல வருவது எதையும் காதில் வாங்காமல் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்பது போல் இருக்க .

 

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த கதிரோ 

 

ஏய் .......... என்று ஒரு அதட்டு அதட்ட .

 

தமழோ அதிர்ந்து பயத்துடன் அவனை பார்க்க. 

 

கதிரோ 

" கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன் , நீ என்னுமோ சொன்னதையே சொல்லிட்டு இருக்க , உனக்கு என்ன வயசு , நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க , அதோட உனக்கு என்ன பத்தி என்ன தெரியும் " ...

 

என்று கோபத்தில் சீற .

 

தமிழோ அவன் அதட்டியதில் சற்று பயம் ஏற்பட்டாலும் தன்னை சமாளித்துக் கொண்டவளோ 

 

" தெரியும் சார் , அன்னைக்கு என்ன யாருன்னே தெரியாத அப்போ பார்த்து பார்த்து எந்த ஹாஸ்டல் பாதுகாப்பு , எங்க நல்லா இருக்கும் எல்லா விசாரிச்சு சேர்த்து விட்டு , எனக்கு எல்லாம் செஞ்சு கொடுத்தவர் நீங்க . அந்த மனசு தான் சார் உங்க மேல் காதல் வர வச்சது ....

 

அதோட ஒவ்வொரு நாளும் நான் எப்படி இருக்கேன் , பாதுக்காப்பா இருக்கேனா , எல்லா சரியா இருக்கான்னு பார்த்திங்க பாருங்க அங்க காதல் வந்தது சார் , தெரியல உங்க இருந்தது ஒரு இரண்டு மூணு மணி நேரம் இருக்காலாம் ஆனா அந்த நேரம் உங்க கூட இருக்கும் போது பாதுக்காப்பா உணர்ந்தேன் சார் , உங்கள காதலிக்க இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்கேன் போதுமா....

 

என்று அவன் விழி பார்த்து கூற. 

 

கதிரோ அவள் விழி பார்வையை தாங்க முடியாமல் வேறு பக்கம் பார்வையை திருப்பி கொள்ள .

 

தமிழோ " இப்போ சொல்லுங்க" 

 

என்று தீர்க்கமாக அவனை பார்க்க. 

 

கதிரோ 

" உனக்கு என்ன சொன்னாலும் புரியாது , அதோட அந்த இடத்துல எந்த பொண்ணா இருந்தாலும் அதை தான் பண்ணி இருப்பேன் , அது ஒரு மனிதாபிமானத்துல செஞ்ச உதவி "  

 

என்று கூற .

 

தமிழோ 

 

" அப்போ நான் அழுகும் போது கட்டிபிடிச்சீங்களே அதுக்கு என்ன சார் பதில் சொல்ல போறீங்க " ...

 

என்று சரியாக நேரம் பார்த்து வினவ .

 

கதிரோ அது உனக்கு ஆறுதல் சொல்ல கட்டிபிடிச்சது, ஏன் உன் பிரண்ட்ஸ் யாராவது ஆறுதல் சொல்றதுக்கு கட்டிபிட்டிக்க மாட்டாங்களா அது போலத்தான் அது என்று குரலோ கடுகடுவென்று இருக்க.

 

தமழோ

 

" எனக்கு ஒன்னும் அப்படி தெரியல சார் , அப்போ எல்லா பொண்ணுக்கும் நீங்க இப்படி தான் ஆறுதல் சொல்லுவீங்களோ......

 

என்று இழுக்க .

 

கதிரோ இதுக்கு மேல உன்கிட்ட மனுசன் பேசுவானா என்று அங்கிருந்து எழுந்து நடக்கத் தொடங்க .

 

தமழோ ஹலோ நீங்க எங்க போனாலும் நீங்க எனக்குதான் என்று அவன் கேட்கும் படி கூற .

 

இதை எல்லாம் யோசித்தபடி கதிர் இருக்க . 

 

அவனது மனமோ 

 

" என்ன கதிரோசா அந்த பொண்ணு சொல்றதும் சரிதான, அந்த இடத்துல வேற எந்த பொண்ணு இருந்தாலும் நீ இப்படி பண்ணி இருப்பியா என்ன?  

 

என்று கேள்வி எழுப்ப .

 

கதிரோ ஆமா என்று கூற .

 

"மனமோ " 

 

" இல்லையே அன்னைக்கு கூட நம்ம ஆபிஸ் ஸ்டாப் ரேஷ்மா உன்கிட்ட ஒரு உதவி கேட்டப்போ அதுக்கான வழிய மட்டும் தான் சொன்ன ஆனா இப்படி எல்லாம் செஞ்சு கொடுக்கலயே ராசா" என்று சந்தேக கேள்வி எழுப்ப .

 

கதிரோ அது அது ஹான் செழியன் சொன்னான் அதுனால அப்படி பண்ணேன் என்று மழுப்பலாக பதில் கூற. 

 

மனமோ அப்படியே நீ பண்ணு, கத்திரிக்கா முத்துனா கடைக்கு வந்துதான் ஆகனும் , நீ பண்றதும் ஒரு நாள் வெளியே வந்து தான் ஆகும் டா என்று நக்கலாக கூற. 

 

கதிரோ " நீ போ முதல்ல" 

 

என்று விரட்டி அடித்தவனோ தன் வேலையில் கவனமாக . 

 

அவன் கதிரேசன் , வயதோ பின் முப்பது, செழியனுடன் சிறுவயது முதலே நெருங்கிய நட்பு , இவனின் தந்தை ஒரு ஹோம் வைத்து நடத்திக் கொண்டிருக்க, தாய் அவன் பிறக்கும் போதே இறந்து விட . அதன் பின் தந்தை அவன் மட்டுமே . அதன் பின் செழியன், ரகு என இரு நண்பர்கள் . அவ்வளவே அவனது சுற்றம் .

 

அன்றில் இருந்த தொடங்கியது தமிழ் அவனின் போனுக்கு அழைப்பது , இவன் எடுக்காமல் தவிர்ப்பது , அவள் மெஸ்ஸேஜ் அனுப்புவது இவன் பார்த்துவிட்டு எதுவும் கண்டு கொள்ளாமல் இருப்பது . 

 

அவன் காலை எழுந்தவுடன் 

 

" குட் மார்னிங் மெஸ்சேஜ் தொடங்கி , என்ன சாப்பிட்டேன் , என்ன டிரஸ் என்று ஒவ்வொன்றாக தமிழ்" 

 

  அவனிடம் பாடம் ஒப்பிப்பது போல் சொல்ல .

 

கதிரோ 

 

" உனக்கு வேற வேலையே இல்லையா" 

 

என்று திட்டியும் கூட பார்த்துவிட்டான் . 

 

ஆனால் அவளோ விடுவதாக இல்லை .

 

அன்று காலை எழுந்த கதிரோ எப்போதும் போல் தன் காலை வேலைகளை முடித்து விட்டு சாப்பிட அமர. அப்போது தான் ஒன்றை கவனித்தான் இன்று அவளிடம் இருந்து எந்த ஒரு மெஸ்சேஜ்ம் வரவில்லை ,.

 

" ஏன் என்னாச்சு , எதாவது உடம்பு சரியில்லாம இருக்குமோ , இந்நேரம் பண்ணி இருப்பாளே " 

 

என்று அவன் அதை யோசித்தபடி போனையே பார்க்க .

 

அவனது தந்தை ராமநாதனோ அவன் தட்டில் இட்லியை வைக்க .

 

அவனோ அதில் கவனம் இல்லாமல் போனையே பார்த்துக்கொண்டிருக்க .

 

அவரோ " டேய் கதிர் , என்றழைக்க .

 

அவனோ அவர் கூப்பிடுவதை கூட கண்டுகொள்ளாமல் போனை நோக்கி கொண்டிருக்க. 

 

அவரோ அவன் கையின் மீது சாம்பார் கிண்ணத்தை லேசாக வைக்க .

 

கதிரோ அய்யோ அம்மா என்று கையை விலக்கி அவரை முறைத்தவனோ .

 

" இப்போ எதுக்கு பா எனக்கு சூடு வைக்கிற " 

 

என்று இட்லியை சாப்பிடத் தொடங்க .

 

அவரோ

 

" பின்ன நான் கூப்பிடறது கூட தெரியாம அந்த போன்ல என்னத்தடா உத்து உத்து பாத்துட்டு இருக்க " 

 

என்று சாம்பார் தட்டில் ஊற்ற .

 

அவனோ

 

" ஒன்னும் இல்லை ,சரி நீ எதுக்கு கூப்பிட்ட " 

 

என்று போனை டேபிள் மீது வைத்தவனோ சாப்பாட்டில் கவனமாக .

 

அவரோ

 

" இந்த வருஷம் ஹோம்ல பசங்களுக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கனும் டா " 

 

என்று அவர் பேசிக்கொண்டிருக்க.

 

அப்போது கதிரின் மெஸ்சேஜ் டோன் சத்தம் வர . ஆர்வத்துடன் அதை எடுத்த பார்க்க.

 

அதுவோ அவனின் ஆபிஸ் இருந்து வந்திருக்க . அவனது முகமோ சோர்வை

தத்தெடுத்துக் கொள்ள .

 

அவரோ

" டேய் நான் சொன்னது எல்லாம் கேட்டுச்சா " 

 

என்று வினவ .

 

கதிரோ 

 

" சரிப்பா எல்லாம் பண்ணிடலாம் நான் செழியன்கிட்ட பேசிடுறேன் " 

 

என்றபடி கிளம்பி அலுவலகம் வருவதற்கு காரில் ஏற.

 

அவனது

 

" மனமோ என்ன கதிரேசா யாரையோ தேடுற மாதிரி இருக்கே "  

 

என்று கேட்க. 

 

கதிரோ நான் யாரையும் தேடலயே என்று மீண்டும் மழுப்பியவனோ தமிழிடம் இருந்து மெசேஜ் வருமா என்பதை பார்த்துக் கொண்டிருக்க. 

 

" மனமோ" அப்புறம் ஏன்டா அந்த புள்ளையோட மெஸ்சேஜையே திரும்ப திரும்ப பார்த்திட்டு இருக்க .

 

கதிரோ அது அது சும்மா என்று போனை வைத்தவனோ அலுவலகம் வந்து சேர .

 

கதிரோ " என்ன ஆயிருக்கும் இந்நேரம் மெஸ்சேஜ் வந்திருக்கனுமே, ஏன் பண்ணல , ஒரு வேலை நான் சொன்னதால திருந்திட்டாலோ "

அப்படி எல்லாம் இருக்க மாட்டாளே....

 

 

என்று எண்ணியபடி அவன் அலுவலகம் உள் நுழைய .

 

அதே நேரம் அங்கு வந்த அகல்யாவோ

 

" ஹாய் கதிர் என்று அவனை புன்னகையுடன் அழைக்க .

 

கதிரோ 

 

இவ ஒருத்தி அவன் தான் இவள கண்டுக்கவே மாட்டங்கிறனே ஏன் இப்படி வரனும் என்று மனதுக்குள் திட்டியபடி வர .

 

அவள் அகல்யா , செல்வசீமாட்டி என்பதை அவளை கண்டவுடன் தெரிந்து கொள்ளலாம், அவர்களது கம்பெனி பங்குதாரரின் மகள் , ஒரு பார்ட்டியில் செழியனை கண்டுவிட்டு , தன் தந்தையிடம் இவனை தான் திருணம் செய்யவேன் என அடம்பிடித்து நிற்க .அவரும் செழியனிடம் பேசி பார்க்க. அவனோ முற்றிலும் மறுத்துவிட . 

 

அகல்யாவோ அது எப்படி என்னை மறுக்கலாம் என்று செழியனிடம் சென்றவளோ நண்பர்களாக இருக்கலாம் என்று அவனை நெருங்க முயற்சித்து கொண்டு இருக்க. 

 

ஆனால் செழியனோ அவளை அங்கிருக்கும் பொருட்கள் போல் கண்டும் காணாமல் இருக்க .

 

அகல்யாவோ தான் கொண்ட மமதையில் செழியன் தனக்கு வேண்டும் என்று குறியாக இருக்க .

 

கதிரோ

 

  " சொல்லுங்க அகல்யா என்ன காலையிலேயே இந்த பக்கம்" 

 

என்று கேட்க. 

 

அவளோ  

 

" சும்மா தான் ஆமா எங்க செழியனை இன்னும் காணோம் " 

 

என்று கேட்க. 

 

கதிரோ 

 

" அவன் எப்போ காலையில் ஆபிஸ் வந்திருக்கான் இன்னைக்கு வர" 

 

என்று தனக்குள் முனங்கியபடி 

 

ஹிஹிஹிஹி என்று அசட்டு சிரிப்பு சிரித்தவனோ 

 

அவன் இன்னைக்கு வரமாட்டான் அகல்யா என்க .

 

அவளோ ஏன் என்று கேள்வி எழுப்ப .

 

கதிரோ தெரியல அகல்யா ,ஏதோ வேலையாம் என்று அவனது அறைக்குள் நுழைந்து விட .

 

 

அதே நேரம் இங்கு இதழிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான் செழியன் .

 

அவளோ குளித்து முடித்து அலுவலகம் செல்ல தயாராக வர .

 

அவனோ அவளது பெட்டில் படுத்து கொண்டு பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்ப .

 

இதழோ குளித்து முடித்து ஒரு ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்தபடி , நாம் மட்டும் தானே இருக்கிறோம் என்று அசால்டாக வர .

 

செழியனோ காஷ்மீர் ஆப்பில் போல் தளதளவென வந்த இதழை கண்டவனோ அப்படியே சிலையாக இருக்க .

 

அங்கு செழியனை கண்ட இதழுக்கு சற்று தூக்கிவாரிப்போட. 

 

நீங்க இங்க என்ன பண்றீங்க என்று கோபத்தில் அவனிடம் சீற .

 

செழியனோ ஒரு நக்கல் சிரிப்புடன் அவளை நோக்கி அடிமேல் அடிவைத்து வர .

 

இதழோ அவனையே பார்த்தபடி இருக்க .

 

அவளை நெருங்கி நின்றவனோ , நான் வராம யார் வருவா என்று அவள் கன்னத்தில் மினுமினுத்த நீர் துளிகளை தன் விரல் கொண்டு துடைக்க .

 

இதழோ அவன் கையை தட்டிவிட்டபடி அங்கிருந்து நடக்க தொடங்க . 

 

பின்னோடு சென்றவனோ அவளை பின்பக்கமாக தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கிவிட்டவனோ அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு 

 

" கிளம்பு ஒரு இடத்துக்கு போகனும் " என்க .

 

இதழோ நான் எங்கயும் வரல என்று அவனிடம் இருந்து விடுபட பார்க்க. 

 

செழியனோ நீ வர அவ்ளோதான் என்றபடி கழுத்தில் இருந்த நீர்த்துளிகளை தன் இதழ் கொண்டு துடைத்தவனோ அவள் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தபடி அங்கிருந்த அகல. 

 

இருவரும் கிளம்பி வந்து நின்ற இடத்தை கண்ட இதழோ அதிர்ச்சியுடன் அவன் பக்கம் திரும்ப. 

 

தொடரும் .....

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top