பகலவன் நடு வானத்தில் மக்களை வாட்டி எடுத்த நேரம் சரியாக மணி ஒன்றாகி இருக்க சைரன் சத்தம் புத்தகம் படித்து கொண்டிருந்த வானதி சிந்தனையை கலைத்தது. ஜென்னல் வழியே எட்டி பார்க்க அவளால் வருவது யார் என்று கணிக்க முடியவில்லை அதனால் கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கீழே வந்தாள். நடு கூடத்தில் அமர்ந்திருந்த பத்மாவை கண்டவள் "அம்மா! யார் வரா?"
"கண்ணன் ஆங்கில்"
"அவர் எதுக்கு நம்ம வீட்டுக்கு வராரு?"
"உன் அக்காவை அவரோட பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறேன். அதான் அதை பற்றி பேச அவரே நம்ம வீட்டுக்கு வர்றாரு"
"அம்மா! அவளை பற்றி தெரிந்துமா நீ அவரோட பையனுக்கு இவளை கல்யாணம் பண்ணி நினைக்கிற"
"உனக்கு இவளை பற்றி தெரியும் ஆனால் கண்ணன் ஆங்கில் பையனை பற்றி தெரியாது அவன் வில்லனுக்கு வில்லன் நல்லவனுக்கு நல்லவன்"
"அம்மா! என்ன சொல்றன்னு எனக்கு புரியலை ஆனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நாம ஊருக்கு போறோம். நீயும் என் கூட வர. இனி நமக்கு இந்த ஊரும் , அரசியலும் வேண்டாம்"
"நான் உன் கூட வர சம்மதம் சொல்லிட்டேன் வானதி. அதுக்கு முன்னாடி உன் அக்காவை இவங்ககிட்ட ஒப்படைத்தாக வேண்டுமே"
"ஏதோ பண்ணு அம்மா இதில் என்னை சேர்க்காமல் இருந்தா சரி. அப்பறம் நான் இங்கே இருக்க விஷயம் அவருக்கு மட்டும் இல்லை யாருக்கும் தெரியக்கூடாது"
"ஏன்டி அப்படி சொல்ற?"
"அம்மா! நான் ஏன் இதை சொல்றேன்னு உனக்கே தெரியும். பாலாஜி அவரோட ஒரு பொண்ணு ஊரை விட்டு போனவள் போனவளாகவே இருக்கட்டும்" தன் வார்த்தை மூலம் அவள் உறுதி தன்மையை வெளிப்படுத்தி விட்டு தன் அறைக்கு சென்றாள் வானதி. பெண்ணவள் சென்ற கொஞ்ச நேரத்திலே கண்ணன் உள்ளே வந்தார். அவரை வாசல் வரை வந்து வரவேற்றாள் பத்மா
"வாங்க அண்ணா வாங்க" அவள் முகத்தில் ஒட்டி இருந்த சோகத்தையும் அதை மறைத்த புன்னகையும் கண்டவர்
"விருந்தினர் உபசரிப்பா? எனக்காக நீ நடிக்க வேணாம் தங்கச்சி. இயல்பா இரு நான் உனக்கு அண்ணன் தான் "
"ஆனாலும் நீங்க இப்போ முதல்வராக தானே வந்திருக்கீங்க உங்களை உபசரிக்காமல் போனா என் புருஷனோட ஆத்மா கூட என்னை மன்னிக்காது அண்ணா"
"தங்கச்சி! நான் முதல்வரா வரலை உனக்கு அண்ணனா உன் வீட்டு சம்மந்தியா வந்திருக்கேன்?" அவர் பேசுவதை எல்லாம் கேமரா மூலம் தன் அறையில் இருந்தே பார்த்தாள் வானதி
'இந்த அரசியல்வாதி இவங்களுக்கு பேசவா சொல்லி தரனும். தேன் வார்த்தை எல்லாம் பேசறாங்க' மனதிற்குள்ளே நினைத்தவாறு அங்கு நடப்பதை கண்டாள்.
"சம்மந்தியா?" ஒன்றும் தெரியாதது போல் பத்மா கேட்க
'எங்க அம்மா அதுக்கு மேல் நடிக்கிறாங்க. அரசியல்வாதி பொண்டாட்டியாச்சே அப்பறம் இப்படி தான் இருப்பாங்க.'
"ஆமாம் தங்கச்சி! உன் மூத்த பொண்ணு அவளை என் பையன் வீரசிம்மன் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறேன்"
"அண்ணா!"
"என்னம்மா! அதிர்ச்சி ஆகுற உனக்கு இந்த சம்மந்ததில் விருப்பம் இல்லையா இல்லை உன் பொண்ணு குணத்துக்கு அவன் சரியா வரமாட்டான்னு நினைக்கிறீயா?"
"அப்படி எல்லாம் இல்லை அண்ணா வீரசிம்மன் நல்லவன் அவனை மருமகனா அடைய நான் தான் கொடுத்து வச்சிருக்கனும். நீங்க திடிரென்று வந்து கேட்டதால் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை அதான்"
"நீ யோசிச்சு பொறுமையா பதில் சொல்லுடா. நாம கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிடலாம் பதில் பொறுமையா கூட சொல்லு"
"அண்ணா! நீங்க வீரசிம்மன் அவங்ககிட்ட ஒரு முறை கேட்டிங்களா?"
"அவன் என் பேச்சை தட்டமாட்டான். உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு உன் பொண்ணு என் வீட்டுக்கு மருமகளாக வந்தா பாலாஜிக்கு நான் செய்ய வேண்டிய கடமை முடியும். கட்சியிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி அவன் எனக்கு நிறையவே செய்திருக்கான் அவனோட பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்றதால் என் மனசு கொஞ்சம் நிறைவா இருக்கும்" அவரை ஏறிட்டு பார்த்த பத்மா "அண்ணா!"
"தங்கச்சி! என்னம்மா தயங்கற?"
"அண்ணா! அவர் கடைசி காலத்தில் மேனகாவை அவரோட அரசியல் வாரிசா அறிமுகப்படுத்தியதும் அவர் இறந்தப்போ நான் பயந்தேன். இனி யார் மேனகாக்கு வழிகாட்டுவாங்கன்னு ஆனால் இன்னைக்கு அவளை வழி நடத்த நீங்க இருக்கேன்னு சொல்றீங்க இதை கேட்கவே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நீங்க அவளோடு இருக்கும் போது என் புருஷன் பெயர் எப்பவும் மறையாது"
"இங்கே பாரும்மா தங்கச்சி மேனகா பற்றிய கவலை உனக்கு வேணாம். வீரசிம்மனை அவள் கல்யாணம் பண்ணிகிறது மூலமா இந்த தொகுதியும் என் நண்பன் பாலாஜி அவனோட பெயரும் மேனகா இருக்க வரை நிலைத்திருக்கும்"
"அது தான் அவரும் எதிர்பார்த்தாரு தன்னோடு இந்த அரசியல் பயணம் நிக்க கூடாதுன்னு"
"அது நிக்காதும்மா"
"அப்போ எனக்கு சம்மதம் தான் அண்ணா. மேனகாவும் இதுக்கு சம்மதிப்பா அதை நான் பார்த்து கொள்கிறேன். நீங்க அடுத்து ஆக வேண்டிய ஏற்பாட்டை பாருங்க" உறுதியாக பத்மா சொல்ல அவள் பதிலில் மகிழ்ச்சி அடைந்தவர்
"அப்போ அடுத்த வாரத்தில் கல்யாணத்தை வச்சிக்கலாம். நீ எந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டாம் தங்கச்சி எல்லாத்தையும் இந்த அண்ணன் நான் பார்த்துப்பேன். கல்யாணத்துக்கு உன் பொண்ணு வருவாளா?"
"யாரு அண்ணா?"
"அதான் உன் இரண்டாவது பொண்ணு வானதி. அவளை கேக்கறேன் பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது இப்போ எப்படி இருக்கான்னு தெரியலை"
"நானும் அவளை பார்த்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சு அண்ணா"
"கல்யாணத்துக்கு வர சொல்லுடா சின்ன பொண்ணு அப்போ ஏதோ தெரியாமல் தப்பு பண்ணிட்டா அதுக்காக நீங்க இரண்டு பேரும் பேசாமல் இருந்தா பாவம் அந்த பொண்ணு தவிச்சு போய்டும்"
"சொல்றேன் அண்ணா" அவள் வார்த்தையாக சொல்ல அதை உணர்ந்த கண்ணன் "சரிடா! நீ அவகிட்ட பேசற மாதிரி தெரியலை அவளோட நெம்பர் இருந்தா கொடு நானோ பேசறேன்" அவர் இப்பொழுது கட்டளையாக கேட்க இதெல்லாம் கேமரா வழியே பார்த்த வானதி கண்ணில் நீர் கோர்த்து விட்டது. தன் லேப்டாப்பை படார் என மூடியவள் நேராக நடு கூடத்திற்கு வந்தாள். கண்ணன் அவளை முதலில் கேள்வியாக பார்த்தவர்
"வானதி"
"ஆமாம் ஆங்கில்" என்று இன் முகத்துடன் சொன்னவள் அவர் காலில் விழுந்தாள்.
"நல்லா இருடா? பொண்ணை வீட்டிலே வச்சிட்டு தான் இவ்வளவு நேரம் நான் பேசியதுக்கு எல்லாம் தலையை ஆட்டினீயா?"
"ஆங்கில் அம்மா மேல் தப்பில்லை நான் தான் நீங்க என்னை மறந்து இருப்பீங்கன்னு நினைச்சு நான் வந்ததை சொல்ல வேண்டாம்னு சொன்னேன். ஆனால் நீங்க என்னை ஞாபகம் வச்சிருக்கீங்க"
"உன்னை எப்படி மறக்க முடியும்? நீ தான் எங்களை மறந்துட்ட"
"ஆனால் ஆங்கில் நான் வந்து இருப்பதை எப்படி கண்டு பிடிச்சீங்க"
"இந்த வீட்டுக்கு பத்து வருஷமா வர்றேன் இன்னைக்கு தான் அந்த பாலக்கீரை மசாலா கடையல் வாசனை வருது. இந்த கீரை உனக்கு மட்டும் தானே பிடிக்கும்"
"ஆங்கில் இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க"
"பின்ன சின்ன வயசில் நீ தானே என் பொண்டாட்டிகிட்ட உரிமையா பாலக்கீரை கடையல் வச்சி கொடுக்க சொல்லி சாப்பிடுவ அதெல்லாம் எப்படி மறக்க முடியும்?"
"ஸாரி ஆங்கில் என்னால் ஆன்டி இறந்த அப்போ வர முடியல"
"எனக்கு தெரியும்டா உன் கஷ்டம் நீ எதை பற்றியும் கவலைப்படாமல் இரு"
"தேங்க்ஸ் ஆங்கில் நீங்களாச்சு என்னை மறக்காமல் இருந்தீங்களே" அவரை பாசத்தோடு அனைத்துக்கொண்டாள் வானதி.
"எப்போ வந்தீங்க ஆங்கில்?" உற்சாகமான முகத்துடன் உள்ளே வந்தாள் மேனகா
"இப்போ தான் வந்தேன் மருமகளே!"
"மருமகளாக?"
"ஆமாம்! நானே நேரா உங்கிட்ட சம்மதம் கேட்கிறேன். என் பையன் வீரசிம்மனை நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதமா"
"மாமா! இதெல்லாம் ஏன் எங்கிட்ட கேக்கறீங்க? அம்மா சம்மதம் சொன்னா அது நான் சொன்ன மாதிரி" என்றவள் தன் அறைக்கு ஓடி விட்டாள். அவள் செயலை கண்டு பத்மா தான் அதிர்
ச்சி அடைந்தாள் பின்ன நேற்று இந்த கல்யாணத்திற்கு தானே அன்னை என்று கூட பார்க்காமல் கொலை செய்ய துணிந்தாள்.
