மழைபொழிந்து பனி தூறல் பூமியை கடைசியாக முத்தமிட்ட நேரம். கடிகாரத்தின் ஓசை நடு கூடத்தின் நிசப்தத்தை கலைத்திருந்தது. பகலவன் எப்பொழுது வருவான் என்று பூமி எதிர்பார்த்ததோ அதே எதிர்பார்ப்போடு தன் மகனின் வரவை நோக்கி அமர்ந்திருந்தார் கண்ணன். வீட்டை தான்டிவிட்டாள் நாட்டின் முதலமைச்சர் அதுவே வீட்டின் உள்ளே நுழைந்து விட்டாள் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய தந்தை. தாய் இல்லாமல் வளர்ந்த மகனுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் அவர் செய்தார் திருமணத்தை தவிர அந்த கடைசி கடமையை முடித்துவிட அவர் எத்தனிக்கையில் வீரசிம்மன் அதற்கு பிடி கொடுக்காமல் சுத்தி கொண்டிருக்கிறான். இன்று அவன் திருமணத்தை பற்றி நல்ல முடிவு எடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுக்காக காத்திருக்க சின்ன முள் சரியாக இரண்டு மணியில் வந்து நிற்க அப்பொழுது தான் உள்ளே நுழைந்தான். சோஃபாவில் அமர்ந்திருக்கும் அவரை கண்டவன் "அப்பா! நீங்க இன்னும் தூங்கலை உங்களுக்கு பத்து மணிக்கு மீட்டிங் இருக்கு"
"இந்த வீட்டு எஜமானன் நீ வந்தா தானே நான் தூங்க"
"அப்பா! எத்தனை முறை சொல்லி இருக்கேன் இப்படி சொல்லாதீங்கன்னு நான் உங்க பையன் எப்பவும் உங்களுக்கு அப்பறம் தான்."
"டேய்! இந்த பேச்சுக்கு ஒரு குறைச்சல் இல்லை. நீ முடிவா என்ன சொல்ற?"
"எதை பற்றி கேக்கறீங்க?" அவன் புருவத்தை சுருக்கி வினவ
"அந்த பாலாஜி அவரோட பொண்ணை கல்யாணம் பண்றீயா இல்லையா?"
"அப்பா! என்னால் முடியாது"
"அதான் ஏன் முடியாது? அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணால் தான் அந்த தொகுதியில் நாம ஜெயிக்க முடியும். அது உன் அப்பாவோட முன்னால் தொகுதி நான் இப்போ வேற இடத்தில் நிற்கலாம் ஆனால் அந்த தொகுதி மக்கள் தான் உன் அப்பாவை முதன் முதலில் சட்டசபையில் ஏற்றினார்கள் அங்கை எப்பவும் நம்ம கட்சி ஜெயிக்கனும் அதனால் தான் சொல்றேன்"
"அங்கே ஜெயிக்க இந்த கல்யாணம் தான் ஒரே வழியா என்ன?"
"ஆமாம்! ஏன்னா அங்கே பாலாஜி அவருக்கு மக்கள் செல்வாக்கு நிறைய இருக்கு. இப்போ அவர் இல்லாமல் இருப்பதால் அந்த இடத்தில் யார் நிப்பாங்க என்கிற கேள்வி வருது. மேனகா அவரோட பொண்ணு அவளை நீ கல்யாணம் பண்ணி அங்கே நம்ம கட்சி சார்பில் நிக்க வைத்தாள் அவள் ஜெயித்து விடுவாள். இதை நாம பண்ணலைன்னா எதிர்கட்சிகாரன் செயல் படுத்திடுவான். மேனகா அவங்க கட்சியில் சேர்ந்துட்டா அந்த தொகுதி நம்ம கையை விட்டு போய்டும்."
"அப்பா! ஒரு பொண்ணை வைத்து இப்படி யோசிப்பது தப்பு"
"நாம தப்பு பண்ணலை சிம்மா! அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணி உன் பொண்டாட்டியாக்க போற இதில் என்ன இருக்கு?"
"அப்பா! ஏதோ பண்ணுங்க ஆனால் இதில் முழு உடன்பாடு எனக்கில்லை நீங்க இவ்வளவு சொல்வதால் நான் ஒத்துக்கிறேன் "
"நீ இவ்வளவு தூரம் ஒத்துகிட்டதே போதும்டா"
"சரிப்பா! வாங்க நாம தூங்க போகலாம் நாளைக்கு மீட்டிங் இருக்கு"
"மீட்டிங்கா! அதை நீயே பாரு நான் முதலில் உனக்கு பொண்ணு பார்த்து பேசி முடிச்சுட்டு வர போறேன்"
"அப்பா! எனக்கு ஒரு சந்தேகம்"
"என்னடா?"
"அவரோட வீட்டில் இந்த பொண்ணு மட்டும் தானா பையன் இல்லையா?"
"பையனா அதுக்கு பதில் தான் அவன் இரண்டு பொண்ணை பெத்து வச்சிருக்கான். மூத்தவள் தான் மேனகா அவன் கூடவே வளர்ந்தவள் இரண்டாவது பொண்ணு இருக்கான்னு மட்டும் தான் தெரியும் ஆனால் எங்கே? எப்படி? என்ன பண்றா? எதுவும் தெரியாது. ஏன்னா அந்த பொண்ணு நம்ம நாட்டுக்கு வந்தே பத்து வருஷம் ஆகப்போகுது"
"அவங்க அப்பா செத்ததுக்கு கூடவா வரலை"
"வரலையாம் அந்த அளவு கல் நெஞ்சம் அந்த பொண்ணுக்கு என்னத்த சொல்ல அவனுக்கு அப்படியொரு பொண்ணு. எல்லாம் அவன் கொடுத்து வைத்தது"
"அதான் மூத்த பொண்ணு அரசியலை பார்த்துக்க போறாளே அப்பறம் என்ன?"
"அதுவேனா உண்மை தான் மேனகா நம்ம வீட்டு மருமகள் ஆக போறா. என் பையனுக்கு கல்யாணமாக போகுது . இந்த வீட்டிலும் கொலுசு சத்தம் எல்லாம் கேட்கும்"
"அதென்னப்பா கொலுசு சத்தம்?"
"உன் அம்மா நடந்தா இந்த வீடு முழுக்க கொலுசு சத்தம் கேட்கும் அது கேட்கவே அவ்வளவு நல்லா இருக்கும். நீ நான் சொன்ன அப்பவே கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரம் இந்த வீட்டில் என் பேரப்பிள்ளை கொலுசு போட்டு தாத்தா! தாத்தா! அப்படின்னு ஓடி வந்திருக்கும் நீ தான் ஒத்துக்கவே இல்லையே"
"அப்பா! அதான் ஒத்துகிட்டேன் இல்லை இப்போ நிம்மதியா தூங்குங்க போங்க" சிம்மன் அவரை அறையில் விட்டு தன் அறைக்கு சென்றான். அவனுக்கு கல்யாண கனவு எல்லாம் இல்லை தந்தை சொன்னதால் ஒப்பு கொண்டான் அவ்வளவு தான்.
*****************************
வண்ண மின் விளக்குகள் அறை எங்கும் லேசாக மின்னி கொண்டிருந்தது. அதனோடு இசைபுயலின் பாடல் மெல்லிய சத்தத்துடன் ஒளித்து கொண்டிருந்தது. கண்ணை புத்தகத்திலும் கையில் சிறு பேப்பரையும் வைத்தவாறு ஜென்னல் அருகே அமர்ந்திருந்தாள் நங்கை. பெண்ணவள் சிந்தனையை இடைமறித்து அலைபேசி ஒளி எழுப்ப அதை ஏற்று "ஹலோ" என்றதோடு சரி. எதிரே இருந்த பெண்
"இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்ப. உன்னை பார்த்து பத்து வருஷத்துக்கு மேல் ஆகுது. இன்னுமா எங்க மேல் இருந்த கோபம் போகலை. உன் அப்பாவையும் பார்க்காமல் அவருக்கு தண்டனை கொடுத்த இப்ப எனக்குமா? உனக்கு பண்ண தவறுக்காக தான் நான் தினமும் வேதனை அனுபவைக்கிறேன். வந்துடுடா என்னால் இனியும் உன்னை பார்க்காமல் இருக்க முடியலை. நாங்க பண்ணது தப்பு தான்" அவளிடம் பதில் இல்லை அதற்கு பதில் மௌனம் மட்டும் தான் நிரம்பி இருந்தது
"இப்பவும் அமைதியா? உன் மௌனத்தை உடைச்சு பேசுடி. நீ பேசலைன்னா நானும் சீக்கிரம் போய் சேர்ந்துடுவேன் போல. என் மேல் கருணை காட்டு வாடா"
"அம்மா! என்ன பண்றீங்க இங்கே போனை தாங்க" சட்டென யாரோ அவள் கையில் இருந்த போனை வாங்கி எதிரே இருந்தவள் மௌனத்தை கண்டு
"என்னடி ? நடிக்கிறீயா?" அவள் குரல் வந்த அடுத்த நொடி போன் தானாக கட் ஆனது அது மட்டும் இல்லாமல் போனை உடனே ஆஃப் செய்திருந்தாள். பல நினைவு பெண்ணவள் கண் முன் வந்து போக கலங்கிய விழியை துடைத்துக்கொண்டு மீண்டும் தன் கவனத்தை புத்தகத்தில் பதித்தாள்.
