வஞ்சகன் - 26

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 29
Thread starter  

அத்தியாயம்  26 

 

மணிப்பூரில் வந்து இறங்கினார்கள் மல்லியும், ப்ரணவ்வும்.. 

 

“உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இங்கே இருக்காங்களா ப்ரணவ்..” என கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, அங்கு வந்து நின்றார் இம்பால் கமிஷனர் தோங்கம் வீரேந்திர சிங் நின்றிருந்தார்.. 

 

“வாங்க ப்ரணவ் சார்..” என அவர் மராத்தியில் அழைக்க, சிரித்த முகத்துடன் அவரை அணைத்துக் கொண்டார் ப்ரணவ்.. 

 

“வாங்க மிஸ்ஸஸ்.ப்ரணவ்.. எப்படி இருக்கிங்க?..” என மல்லியைப் பார்த்து சிரிக்க, மல்லிக்கோ திக்கென இருந்தது.. 

 

அவர் மராத்தியில் சொன்னது புரியவில்லை என்றாலும், மிஸ்ஸஸ்.ப்ரணவ் இந்த வார்த்தை நன்றாக புரிந்தது மல்லிக்கு.

 

“இல்லை.. நான்..” என ஆங்கிலத்தில் சொல்ல வந்த மல்லியின் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டார் ப்ரணவ்.. 

 

அவரின் கை அழுத்தத்தில் வேகமாக திரும்பிப் பார்த்தார் மல்லி.. 

 

“அவுங்க ஏதோ மிஸ் அன்டர்ஸ்டாண்டிங்க்ல பேசுறாரு..” என தமிழில் இவள் பேச, 

 

“எனக்குப் பிடிச்சிருக்கு, அந்தப் பேச்சு..” என ஒற்றை வார்த்தையில் வெள்ளைக் கொடி காட்டி விட்டார் ப்ரணவ்.. 

 

“என்ன பிடிச்சிருக்கு?.. உங்களையும், என்னையும் புருஷன் பொண்டாட்டின்னு நினைச்சுப் பேசுறாங்க..” என ப்ரணவ்வின் காதில் கிசுகிசுக்க, 

 

“அது தான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.. எனக்குப் பிடிச்சிருக்கு.. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. போதுமா?.. அவர் சொன்னதையும்.. உன்னையும்..” என தன் மனதில் இருந்ததை பட்டென போட்டு உடைத்து விட்டார் அவர்.. 

 

“என்னைப் பிடிச்சிருக்கா?..” என கத்திக் கேட்க வந்த மல்லியின் வார்த்தைகள் யாவும் காணாமல் போனது.. எதுவோ தொண்டைக்குள் அடைத்துக் கொண்ட உணர்வு.. 

 

மனம் விட்டு பேசவும் ஒரு தயக்கம்.. 

 

மெளனமாக இருந்த அவரின் மனதுக்குள் ப்ரணவ் என்கின்ற நேசவிதை விழுந்ததால் மட்டுமே அந்த மெளனம்.. 

 

இருவரையும் அழைத்துக் கொண்டுப் போன இடம் போலீஸ் குவாட்டர்ஸ்க்குத் தான்.. 

 

“பரவாயில்லையே, உங்களை இங்கே வரைக்கும் தெரிஞ்சு வச்சிருக்காங்க.. ஆள் கொஞ்சம் பேமஸ் தான் போல,” என்ற மல்லியை திரும்பிப் பார்த்தவன், லேசான புன்னகையுடன்

 

“ம்ம்.. நானும் சிங்கும் இங்கே தான், மொய்ராங் ல 4 வருஷமா வேலை பார்த்தோம்.. அப்போ இருந்தே நாங்க பெஸ்ட் ப்ரண்ட்..” என்றவனை பார்த்து லேசாக சிரித்தாள்.. 

 

“அப்போ சாருக்கு மொய்ராங்க்ல கூட நல்லா தெரிஞ்ச ஆட்கள் இருக்காங்க..” 

 

“நல்ல பழக்கம்னு சொல்ல முடியாது.. ஓரளவு பழக்கம்.. கொஞ்சம் மராத்தி பேசுற அளவுக்கு.” என சொல்லியபடி புன்னகைத்தார் ப்ரணவ்..  

 

“அப்போ என்னை சும்மாதான் அழைச்சிட்டு வந்து இருக்கீங்க?..” என்றாள் சிறு கோபத்துடன் முறைத்தபடி,  

 

“ஒரு சப்போர்ட்டிவ் எனக்கு தேவைப்படுது மல்லி.. அது நீங்களா இருக்கணும்னு ஆசைப்படுறேன்..” என்றார் ப்ரணவ்.. 

 

“பார்க்கலாம் எவ்வளவு சப்போர்ட்டிவ் தேவைப்படுதுன்னு..” என்றபடி இருவரும் சேர்ந்து ஒன்றாக வீட்டிற்குள் நுழைந்தனர்.. 

 

“ஆமா சிங்.. சோனா இப்ப என்ன பண்றான்னு தெரியுமா?..” என்றார் ப்ரணவ் ..

 

“எந்த சோனா?..” என்றார் சிங்..

 

“அதான் நமக்கு சமைச்சுப் போட்டாளே?.. அவ தான்.. அதுக்குள்ள மறந்துட்டீயா நீ?..” 

 

“ஓ அவளா?.. யாரோ ஒரு பையனை லவ் பண்ணி அவன் கூட ஓடிப்போயிட்டாளாம்.. அவளுக்கு இப்ப கல்யாணம் முடிஞ்சுருக்கும்.. எங்க இருக்கான்னு தான் தெரியல..” என்றார் சிங்.. 

 

“ஓஹ்..” என்ற பிரணவ்வின் குரல் சற்று இறங்கி ஒலித்தது 

 

அவனின் வாடிய முகத்தை வித்தியாசமாகப் பார்த்தார் மல்லி ‌.. 

 

சிங் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியே சென்று விட்டார்.. 

 

“அந்தப் பொண்ணை அவ்வளவு பிடிக்குமா?..” என்ற மல்லியின் குரலில் புருவம் சுருக்கினார் ப்ரணவ்.. 

 

“எந்தப் பொண்ணு?..” என்றவரைக் கண்டு முறைத்தாள் மல்லி.. 

 

இத்தனை நேரம் சிங்கிடம் பேசிக் கொண்டிருந்ததில் சோனாவைப் பற்றி மறந்தே விட்டான் அவன்.. 

 

திடீரென்று இவள் கேட்பதால் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. 

 

“ஹேய்ய்ய.. நிஜமா எனக்கு ஞாபகத்துல இல்லை‌‌.. எந்தப் பொண்ணு?..” என்றார் மீண்டும் ப்ரணவ்.. 

 

“சோனா..” என மெல்லிய குரலில் சொன்னார் மல்லி.‌ 

 

“ஆமா, ஆமா.. ஐ மிஸ்டு ஹேர்.. ரொம்ப ரொம்ப நல்லப் பொண்ணு.. என்னை அப்படிக் கவனிச்சிக்கிட்டா, இப்போ எங்கேயிருக்காளோ?.. அவளை ஒரு தடவைப் பார்க்கணும்னு ஆசைப்படுறேன்.. ஏன்னு தெரியலை.. மனசு அவளைத் தேடுது.. 

 

“அவ்வளவு பிடிக்கும்னா, கல்யாணம் பண்ணிக் கூடவே வச்சிக்க வேண்டியது தானே..” என்றார் மல்லி சிடுசிடுத்தபடி, 

 

“ப்ச்ச்.. பிடித்தம்ங்குறது வேற மல்லி.. அவளைப் பிடிக்கும்னு சொன்னேன்.. கல்யாணம் பண்ற அளவுக்கப் பிடிக்கும்னு சொல்லவே இல்லை..” 

 

ஆனா ஒன்னு, அவளோட ஹஸ்பென்ட்  ரொம்ப கொடுத்து வச்சவன்.. அவளை மாதிரி அன்பான பொண்ணை இந்த உலகத்துல பார்க்கவே முடியாது.. இந்த மாதிரி பொண்ணுக் கிடைக்கிறது எல்லாம் வரம் தான்..” என ப்ரணவ் தன் மனதில் இருப்பது எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தார்… 

 

“அப்போ, எங்களை கல்யாணம் பண்ணவங்க எல்லாம் பாவம்னு சொல்லுறீங்களா?..” என இடுப்பில் கை வைத்து முறைக்க, 

 

“எக்ஸாட்லி.. பாவம் தான்..” என சொல்லிவிட்ட பின்பு தான், தான் சொன்ன வார்த்தையை உணர்ந்தார் ப்ரணவ்.. 

 

“அச்சோஓஓஓ..” என நாக்கைக் கடித்து திரும்பிப் பார்க்க, அங்கு மல்லியின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.. 

 

“சாரி, சாரி.. மல்லி.. நான் ஏதோ விளையாட்டா சொன்னேன்..” என்றார் ப்ரணவ்.. 

 

“ஆமா உங்களை மாதிரி ஆம்பிளைங்களுக்கு நாங்க பாவம் தான்..” என்றவர், கோபித்துக் கொண்டு அங்கிருந்த ஓர் அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டார்.. 

 

தலையிலேயே அடித்துக் கொண்டார் ப்ரணவ்.. 

 

நிச்சயமாக மல்லியைக் காயப்படுத்த வேண்டுமென்று அவர் சொல்லவில்லை.. 

 

“சாரி மல்லி..” என சத்தமாக கத்தியபடி, கதவை வேகமாக தட்டினார்.. 

 

ஆனால் திறந்தபாடில்லை.. 

 

“ப்ச்ச்ச்..” என சலிப்புடன் அவருக்கென ஒதுக்கியிருக்கும் அறைக்குச் சென்றார்.. 

 

அறைக்குள் நுழைந்த மல்லிக்கு மனம் ஏனோ சஞ்சலமாக இருந்தது.. 

 

ப்ரணவ்வின் மேல் இருந்த ஒரு வித ஈர்ப்புக்கூட இந்தப் பேச்சில் சுத்தமாக விலகிவிட்டது.. 

 

நீண்ட தூர பயணத்தில், சற்று களைப்பாக இருப்பதை உணர்ந்த மல்லி அப்படியே உறங்கி விட்டார்..

 

ப்ரணவ் கதவு தட்டும் சத்தமோ, அழைப்புகளோ எதுவுமே அவர் காதில் விழவில்லை..

 

இரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார் மல்லி.. திடீரென்று அறையெங்கும் ஒரு வித மல்லிகையின் நறுமணம் பரவ ஆரம்பித்து.. 

 

கிட்டத்தட்ட மல்லிகையின் மணம் சந்தனமல்லியின் நாசிக்குள் சென்று, சுவாசத்தை அடைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.. 

 

கண்களை திறக்கலாம் என முயற்சிக்க, அவரால் கண்ணை திறக்கவே முடியவில்லை.. 

 

கால்களை அசைத்துப் பார்க்க, அதையும் அசைக்க முடியவில்லை.. கால்களை யாரோ கட்டி வைத்திருப்பாற் போன்ற உணர்வு.. 

 

தனக்கு ஏதோ தவறு நேர்கிறது என அறிந்தவர், “ப்ரண்வ்வ்.. ப்ரணவ்வ்வ..” என சத்தமாக அழைக்க, அய்யோ பாவம்.. அந்த வார்த்தைகள் அவரின் உதட்டை விட்டே செல்லவில்லை.. 

 

“மல்லி..” என்ற பெண்ணின் குரலில் அப்படியே உடல் விறைத்தது மல்லி.. 

 

“ம்ம்ம்..” அவரையும் அறியாமல் பதில் கொடுக்க ஆரம்பித்தார்.. 

 

மஜ்யா பிரியகராஷி, பண்டு நகா, ராகவு நகா (என் அன்பரோட சண்டை போடாதிங்க. கோபித்துக் கொள்ளாதிங்க)..” என மராத்தியில் கெஞ்சும் குரலில் ஒரு பெண் பேசிட, 

 

மல்லி உறக்கத்திலேயே கண்களைச் சுருக்கினார் மொழி புரியாமல்.. 

 

““மஜ்யா பிரியகராவர் ராகவு நகா. மாலா ஆவடத் நஹி. (என் அன்பரை கோபித்துக் கொள்ளாதிங்க.. எனக்குப் பிடிக்கவில்லை..?..” என்றக் குரல் அழுத்தமாக ஒலித்தது.. 

 

“த்யாஞ்சா சேஹ்ரா உதாஸ் ஜாலா தர மாலா சஹன் ஹோத் நஹி. (அவரின் முகம் வாடினால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது..” என மல்லியோடு வாதம் பண்ணியது அந்தக் குரல்.. 

 

“யார்  நீ?..” என்றார் மல்லி.. 

 

“மஜா நாவ் பிராச்சி ஆஹே. (என் பெயர் பிராச்சி)..”  என சொல்லி முடித்த அடுத்த கணமே பட்டென்று கண்களை விரித்தார் மல்லி.. 

 

அன்று இரவு ஏழு மணியளவில் அபியும், யாதிராவும் சேரந்து வரவேற்பறையில்படித்துக் கொண்டிருந்தனர்.. 

 

அப்பொழுது தான் உள்ளே நுழைந்தான் சயந்தன்.. 

 

அவன் முகமே ஒரு வித சோர்வைக் காட்டியது.. 

 

“யாதி, அம்மா எங்கே?..” என்றான் சயந்தன்.. 

 

“அம்மா கோவிலுக்குப் போயிருக்காங்க..” 

 

“சித்தி..”

 

“அவுங்களும் கோவிலுக்குப் போயிருக்காங்க.. அப்பாவும், பெரியப்பாவும்.. கடைக்குப் போயிருக்காங்க..” என்றாள் யாதிரா.. 

 

“ம்ம்..” என்றவன், நெற்றியை நீவிக் கொண்டே, அங்கிருந்த சோபாவில் தலைக்குக் கொடுத்தபடி அமர்ந்திருந்தான்..

 

யாதிரா ஏதோ எழுதிக் கொண்டே, ஓரக்கண்ணால் திரும்பிப் பார்த்தாள்.. 

 

அங்கு நெற்றியை நீவிக் கொண்டே சோர்வாக கண்களை மூடி அமர்ந்திருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. 

 

ஏதோ ஒரு வித உந்துதலில், சயந்தன் கண்களை விரிக்க.. அவன் திடீரென்று தன்னைப் பார்ப்பான் என உணராதவள், சட்டென்று அபியின் புறம் திரும்பிக் கொண்டாள்.. 

 

அவளின் பார்வையை உணர்ந்த சயந்தனின் இதழோரம் சிறு சிரிப்பு தோன்றிட, 

 

“யாதிரா..” என்றழைத்தான்.. 

 

யாதிராவிற்கோ ஒருவித படபடப்பு.. ஏறெடுத்தும் அவனைப் பாரக்க மறுத்தாள்.. 

 

“யாதிராஆஅ..” என செல்லமாக அழைத்தான்.. 

 

இப்பொழுது திரும்பியது அபி தான். 

 

“என்னஹ்?..” என்பது போல் அவன் பார்க்க, 

 

“நீயா யாதிரா?.. படிக்கிற வேலையைப் பாரு..” என்றான் அதட்டலாக, 

 

“ஒரு பொண்ணு நீங்க, கூப்பிட்டு திரும்பலைன்னா.. அவளுக்கு உங்களைப் பார்க்கப் பிடிக்கலைன்னு அர்த்தம்?..” என்றான் அபி சயந்தனை மூக்குடைக்கும் நோக்கத்தில், 

 

“அதே பொண்ணு.. நான் பார்க்காத நேரம், என்னைப் பார்த்துட்டு இருந்தா, அவளோட ஆழ்மனசுல நான் இருக்கேன்னு அர்த்தம்.. இதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது.. சின்னப் பையன் நீ?..” என்ற சயந்தனை முறைத்துக் கொண்டே அபி திரும்பிப் பார்க்க..

 

“நான் ரூம்க்குப் போறேன் அபி..” என யாதிரா அங்கிருந்து நழுவிச் சென்றாள்.. 

 

அவளின் பின்னாடியே சென்று விட்டான் சயந்தன்.. 

 

அவனைத் தடுக்கவும் வழி தெரியவில்லை அபிக்கு.. 

 

உள்ளே நுழைந்த யாதிராவை பின்புறமாக அணைத்துக் கொண்டான் சயந்தன்.. 

 

அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள் யாதிரா.. 

 

அவனைத் தள்ளிவிடவும் இல்லை.. அவனை அணைத்துக் கொள்ளவும் இல்லை.. 

 

அவனை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் ஒரு வித சஞ்சலத்துடன் நின்றிருந்தவளின் பின்னங்கழுத்தில், அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்தான்.. 

 

இதுவரை அவன் நெருங்கினாலே இறுக்கமாகியிருக்கும் அவளின் தேகம், இப்பொழுது இளகியிருந்தது.. 

 

“யாதிஈஈ..” என மோகனமாய் அழைத்தவன், அவளை தன்னை நோக்கி திருப்பினான்.. 

 

“யாதிதி..” என அவளின் கன்னத்தை வருடியவனின் கைகள், மெல்ல கீழிறங்கி அவளின் கழுத்தைப் பற்றியது.. 

 

“யாதிதி..” என தாபமாய் சிணங்கியவன், அவளின் இதழோடு இதழ் பொருத்தியிருந்தான்.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top