கட்சி ஆட்கள், மக்கள் ப்ரச்சனை கேட்டறிதல் என்று இன்றைய நாளை தொடங்கிய வீரசிம்மனின் நேரம் கடந்து சென்று சரியாக ஒரு மணியில் நிற்க அதை கூட அவன் எப்படி கண்டறிந்தாள் என்றால் அவனை பார்க்க பவன் வந்திருந்தான் அதனால் தான் அது கூட அவனுக்கு தெரிந்தது. அவன் அறையில் இருந்த அனைவரும் பவனை பார்த்த உடனே அங்கிருந்து சென்றிருந்தனர். பின்ன நண்பர்களுக்கு தனிமை வேண்டுமே அதான்.
"என்ன போலி டாக்டரு என்னை பார்க்க வந்திருக்க?"
" அதை நீ சொல்ற பாத்தியா?"
"நான் தான்டா சொல்லுவேன் நீ வந்திருக்கிறது என்னோட ஆபீஸ் அப்ப நான் தான் சொல்லுவேன் எதுக்கு வந்த?"
"டேய் என் அப்பா சொன்னது உண்மையா? காலைல குளிச்சிட்டு கீழே டிபன் சாப்பிட வந்தா உன் கல்யாணம் இன்னும் நாலு நாளில் இருக்குன்னு சொல்றாரு நேத்து தானடா பத்து நாள்னு சொன்ன அதுக்குள்ள நாலு நாளு உன் வாழ்க்கையில் என்ன தான் நடக்குது எனக்கு ஒன்னும் புரியல இப்படித்தான் படிச்சிக்கிட்டே இருக்கும் போது அரசியலுக்கு போறேன்னு வந்துட்ட இப்போ இப்படி .டேய்! பொன்னாச்சும் அவள் தானா இல்ல வேறயா?"
"மவனே! இதுக்கு மேல் பேசின என்கிட்ட நல்லா வாங்கி கட்டிட்டு போயிடுவ ஒழுங்கா ஓடிப் போயிடு"
" என் சந்தேகத்தை கேட்க கூடாதா சொல்லு அதுவும் இல்லாமல் நீ என் உயிர் நண்பன் உனக்கு கல்யாணம் ஆகப்போகுது அதை பத்தி நான் கேட்க கூடாதா"
" அதை பத்தி மட்டும் கேளு இந்த படிப்பு அரசியல் இதெல்லாம் இழுக்காதே அப்புறம் எனக்கே நைட்டு தான் தெரியும் இன்னும் நாலு நாளில் கல்யாணம் அப்படின்னு"
"ஏன் திடீர்னு வச்சுட்டாங்க?"
" உனக்கு தெரியும் இல்ல பழனி"
" எனக்கு மட்டுமா எல்லாருக்கும் தெரியும் அவன பத்தி சொல்லு அவனுக்கு என்ன ஆச்சு அவனுக்கும் கல்யாணத்துக்கு கூட என்ன சம்பந்தம் "
"சம்பந்தம் இருக்குடா மேனகா இப்போ அவன் கூட தான் பழகிட்டு இருக்கா"
"என்னடா சொல்ற ?"
"நெஜமா தான் சொல்றேன் நேத்து அப்பா சொல்றதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும் ஆனால் அதை பெருசா எடுத்துக்கல ஆனா நேத்து அப்பா சொன்னதுக்கு அப்புறமா அதை கொஞ்சம் சீரியஸாவே பார்த்தேன்"
" அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு கேட்டுட்டு தானே கல்யாணம் பிக்ஸ் பண்ணீங்க"
"இந்த மாதிரி ப்ரச்சனை வரக்கூடாதுன்னு தான் அப்பா நேர்ல போய் பேசினாரு அவளும் ஓகேன்னு தான் சொல்லி இருக்கா அவளோட வார்த்தைய வச்சு தான் அப்பா இவ்வளவு ஏற்பாடும் பண்றாரு ஆனால் அவள் ஏன் அந்த பழனி கூட சுத்திட்டு இருக்கான்னு தெரியல"
" ஏன்னு உனக்கு தெரியலையா?"
"நிஜமாலுமே ஏன்னு தெரியலடா எனக்கு தெரிஞ்சு பழனி எந்த ஒரு பிளானும் இல்லாமல் அவ கூட பேசமாட்டான். அவளும் நாம சொன்னா புரிந்து கொள்கிற ஆளும் இல்லை"
"பின்ன எப்படிடா அவளை வச்சிட்டு குடும்பம் நடத்துவ?"
"ஆஹ்! அதை நீயே நேரில் பார்த்து தெரிஞ்சிக்கோ " கடுப்போடு அவனை பார்த்தவாறு தன் டேபிளில் இருந்த பெல்லை அடிக்க உள்ளே மேனகா வந்தாள். அவளை அங்கே எதிர்பாராதவள் "மச்சா! என்ன பண்ற?" அவனை முறைத்தவாறே பவன் வினவ
"நீ தானே கேட்ட என் பேச்சை அவள் கேட்கலைன்னா என்ன பண்ணுவன்னு இப்போ பாரு"
"நான் போய்டவா"
"எதுக்கு போற இங்கேயே இரு? ரகசியம் பேசற அளவுக்கு இங்க ஒன்னும் இல்லை" சற்றே கடுப்போடு சொன்னவன் எதிரே நின்ற மேனகா அமர இருக்கையை காட்டினான். அவள் தனக்கே உரிய திமிரோடு அவனேதிரே அமர்ந்தாள் அதை பார்த்த பவன் 'ம்ங்கு! இவன் முன்னாடி திமிரா கிழிந்தது' தனக்குள்ளே நினைத்து சிரித்தவன் இருவரையும் கண்டான்.
"எதுக்கு வர சொன்ன?"
"நமக்கு கல்யாணம் ஆகப்போகுதில்லை அதை பற்றி பேச தான்"
"அத பத்தி பேச என்ன இருக்கு?"
" முதல்ல என்ன இல்ல நாள் நல்ல உனக்கு எனக்கு கல்யாணம் ஆனா நீ ஒரு போன் கூட பண்ணல ஏன்?"
" எனக்கு போன் பண்ண தோணல"
" நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும் அது உன் செயல் நல்லா தெரியுது நல்ல ஞாபகம் வச்சுக்கோ நீ பேசிட்டு இருக்க பழனி மாதிரி கிடையாது நான். நீ எது பண்ணாலும் என்கிட்ட அது ரெண்டு மடங்கா கிடைக்கும் கல்யாணத்துல எதாச்சும் பிரச்சனை பண்ண நினைச்ச கண்டிப்பா அதுக்கான தண்டனையை நீ இரண்டு மடங்கா அனுபவைக்க வேண்டிய நிலமை தான் வரும் உனக்கே தெரியும் நான் ஓரளவுக்கு தான் பாவ கணக்கு பாப்பேன்னு அதுக்கு மேல பாக்க மாட்டேன் உன்னால என் பாவக்கணக்கு இன்னும் ஏற வச்சிடாதே"
" அப்ப உனக்கு தெரியும் நான் என்ன நினைச்சுட்டு இருக்கேன்னு"
"கண்டிப்பா தெரியும் நீ என்ன நெனச்சிட்டு இருக்கன்னு அதனால தான் உன்னை ஒரு டைம் வார்னிங் பண்ண கூப்பிட்டேன். உனக்கு தான் இன்னும் என்ன பத்தி சரியா தெரியல மேனகா அப்படி தெரியனும்னா ஒரு முறை உங்க அம்மாகிட்ட உட்கார்ந்து கேளு நான் யாருன்னு"
" இந்த பூச்சாண்டி காட்டுற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம் எனக்கு தெரியும் நான் என்ன பண்ணனும்னு"
"அப்போ எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொன்ன?"
"ஏன்னா கேக்கற?" அவள் சிரிக்க அதை கண்டு வீரசிம்மனும் சிரித்தான் அதை கண்டவளுக்கு புன்னகை முகம் சட்டென எழுந்த கேள்வியால் சுருங்கி போனது
அவளுக்கு மட்டுமா? பவன் புருவம் கூட கேள்வியோடு அவனை பார்க்க
"நீ என்ன சிரிக்கிற? அப்போ இன்னொரு பிளான் வச்சிருக்க இல்லை"
"அப்படியா அது என்னன்னு எனக்கே தெரியாதே "
"யேய்! உண்மையை சொல்லு என்ன பண்ண போற?" அவள் வினவ அதை பெரிதாக எடுத்து கொள்ளாத வீரசிம்மன்
"கெட் அவுட் ஆஃப் மை ஆஃபிஸ் "
"வாட்?"
"வெளியே போன்னு சொன்னேன் இன்னொரு முறை சொன்னா அது உனக்கு மரியாதையா இருக்காது சோ இப்பவே போ" அவளை பார்க்காமல் வீர சிம்மன் சொல்ல அதை கண்ட பவன் தன் நண்பனை எண்ணி பெருமை கொண்டவன் அவள் திமிருக்கு கிடைத்த பரிசை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். அவள் சென்றது தான் தாமதம்
"மச்சா! அது என்ன பிளான் சொல்லுடா நான் யார்கிட்டையும் சொல்ல மாட்டேன்"
"ஒரு பிளானும் இல்லை இப்படி ஏதாவது சொன்னா தான் அவள் புதுசா எந்த பிளான் போடாமல் இருப்பா அதான் சொன்னேன்"
"உன் பேச்சு சரியில்லையே!"
"எல்லாம் சரியா தான் இருக்கு. நீ வந்தது எதுக்கு சாப்பிட அதனால் வா நாம போய்ட்டு சாப்பிடலாம் இன்னைக்கு மீன் குழம்பு வந்திருக்கு"
"ஆஹ்! சூப்பரு வா போவோம்" பவனும் அவனோடு உணவு உண்ண சென்றான். ஆனால் இங்கே மேனகா
அவனிடம் பேசியதில் குழப்பம் அடைந்தது மட்டும் இல்லாமல் சுயமாக சிந்தனை அற்று போயிருந்தாள்.
