வஞ்சகன் - 27

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 29
Thread starter  

அத்தியாயம் 27 

 

இதழ்களின் தீண்டலில் தன்னை மறந்து நின்றாள் யாதிரா.. 

 

அவனின் மோக இதழ்கள் செய்த மாயத்தில், அவளின் இதழ்கள் இணைந்து பதில் கொடுத்தது.. 

 

இப்படியொரு ஒத்துழைப்பை சத்தியமாக அவன் எதிர்பார்க்கவில்லை.. 

 

தான் தீண்டினாலே விலகி ஓடுபவள், இன்று தன் முத்தத்திற்கு மயங்கி நிற்பதைக் கண்டு அவன் மயங்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.. 

 

அவளோடு சேர்ந்தே படுக்கையில் விழுந்தான்.. 

 

மென் தீண்டல்கள் பெண்ணவளின் விழிகளை மூட வைத்தது.. 

 

“யாதிஈஈ..” என்றான் மோகனமாக, 

 

“ம்ம்..” என்றாள் சிணுங்கலாக, 

 

“எனக்கு நீ வேணும்டி..” என்றான் விஷமம் நிறைந்த குரலில், 

 

அலறுவாள்.. அழுவாள்.. தன்னை தள்ளி விட்டு ஓடுவாள்.. என அவன் எதிர்பார்த்துக் காத்திருக்க, 

 

மெதுவாக கண்களை திறந்தாள் யாதிரா.. 

 

“என்னடிஹ்.. எடுத்துக்கவா?..” என்றான் இதழோரம் கசிந்த சிறு புன்னகையுடன்.. 

 

தன்னை தள்ளி விட்டு ஓடுவாள் என்பதை அறிந்தும் அவன் கேட்க, 

 

அவளோ அவனின் கண்களையே ஆழ்ந்து பார்த்தாள்.. 

 

“என்னடிஹ்.. அப்படி பார்க்குற?..” 

 

“எடுத்துக்கோங்க..” என்றவளை தன் கண்களை விரித்துப் பார்த்தான் சயந்தன்.. 

 

சட்டென்று அவளை விட்டு விலகி செல்ல முயன்றான்.. 

 

அவனின் சட்டையை கொத்தாக பற்றியவள், “என்ன?.. எடுத்துக்கலை..” என்றாள் கேலிச்சிரிப்புடன், 

 

“என்னடி பயம் விட்டுப் போச்சா?..” 

 

“பயம் விட்டுருச்சான்னு தெரியலை.. ஆனா பொண்டாட்டிங்குற உரிமை வந்திருச்சு..” 

 

“ஏது.. பொண்டாட்டியா?..” என வாயை பிளந்தான் போலீஸ்காரன்.. 

 

“ஆமா பொண்டாட்டி தான்.. கழுத்துல தாலி கிடக்குதே..” 

 

“நீ மைனர் டி..” என்றான் அவளை சீண்டும் விதமாக, 

 

“ஏன், அது கழுத்துல தாலிக் கட்டும் போது தெரியலையா?..” என்றவளின் கைகளோ, அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு தன்னை நோக்கி இழுத்தது.. 

 

இருவரின் முகமும் ஒன்றொடொன்று உரசியது.. 

 

“விடு டி..” என்றான் கரகரத்த குரலில், 

 

“என்னஹ்?.. காவல்காரருக்கு வார்த்தை தந்தியடிக்குது..” 

 

“இப்போ ஒன்னு வாங்கப் போற பாரு?.. சட்டையை விடுறி..” என்றவன், நினைத்தால் ஒரு நிமிடத்தில் அவளை விட்டுப் பிரிந்து விடலாம்.. 

 

ஆனால் அவன் மனம் நினைக்கவில்லை போல, அவளின் ஸ்பரீசமும், அருகாமையும் அவனை பெண் பித்தனாக்கியது.. 

 

“அந்துஊஊ..” என்றாள் தேகம் குலைந்து, மென் வார்த்தைகளைக் கொண்டு

 

“அந்துவாஆஆ..” என கண்களை விரித்தான் சயந்தன்.. 

 

“ம்ம்.. அந்து தான்.. என்னோட சயந்தன்..” என்றவளின் இதழில் அப்படியொரு புன்னகை.. 

 

“என்னடி ஒரு மார்க்கமா எல்லாம் பண்ணிட்டு இருக்க?..” என கேட்டவனின் கழுத்தில் தன் மூக்கை வைத்து உரசினாள்.. 

 

“ஸ்ஸ்ஸ்..” என தவித்தான் சயந்தன்.. 

 

அவளின் தீண்டலில் உயிர் கரைந்துப் போனது.. 

 

“யாதிஈஈஈ.. என்னால முடியலை.. விட்டுரு..” என ஹஸ்கி வாய்சில் முனகியவனின் தேகமோ, அவள் வேண்டுமென்று தவியாய் தவித்தது.. 

 

“அந்து.. நாம தனியா வாழப் போகலாமா?..” என அவன் கழுத்தில் மென் முத்தம் ஒன்று வைத்தவாறே கேட்டாள்.. 

 

மறுக்கத் தோன்றிய மனது, “ம்ம்..” என உடனே தலையாட்டியது.. 

 

இதுதான் தலையணை மந்திரம் என்பதை ஆடவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.. 

 

காவல்காரனையே காமம் கொண்டு கட்டியிழுத்தாள் காரிகை.. 

 

“அந்து..” என்றாள் மீண்டும், சிணுங்கலாக, 

 

“ப்ளீஸ் யாதி.. என்னை விடு..” என அவளை விட்டுப் பிரிந்து பக்கவாட்டாக படுத்தான்.. 

 

உடலின் செல்கள் எங்கும் அவள் வேண்டுமென்று பேராட்டம் போட்டது.. 

 

“விடுவேனா உன்னை..” என்பதை போல், அவனின் முதுகை பின்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் யாதிரா.. 

 

அவளின் உள்ளங்கையின் சூடு, ஆடை தாண்டியும் தன் வயிற்றில் படர்வதைப் போன்று உணர்ந்தான் ஆடவன்.. 

 

அதற்கு மேல் முடியாது என்பதை போல், அவளை நோக்கி திரும்பியவன், விலாங்கு மீனைப் போன்று, அவளை வாரிச் சுருட்டி, தனக்குள் அடக்கியவன் அவளின் செவ்விதழ்களை அப்படிய கவ்விக்கொண்டான்.. 

 

இதமாய் வருடிய முத்தம், இப்பொழுது புயலாய் மாறிக் கொண்டிருந்தது.. 

 

அவளின் உதட்டு சூட்டை தன் உதட்டுக்குள் உணர்ந்தான் சயந்தன்.. 

 

உதடும், உதடும் சண்டையிட, கைகளோ அவளின் அங்க வனப்புகளை ஆராய்ந்தது..

 

கைகள் ஆராய்ந்ததை, இதழ்களும் ஆராய முனைய அந்த நொடி உணர்ந்தான்.. தான் செய்யும் தவறை.. 

 

சட்டென்று அவளை விட்டுப் பிரிந்தவன், விறுவிறுவென அறையை விட்டு வெளியேறி விட்டான்.. 

 

“இன்னும் ஒரு நிமிஷம் இங்கேயிருந்தா, நம்ம கற்புக்கு கியாரண்டி இல்லை டா சாமி..” என புலம்பிக் கொண்டே சென்றவனைக் கண்டு வாய் விட்டு சிரித்தாள் யாதிரா.. 

 

பல வருடங்களாய் சிரிப்பை மறந்தவளின் இதழ்களோ இன்று வாய் விட்டு சிரித்திருக்கிறது.. 

 

அவன் அறையை விட்டுச் செல்லவும், தன் தலையணைக்கு அடியில் இருந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள்.. 

 

அது டிஎன்ஏ ரிப்போர்ட்.. 

 

அவளின் தாலி என்ற பந்தத்திற்கு அச்சாரமாய் இருந்தது.. 

 

“பிராச்சி.. பிராச்சி..” என அலறியபடி எழுந்தமர்ந்தார் மல்லி.. 

 

“மல்லி.. மல்லி..” என அவர் படுத்திருந்த படுக்கைக்கு அருகில் வந்தார் ப்ரணவ்.. 

 

“பிராச்சி.. பிராச்சி..” என அலறியபடி, ப்ரணவ்வின் கையைப் பற்றியவர், 

 

“மல்லி.. ரிலாக்ஸ்.. நான் தான் கூடவே இருக்கேன்ல..” என்றபடி அவரின் கையை வருடிக் கொடுத்தார்.. 

 

“எனக்குப் பயமா இருக்கு ப்ரணவ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என் கூடவே இருங்க..” என அவரின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.. 

 

“ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ் மல்லி.. உனக்கு ஒன்னும் ஆகாது..” என்றவரை இடையோடு கட்டிக் கொண்டார் மல்லி.. 

 

“பயமா இருக்கு ப்ரணவ்.. அந்தப் பிராச்சி என்கிட்ட ஏதோ பேசுனா?..” என்றவரைக் கண்டு கண்களை சுருக்கினார் ப்ரணவ்.. 

 

“பிராச்சி ன்னா..” என அவர் இழுக்க, 

 

“உங்க ஒய்ஃப் பிராச்சி.. யாதிரா அம்மா..” என்றார் மல்லி சற்று பயத்துடனே, 

 

“ஓஹ்.. ஓகே.. என்ன சொன்னாஹ்?..” என்றார் ஒரு வித ஆர்வத்துடன், 

 

“ஹான்.. ஏதோ சொன்னாலே, மஜ்யா, பண்டு, ராகவ்வு.. இப்படி என்னவெல்லாமோ சொன்னா..” என்றார் மல்லி கண்களில் பயத்தை தேக்கி, 

 

“மஜ்யா ன்னா, சொன்னா?..” என்றார் ப்ரணவ்.. 

 

“ஆமா, மஜ்யா தான் சொன்னா?.. ஏன் மஜ்யா ன்னா, என்ன அர்த்தம்?..” என்றவரைப் பார்த்து திருதிருவென விழித்தார் ப்ரணவ்.. 

 

அவரின் கள்ள முழியில், “மஜ்யா ன்னா என்ன ப்ரணவ்?..” 

 

“அது.. அன்பரே ன்னு அர்த்தம்?..” என்ற ப்ரணவ்வை தீயாய் முறைத்தார் மல்லி.. 

 

“ஓஹோ.. அந்தப் பொண்ணுக்கு நீங்க அன்பரா?.. நல்லா இருக்கு.. நல்லா இருக்கு.. நீங்க போய் உங்க பேய் பொண்டாட்டிக் கூட குடும்பம் நடத்துங்க. நான் போய், என் பொழைப்பைப் பாக்குறேன்.. கொஞ்சம் விட்டா, நம்மளை பேய் கூட சக்காளத்தி சண்டை போட விட்டுருவான் போல..” என புலம்பிக் கொண்டே சென்றவரை சன்னமான சிரிப்புடன் பார்த்தார் ப்ரணவ்.. 

 

“மஜ்யா, மஜ்யா..” என சொல்லிக் கொண்டே வந்தவர், சட்டென மூளையில் ஒரு மின்னல் வெட்டியது.. 

 

சோனா ஒரு சமயம் இவன் வீட்டிற்குள் நுழையும் போது, “மே மஜ்யா பிரியசாதி ஸ்வயம்பாக் கர்தே.. (என் அன்பருக்காக நான் சமைக்கிறேன்)..” என சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.. 

 

புருவம் முடிச்சிட அமர்ந்திருந்தவரின் முன்பாக வந்து நின்றார் மல்லி.. 

 

“என்ன பேய் பொண்டாட்டி கூட கனவுல டூயட் பாடியாச்சா?..” என்ற மல்லியைப் பார்த்து, பழைய சிரிப்பு மீண்டாலும், அவர் சொன்ன மஜ்யா என்ற வார்த்தை அடிக்கடி நினைவில் வந்தது.. 

 

“இல்லையே.. பேய் பொண்டாட்டி என் கூட டூயட் பாட மாட்டேன்னு சொல்லிட்டா.. சக்காளத்தி சண்டை போடத்தான் அவளுக்குப் பிடிக்குமாம்?.. இன்னைக்கு நைட்டு வேணும்னா வரச் சொல்லவா?..” 

 

“ஏது.. வரச் சொல்லுறீயா?.. என்ன விளையாடுறீயா நீ?.. நல்லா இருக்கே உன் கதை.. உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நான் வந்தா, என்னையே நீ, பேய்க்கிட்ட மாட்டி விடுறீயா?.. நான் போறேன் ப்பா.. இந்த ஊரை விட்டு முதல்ல..” என்றவரைக் கண்டு கலகலத்து சிரித்தார் ப்ரணவ்.. 

 

“என் பொழைப்பு உனக்கு சிரிப்பா இருக்குதா?.” என அதற்கும் முகத்தை கடுகடுவென்று வைத்திருந்தார் மல்லி.. 

 

“என்னடி நீ?.. இதுக்கெல்லாம் கோவிச்சிக்கிற?.. இன்னைக்கு பிராச்சி உன்னை மீட் பண்ணினா, நான் அவளைப் பார்க்க ஆசைப்படுறேன்னு சொல்லு..” என்றவரை அரண்டுப் பார்த்தார் மல்லி.. 

 

“என்னடா பேய்க் கூட பேச்சுவார்த்தை நடத்த, ஆசைப்படுற?..” 

 

“நான் போலீஸ்காரன் டி.. பேய்யா இருந்தாலும் விசாரணை பண்ணித்தானே ஆகணும்..” என்றவரை முறைத்துக் கொண்டிருந்தார் மல்லி.. 

 

அவரின் முறைப்பையே சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ப்ரணவ்.. 

 

அவரின் சிரிப்பை அடியோடு சாய்க்கும் ஆயுதம் ஒன்று உருவாகியிருக்கிறது என்பதை அவர் அறியவில்லை.. 

 

அடுத்த நாள் காலை, மஞ்சள், சிகப்பு கலந்த சேலை அணிந்து வெளியே வந்தவளைக் கண்டு அத்தனை பேரும் வாயைப் பிளந்தனர்.. 

 

“யாதிராவா இது?..” என கேட்ட அஞ்சலி, அருகிலிருந்து கெளதமின் கையை கிள்ளி விட, 

 

“ஆஆஆ.. எருமை வலிக்குதுடி..” 

 

“எருமைக்கு வலிக்குமா கெளதம்?..” என்ற அஞ்சலியை திரும்பிப் பார்த்தவர், 

 

அவளின் கையிலே ஒரு கிள்ளு கிள்ளி விட்டார்.. 

 

“ஆஆஆஆஆஆஆ..வலிக்குது கெளதம்..” என அலறியே விட்டார் அஞ்சலி.. 

 

“அப்படித்தான் டி எனக்கும் வலிக்கும். எருமை.. கையில கிள்ளுனதும் இல்லாம நக்கலா பண்ற?..” என கெளதம் நின்றுக் கொண்டிருக்கும் பொழுதே, அவரின் காலில் விழுந்தாள் யாதிரா.. 

 

சட்டென இரண்டெட்டு பின் வைத்தார் கெளதம்.. 

 

“இப்போ ஏன் மா கால்ல விழுற?..” 

 

“ப்ச்ச்.. கெளதம் என்ன நீங்க, இதுக்கூட தெரியாம இருக்கீங்க.. இன்னும் கொஞ்ச நாள்ல போர்ட் எக்ஸாம் வருது.. அதான் பாப்பா ஆசீர்வாதம் வாங்க வந்திருக்கா..” என்றார் அஞ்சலி.. 

 

“அப்படியா?.. எப்பவும் போல இந்த எக்ஸாம்லையும் நீ, நல்ல மார்க் எடுக்கணும்..” என வாழ்த்த, 

 

“அச்சோ.. பெரியப்பா.. அதெல்லாம் இல்லை.. நான் உங்க பையன்கூட, தனிக்குடித்தனம் போகலாம்னு இருக்கேன்.. அதான் ஆசீர்வாதம் வாங்குனேன்..” 

 

“என்ன தனிக்குடித்தனமா?..” அதிர்ந்தார் கெளதம்..

 

“உனக்கு எந்த காத்து கருப்பு அடிச்சது?..” என்றார் அஞ்சலி.. 

 

“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?..” என கோபத்தில் இரைந்தார் மஹாலெட்சுமி.. 

 

“யாதிரா என்ன பேசிட்டு இருக்க?.. புரிஞ்சுப் பேசுறீயா இல்லையா நீ?..” என நான்கு பேரும் நான்கு திசையில் நிற்க வைத்துக் கேள்விக் கேட்க, 

 

“அம்மா.. இப்போ நான் என்ன தப்பு பண்ணிட்டேன்.. புருஷன் கூட தனிக்குடித்தனம் போறேன்னு சொன்னேன்..” என்றவளை பார்த்து அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றார் மஹாலெட்சுமி.. 

 

“என்ன சந்தோஷ், இவ என்னவெல்லாமோ பேசுறா?..” என கண்களில் கண்ணீருடன் மஹாலெட்சுமி கேட்க, 

 

“நான் என் புருஷனுக்கு காபி கொடுத்துட்டு வர்றேன்..” என அஞ்சலி கையில் வைத்திருந்த காபியை பிடுங்கிக் கொண்டுச் சென்றாள் யாதிரா.. 

 

செல்லும் அவளையே திகைத்துப் பார்த்தனர் மற்றவர்கள்.. 

 

“அந்து.. அந்து..” என்ற அழைப்பில், மெதுவாய் கண்களை திறந்தான் சயந்தன்.. 

 

கண்களை கசக்கிப் பார்த்தவனின் விழிகள் அப்படியே உறைந்தது.. 

 

சிகப்பு மஞ்சள் கலந்த டிசைனர் புடவையில், கையில் காபி வைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து திகைத்து நின்றான் சயந்தன்.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top