33
“இப்ப என்னை எதுக்கு இப்படி அர்த்த ராத்திரில இந்த ரூம் உள்ள இழுத்துட்டு வந்து இருக்கீங்க? உங்களுக்கு எவ்வளவு தரம் தான் சொல்றது நான் உங்க தம்பியோட வருங்கால பொண்டாட்டி..” என்று சொல்ல வந்தவளின் வார்த்தைகள் அவன் இதழுக்குள் சென்று தான் மறைந்தது.
“விடுங்க.. விடு.. விடுடா..” என்று அவளின் சத்தங்கள் எல்லாம் அவனின் முத்தங்களாக தான் வெளிவந்தன..!
கைகளால் அவனை அடித்தும் கிள்ளியும் தடுத்தும் என்று அவளின் அநேக முயற்சிகளையும் அசால்ட்டாக முறியடித்தவனின் நெருக்கமும் அவளிடம் அதிகரித்துக் கொண்டே சென்றது..!
அவளின் தவிப்பு புரியாமல்.. இன்னும் இன்னும் அவளின் இதழ்களில் வன்மையாக ஆழமாக தன் இதழ்களை புதைத்து.. அவன் மன காதலின் ஆழத்தை உணர்த்திக் கொண்டிருந்தான் கதிர்காமன்..!
அவனைப் பொறுத்தவரை ‘ஏற்கனவே தன் மனதை அவளிடம் திறந்து விட்டேன். அவள் தான் வம்படியாக என்னை புரிந்துக் கொள்ளாமல் இன்னும் என் தம்பியை தான் கல்யாணம் செஞ்சுப்பேன்.. அவனுக்கு தான் பொண்டாட்டி ஆவேன்னு சுத்திக்கிட்டு இருக்கா.. அது எப்படி என் பொண்டாட்டியை அவன் பொண்டாட்டியாக நான் அனுமதிப்பேன்?’ என்று அவன் தார்மீக கோபம்தான், அவனது உரிமை மீறலாக.. அவளுக்கோ அத்து மீறலாக அங்கே அவளிடம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
ஏற்கனவே அவளை தீண்டிய போது பற்றிக்கொண்ட காதல் நெருப்பானது அவனுக்குள் இன்னும் கொழுந்துவிட்டு பெரும் வேள்வித் தீயாய் எரிந்துக் கொண்டிருக்க..
அந்த தீயில், தென்னரசுவால் பொறாமை எனும் பெட்ரோல் ஊற்றப்பட.. காதல் தீயானது மிகத் தீவிர பெருந்தீயாக மாறி அவனை அலைக்கழிக்க.. அந்நேரம் அவனை நெருங்கும் அனைத்தும் அந்த பெருந்தீயுக்குள் இழுக்கப்பட.. அதன் விளைவாய் ரதி இப்போது காமனின் கரங்களில்..!
பெரும் கஷ்டப்பட்டு அவனிடமிருந்து தன் உதடுகளை மீட்டுக் கொண்டவளுக்கோ இதழ்கள் தீ என காந்தியது.
அவனை முறைத்து “நீ எல்லாம் மனுசனா?” என்று அவள் பாய்ந்துக் கொண்டு வர..
"ரதி.. நீ.. என்னுடையவ!! என்னுடையவ மட்டுமே!! புரியுதா டாமிட்.. உனக்கு? இனி ஒரு தடவை நான் உங்க தம்பியோட ஃபியான்சி.. உங்க தம்பியோட வருங்கால பொண்டாட்டினு ஏதாவது பினாத்துன..??” என்று அந்த அறையே அதிர சத்தமிட்டான்.
அவளுக்கு அவனின் அந்த கோபம் ஏதோ ஒரு வெறியை தூண்ட, நெஞ்சை நிமிர்த்தி.. அவன் கண்களை கூர்ந்து பார்த்து “அப்படி சொன்னா என்ன பண்ணுவ? என்ன பண்ணுவ?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி அவள் நின்றிருந்த தோரணை.. அவளின் வளைவு நெளிவுகள்.. அவனுள் கனலை மூட்ட..
“என்ன செய்வேனா? இப்போ உனக்கு கொடுத்த மாதிரி எல்லார் முன்னிலையும் கொடுப்பேன்? அது மட்டுமல்ல ஏற்கனவே நான் என்னை உனக்கு கொடுத்துட்டேன்னு எல்லார் முன்னாடியும் சொல்லுவேன்..! அந்த கொடுத்துட்டேங்கிறது மனசாலேயும் உடம்பாலேயும்” என்றவனை அவள் திடுக்கிட்டு பார்த்தாள்.
‘இது என்ன வார்த்தை நான் என்னை அவளுக்கு கொடுத்துட்டேங்கிறது?’ என்று புரியாமல் பார்க்க…
“எப்படி சொன்னாலும் மீனிங் ஒன்னு தான்..! என்று சிரித்தவன், பின் அவளை முறைத்து,
“அது என்ன கோயில அவன் கூட சேர்ந்து நிக்கிற? அவன் கையை புடிச்சிட்டு நிக்குற? விழுந்து விழுந்து அவனை கவனிக்கிற? பக்கத்துல இருந்த நான், உன் கண்ணுக்கு தெரியலையா?” என்று எரிச்சலோடு அவன் கேட்டான்.
ஆம் கோவிலில் அவள் கையோடு தென்னரசு கை இணைந்து பூசாரியிடமிருந்து பிரசாத தட்டை இருவரும் வாங்க.. அது கதிர்காமனுக்கு பெரும் கோபமாக இருக்க...
அதிலும் தென்னரசு உரிமையாக அவளிடம் பேசுவது ஏன் பார்ப்பது கூட இன்னும் அவனை வெறியேற்றியது.
மும்பையில் ஏஸி அறையிலேயே புழங்கி வெண்மை நிறத்துடன் கற்றை மீசையோடு பாலிவுட் நடிகர் மாதிரி இருக்கும் தன்னை விட, திராவிட நேரத்தில் முறுக்கிய மீசையோடு ஆணழகனாய் இருந்த தம்பியை மத்த நேரத்தில் கண்டிருந்தால் கண்டு கொண்டிருக்கவே மாட்டான்.
ஆனால் ரதியோடு.. இருவர் கைகளும் இணைந்து இருப்பது பார்த்தவனுக்கு முடியவே இல்லை!!
நேற்று அவள் அவனை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னதை எல்லாம் மறந்து, ‘எப்படி அவளைத் தொட அவனை அனுமதிக்கலாம்?’ என்று அத்தனை கோபத்தை அடக்கியபடி தான் இருந்தான்.
எப்படியும் வீட்டுக்குச் சென்றவுடன் அவளிடம் பேசிய தீரவேண்டும் என்று நினைத்து அறையை விட்டு வந்தவன், அதேநேரம் காரிடாரில் நடந்து வந்துக் கொண்டிருந்தவளை பார்த்து சட்டென்று அந்த பகுதியில் இருக்கும் லைட்டை அணைத்தவன், அடுத்த நிமிடம் அவளை உள்ளே இழுத்திருந்தான்.
அது மிகப் பெரிய மாளிகை..! வேலை முடித்ததும் வேலையாட்கள் இரவுக்கு அவர்கள் குடிலுக்கு சென்று விடுவார்கள். மீதம் இருப்பது வீட்டு ஆட்கள் மட்டுமே..!
அதுவும் அனைவரும் காலையில் கோயிலுக்கு சென்று வந்த களைப்பில் உறங்கிக் கொண்டிருக்க.. அதை பயன்படுத்தியவன், யாரும் அறியாமல் அவளை தூக்கி வந்தவன், தன் காதலை வன்மையாக அவளுள் இறக்கிக் கொண்டிருந்தான்.
அவளுக்கோ மூச்சு முட்ட வலுக்கட்டாயமாக தனது இதழ்களை அவன் இதழ்களில் இருந்து பிரித்தெடுக்க.. காமனும் அவளது இதழ்களை விட்டான், ஆனால் அவள் மெல்லிடையை தன் இடையோடு இறுக்கிக் கொண்டு..
"ஏ..ன்.. ஏ..ன்.. இ..இ.ப்படி?" என்று மூச்சு வாங்கியவாறு அவள் கேட்க..
"அது என்ன? அவன் கையோடு கை இணைக்குறது.. உரிமையா அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவது.. மாமா மாமானு பேசுறது.. எங்க போனாலும் அவன் கண்ணு உன்னையே சுத்தி சுத்தி வருது?” என்று அவன் கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பினான்.
உண்மையில் அப்பொழுது தென்னரசு ரதியையும் அவளோடு சுற்றிக் கொண்டிருந்த மஹிமாவையும் தான் பார்த்திருந்தான்.
முதலில் அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் ஒரு நிமிடம் விழித்தவளுக்கு அடுத்த நிமிடமே புரிந்தது.
“நான் அவரை பார்த்தா, உங்களுக்கு என்ன? அவரோட கைக்கோர்த்தா உங்களுக்கு என்ன? இல்ல அவரோட..” என்ற அவளின் அடுத்த வார்த்தை அவன் இதழ்களுக்குள் சென்று முடிந்தது.
அவl இதழ்களை விடுவித்தவன்,
"நான் யாருன்னு உனக்கு அப்போ புரியலை.. ம்ம்ம்.." என்றவன் அவளை அழுத்தமாக பார்க்க..
அவளும் அவனை சீண்டவென்றே "நீங்க எனக்கு யாரு லாயரே?" என்றாள் கண்களில் திமிரை தேக்கி..
'ம்ம்ம்.." என்று அவளை விட்டு ஒரு அடி நகர்ந்தவன், "ம்ம்ம் காட்டல.. நான் காட்டல.."
"ஒவ்வொரு நாளும் உனக்காகவே வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு வந்து உன் அருகில் உட்கார்ந்து பேசிட்டு இருக்கும்போது நான் காட்டல யாருன்னு??
உன்னை விட வரும்போது காரில் பயணிக்கும்போது என் அருகாமையில் நீயும்.. உன் அருகாமையில் நானும் விரும்பி தொலைந்த போது நான் காட்டல யாருன்னு??
உன்னை வீட்டில் விட்டுட்டு பிரிய மனமே இல்லாமல் பிரியும் போது நான் காட்டல யாருன்னு??
என் நெருக்கம் உனக்கு காட்டுல நான் யாருன்னு?"
என்று அவள் கண்களை கூர்ந்து நோக்கியவாறு அவன் பேச.. அவளோ அவன் வார்த்தைகளில் கரைந்து மிதந்துக் கொண்டிருந்தாள்.. அவனோ கரை காணாத காதலை கண்களில் காட்டிக் கொண்டிருந்தான்.
கோபம் என்னும் முகமூடி போட்டுக் கொண்டு இருந்த ரதிக்கும் அவன் கண்களில் காட்டும் காதலை கண்டு கொள்ள முடியவில்லை..
பேசிக்கொண்டே இருந்தவன் அவளின் பின்னந்தலையை டக்கென்று இரு கைகளால் பிடித்து அசால்ட்டாக பின்னே சாய்த்தவன் அவளின் வலது பக்க வெண்சங்கு கழுத்தில் முத்தங்களை வாரி இறைத்தான். ஜிலுஜிலுவென்ற அந்த அறையில் லாயர் காதல் கலந்த மெல்லிய மோக லீலைகளை புரிய, பெண்ணவளோ அவனின் வேகத்தில்.. மோகத்தில்.. காதலில்.. துவண்டு போயிருந்தாள் கொடியென..!!
அந்நேரம் தான் கதவு திறக்கும் சத்தம் கேட்டு இவர்கள் இரண்டு பேரும் கதவுக்கு அடியில் தஞ்சம் புகுந்
தது.
இப்பொழுது தன் நெஞ்சில் தலை பதித்து உறங்கும் ரதியின் முகத்தை வருடியவன் அவள் உச்சந்தலையில் அழுத்தமாக முத்தம் வைத்து அவனும் அப்படியே உறங்கினான்.
தொடரும்..
