அதிகாரத்தின் அந்தப்...
 
Share:
Notifications
Clear all

அதிகாரத்தின் அந்தப்பக்கம் காதல் 03

 

(@kaniathargagmail-com)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 10
Thread starter  

 

 

டிக் டிக் டிக் என்ற சத்தம் பிரம்மாண்ட வீட்டின் அமைதியை கலைத்தது அதன் சத்தம் கூட ஏதோ ஒரு தேவனின் குரல் தான் என்ற ரீதியில் அதை ரசித்தவாறு சாய்வு நாற்காலியில் நிம்மதியை தேடி அமர்ந்திருந்தாள் பத்மா. பாலாஜி அவரின் மனைவி அவருக்கு அரசியல் எந்த அளவு விருப்பமோ அதே அளவு பத்மா மேல் அத்தனை பிரியம். அப்படி பிரியம் இருந்ததால் என்னமோ தன் கணவனின் சொல்லை காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தை மனதில் வைத்து தான் இன்னும் அந்த வீட்டில் அரசியல் அதிகாரத்தை தன்னுள் வைத்து திட்டம் தீட்டி வாழ்கிறாள்.  பின்ன கண்ணன் அவருக்கு தன் மகளை கட்டி வைத்தாள் இந்த தொகுதி கை விட்டு போகாது என்ற சிந்தனையை முதலில் கட்சி தொண்டர்கள் மூலம் விதைத்ததே அவள் தான். அதன் தாக்கம் நாளை கண்ணன் அவள் வீட்டிற்கு வருகை தருகிறார் அதை பற்றி தான் இப்பொழுது பத்மா தீவிரமாக யோசனை செய்து கொண்டிருக்கிறாள். 

பெண்ணவள் சிந்தனையை "அம்மா" என்ற ஒற்றை வார்த்தை கலைத்திருந்தது. தன் விழியை மட்டும் திருப்பி பார்த்தவள் "என்ன?"

 

"நான் கேள்விப்பட்டது உண்மையா?"

 

"என்ன கேள்விப்பட்ட?"

 

"அந்த வீரசிம்மன் அவனை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ முடிவு பண்ணி இருக்கியாமே. இது உண்மையா?"

 

"உண்மைன்னு சொன்னா என்ன பண்ணுவ?"

 

"அது உண்மையா இருக்ககூடாதுன்னு தான் நான் விரும்புவேன். ஏன்னா இதனால் பின்னாடி பாதிக்கப்பட்ட போவது நீ தான்"

 

"என்ன நானா?"

 

"ஆமாம்! எனக்கு அவன் வேண்டாம்"

 

"உன் விருப்பத்தை நான் கேட்கலை"

 

"என் விருப்பத்தை நீ கேட்கலை என்றால் நான் என் விருப்ப படி இருப்பேன்"

 

"அப்படி உன் விருப்பப்படி இருக்க இது இடம் இல்லை"

 

"அம்மா"

 

"யேய்! கத்தாதே நான் முடிவு பண்ணிட்டேன் உன்னை அவனுக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்க போறேன். அதை மீற நீ நினைச்ச எனக்கு மூத்த பொண்ணு இல்லை நானே உன்னை சாகடிச்சு மலர் வலையம் வச்சிடுவேன்"

 

"அம்மா! என்ன உன் இரண்டாவது பொண்ணு நாடகமா இது"

 

"அவளுக்கு நாடகம் போட தெரியாது அவள் சாது. உன்னை மாதிரி அடுத்தவங்க வாழ்க்கையை பிடுங்கி வாழ மாட்டா"

 

"அப்போ அவளையே உங்க அரசியல்  வாரிசாக வச்சிருக்கலாம் இல்லை என்னை எதுக்கு ஆக்குனீங்க"

 

"அதுக்கு வருத்தப்பட்டு தான் உன் அப்பா போய் சேர்ந்துட்டாரு "

 

"அவருக்கு பதில் நீ போய் சேர்ந்து இருக்கலாம் எனக்கு ப்ரச்சனை இல்லாமல் இருந்து இருக்கும்"

 

"மேனகா! முதலில் வாயை அடக்கு.  நான் சொல்றதை மட்டும் நீ கேக்கலைன்னா நாளைக்கே உன்னை இந்த அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒட்டு மொத்தமா தூக்கிடுவேன் "

 

"என்ன சொன்ன?" கோபத்தில் சட்டென தன் அன்னையின் கழுத்தை பற்றி இருந்தாள் மேனகா. "நான் ஏன் சாகனும் நீ போ உன் புருஷன் போன இடத்துக்கே" உள்ளத்தில் இருந்த கொடுரமான புத்தி அவளை தீய செயலில் ஈடுபடுத்த  அந்த நேரம் வீட்டு காலிங் பெல் அடித்தது அதன் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்த வேலையாள் ஓடி வர  அதை கவனித்த மேனகா சட்டென பத்மா கழுத்தை விட்டாள்.  இறுமி கொண்டே தன் மகளை கலங்கிய விழியோடு காண

 

"அம்மா! நம்ம சின்னம்மா வந்துட்டாங்க" சந்தோஷமாக பத்மா முன்  ஓடி வந்தாள்  வேலையாள். அவள் சொன்ன வார்த்தை பத்மா உள்ளத்தில் பேரானந்தத்தையும்,  மேனகா உள்ளத்தில் அதிர்ச்சியையும் உருவாக்கி இருந்தது. விழி விரித்து தன் உடன் பிறப்பை  பார்த்தாள் மேனகா. ஆனால் அவள் பார்வையில் துளி கூட சலனம் இல்லை.   மென்னடையுடன் தன் அன்னை முன் வந்து நின்றவள் அவள் கலங்கிய விழியை துடைத்து விட்டு அணைத்துக்கொண்டாள். 

வலுக்கட்டாயமாக அவளை பிரித்து விட்ட மேனகா 

 

"என்னடி நாடகக்காரி? வந்த உடனே பாசம் வந்துடுச்சோ இத்தனை வருஷம் வராமல் இன்னைக்கு என்ன வந்திருக்க. அதுவும் அப்பா செத்ததுக்கு கூட வரலை இப்போ எதுக்கு வந்த?"

 

"சரோம்மா!" அவள் கேள்விக்கு பதில் அளிக்காமல் தன் மென்மையான குரலில் வேலையாளை அழைத்தாள்  வானதி. அவளுடைய குணமே அமைதி தான் தன்னை யார் எது சொன்னாலும் அதற்கு ஒரே பதில் மௌனம் அதிலும் மேனகா பேசினாள் அவளை கண்டு கொள்ள மாட்டாள். அது இன்னும் மேனகாவிற்கு ஆத்திரத்தை மூட்ட வானதி கையை இறுக பற்றினாள் அதில் தன் அக்காவை பார்த்தவள் 

"நான் உன்கிட்ட பேச வரலை. வந்தது அம்மாவை என் கூட ஊருக்கு கூட்டிட்டு போக நீ நடுவில் ஏதாவது ப்ரச்சனை பண்ண என்னோட சுயரூபத்தை பார்க்க வேண்டி வரும் கையை எடு" அமைதியாக சொல்ல அப்பொழுதும் அதை கேட்காத மேனகா அவளை காயப்படுத்த முயல அதற்கு முன்  வானதி பெண்ணவள் கையை தட்டிவிட்டு அவள் கழுத்தை பிடித்தவள் 

"உன்னால் நான் ஏற்கனவே நிறைய காயத்தை அனுபவைத்துவிட்டேன். திரும்ப என்னை காயப்படுத்த நினைச்ச உன்னை சும்மா விடமாட்டேன். இது என் எச்சரிக்கை சொல்லிட்டேன். இது தான் முதலும் கடைசியுமா இருக்கட்டும் நீ என்கிட்ட பேசறது"  அத்தனை உறுதியாக வானதி சொல்லிவிட்டு பத்மாவை அழைத்து கொண்டு அறைக்கு சென்றாள். அவளை அமர வைத்து வானதி தன் அன்னை முகத்தை பார்க்க அவளோ சாய மடி கிடைத்த ஆறுதலில் அவள் மடியில் அழுது தன் மன பாரத்தை கொட்டி தீர்த்தாள். பத்மா சொன்ன ஒவ்வொரு விஷயத்தை கேட்கும் போதும் வானதி கண்கள் கூட கலங்கி விழி நீர் வழிந்து அதன் வெப்பம் அவள் உள்ளத்தில் ஆறாத ரணங்களையும், தீராத பகையும் உருவாக்கியது. 

 

"அம்மா! நீங்க என் கூட வாங்க நாம நிம்மதியான வாழ்க்கை வாழலாம். இந்த முறை நான் சொல்றதை நீங்க கேளுங்கம்மா"

 

"ம்ம்!"  பத்மா சம்மதம் சொல்ல அவளை தன் நெஞ்சோடு அனைத்து வானதி தன் அன்னைக்கு அன்னையாகி போனாள். வானதி கருணை உள்ளம் கொண்டவள் அமைதியாக இருப்பாள் ஆனால் பேச. வேண்டிய நேரத்தில் இரண்டே வாரத்தையை கேட்டு எதிரே இருப்பவர் வாயை மூட செய்திடுவாள். அவள் கடந்த பத்து வருடம் தனிமையில் வளர்ந்தால்  தன் தந்தை இறுதி சடங்குக்கு கூட வராத அவள் இன்று வந்திருக்க காரணம் என்ன?  இத்தனை வருடம் இங்கே வராமல் இருந்ததுக்கு யார் காரணம்? இதற்கு பதில் அவள் அளித்தாள் தான் உண்டு. பாலாஜி அரசியல் அவரோடு முடிந்து விடுமா? இல்லை மேனகா அதை நிலை நிறுத்துவாளா? அவளால் தனித்து செயல்பட முடியுமா? அன்னை விருப்பம் போல் வீரசிம்மனை திருமணம் செய்வாளா?

இத்தனைக்கும் பதில் தொடர்ந்து வாசித்தாலே கிடைக்கும்.

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top