Share:
Notifications
Clear all

காமன் 39 இறுதி அத்தியாயம்

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 288
Thread starter  

இறுதி அத்தியாயம்

 

 

 

“அடப்பாவிகளா..! அப்போ அப்பரண்டிஸ் நான் தானா!” என்று அவன் திகைத்து நிற்கையிலேயே..

 

 

 

கதிர்காமன் கடகடவென்று சிரிக்க “என்ன தனியா பேசி சிரிக்கிறீங்க?” என்று கணவனை திரும்பிப் பார்த்து அவள் கேட்க..

 

 

 

“அது இல்லடி..! இந்த கல்யாணத்தை நிறுத்த என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியல. ஒரு ஐடியாவும் தோணல.. சரி பிரண்டுக்குன்னு சொல்லி அரசு கிட்டயே நான் ஐடியா கேட்டேனா? அவன் கொடுத்தான் பாரு வகைவகையா தினுசு தினுசா..” என்று இன்னும் அந்த நினைவில் இருந்து மீள முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தான் கதிர்காமன்..!

 

 

 

ஆனால் என்ன சொன்னான் என்பதையெல்லாம் மனைவியிடம் பகிரவில்லை.

 

 

 

அதேசமயம் என்னவெல்லாம் தான் சொன்னோம் என்று தென்னரசு நினைவில் வந்து போக.. “அச்சோ..!” என்று தனக்குத்தானே தலையில் அடித்துக் கொண்டான்.

 

 

 

“அடப்பாவி அண்ணா..!” என்று அவன் அதிர்ந்து கத்தியதில் தான் இருவரும் அதிர்ந்து திரும்ப..

 

 

 

“இப்படி கையும் களவுமா மாட்டிக்கிட்டியே கைப்புள்ள..!” என்று கணவனின் காதில் கிசுகிசுத்தவள் “நான் எஸ்கேப்..!” என்று ஓடிவிட..

 

 

 

அண்ணனை முறைத்துக் கொண்டு ஃபோனை அவன் கையில் கொடுத்தவன் “கடைசியில நான் தான் பைத்தியம் இல்ல..!” என்று ஒருவித சோகமாய் அவன் கூற,

 

 

 

‘எங்கே தம்பி தங்களை தப்பாக எடுத்துக் கொள்வானோ?’ என்று பயந்த கதிர்காமன்,

 

 

 

“அப்படி இல்லடா..!” என்று தம்பியை அழைத்து சில பல கட்டிங் எடிட்டிங்கோடு அவனுக்கும் ரதிக்குமான உறவை சொல்லி முடித்தான்.

 

 

 

“அப்போ மஹிமா பிரச்சனை வரலைனாலும் நீ அண்ணிய தான் கட்டியிருப்ப?” என்றதும் "அஃப்கோர்ஸ்" என்று தோளைக் குலுக்கியவன்,

 

 

 

“அன்னைக்கு அவகிட்ட நான் பேச அந்த ரூமுக்கு இழுத்துட்டு வந்த கொஞ்ச நேரத்துல நீயும் மஹிமாவை இழுத்துட்டு வந்துட்ட.. எங்களுக்கு பக்குனு ஆச்சு.. கட்டிலுக்கு அடியில் ஒளிஞ்சுக்கிட்டோம். அப்புறம் நீ போனதுக்கு அப்புறம் நாங்களும் வெளிய வந்தோமா.. எங்கள வீரராகவன் மாமா பார்த்துட்டாரு..”

 

 

 

“அச்சோ அப்புறம் என்ன ஆச்சு?” என்று அதிர்ந்தான் தென்னரசு..!

 

 

 

“ஏற்கனவே அந்த கிழவரு உடம்பு முழுக்க குடும்ப கௌரவமா தான் இருக்கும். கூடவே இந்த ஜமீன் பரம்பரையின் பெருமையே தான் தான் தூக்கிட்டு இருக்கிறது போல அப்படி ஒரு ஆணவம் அவர்கிட்ட..! இப்ப எங்கள பார்த்ததும் என்ன நடந்திருக்கும் யோசி? அவர்கிட்டயும் எங்கள பத்தி சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டா அந்த கிழவன் சம்மதிக்கவே இல்லடா..!” என்று கோபத்தில் குதித்தான் அன்றைய தினத்தை நினைத்து கதிர்காமன்.

 

 

 

“என் பேத்தி சம்மதிக்காம உனக்கு கட்டி கொடுக்க மாட்டேன்.. அப்படியே உன்னை கட்டிக்கணும்னா ரெண்டு குடும்பத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் ஒரு வழியை கண்டுபிடிச்சுட்டு வா.. அதுக்கப்புறம் பார்க்கலாம்னு‌ அசால்ட்டா சொல்லிட்டு போயிட்டாரு..! நானும் அதுக்கப்புறம் நல்லா மண்டைய போட்டு பிராண்டியும் ஒரு ஐடியா கூட வரவே இல்லையே..!” என்றான் சோகமாக..

 

 

 

அண்ணனின் முகத்தைப் பார்த்து “பாவத்த..!” என்று தென்னரசு சிரித்தவன்,

 

 

 

“அப்போ மஹிமா பத்தி தெரியலன்னா என்ன சொல்லி கல்யாணத்தை நிறுத்திருப்ப டா அண்ணா?” என்று கேட்க..

 

 

 

“வேற என்ன? கல்யாணத்தன்னைக்கு உன்‌ அண்ணி காலுல விழுந்து கத்தி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியாவது கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன் வேற வழி..!” என்று‌ சிரித்த அண்ணனை கண்டவன்,

 

 

 

“சத்தியமா உனக்குள்ள இப்படி ஒருத்தன் இருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல டா..! உன்னோட பாஸ்ட் லைஃப் நினைச்சு குடும்பத்தில் எல்லோருக்கும் ரொம்ப கவலை. ஆனா இப்படி ஒட்டுமொத்தமா நீ சேன்ஜ் ஆயிருக்கிறது அண்ணியாலனு நினைக்கும் போது.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா நிறைவா இருக்கு..!” என்று அண்ணனை தோளோடு கட்டிக்கொண்டான் தென்னரசு.

 

 

 

“ஆமா மொத மொத அண்ணி உன்கிட்ட அவங்க வீட்டுக்காக தான் கேட்க வந்தாங்கன்னு சொன்னியே? அந்த வீடு அவ்வளவுதானா? நீ இவ்ளோ பெரிய வக்கீலா இருந்துட்டு அந்த கார்ப்பரேட் காரன் மேல கேஸ் போட்டு அந்த வீட்டை மீட்க ஏதாவது பண்ணி இருக்கலாம் இல்ல?” என்று வருத்தமாய் கேட்டான்.

 

 

 

அதுவரை சாதாரணமாக அமர்ந்திருந்தவன் இப்பொழுது கால் மீது கால் போட்டு தோரணையாக அமர்ந்து தம்பியை ஒரு பார்வை பார்த்தவன் “இங்கே நான் இருக்கிறது வச்சு என்னை அவ்வளவு லேசா எடை போடாத டா தம்பி பயலே.. மும்பையில் வந்து பாரு என்னோட வெயிட் என்னன்னு தெரியும்..!” என்றவன்,

 

 

 

“நான் அந்த ஆறு மாச காலத்திலேயே அந்த கார்ப்பரேட் கம்பெனி மேல கேஸ் போட்டு அவர்களை உருட்டி மிரட்டி வீட்டை வாங்கி ரெனோவேட் பண்ணி வச்சுட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க மும்பை போனோம் இல்லையா.. அப்போ உங்க அண்ணிக்கு சர்ப்ரைஸ் பண்ண முதல் போனதே அவங்க வீட்டுக்கு தான். அதுல விழுந்தவ தான் உங்க அண்ணி..” என்று கண்ணடித்து சிரித்தான் கள்வனாய் கதிர்காமன்..!

 

 

 

அண்ணனின் காலை தொட்டு கும்பிட்ட தென்னரசு “உன் அளவுக்கு நான் கிடையாதுப்பா. ஏதோ மஹிமாவை கட்டினதுனால என் பொழப்பு ஓடுது” என்று இருவரும் சிரித்து முடித்து அதன் பின் தங்கள் அறைக்கு வந்தனர்.

 

 

 

தங்கள் கட்டிலில் குழந்தைகளோடு குழந்தையாய் விஸ்தாரமாய் படுத்திருந்த மஹிமாவை பார்த்தவன்,

 

 

 

“கடைசி வரைக்கும் நாம ரொமான்டிக் லவ்வபுல் ஹஸ்பண்ட்டா ப்ரோமோட்டே ஆக முடியாது போல.. ஒன்லி பேம்ப்பரிங் ஹஸ்பண்ட் தான்..! உனக்கு விதிச்சது அவ்வளவு தான் டா அரசு” பெட்ஷீட்டை கீழே விரித்துப் படுத்துக் கொண்டான்.

 

 

 

கதிர்காமன் தங்கள் அறைக்குள் வர, அப்போது தான் குளித்து வெண்ணிற பூந்துவாளைவோடு வெண்தந்த அங்கங்கள் அரைகுறையாக தெரிய குளியலறையிலிருந்து வெளியே வந்த மனைவியை பார்த்தவன் “அது என்னமோ இங்க வந்தா மட்டும் மயக்கும் மாய மோகினியா நீ மாறிடுறடி” என்று கிறங்கினான்.

 

 

 

அவன் கைகளுக்கு சிக்காமல் குளியலறைக்குள் அவனை தள்ளி “குளிச்சிட்டு ஃபிரஷ் பண்ணிட்டு வந்தாத்தான்.. மத்ததெல்லாம் மாமா” என்று கலகலத்து சிரித்தாள் ரதி.

 

 

 

குறுக்காக தலையாட்டி சிரித்தவனின் இதழ்களில் அப்பட்டமான வெட்கப் புன்னகை வழிந்தோட.. பெருகி வந்த மோகத்தையும்.. அடக்கமுடியாத தாபத்தையும் சிகையை கோதி அடக்கியவன் குளிக்கச் சென்றான்.

 

 

 

ரதி கூந்தலை டவலால் உலர்த்திக்கொண்டே வார்ட்ரோபில் தன் துணிகளை எடுக்க, அவள் கரத்திலிருந்து துணி பிடுங்கப்படுவதை கண்டு அதிர்ச்சியுடன் திரும்பியவளின் முன் முட்டி நின்றான் கதிர்காமன் வெற்று மார்பை விடைத்தப்படி..

 

 

 

அவனின் சூடான மூச்சுக்காற்று அவள் தேகத்தில் பட்டு அவளை தகிக்க வைக்க.. உணர்ச்சி பிடியில் தத்தளித்தவள் இப்பொழுது உணர்ச்சிப் பிழம்பாக மாறி வெடிக்கத் தயாராக, தன் கீழிதழை மேற் பற்களால் கடித்து அவனைப் பார்க்க முடியாமல் தயங்கி முயங்கி நிற்க..

 

 

 

அவளது கன்னங்களை பற்றி கீழிதழை விடுவித்தான் அவள் பற்களில் இருந்து.. தன் இதழ்களை கொண்டு.. அந்தோ பாவம்!! அவள் மேற்பற்களில் இருந்து விடுதலை பெற்ற கீழுதடோ அவனது முரட்டு இதழ்களுக்குள் சிக்கிக்கொண்டது.

 

 

 

 

 

கூடல் முடிந்து அவளது நெஞ்சத்தை மஞ்சமாக்கி துயில் கொண்டவனின் கேசத்தை கலைத்து நெற்றியில் முத்தமிட.. மெல்ல தலையை தூக்கி அவளை பார்த்தவன் கண்களில் அத்துணை காதல் வழிந்தது.

 

 

 

இதுவரை வாய் வார்த்தைகளால் சொல்லாத காதலை தன் உணர்வாலும் உறவாலும் காட்டிக்கொண்டிருந்தாள் ரதி. சொன்னால்தான் காதலா என்ன? என்று அவளைப் புரிந்துக் கொண்டவன் அவளிடத்தில் காதலை சொல்ல கேட்கவே இல்லை..

 

 

 

பதிலாக.. "நீ சொல்லவில்லை என்றால் போகிறது நானே சொல்கிறேன் ஆயிரம் முறை உனக்கும் சேர்த்து" என்று நினைத்தவன் "ஐ லவ் யூ ரதி" “ஐ லவ் யூ பேப்” என்று பல்லாயிரம் முறை கூறியிருப்பான்.

 

 

 

இன்றோ.. அவனிடம் அவள் முதல் முறையாக “ஐ லவ் யூ மாமா” என்றதும், உள்ளம் சிலிர்த்தாலும் அதனை காட்டிக் கொள்ளாமல்.

 

 

 

அவளை கூர்ந்து பார்த்து "கேட்கல!!" என்றான் கற்றை மீசைக்கு அடியில் மறைத்த புன்னகையோடு..!

 

 

 

அவளும் சிறிது சத்தமாக "ஐ லவ் யூ மாமா!!" என்று கூற, "கேட்கவில்லை" என்றான் மீண்டும் சிரிப்போடு.. இன்னும் சத்தமாக அறையே அதிரும்படி "ஐ லவ் யூ மாமா!!!" என்றவள் அலற அந்த அலறல் ஒலி சென்று இறங்கிய இடம் அவனது இதழ்கள்.

 

 

 

அந்த முத்தத்தின் முடிவில் மீண்டும் அவளை ஆட்கொண்டான் காமனவன் அவனின் ரதியவளை..!

 

 

 

ஒவ்வொரு முறை கூடல் முடிவிலும் அவள் காதல் மிகுதியில் "ஐ லவ் யூ மாமா" என்று கூற, அவளின் கனிந்த இதழ்களை சுவைக்க ஆரம்பிப்பவன் அடுத்த கட்டம் கூடலை நோக்கிச் சென்றிருக்கும்.

 

 

 

இப்படியாக செல்ல.. விடியும் பொழுது மற்றொரு கூடலை முடித்தவன் அவளை நிமிர்ந்து பார்த்து "எங்கே இப்போது சொல்.." என்று கண்கள் மின்ன கேட்க.. அவள் வாயை இரு கைகளால் பொத்தி மாட்டேன் என்பது போல தலையசைத்தாள். அவள் இதழ் சொல்ல நினைத்ததை கண்கள் சொல்ல.. மெல்ல எக்கி கண்களில் அவன் முத்தமிட "அச்சோ போச்சு.. இனிமே ஐ லவ் யூ என்ற வார்த்தையை கண்ணால கூட உங்க கிட்ட சொல்ல மாட்டேன் ஆள விடுங்க" என்றவள் அவனை முன்னேற விடாமல் இழுத்து அணைத்து அடுத்த நிமிடம் உறங்கி விட்டாள்.

 

 

 

தன் கையணைப்பில் உறங்கும் மனைவியை தான் அத்தனை நேசத்தோடு பார்த்தான் கதிர்காமன்..!

 

 

 

சில வருடங்களுக்கு முன்பு ‘இவ்வாறு நீ ஒரு காதலை எதிர்பார்த்து தவித்து இருப்பாய்’ என்று யாரேனும் ஆருடம் கூறினால் அவர்களை அடித்து ஓய்ந்திருப்பான் இந்த எலைட் லாயர் கதிர்காமன்.

 

 

 

இன்றோ.. அவனின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிய மந்திரக்கோல் மனைவியின் கையில் இருந்தது.

 

 

 

அதோடு மட்டுமல்லாமல் அழகான மகனை தந்து, அன்பால் அவனது குடும்பத்தையுமே அரவணைத்துச் செல்லும் இந்த ரதியவள் மீது இன்னும் இன்னும் காதல் பெருகியது காமனுக்கு..!

 

 

 

“ஐ லவ் யூ டி..! யூ ஆர் மை சோல்” என்று அவன் அவள் நெற்றியில் முத்தமிட,

 

 

 

‘இன்னும் எத்தனை எத்தனை காதல் கணைத் தொடுப்பாயடா என் காமா.. கதிர்காமா..!!’ என்ற ரதியவள் முகத்தில் இளம் முறுவல்..!

 

 

 

இவர்கள் இதே சந்தோஷத்தோடு மனம் நிறைய மகிழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்..!

 

 

 

சுபம்..!

 

 

 

இந்த கதையில் என்னுடன் பயணித்து கருத்துக்கள்.. லைக்ஸ் வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் 😍🫰🤩🥰❤️💞❤️‍🔥


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top