தளிர் -34
கிழக்கில் இருந்து சூரியன் தங்க நிற கால்கள் கொண்டு மெல்ல பூமி மீது மேல் ஏறி வர .
இங்கு அறையில் தன் கையில் இருந்த பொருளை பார்த்த இதழுக்கு அதிர்ச்சியில் கண்கள் இரண்டும் விரிந்து கொள்ள .அதே நேரம் அவளது போன் அடித்து தன் இருப்பை காட்ட.
அதை எடுத்த காதுக்கு கொடுத்தவளோ அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டது . கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருக்க .
கண்ணீரை துடைத்தவளோ
" நான் இப்பவே வரேன் "....
என்று தன் கையில் இருந்த பொருளை டேபிள் மீது வைத்தவளோ அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பி வந்து நின்றது என்னவோ ஹாஸ்பிட்டல் முன்பு தான் .
அறையின் உள் நுழைந்த இதழை கண்ட மருத்துவரோ
" வாங்க இதழினி நீங்க வேண்டிக்கிட்ட கடவுள் உங்களை கைவிடல , உங்க அண்ணன் கண் முழிச்சிட்டார்" ... ,
" எப்படியோ அவர் வேலை செஞ்ச அவ்ளோ பெரிய மாடியில இருந்து விழுந்தும் , இவ்ளோ நாள் கோமால இருந்தும் , அவர் இப்போ நல்ல படியா பிழைச்சுட்டார். "
என்றுரைக்க .
இதழோ கண்களில் வழிந்த கண்ணீருடன் அங்கு கண் முழித்தபடி இருந்த தன் அண்ணனையே பார்த்துக்கொண்டிருக்க.
மருத்துவரோ
" ஓகே இதழ் இனி எந்த பிரச்சனையும் இல்லை , இப்போதைக்கு பேச முடியாது ஆனா கொஞ்சம் கொஞ்ச மா பேச பயிற்சி கொடுத்தா பேசிடுவாறு"
என்று அவர் வெளியே சென்று விட .
இதழோ கண்ணீருடன் அவன் அருகில் அமர்ந்தவளோ அவன் கையை பிடித்துக்கொள்ள . அவனும் அவள் கையை மெல்லமாக பிடித்து கொண்டவனோ தட்டுத் தடுமாறி
" எப...எப்படி ... இருக்க "
என்று கேட்க.
அவளோ அழுகையுடன்
" நல்லா இருக்கேன் ஆனந்தா" என்க .
அவனோ அழாத என்று அவள் கண்ணீரை துடைக்க வர .
அவளோ அவன் கையை பற்றி கொண்டவளோ
" நான் அழல"
என்று கண்ணீரை துடைத்தபடி சிரிக்க முயற்சிக்க .
அதே நேரம் இங்கு செழியனோ அவள் அறையில் நுழைந்து ஏதோ ஒரு பொருள் எடுத்துக்கொண்டிருக்க .
அவன் கண்ணில் விழுந்தது டேபிள் மீது இருந்த பொருள் . அதை என்ன என்று பார்த்தவனுக்கோ சற்று அதிர்ச்சி மேலிட .
அதையே பார்த்தபடி இதழுக்கு போன் அடிக்க . அவளோ அதை எடுக்காமல் இருக்க . அவள் எங்கு இருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டவனுக்கு மேலும் அதிர்வுதான் கூடியது .
அவசர அவசரமாக அவள் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வர .
இதழோ அங்கிருந்த மருத்துவரிடம் பேசிக்கொண்டிருக்க . படாரென்று கதவை திறந்த செழியனை கண்ட மருத்தவரோ மிஸ்டர் யாரு நீங்க என்ற கண்டன குரல் வர .
செழியனோ அவரை எங்கு கண்டான் அவன் பார்வை முழுவதும் அங்கு அமர்ந்து இருந்த இதழ் மீதே நிலைத்து இருக்க.
இதழோ அவனை இங்கு சற்று அதிர்ச்சியுடன் பார்க்க.
சுற்றியும் காற்று பலமாக வீச , அந்த மருத்துவமனையின் மேல் மாடியில் நின்று இருந்தனர் இருவரும் . இதழின் பார்வையோ சற்று எங்கோ நிலைத்து இருக்க .
செழியனோ அவளை அழுத்தமாக பார்த்தவனோ தன் கையில் இருந்த பொருளை அவளிடம் நீட்டியபடி
" இதுக்கு என்ன அர்த்தம்"
என்க .
இதழோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க .
செழியனோ அவள் கையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவனோ
" இதுக்கு என்னடி அர்த்தம் "
, என்று மீண்டும் அழுத்தமாக கேட்க.
இதழோ " என்ன அர்த்தம் என்ன அர்த்தம் அப்படின்னா அதான் பார்த்தா தெரியுது இல்ல"
என்று அவன் கையை தட்டி விட .
செழியனோ
" ஏன்டி என்கிட்ட முதல்லயே சொல்லல "
என்றவனது குரலோ சற்று தாழ்ந்து வர .
இதழோ ஏன் சொல்லனும் , என்று அவனை உறுத்து விழிக்க .
செழியனோ
" என்னடி பேசுற இது நம்ம குழந்தை "
என்று தன் கையில் இருந்த பிரக்னன்சி கிட்டை காட்டியபடி கேட்க .
இதழோ
" அது என் குழந்தை , உங்களுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை , அதோட அந்த குழந்தையும் எனக்கு வேண்டாம்"
என்று உரைக்க .
செழியனோ அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்து கொள்ளவே சிறிது நேரம் எடுத்தது .
செழியனோ புரியல என்று அவள் முகத்தை தெளிவில்லாமல் பார்க்க.
அவளோ
" இந்த குழந்தைய நான் கலைக்க போறேன்"
என்று சொன்னதும் தாமதம் அவன் ஐந்து விரல்களும் அவள் கன்னத்தில் அழுந்த பதிய .
இதழோ தன்னை அவன் அடித்து விட்டான் என்பதை உணர்ந்தவளோ கண்கள் கலங்க அவன் முகத்தை பார்க்க.
செழியனோ
"ஏய் என்ன விட்டா ரொம்ப பேசுற ஹான் , தொலைச்சுடுவேன்"
என்று விரல் நீட்டி அவளை மிரட்ட .
அவன் மிரட்டலுக்கு பயப்படும் ஆளா அவள் .
" நீங்க என்ன பண்ணாலும் எனக்கு இந்த குழந்தை வேண்டாம்"
என்க .
செழியனோ " ஏன்டி இப்படி அரக்கி மாதிரி பண்ற , அன்னைக்கு அப்படிதான் என்ன பிடிக்கல , நான் வேண்டாம் , என்ன வலிக்க வலிக்க கொன்னுட்டு போய்ட்ட. இப்போ முழுசா உருவாகத ஒரு உசுர கொல்ல பார்க்கிற என்ன தான்டி உன் பிரச்சனை ....."
என்றவனது குரலோ சற்று கலங்கிதான் வந்தது . அவன் உயிர் நீரில் உதித்த குழந்தை அல்லவா , தாய் ,தந்தை என்ற அங்கீகாரத்தை கொடுத்த குழந்தையை வேண்டாம் என்கிறாள் அல்லவா . யாரால் தாங்கி கொள்ள முடியும் .
" என் பிரச்சனையே நீ தான் , உன்ன மாதிரி ஒருத்தனோட குழந்தை எனக்கு வேண்டாம் , நான் அரக்கியா நீதான் அரக்கன் "
என்று அந்த இடம் அதிர கத்த .
செழியனோ எதுவும் சொல்லாமல் அமைதியாக அவளை பார்த்தபடி இருக்க .
தொடர்ந்த
" இதழோ உன்னால தான் உன்னால தான் எல்லாம் , நீ ஏன்டா நல்லவனா இல்லாம போய்ட்ட , உன்னை வெறுக்கவும் முடியாம , விலகவும் நான் தவிக்கிற தவிப்பு எனக்கு தான்டா தெரியும் "
என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கியவளோ அவன் மார்பில் முகம் புதைத்தபடி கதறி அழுக .
செழியனோ அவளை அணைக்கவும் இல்லை , விலக்கவும் இல்லை அப்படியே அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையிலும் மரமாக விரைத்து போய் நிற்க .
நிமிர்ந்த இதழோ
எனக்கு என் அக்கா , என் அண்ணன் , என் பாட்டி இவங்க மட்டும் தான் உலகம் . எங்க அண்ணன் ஆனந்தன் , அப்புறம் என் அக்கா ரூபா இவங்க இரண்டு பேரும் தான் எல்லாம்.
எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்தது . என்ற இதழின் நினைவுகளோ பின்னோக்கி நகர்ந்தது .
இதழ், அவளது அண்ணன் ஆனந்தன் , அக்கா ரூபா , என அழகான குடும்பம் அவர்களுடையது . அனைவரும் ஒன்றாக பூஞ்சோலையில் வசித்து கொண்டிருக்க. அவளது அண்ணன் ஆனந்தனுக்கு சென்னையில் வேலை கிடைத்திருக்க . அவனோடு பாட்டியை தவிர இருவரையும் படிப்பிற்காக அழைத்து சென்று விட . இதழோ அப்போது பள்ளி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரம் அது. ரூபா கல்லூரி இரண்டாம் படித்துக் கொண்டிருக்க .
ரூபா இளம் சிட்டு , பயம் அறியா துடுக்குதனம் நிறைந்த பெண் , நண்பர்கள் வட்டாரம் சிறிது அளவே , வீட்டில் அனைவரையும் கலகலவென வைத்திருக்கும் சுட்டி பெண் .
அவளுக்கு face book மூலமாக அறிமுகமானான் செழியன் , முதலில் நண்பர்களாக பேசிக் கொண்டிருந்தவரகள் சிறிது நாளில் போன் எண்கள் பரிமாறி பேசிக் கொள்ளும் நிலையும் வந்தது . இருவரும் பேசிக்கொண்டனர் , புகைப்படங்களையும் பறிமாறிக் கொண்டனர் . ரூபாவோ உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்றுரைக்க .செழியனோ நான் ஊரில் இல்லை , பிறகு பார்க்கலாம் என்று தவிர்த்து விடுவான் . இருவரும் நேரில் சந்தித்த கொள்ளாமலே தங்களது நட்பை வளர்த்தனர் .
அதன் பின் இருவரது நட்பும் காதலாக மாறியது .
காதலர்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா , இனிமையான பேச்சுக்கள் , அன்பான வார்த்தைகள் என அனைத்து நடந்தேறியது . அவனிடம் இருந்து வரும் பரிசுகள் , என காதலோ நன்றாக சென்று கொண்டிருந்தது . இது அனைத்தும் அவளது அண்ணனுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டால். இதழும் கூட சில நேரம் திட்டுவாள் எப்போதும் போனையே வைத்துக் கொண்டிருக்கிறாய் என. ஆனால் அது எல்லாம் எங்கு அவள் காதில் விழுந்தது . அவள் முழுவதும் காதல் தரும் மயக்கத்தில் மிதந்து கொண்டிருந்தால் அல்லவா . விட்டில் பூச்சியாக விளக்கை நோக்கி பறந்து கொண்டிருந்தால் . அது சுடும் நாளும் வந்து சேர்ந்தது .
அதே போல் ஒரு நாள் செழியனிடம் இருந்து அழைப்பு வர . அதை எடுத்த காதுக்கு கொடுக்க .
செழியனோ இன்று நான் ஊருக்கு வந்து இருக்கிறேன் இருவரும் சந்தித்து கொள்ளலாம் என்று அவளிடம் ஒரு முகவரியை அனுப்பி வைக்க .
ரூபாவுக்கு தலைகால் புரியவில்லை மனதிலோ அவ்வளவு சந்தோஷம் . அவன் சொன்ன முகவரிக்கு தன் செல்ல ஆயத்தமாக .
அதே நேரம் அவளது அண்ணன் வீட்டின் உள் நுழைய
ஒருகணம் திடுக்கிட்ட ரூபாவோ அவனிடம் புராஜக்ட் தொடர்பாக தனது தோழியை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சென்றவள் .
அடுத்த நாள் காலையில் உடல் எல்லாம் அடிபட்டு , துணி கிழிந்து ரத்த காயத்துடன் தான் அவன் கைகளுக்கு கிடைத்தால் .
ஆனந்தனுக்கோ அனைத்தும் இடிந்து போன உணர்வு , நேற்று தோழியை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சென்ற தங்கை மாலை ஆகியும் வராமல் போக . தேடி பார்த்தவனோ இறுதியில் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க . அடுத்த நாள் காலையில் அவர்கள் அளித்த தகவலே அது .
ஆசை ஆசையாக வளர்த்த தங்கை இதோ இன்று இப்படி கசங்கி கிடக்கிறாளே என்று நினைக்க நினைக்க அழுகை வெடித்துக் கொண்டு வர .
இதழோ மருத்தவமனை படுக்கையில் இருந்த தன் தமக்கையை பார்க்க பார்க்க வேதனையே மிஞ்சியது .
அவளோ அக்கா , அக்கா என்று அவள் கையை இறுக பிடித்தபடி அழுது கொண்டிருக்க .
மருத்தவரோ.
" ரத்தம் அதிகமா போய்டுச்சு , இதுக்கு மேல் எதுவும் சொல்ல முடியாது "
என்று கைவிரித்து விட .
ஆனந்தனோ அய்யோ என்று தலைத் தலையாக அடித்துக் கொண்டு அழ.
இதழோ ஒஒவென்று தன் தமக்கையின் கையை பிடித்துக் கொள்ள .
மெதுவாக கண் விழித்த ரூபாவோ
இதழின் கையை அழுத்தி பிடிக்க .
இதழோ " அக்கா அக்கா"
என்று கண்ணீருடன் அவள் முகம் பார்க்க.
ரூபா அவன் ....... அவன் ........ என்ன ஏமாத்திட்டான் தென்றல் என்றவளது உயிரோ காற்றோடு காற்றாக மறைந்து விட .
இதழோ அக்கா , அக்கா , அண்ணா அக்கா எழ சொல்லு , அக்கா அக்கா என்று அவள் தோளைப்பிட்தது உலுக்க .
ஆனந்தனோ ரூபாவையே வெறித்தபடி அமர்ந்து இருக்க . அப்போது அறையில் நுழைந்த காவலர்களோ தங்களது நடவடிக்கையை மேற்கொள்ள .
காவலரோ
" தம்பி ஏதாவது கேஸ் கொடுக்கிறீங்களா "
என்று ரூபாவை பார்த்தபடி கேட்க.
ஆனந்தனோ
" என்ன சார் கொடுக்க முடியும் , கொடுத்தா மட்டும் என் தங்கச்சி உயிரோட வந்துருவாளா , எப்படியும் எல்லா பழியையும் என் தங்கச்சி மேல் தான் விழும் , தயவு செஞ்சு இது வேண்டாம் எனக்கு இன்னொரு தங்கச்சி இருக்கு .....
என்றவனோ
ரூபாவின் உடலை வாங்கி சென்றுவிட .
அனைத்தும் முடிந்தது . வீடோ கலை இழந்து காணப்பட்டது . அங்கு இங்கும் சுற்றி திரியும் பட்டாம் பூச்சாக திரிந்தவள் இன்று மண்ணோடு மண்ணாக ஆகிவிட்டால் அல்லவா .
பாட்டியோ பாவி மக இப்படி போய்ட்டாளே என்று அழுது கொண்டிருக்க .
இதழோ அழுகையுடன் தன் அக்காவின் புகைப்படத்தை பார்த்தபடி இருக்க .
இதோ அவள் இறந்து இரண்டு மாதங்கள் கடந்து இருக்கும் .
இதழோ அவளது அறையை சுத்தம் செய்யலாம் என ஆனந்தனும் , அவளும் சுத்தம் செய்து கொண்டிருக்க . அப்போது கபோர்டின் உள் இருந்து சில லெட்டர்களும், அதோடு சில பரிசுகளும் இருக்க .
அதை எல்லாம் இருவரும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்க . அதில் எல்லாம் பார்த்தவர்களுக்கோ ஒன்று விளங்கியது ரூபா செழியனை காதலித்து உள்ளால் என்பதும் ,அன்று அவனை தான் சந்திக்க சென்று இருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள .
இருவருக்கும் ஒருசேர இடி இறங்கிய உணர்வு , இனி என்ன செய்துவிட முடியும் என்று நினைக்க நினைக்க வருத்தம் மேலிட .
ஆனால் ஆனந்தனின் மனது மட்டும் கனன்று கொண்டே இருந்தது . அவனை எதாவது செய்துவிட வேண்டும் என துடியாய் துடித்துக் கொண்டிருக்க. அவனை எங்கெல்லாமோ தேடினர் . ஆனால் கிடைத்த பதில் அவன் பெரிய ஆள் என்பது மட்டுமே .
அதன் பின் அனைவரும் தங்களது ஊருக்கு சென்று விட . அப்போது அங்கிருந்த பண்ணை வீட்டை வாங்க யாரோ வந்திருக்கிறார்கள் என்று செய்தி கேட்டு ஆனந்தனிடம் தான் அந்த வீட்டின் சாவி இருக்க . அதை கொண்டு கொடுக்க சென்றவன் அங்கு ஒரு பெண்ணுடன் சிரித்து பேசியபடி நின்ற செழியனை கண்டவனுக்கோ ஆத்திரம் மேலிட . அவனை நோக்கி கோபத்தில் காலடி எடுத்த வைத்த ஆனந்தனின் கையை பிடித்த இதழோ வேண்டாம் என்பது போல் தலையாட்ட .
அதன் பின் இருவரும் வீடு நோக்கி செல்ல .
ஆனந்தன் ஆத்திரத்தில் அங்கிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைக்க .
பாட்டியோ
" டேய் என்னடா ஆச்சு , உனக்கு , ஏன் இப்படி பண்ற "
என்று அவனை தடுக்க பார்க்க.
அவனோ என்னால முடியல பாட்டி என்றவனோ இன்று நடந்ததை கூற .
அவரோ அதிர்ந்து போய் நின்றுவிட .
அவன
" கொல்லனும் பாட்டி என் ரூபா எப்படி துடிச்சிருப்பா அப்படி கொல்லனும் "
என்று சீற .
அவனையே அழுத்தமாக பார்த்த இதழோ
" ஒரு நிமிஷத்தில் உயிர் போய்டும் , ஆனா அவன் நாம அனுபவிக்கிற மாதிரி வலியை அனுபவிக்கனும் "
என்று சொன்னவளது கண்களிலோ அவ்வளவு கோவம் குடிக்கொண்டிருந்தது . அதன் பின் நடந்த அனைத்தும் நாம் அறிந்ததே .
" எங்களுக்கு வலிச்ச மாதிரி உனக்கும் வலிக்கனும், அந்த வலி காதல் கொடுக்கும் அதனால்தான் உன்னை காதலிக்க நடிக்க வந்தேன் , உன்னை காதலிக்கவும் வச்சேன் , ஆனா அதுல நான் தான் இப்போ தோத்துப்போய் நிக்கிறேன் . அன்னைக்கு உன்ன வலிக்க வச்சிட்டு வந்தேன் ஆனா நான் தான்டா வலியை அனுபவிச்சுட்டு இருக்கேன் ..... என்னோட கவலைய பார்த்தே என் பாட்டி இறந்து போய்டுச்சு ......"
என்றவளது கண்களோ மேலும் கண்ணீர் சிந்த .
இதை எல்லாம் கூறி முடித்த இதழோ அவனையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருக்க .
இவ்வளவு நேரம் அழுததால் தலை சுற்ற அப்படியே மயங்கி அவன் மீது சரிந்தால் அவள் .
தொடரும் ....
எப்படியோ flash back முடிஞ்சது . இனி செழியனை என்ன பண்ணலாம் சொல்லிட்டு போங்க .
நாங்க என்ன சொல்றது நாங்க என்ன சொன்னாலும் நீ கிறுக்கு வாக்குல எதாவது எழுதுவ அதான மக்களே ....
