தளிர் - 38
அனைவரும் அவள் குதித்து விட்டால் என்று எண்ணிக்கொண்டிருக்க .
அப்போது அங்கு சிகரெட் பிடித்தபடி ஒரு உருவம் நடந்து வர . அவர்களோ அவரை பயத்துடன் ஒரு பார்வை பார்க்க.
அவரோ அங்கு நின்று இருந்த போலி கதிரின் கன்னத்தில் ஓங்கி ஒன்று கொடுக்க.
அவனோ அதிர்ந்து போய் அவரை பார்க்க.
அவரோ
" ஒரு வேலையை ஒழுங்காக செய்ய துப்பில்லை உனக்கு அன்னைக்கும் இப்படிதான் அந்த ரூபாவ தவற விட்டீங்க இன்னைக்கு இந்த வித்யா "
என்றபடி அவனிடம் கோபத்தில் சாட .
அவனோ அது அது என்று ஏதோ சொல்ல வர.
அவரோ
" மூடிட்டு போய் அந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு பாருங்க , முடிச்சுட்டு எனக்கு கால் பண்ணு , இன்னைக்காவது ஒரு சின்ன பொண்ண அனுபவிக்கலாம் பார்த்தா எல்லாம் உங்களால ஊத்திக்கிச்சு "
என்ற அந்த நபரோ அங்கிருந்து சென்றுவிட.
அதற்குள் அவனது நண்பர்களுடன் அவன் கீழே வந்து பார்க்க.
அது அவ்வளவு உயரம் இல்லை என்பதாலும் , கீழே புல்தரை என்பதாலும் வித்யா லேசான காயத்துடன் மயக்கத்தில் கிடக்க.
அவர்களோ அவளை ஒருகணம் பார்த்துவிட்டு அவள் அருகில் சென்று மெதுவாக அவள் கன்னம் தட்ட .
மெல்ல கண் முழித்த வித்யாவோ தன் முன் இருந்தவர்களை கண்டவளோ மெதுவாக எழுந்தமர்ந்தவளோ பயத்துடன் சற்று விலகி அருகில் இருந்த புதரோடு புதராக ஒட்டிக்கொள்ள .
" டேய் எலி மாட்டிகிச்சுடா"
என்றவனோ அவள் அருகில் நெருங்கி வர .
சற்று பின்னோக்கி நகர்ந்து சென்றவளோ புதர் உள் கைவிட்டு ஒரு பொருளை எடுக்க .
அவள் கையில் இருந்த பொருளை கண்டவனோ அதிர்ச்சியுடன் கண்களை விரிக்க .
அதுவரை சிரித்துக் கொண்டிருந்த அனைவர் முகத்திலும் ஈ ஆடவில்லை .
அவர்களோ உரைந்து போய் இருக்க .
இப்போது வித்யாவின் முகத்தில் முன்பு இருந்த எந்த பயமோ, பதட்டமோ இல்லாமல் இருக்க . கண்களில் அவ்வளவு கோபம் , காளி போல் கண்களை உருட்டி அனைவரையும் பார்த்தவளோ .
ஒரு நக்கல் சிரிப்புடன் தன் கையில் இருந்த துப்பாக்கியை தன் முன் நின்று இருந்த ஒருவனின் நெற்றி பொட்டில் வைக்க .
அவள் துப்பாக்கியை கையாளும் விதமே கூறியது அவள் அதில் கைத்தேர்ந்தவள் என .
" ஹாஹாஹாஹா.......
என்று சிரித்தவளோ தன் விரலை மடக்கி ஒரு விசில் கொடுக்க .
அவள் விசிலுக்கு காத்திருந்தவர்கள் போல ஒவ்வொரு திசையில் இருந்தும் பத்து பதினைந்து ஆட்கள் கையில் துப்பாக்கியுடன் அவர்களை சுற்றி வளைக்க .
அவர்களை கண்டவர்களோ மிரண்டு போய் எங்கும் தப்பி செல்ல முடியாமல் பயத்தில் உரைந்து போய் நிற்க .
தன் உதட்டில் வழிந்த இரத்தத்தை துடைத்த வித்யாவோ , தன் கையை உதறிக் கொண்டவளோ . தன் செயினில் இருந்த கேமராவை கழற்றி எடுத்து மற்றொருவரிடம் கொடுத்தவளோ எல்லாம் இதுல ரெக்கார்ட் ஆகி இருக்கு ஜாக்கிரதை என்க .
இப்போது மீண்டும் ஒரு விசில் கொடுக்க .
அப்போது ஒரு கார் வீட்டின் உள் நுழைய. அதில் இருந்து இருவர் இறங்கி நடந்து வர .
" ஏய் "
என்று தன்னை பார்க்க வைத்த வித்யாவோ .
" பொறி வச்சது நீங்க இல்லைடா , நாங்க"
என்றவளது குரலோ சற்று அழுத்தமாக வர .
" என்ன நான் யாரு , நான் என்ன சொல்ல வரேன் அப்படின்னு எதுவும் புரியலையா ? நான் வித்யா , வித்யா IPS , உங்களை பிடிக்க ஆறு மாசமா சுத்தி வளைச்சு பிளான் போட்டு இன்னைக்கு தான் மொத்தமா கூண்டோட பிடிச்சு இருக்கோம்....
என்றவளோ தன் அருகில் வந்து நின்ற செழியனை கண்டவளோ அவன் கையில் துப்பாக்கியை கொடுக்க .
செழியனோ தன் முன் நின்றிருந்தவனை அழுத்தமாக பார்த்தவனோ .
அவன் நெற்றியில் துப்பாக்கியை வைக்க .
அவனோ பயத்தில்
" செழியா செழியா வேண்டாம் , தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடு , நான் ஏதோ தெரியாம பண்ணிட்டேன் என்னை மன்னிச்சுடு செழியா , நான் உன் பெஸ்ட் பிரண்ட் ரகுதான"
என்று அவனிடம் கெஞ்சத் தொடங்க .
செழியனோ
" நண்பனா ச்சீ அந்த வார்த்தைய சொல்ல உனக்கு வெட்கமா இல்லை , கூட இருந்து என்ன ஒரு அசிங்கமான வேலை பாத்திருக்க , உன்னை நினைச்சாலே அசிங்கமா இருக்கு , எப்படிடா இப்படி ஒரு புத்தி உனக்கு வந்தது ." என்று அவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று கொடுக்க
ரகுவோ தான் பிடிபட்டுவிட்டதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து போய் நிற்க .
கதிரோ
" செழியா நேரம் ஆகிட்டு இருக்கு , இதுவே நாம வித்யாகிட்ட ரகசியமா உதவி கேட்டதால பண்ணி கொடுத்திருக்காங்க , சீக்கிரம் முடி " என்று கூற .
செழியனோ
" இதை நான் பண்ண போறது இல்லை , இவனால பாதிக்கப்பட்ட ஒருத்தர் தான் இவனை கொல்ல போறார். "
என்று காரை பார்க்க.
அங்கு ஒருவர் கைத்தாங்களாக ஆனந்தனை அழைத்து வர .
செழியனோ அவன் கையில் துப்பாக்கியை கொடுத்தவனோ
" உங்க தங்கச்சி சாக காரணம் இவங்க, உங்க தங்கச்சி மாதிரி பல பெண்கள் சாக காரணம் இவங்க "
என்று துப்பாக்கியை கையில் ஒரு அழுத்தம் கொடுத்து கொடுக்க .
ஆனந்தன் கண்களில் இப்போது ரூபாவை பார்த்த நினைவே வந்து போனது . அதன் பொருட்டு கண்கள் கலங்கிவிட . கண்களை இறுகி மூடியபடி துப்பாக்கியை ரகுவின் நெற்றி பொட்டில் வைத்து அழுத்த . பட்டென்ற சத்தம் அந்த இடமே அதிர கேட்க . அதே சுற்றி இருந்தவர்களும் அனைவரையும் சுட்டு தள்ள . அனைவரும் மடங்கி விழ .
ஆனந்தனை அழைத்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து செல்ல தயாராக.
அப்போது ஒரு போலீஸ் வாகனம் உள் நுழைய அதில் இருந்து இறங்கினான் ராகவேந்திரன் Ips ( அதாங்க நம்ம அரசனோ என் அரக்கனோ ராகவ் )
ராகவனோ அவனை ஒரு அழுத்த பார்வை பார்க்க.
அவன் பார்வைக்கு எதிர் பார்வை செழியனும் பார்க்க .
அவர்கள் பார்வையை கண்ட கதிரோ
" டேய் போதும் நிறுத்துங்க இரண்டு பேரும் காலேஜ் ல இருந்து எதிரும் , புதிருமா இருக்கிறது இன்னும் போகல ."
என்று சலித்துக் கொண்டவனோ . சரி ராகவ் எந்த பிரச்சனையும் வராது இல்லை என்று கேட்க.
ராகவோ
" வராம இருக்க தான நான் இங்க வந்தது "
என்றவனோ , செழியினின் தோளை ஒரு தட்டு தட்டிவிட்டு உள் நுழைந்து கொள்ள.
அவர்களையே ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த டேவிட்டோ
" ஏன் சார் எங்க சார் இதுக்கு முன்னாடி தெரியுமா "
என்று கதிரிடம் கேட்க .
கதிரோ
" ஆமா தெரியும் , நாங்க எல்லாரும் ஒரே காலேஜ் , அப்புறம் இதோ உங்க ராகவன் சாருக்கு அங்க கார்ல இருக்கானே அவனுக்கு ஆகவே ஆகாது , எப்பவும் எதிரும் புதிரும் தான் " என்றபடி அங்கிருந்து அகல .
காரில் சென்று கொண்டிருந்த ஆனந்தனோ கண்களில் வழியும் கண்ணீருடன் இருக்கையில் கண்கள் மூடியபடி அமர்ந்து இருக்க .
செழியனோ ஆதரவாக அவன் கையை பிடிக்க .
ஆனந்தனோ " எங்கள மன்னிச்சிருங்க செழியன் உண்மை என்ன தெரியாம நாங்க உங்களை ரொம்ப வருத்தப்படுத்திட்டோம் " என்க .
செழியனோ ஒரு சிரிப்பில் அதை மறைத்தவனோ
" அப்படி வந்ததால தான் எனக்கு உங்க தங்கச்சி கிடைச்சா ,"
என்று முடித்துக் கொள்ள.
ஆனந்தனோ
" இதழை மன்னிச்சிருங்க செழியன், அவளை வெறுத்துடாதீங்க"
என்று அண்ணனாக வருத்தம் தெரிவிக்க .
செழியனோ
" அவ தப்பு செஞ்சா தான மன்னிக்க, என்னையே நான் எப்படி வெறுக்க முடியும் "
என்று நாங்கள் இருவரும் ஒன்றுதான் என்று அவன் உணர்த்திவிட .
காரில் ஒரு அமைதியான சூழ்நிலை , அதே போல் இனி அவர்களது வாழ்வும் அமைதி நிலவும் .
ஆனந்தனை தன் வீட்டிற்கு அழைத்து வந்த செழியனோ மெதுவாக சத்தம் வராமல் ஒரு அறையில் படுக்க வைக்க .
அதன் பின் அறையை விட்டு வெளிய வந்த செழியனோ மெதுவாக தங்கள் அறைக்குள் நுழைய .
அவன் அரவம் கேட்டு இதழோ தூக்கத்தில் அசைய .
செழியனோ ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் என்று அவள் முதுகில் தட்டிக்கொடுக்க. அவளும் அமைதியாக தூங்கிவிட. அவள் தூக்கம் கலையாதவாறு நெற்றியில் அழுந்த முத்தமிட . அணைத்தபடி படுத்துக்கொள்ள.
அடுத்த நாள் காலைப் பொழுது விடிந்தது . மெதுவாக கண் விழித்த இதழ் கண்டது தன்னை அணைத்தபடி உறங்கி கொண்டிருந்த செழியனையே
இதழில் ஒரு குறுநகை இழையோட அவன் தலையை கோதிவிட . அவனோ கோதலில் இதமாக அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து கொள்ள.
இதழோ சிரிப்புடன் அவனை அணைத்துக்கொண்டவளோ
" அந்த ரகுக்கு என்ன ஆச்சு " என்க .
செழியனோ அவள் கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு முழித்தவனோ அவள் முகம் பார்க்க.
இதழோ
" அன்னைக்கு நீங்க குளிக்கும் போது உங்க போனுக்கு வித்யா போன் பண்ணி இருந்தாங்க அப்போ அவங்க நீங்க தான் நினைச்சுட்டு எல்லாத்தையும் சொல்லிட்டாங்க" என்க .
மீண்டும் படுத்துக் கொண்டவனோ
" என்ன பண்ணணுமோ அதை பண்ணியாச்சு " என்க .
இதழோ சாரி என்று சற்று தயக்கத்துடன் வினவ .
செழியனோ எதுக்கு என்றபடி அவள் இடை சேலையை விலக்கி விட்டவனோ லேசாக மேடிட்ட வயிற்றை வருடியபடி கேட்க .
இதழோ
" அது நான் பண்ணதுக்கும் , அதோட உங்கள நம்பாம போனதுக்கு "
தவிப்பாக அவன் முகம் பார்க்க.
செழியனோ " எனக்கு கோவம் இருந்தது தான் என்னை நம்பாம போய்ட்டாளேன்னு , ஆனா உன் பக்கம் இருந்து யோசிச்சு பார்த்தா நீ என்ன பண்ணுவ உனக்கு கிடைச்ச விஷயங்கள் எல்லாம் என்னைய தான் குற்றவாளியா காட்டுச்சு , நீயும் என்ன பண்ண முடியும் ,
இப்படி ஒரு விஷயம் நடக்காம இருந்து இருந்தா நீயும் நானும் இணைஞ்சு இருக்கவும் மாட்டோம் ....
என்றபடி அவள் இதழில் மென் முத்தம் பதிக்க .
இதழோ " அப்போ என் மேல கோவம் இல்லையா ?
என்று சற்று குரல் தாழ்த்திக் கேட்க .
செழியனோ ஒரு சிரிப்புடன் "
" இருக்குதான் , என் கோபத்தை நீதான் குறைக்கனும்"
என்றபடி அவளை தன்மேல் தூக்கி போட்டுக் கொள்ள.
இதழோ அவன் மார்பில் தலை சாய்த்துக்கொண்டவளோ
" என்ன பண்ணனும் " என்க .
அவனோ அவள் காதோரம் குனிந்தபடி மெதுவாக ஒன்றைக் கூற .
இதழோ அவன் கூறியதை கேட்டவளோ
ச்ச்சீசீ என்று சிணுங்கி அவன் மார்பில் ஒரு அடி அடிக்க .
"பண்ணி தான் ஆகனும் மேடம்"
என்று அவளை கைகளில் ஏந்திக்கொண்டவனோ
அங்கிருந்த குளியல் அறையில் நுழைந்து கொள்ள . அதன் பின் அங்கு நடந்தது அனைத்தும் காதல் காவியங்களே.
கதிரோ தன் கையில் இருந்த போனை பார்த்தபடி இருக்க . அவன் அருகில் வந்தமர்ந்த ராமநாதனோ
அப்படி என்னடா இருக்கு அந்த போன்ல என்று வினவ .
கதிரோ அழுத்தமாக அவரை ஒரு பார்வை பார்த்தவனோ எதுவும் இல்லை என்பது போல் தலையாட்ட.
அவரோ சரி டா இந்த வாரம் நம்ம ஆஸ்ரமத்தோட ஆண்டுவிழா வருது அதுக்கான ஏற்பாட்டை பார்க்கணும் என்க .
கதிரோ நல்லா பண்ணிடலாம் , என்னென்ன பண்ணனும் என்றவனோ சாப்பிடுவதற்காக சாப்பாட்டை எடுத்து வைக்க .
அவரோ அனைத்தையும் கூறி முடித்துவிட்டு அவனை நிமிர்ந்து பார்க்க.
கதிரோ சரிப்பா எல்லாம் பண்ணிடலாம் , ஆமா அதோட அன்னைக்கு உங்களோட பிறந்த நாளும் வருதுல்ல என்க .
அவரோ ஆமாடா என்க .
கதிரோ ஆமா எத்தன வயசு ப்பா உங்களுக்கு ஆகுது என்று புன்னகையுடன் கேட்க .
அவரோ என்ன அறுபத்து ஐந்து வயசு இருக்கும் ஏன்டா உனக்கு தான் எல்லாம் தெரியும் இல்லை என்றபடி சாப்பாட்டை சாப்பிடத்தொடங்க .
கதிரோ ஆனாலும் இந்த வயசுலயும் செம்மையாக இருக்கீங்க ப்பா என்ன அவரை காலாய்க்க .
அவரோ டேய் போடா என்று புன்னகையுடன் அவன் தோள் தட்ட .
கதிரோ அதுனால தான் கண்ட வேலை எல்லாம் செய்றீங்க போல என்க .
அவரோ என்னடா சொல்ற என்று அவர் சொல்வது புரியாமல் வினவ .
நீங்க பாக்கிற வேலை எல்லாம் செய்றீங்க அதை சொன்னேன் என் செல்ல டேடி என்று அவர் கன்னம் பிடித்து கொஞ்சியவனோ அங்கிருந்து எழுந்து கொள்ள .
சரிப்பா நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கிறோம் , ஒரு பிரண்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல என்னை பார்க்க வருவாரு அவரை கொஞ்சம் பார்த்துக்கோங்க நான் சின்ன வேலையா ஆபிஸ் போயிட்டு வந்துடுறேன் என்று வெளியேறிவிட .
சரிடா ஆமா ஏதோ அடிக்கடி தமிழ் , ஒரு பொண்ணு உனக்கு கால் பண்ணுதே அது யாரு என்க .
கதிரோ சிரிப்புடன் லவ் பண்ற பொண்ணுப்பா , நான் போய்டு வந்து எல்லாத்தையும் சொல்றேன் என்று சென்று விட .
தொடரும் ....
ஒருவழியா வில்லன் கொன்னாச்சு இனிமே jolly தான் , அடுத்து இரண்டு ஜோடிக்கும் கல்யாணம் டும் டும் தான் 🙂🙂🙂🙂
நீங்க நினைச்ச மாதிரி ரகு தான் வில்லன் போலவே . Guess பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி
