அதிகாரத்தின் அந்தப்...
 
Share:
Notifications
Clear all

அதிகாரத்தின் அந்தப்பக்கம் காதல் 05

 

(@kaniathargagmail-com)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 10
Thread starter  

 

 

 

 

 

 

திருமணத்தை பற்றி கண்ணன் பேசி சென்ற அந்த வாரத்திலே திருமண தேதி எது என்ற செய்தியும் பத்மா வீட்டிற்கு வந்தது. முதலில் அதை தன் இளைய மகளிடம் தான் கூறினாள் பத்மா. 

 

"வானதி! கண்ணன் அண்ணா கல்யாண தேதியை கொடுத்துட்டாரு இனி ஏற்பாட்டை ஆரம்பிக்கனும்"

 

"ஆமாம்! நாமளும் ஊருக்கு போற ஏற்பாட்டை ஆரம்பித்து தான் ஆகனும். நான் ஊருக்கு போற ஏற்பாட்டை பாக்குறேன் நீ அவளுக்கு கல்யாண ஏற்பாட்டை பாரும்மா"

 

"இனி எல்லாத்தையும் சீக்கிரம் செய்யனும். நமக்கு நாளும் கம்மியா தான் இருக்கு "

 

"இதெல்லாம் எங்கிட்ட  முதல்ல சொல்றதை விட அந்த அடங்காபிடாரி அவகிட்ட  முதலில் சொல்லனும்"

 

 

"அவகிட்ட சொல்லனும்டி" பத்மா சொல்லி கொண்டிருக்க அப்பொழுது உள்ளே நுழைந்தாள் மேனகா அவளை கண்ட பத்மா 

"மேனகா!"

 

"சொல்லும்மா"

 

"உனக்கும் வீரசிம்மன் தம்பிக்கு இன்னும் பத்து நாளில் கல்யாணம் தேதி வந்துடுச்சு. நாளைக்கே துணி எடுக்க போகனும் அதனால் இனி நீ வீட்டில் இருக்க பாரு"

 

"கல்யாணம் பண்ண சொல்றீயா ஏதோ போனா போதுன்னு பண்ணலாம் அதுக்காக வீட்டிலே இருந்து கட்டளை எல்லாம் போடாதே"

 

"என்னடி இப்படி பேசற? அன்னைக்கு அண்ணா கேக்கும் போது சரின்னு சொன்ன"

 

"அவர்கிட்ட சரின்னு தான் சொல்ல முடியும். எடுத்த உடனே கையை நீட்ட அவர் ஒன்னும் நீ இல்லையே அதான் சரின்னு சொன்னேன்"

 

"மேனகா! இது விளையாட்டு விஷயம் இல்லை உன் இஷ்டத்துக்கு இருக்க. இங்கே பாரு உனக்கு இன்னும் கண்ணன் அண்ணா பையனை பற்றி தெரியலை. நீ எல்லாம் உன் அப்பாவோட அரசியல் வளர்ச்சியில் பாதி புத்தி கூட உன் மண்டையில் இல்லை ஆனால் வீரசிம்மன் அவரை விட இரண்டு மடங்கு அதிகமா அரசியல் புத்தியை வச்சி இருக்கவன். உன்னால் ஒரு காலமும் அவனை பகைச்சுட்டோ இல்லை அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தி அரசியல் பண்ண முடியாது"

 

"முதலில் வீட்டிலே இருக்க உனக்கு என்ன தெரியும்மா அரசியல் பற்றி? நீ எல்லா வருஷமும் அப்பாக்கு சமைச்சு போட்டு சேவகம் மட்டும் தானே பண்ண. ஆனால் நான் ஒன்னும் அப்படி இல்லை. அவர் கூடவே இருந்து எல்லாத்தையும் கத்துட்டு இருக்கேன் எல்லாத்தையும் நான் சமாளிப்பேன்"

 

"ஏதோ பண்ணு ஆனால் கல்யாணத்தில் எந்த ப்ரச்சனையும் பண்ணாதே அப்படி பண்ண உன் வாழ்க்கைக்கு அப்பவே அழிவு தொடங்கிடுச்சுன்னு நினைச்சுக்கோ "

 

"அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீ முதலில் இவ கூட கிளம்பி போ. அப்போ தான் நான் நிம்மதியா இருக்க முடியும் " தன் அன்னையின் பேச்சை எல்லாம் காதில் வாங்காமல் மேனகா அங்கிருந்து சென்றாள். அவளை பார்த்த பத்மாவின் நினைவை கலைத்திருந்தாள் வானதி. 

 

"அம்மா"

 

"சொல்லு வானதி"

 

"நாம ஊருக்கு போவதால் நிறைய பொருட்கள் வாங்கனும் அதனால் வா நாம ஷாப்பிங் பண்ணிட்டு வரலாம்"

 

"அப்போ கூடவே முகூர்த்த புடவை இதெல்லாம் எடுத்திடலாம் இல்லை"

 

"எடு ஆனால் நான் அந்த பக்கம் வர மாட்டேன். மேனகா விஷயத்தில் கண்டிப்பா நான் தலையிட மாட்டேன்"

 

"சரிடி! நீ உனக்கு தேவையானது வாங்கு நான் புடவை எடுக்கிறேன் ஆனால்"

 

"என்னம்மா இழுக்கற?"

 

"அதில்லை மாப்பிள்ளை டிரஸ் எடுக்கனும் அதுக்கு வீரசிம்மன் வேணும்"

 

"அவரை வர சொல்லு"

 

"அப்போ அண்ணா கிட்ட நீயே போன் பண்ணி சொல்லு"

 

"எதுக்கு சொல்லனும் அளவு மட்டும் கேளு"

 

"வானதி! நீ இன்னும் அவனை பார்த்ததில்லை தானே"

 

"பார்த்ததில்லை"

 

"அப்பறம் என்ன அவனை துணி கடைக்கு வர சொல்லி அங்கே பார்த்துடு"

 

"அம்மா! நான் அவனை பார்த்து என்ன பண்ண போறேன்? அவனுக்கு  சின்ன வயசிலே திமிர் அதிகம் எப்ப பாரு நான் தான் எல்லாம் அப்படின்னு நினைப்பான். இப்போ சொல்லவே வேண்டாம் என்னை பார்த்தா இன்னும் ஓவரா பண்ணுவான். அதை பார்த்து எனக்கு டென்ஷன் ஆகும் சோ அதனால் அவன் வேணாம்"

 

"ஆனாலும் வானதி "

 

"அம்மா! நான் ஆங்கில் கிட்ட பேசி அளவு கேட்டுகிறேன் நீ வா" திட்டவட்டமாக அவனை பார்க்க மாட்டேன் என்று சொன்ன வானதி அதே போல் கண்ணனிடம் அளவை மட்டும் கேட்டு கொண்டு கடைக்கு சென்றனர். பத்மா புடவை பார்க்க வானதி ஆண்கள் ஆடைகள் இருக்கும் இடத்திற்கு வந்தாள் அங்கு அளவை மட்டும் சொல்லி முகூர்த்தம் மற்றும் ரிசப்ஷன் இரண்டுக்கும் சட்டையை காட்ட சொல்ல அவர்களும் காட்டினர். முகூர்த்த நாட்கள் என்பதால் ஏற்கனவே கூட்டமாக தான் இருந்தது. அதிலும் அங்கு வீரசிம்மன் வந்திருக்க இன்னும் கூட்டம் அதிகமாகிவிட்டது அவன் தன் நண்பன் பவனோடு எதர்ச்சையாக தான் வந்தான்.  இதெல்லாம் அவன் பிளான் செய்யவில்லை எல்லாம் விதி விளையாடுகிறது. 

 

"சிம்மா! நீயும் இரண்டு ஷேர்ட் எடு வா"

 

"எனக்கு வேண்டாம்" அவன் மறுக்க அதையும் பொருட்படுத்தாத பவன் அவன் சைஸ் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான் அங்கு ஏற்கனவே வானதியை அட்டன் செய்த ஒருவர் மட்டுமே இருக்க அவரிடம் பவன் தான் ஆணையிட்டான் 

 

"ஷர்ட் காட்டுங்க" அவனும் வீரசிம்மனை பார்த்த உடனே வானதி பக்கம் விட்டு அவனுக்கு காட்ட அதை பார்த்த வானதி பொறுமை காக்க முடியாமல் 

 

"சார்! பர்ஸ்ட் நான் தானே வந்தேன். எனக்கு ஷர்ட் எடுத்து கொடுத்துட்டு அவங்களை பாருங்க"

 

"மேம்! ஒரு இரண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க இதோ இன்னொரு ஆள் வந்து பாப்பாங்க"

 

"பர்ஸ்ட் நீங்க தானே எனக்கு காட்டிட்டு இருந்தீங்க இப்போ என்ன அவங்க கூப்ட உடனே போய்ட்டிங்க. நியாயமா நீங்க உங்க முதல் கஸ்டமரை தான் அட்டன் பண்ணனும்" வானதி சண்டை போட அங்கிருந்த பவன் "மிஸ். நாங்க யாரு தெரியுமா?"

 

"தெரியாது அதை தெரிஞ்சுட்டு நான் என்ன பண்ண போறேன்?" பெண்ணவள் அலட்சியமாக சொல்ல 

 

"அதான் இவ்வளவு திமிரா பேசறீங்க இவன் வீரசிம்மன். சிஎம் பையன் நான் குட் வே ஹாஸ்பிடலோட சீப்" 

'இவன் தானா வீரசிம்மன் இன்னும் திருந்தவே இல்லை அப்பாவோட அதிகாரத்தை இன்னும் காட்டுறான். கடைசி வரைக்கும் இவன் கண்ணில் படாமலே ஊருக்கு போய்டனும்' மனதிற்குள்ளே நினைத்த வானதி பவனை முறைத்தவள் "நீங்க இரண்டு பேரும் யாரா வேணா இருக்கலாம். உங்களுக்கு எப்படி உங்க நேரம் ப்ரிஷியச்சோ அதே மாதிரி என்னோட டைம் எனக்கு ப்ரிஷியஸ் தான். சோ மிஸ்டர் நீங்க பர்ஸ்ட் உங்க அதிகாரத்தை பயன் படுத்தி மத்தவங்களை கஷ்டப்படுத்தாதீங்க"

 

"இன்னொரு சேல்ஸ் மேன் வந்து காட்டுவாங்க அது வரைக்கும் நீ வெயிட் பண்ணலாம் இல்லை" அப்பொழுது தான் வீரசிம்மன் பேச 

 

"அதையே தான் நான் உங்களை கேக்கறேன். நீங்க வெயிட் பண்ணலாம் இல்லை"

 

"மேம்! சண்டை வேணாம் வாங்க நான் காட்டுறேன்" புதிதாக வந்த சேல்ஸ் மேன் சொல்ல அவனை முறைத்த வானதி "எனக்கு டிரஸ்ஸே வேணாம்" என்று அங்கிருந்து சென்றாள். 

 

"யார்டா மச்சா! இந்த பொண்ணு  நாம யாருன்னு சொல்லி கூட இந்த வாய் அடிச்சுட்டு போறா?"

 

"அதை விடு இவ்வளவு சண்டை போட்டது எனக்கு டிரஸ் எடுக்க தானே

வா வந்த வேலையை பார்ப்போம்"  வீரசிம்மன் தன் நண்பன் ஆசைக்கு ஏற்ப சட்டையை எடுத்திருத்தான். 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top