அத்தியாயம் 24
“இவளுக்கு சத்தமாக சிரிக்கத் தெரியுமா?..” என்று நினைத்தவன், வேகமாக ஜீப்பை விட்டு இறங்கினான்..
“அபி.. நோ.. என்னால ஓட முடியாது.. மூச்சு வாங்குது..” என கத்திக் கொண்டே ஓடிய யாதிராவின் இதழ்களில் அப்படி ஒரு புன்னகை..
சிறிது நேரம் கடற்கரையில் அமர்ந்திருந்தவர்கள், அங்கு சிறுவர்கள் ஓடியாடி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்..
“அபி, நாமளும் விளையாடுவோமோ?..” என்றாள் யாதிரா..
“என்ன விளையாட்டு?..”
“ஓடிப்பிடிச்சு..” என்றவளை, ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன்,
“இந்த வயசுல ஓடிப்பிடிச்சு விளையாடணுமா?.. அதெல்லாம் வேண்டாம் கம்முன்னு இரு..”
“நான் சின்ன வயசுல இருந்தே அதிகமா விளையாட மாட்டேன் அபி.. எப்பவும் யாராவது ஒருத்தரோட நிழல்ல தான் இருப்பேன்.. இப்போ விளையாடணும்னு தோணுது..” என்றாள் கசங்கிய முகத்துடன்,
அவளின் முகத்தை அப்படிப் பார்க்க அவனுக்குப் பிடிக்கவில்லை..
என்னவோ செய்தது..
“இப்போ என்ன விளையாடணும், அப்படித்தானே?.. சரி நீ ஓடு.. நான் பிடிக்கிறேன்..”
“ம்ம்..” என்றவள், எழுந்து ஓட ஆரம்பிக்க, அவனும் விரட்டிக் கொண்டே பிடிக்க வந்தான்..
அதைத்தான் இந்தக் கோட்டான் பார்த்து விட்டது..
மனம் விட்டு சிரிக்கிறாள்?..அதைப் பார்க்கவே கோடிக் கண்கள் வேண்டும்..
ஆனால் க்ராதகனுக்கு அது புரிய வேண்டுமே.. முகத்தை சுழித்தான்..
“இவளை இப்படியே விட்டா, சரி வராது.. ஸ்கூல்க்கு விட்டா, திரும்ப வீட்டுக்கு வரணும்ங்கிற நினைப்பு இருக்கா?.. இவன் கூட ஓடிப்பிடிச்சி விளையாடிட்டு இருக்கா?.. ” என நினைத்துக் கொண்டே,
“ஏய்ய்ய்..” என்றான் அதட்டலாக…
அவனின் சத்தத்தில் யாதிரா திரும்பிப் பார்க்க முயல, கால்கள் இடறி தொப்பென்று கடல் மண்ணிலேயே விழுந்தாள்..
குப்புற அவள், விழுந்த வேகத்தில் அவளின் கண்களுக்குள் எல்லாம் மண் போய் விட்டது..
“யாதிராஆஆ..” என வேகமாக அழைத்துக் கொண்டு வந்தான் அபிஜித்..
“ஏய்ய்ய்..” என அழைத்துக் கொண்டு, அபிக்கு முன்பாகவே யாதிராவை நெருங்கியிருந்தான் சயந்தன்..
அவளின் உடலெல்லாம் மண் ஒட்டியிருந்தது.. வேகமாக உடலில் ஒட்டியிருந்த மண்ணெல்லாம் தட்டி விட்டான் சயந்தன்..
கண்களை திறக்கவே முடியவில்லை.. உறுத்திக் கொண்டேயிருந்தது..
“ஆஆஆ.. கண்ணை திறக்க முடியலை அபி.. கண்ணுக்குள்ள மண் போயிடுச்சு..” என அழ ஆரம்பித்தாள் யாதிரா..
“இதுக்குத்தான் ஒரு இடத்துல உட்காரணும்.. நீ தான் நோஞ்சான்கோழியாச்சே.. சும்மா உட்கார மாட்டீயா.. இப்போ ஓடிப் பிடிச்சி விளையாடுற தான் முக்கியம்?..” என சிடுசிடுத்தான் சயந்தன்..
உடல் அதிர்ந்து ஒரு கணம் நிதானித்தவள், சட்டென இரண்டெட்டு பின் வைத்தாள்..
அவனின் குரலைக் கூட அவள் அறிந்து வைத்திருக்கிறாளே..
அவள் தன்னை விட்டுப் பிரிவதை உணர்ந்தவன், வேகமாக அவள் கைகளைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான்..
“கீழே விழுந்தவளை தூக்கி விட்டா மட்டும் பத்தாது.. அவுங்களுக்கு என்ன தேவையோ, அதை செய்யணும்.. வாய் இருக்கேன்னு ஓவரா பேசக்கூடாது..” என சயந்தனை திட்டியபடி, யாதிராவிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை கொடுத்தான்..
“இதை வச்சி முகத்தை கழுவு.. நாமபோகலாம்..” என்றான் அபி,
“நீ போ.. அவளை நான் அழைச்சிட்டுப் போறேன்..” என சிடுசிடுவென காய்ந்தான் சயந்தன்..
“கூப்பிட்டு வந்த எனக்கு, அவளை அழைச்சிட்டுப் போகவும் தெரியும்..” என்றவனைக் கண்டு பல்லைக் கடித்தான் சயந்தன்..
“இங்கே பாரு, என் வழியில நீ அடிக்கடி க்ராஸ் பண்ற, இது நல்லதுக்கு இல்லை.. ஏதாவது திமிறிக்கிட்டு திரிஞ்ச, கஞ்சா கேஸ்ல தூக்கி உள்ளேப் போட்டுருவேன்..” என மிரட்டினான்..
“இந்த உருட்டல், மிரட்டல்க்கு எல்லாம் பயப்பட, நான் என்ன யாதிராவா?.. நான் அபிஜித்.. இந்த சீனெல்லாம் வேற யார்க்கிட்டையாவது வச்சிக்கோங்க.. வந்துட்டாங்க என்னை மிரட்டிப் பார்க்க..” என பேசிக் கொண்டே யாதிராவின் கையைப் பிடித்தான்..
அவளுக்கு இன்னுமே கண்களில் இருந்த மண் போகவில்லை.. இருவரும் சண்டைப் போட்டுக் கொள்வது காதில் விழுந்தாலும், அவள் யார்ப் பக்கமும் நிற்கவில்லை..
“வா யாதிரா.. ஹாஸ்பிட்டல் போயிட்டு வீட்டுக்குப் போவோம்..” என்றான் அபிஜித்..
“அவளை அழைச்சிட்டுப் போக நான் இருக்கேன்.. நீ கிளம்பு..” என்றான் சயந்தன் விடாமல்,
“நீங்க அவளை எப்படிப் பார்த்துப்பீங்கன்னு தான் ஊருக்கேத் தெரியுமே?..” என நக்கலாக சொல்லிவிட்டு, யாதிராவின் கையைப் பிடித்து ஆட்டோவில் ஏற்றி சென்று விட்டான்..
அவன் முதுகையே வெறித்துப் பார்த்தான் சயந்தன்..
“என்ன சார்?.. உங்க தங்கச்சி வேற ஒரு பையன் கூட சுத்துது?..”
“யோவ்வ்வ்.. அவன் அவளுக்கு தம்பி முறை..”
“அப்போ உங்க தம்பியா?..” என்றபடி ஏட்டு, சுக்கு காபியை நீட்டினார்..
“அவன் ஒன்னும் எனக்கு தம்பியில்லை.. என் பொண்டாட்டியோட தம்பி..” என்றான் சயந்தன்..
“என்ன சார் சொல்லுறீங்க, எனக்கு ஒன்னும் புரியலை..”
“உனக்கு ஒன்னும் புரியத் தேவையில்லை.. மூடிட்டு காபியை குடி..” என்றான் சயந்தன்..
இருவரும் சேர்ந்தே காஃபி பருகிக் கொண்டிருந்தனர்..
“சார் ஸ்டேஷன் போகலாமா?..”
“அங்கே எனக்கென்ன வேலை?.. நீ என்னை வீட்டுல விட்டுட்டு, ஸ்டேஷன்க்குப் போ..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தார் அவர்..
“சார்.. கமிஷனர்..” என இழுக்க,
“அவருக்குத் தேவைன்னா என்னை வந்து மீட் பண்ணச் சொல்லு..” என்றவனைக் கண்டு வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டார்..
“ஏன் சார், உங்க மாமான்னு தானே இப்படிப் பேசுறீங்க?..”
“இ்லையே, எவனா இருந்தாலும் இப்படித்தான் பேசுவேன்..” என்றபடி ஜீப்பில் ஏறினான்..
சிறிது நேரத்தில் ஏட்டு, சயந்தன் அஞ்சலியின் வீட்டில் விட்டு விட்டு புறப்பட்டு விட்டார்..
“அம்மாஆஆ..” என்றான் சத்தமாக, கிட்டத்தட்ட அலறினான் என்றே சொல்லலாம்..
“எதுக்கு டா?.. இப்படிக் கத்துற?..”
“ஹான்.. வேண்டுதல், யாதிரா வந்தாளா?..”
“அதை ஏன் கேட்குற டா?.. மல்லி பையன் கூட பீச்சுக்குப் போனாளாம்.. அங்கே எவனோ எடுபட்ட பய, இவளைக் கூப்பிட்டானாம்.. இவ திரும்புறேன்னு, மணல்ல விழுந்த.. கண்ணுக்குள்ள மண்ணு போயிடுச்சு போல.. ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போயிட்டு வர்றேன்னு..”
“போயிட்டு வர்றேன்னு, யாதிரா சொன்னாளா?..” என்றான் கண்கள் இடுங்க..
“அவ ஏன்டா வாய் பேசப் போறா?.. நம்ம அபிக்குட்டித்தான் சொன்னான்?..”
“அவ என்ன உனக்கு குட்டியா?.. என்னோட ஹைட்டு இருக்கான்… விட்டா, வானத்தை எட்டிப் பிடிச்சிடுவான் போல..” என முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அபியும், யாதிராவும் வீட்டிற்குள் நுழைந்தனர்..
“என்னாச்சிப் பா?.. ஹாஸ்பிட்டல் எல்லாம் போனீங்களா?..”
“ஆமா ஆன்ட்டி..”
“எவ்வளவு ப்பா, பில்?..” என்றார் அஞ்சலி..
“நான் யாதிராவ என் அக்காவா நினைச்சித்தான் ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போனேன்.. இந்த ஐ ட்ராப்ஸ் ஊத்தி கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா, சரியாகிடும்னு சொல்லியிருக்காங்க ஆன்ட்டி.. நான் வர்றேன்..” என்றவன், சோபாவில் அமர்ந்திருந்த சயந்தனை ஒரு முறை முறைத்து விட்டே அங்கிருந்து சென்றான்..
“வா ம்மா, யாது..” என அஞ்சலி, யாதிராவை அழைத்துக் கொண்டு சென்று அவள் அறையில் விட்டு விட்டு வந்தார்..
“டிரஸ் சேன்ஞ் பண்ணிக்கிறீயா?..” என அஞ்சலி கேட்க,
“கொஞ்சம் குளிச்சிட்டு வர்றேன் பெரியம்மா.. உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு.. பாத்ரூம்க்குள்ள விடுறீங்களா?..”
“சரி குளிச்சிட்டு வா டா.. கண்ணை அதிகமா கசக்காதே.. சோப்பு எல்லாம் போடாதே ஓகே வா..”
“சரி பெரியம்மா.. கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?.. குளிக்கணும்?..”
“சரி டா.. அடுப்புல சாம்பார் சூடு பண்ணிட்டு இருந்தேன்.. ஆப் பண்ணிட்டு வந்திடறேன்.. பாத்ரூம் கதவை பூட்டிடாதே..” என்றபடி அஞ்சலி அறையை விட்டு வெளியேறினார்..
சில நிமிடங்களில் உள்ளே நுழைந்தான் சயந்தன்..
உள்ளே நுழைந்தவன், அடுத்த நிமிடமே கதவை பூட்டி விட்டான்..
“பெரியம்மா.. வந்துட்டீங்களா?..” என பாத்ரூமிற்குள் இருந்து குரல் வந்தது..
“போகலாமா?.. வேண்டாமா?..” என்ற தயக்கமெல்லாம் அவனுக்கில்லை..
தான் அணிந்திருந்த காக்கிச்சட்டையை கழற்றி அங்கிருந்த ஆங்கரில் மாட்டிவிட்டவன், பாத்ரூமிற்குள் நுழைந்தான்..
“பெரியம்மா குளிச்சிட்டேன்.. என்னை அழைச்சிட்டுப் போறீங்களா?..” என்றாள் கண்களை திறக்காமலே..
சட்டென அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்..
திடீரென்று தன்னை யாரோ தூக்கியதை உணர்ந்த யாதிராவிற்கு உள்ளம் படபடக்க, கண்களை லேசாக திறக்க முயன்றாள்..
“நான் தான் டி.. கண்ணை திறக்காதே” என்றான் சயந்தன்..
அவ்வளவு தான் அமைதியாய் இருந்து விட்டாள்..
“இறக்கி விடு..” என்றால் மட்டும், இறக்கி விடவா போகிறான்?..
அவன் நினைத்ததையே சாதிக்கும் பழக்கம் கொண்டவன்..
அவளை படுக்கையில் கிடத்தியவன்.. அறையில் பார்வையை சுழற்றினான்..
“ஐ ட்ராப்ஸ் எங்கே?..”
அதற்கும் அமைதியே..
“இப்படியே வாய் பேசாம இருடி.. ஒரு நாள் இல்லை, ஒரு நாள் உன் வாயை விழுங்கிடுறேன் பாரு..” என்றபடி, அவளருகில் சரிந்துப் படுத்தான்..
தன் உடலோடு உரசிய வலிய தேகத்தை உடனே உணர்ந்துக் கொண்டாள்..
“என்ன பண்றீங்க?..”
“உன்னை என்னவெல்லாமோ, செய்யத் தோணுதுடி.. ஆனா என்ன பண்றது, மூணு மாசம் டைம் கேட்டு என் கையை கட்டிப் போட்டிருக்காங்க..” என சொல்லிக்கொண்டே, அவளின் கண்களில் ஐ ட்ராப்ஸை ஊற்றினான்..
அவளின் ஒற்றை விழிகளுக்குள் ஊடூருவும் வித்தகன் ஆகிப் போனான் அவன்..
“கண்ணை மூடிப் படுத்துக்கோ..” என்றவன், அவள் கண்களை மூடவும்.. தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்..
விக்கித்துப் போய் அவனை விட்டு விலக முயன்றாள்..
“நீயா வந்துப் படுத்தா.. அணைச்சிக்க மட்டும் தான் செய்வேன்.. இல்லை. அப்புறம் சத்தியமாவது, சக்கரைப் பொஙகலாவதுன்னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டு, அப்படியே உன்னை அபேஸ் பண்ணிடுவேன் பார்த்துக்கோ..” என்றதும், ஒரு கணம் யோசிக்காமல், அவனின் திண்ணிய மார்பில் முகத்தை புதைத்தபடி விழிகளை மூடினாள் யாதிரா..
அதே சமயம்.. ப்ரணவ்வோ தன் சொந்த ஊரான திருப்பூரின் அருகிலிருக்கும் பழம் பெரும் கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார்..
அவர் அறிந்து வரும் உண்மையால், இனி என்னவாகுமோ?.. சயந்தனின் நிலை..
