தளிர் - 40
இரண்டு வருடங்கள் கழித்து
அந்த வீட்டையே அதிரச் செய்தது இதழ் செழியனின் மகனின் அழுகை சத்தம் . அவன் மித்ரன் .
இதழோ சரி சரி அழுகாத என்று தட்டிக்கொடுக்க .
அவனோ இன்னும் சத்தம் கூட்டி அழுதானே தவிர குறைந்த பாடில்லை .
அப்போதுதான் அலுவலகம் முடிந்து வீட்டின் உள் நுழைந்த செழியனோ
ஏய் ஏன்டி என் புள்ள அழுவுது என்க .
இதழோ எறும்பு கடிச்சிடுச்சு அதான் அழுகுறான் என்றபடி தோளில் போட்டு தட்டிக் கொடுக்க .
செழியனோ அது வரைக்கும் நீ என்ன பண்ணிட்டு இருந்த , புள்ளைய கூட பார்க்காம என்று அவளை வம்புக்கு இழுக்க .
இதழோ ஆமா அப்படியே நான் பார்க்காம தான் உங்க பிள்ளை இப்படி வளர்ந்து இருக்கானோ என்று நொடித்துக் கொண்டவளோ , அறையில் நுழைந்து கொள்ள .
செழியனோ ஒரு சிரிப்புடன் அறையின் உள் நுழைய .
இதழோ அவனை தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டிருக்க .
செழியனோ குளிக்க பாத்ரூமில் நுழைந்து கொள்ள .
இதழோ எப்படியோ அவனை தூங்க வைத்துவிட்டு அறையை விட்டு வெளியில் வந்தவளோ கிச்சன் உள் நுழைய .
அப்போது கதிரும் , தமிழும் வீட்டின் உள் நுழைய .
தமிழோ அக்கா என்று சத்தம் போட்டு அழைக்க .
இதழோ ஏய் ஏய் வாயமூடுடி இப்போ தான் அவன தூங்க வச்சிருக்கேன் என்று மெதுவாக கூற .
கதிரோ என்ன இதழ் அந்த பொடியன பார்த்து இப்பவே பயப்படுற என்க .
இதழோ அட சும்மா இருங்க அண்ணா அவன பத்தி தான் தெரியும் இல்லை ,காலையில இருந்து ஒரே ஆட்டம், அப்புறம் எறும்புல கடி வாங்கிட்டு இப்போதான் தூங்குறான் என்றபடி இருவருக்கும் காபி கலக்கி கொண்டு வர .
அவர்கள் அருகில் அமர்ந்தவளோ
குழந்தை எப்படி இருக்காம் தமிழ் என்று அவள் மேடிட்ட வயிற்றை பார்த்தபடி கேட்க.
தமிழோ எல்லாம் நல்லா இருக்காம் அக்கா என்க .
அப்போ சரி என்ன சாப்பிடுற என்க .
தமிழோ எனக்கு எதுவும் வேண்டாம் அக்கா நான் போய் தூங்குறேன் எனக்கு ரொம்ப டையர் என்க .
கதிரோ சரி வா என்று அவளை அழைத்து செல்ல .
கிச்சன் உள் நுழைந்து சமைக்கத் தொடங்கிய இதழின் இடையோரம் ஒரு கரம் உரசி செல்ல .
இதழோ அது யார் என்பதை அறிந்து கொண்டவளோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க.
செழியனோ என்னடி கோவமா என்று அவளை அணைத்து கொள்ள .
இதழோ ஆமா கோவம்தான் என்னுமோ உங்க பையன நான் கவனிக்காத மாதிரி பேசுறீங்க என்று சிடுசிடுக்க .
செழியனோ சிரிப்புடன் அதுலாம் கொஞ்ச நேரம் உன்னை வம்பு இழுக்க பண்றதுடி என் செல்லம் என்று அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட .
இதழோ சரிதான் , என்றபடி சமைக்க.
செழியனோ சரி நாளைக்கு ஆபிஸ் கிளம்பி வர என்க .
இதழோ பையன விட்டிட்டு எப்படி வர்றது என்க .
செழியனோ அது தமிழ் பார்த்துப்பா , அப்புறம் இனி கதிர் வீட்டுல தான் இருப்பான், வசந்தா அக்காவும் நாளைலயிருந்து வந்துருவாங்க நீ முதல்ல வேலைக்கு வா , உன் கேன்டீன் நல்லா போய்ட்டு இருக்குடி என்க .
இதழோ சார் எதுக்கு அடி போடுறீங்கன்னு எனக்கு தெரியாது இங்க வீட்டுல இருந்தா உங்க பையனே எல்லா நேரத்தையும் எடுத்துக்கிறான், உங்களுக்கு என் கூட இருக்க முடியல அதுனால சார் என்னை தனியா தள்ளிட்டு போறதுக்கு பிளான் பண்றீங்க என்க .
செழியனோ அப்படியும் வச்சிக்கலாம், உன் திறமைக்கு இன்னும் இரண்டு கேன்டீன் ஆர்டர் வந்திருக்குடி , அதுனால வீட்டுல இருந்து பொழுதை போக்காம மேடம் வந்து உங்க பிஸ்னஸ் ரன் பண்ற வழிய பாருங்க என்று அவள் தோள் தட்ட .
இதழோ சரிங்க சார் நாங்க வரோம் , இப்போ நீங்க கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா என்க .
செழியனோ நான் என்னடி பண்றேன் என்றபடி மீண்டும் அவள் தோள் வளைவில் முகம் புதைத்துக் கொள்ள .
இதழோ இதோ இது தான் எவ்ளோ நேரம் தான் நான் இப்படியே உங்கள தாங்கிறதாம்.
அவனோ கொஞ்சம் நேரம்டி உன் பையன் எழுந்துட்டான்னா அவ்ளோதான் என் பொண்டாட்டிய நான் தூரம் நின்னு தான் வேடிக்கை பார்க்கனும் என்று சலிப்புடன் கூற .
இதழோ சிரிப்புடன் ஆமா ஆமா தூரம் நின்னு தான் பார்க்கனும் என்று ராகம் இழுக்க.
செழியனோ என்ன பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்குள்ள என்றவனோ சுற்றியும் ஒரு பார்வை பார்க்க.
இதழோ என்னங்க வேண்டாம் என்றபடி அவனிடம் இருந்து விலகி ஓட .
செழியனோ ஓடும் அவளை பிடித்து தூக்கியவனோ தங்கள் அறை நோக்கி நடக்க .
இதழோ டேய் பாண்டியா இறக்கி விடுடா என்று அவன் முதுகில் தொங்கியபடி சிணுங்க.
செழியனோ அவள் சொல்ல வருவதை எதையும் கேளாமல் தங்கள் அறையில் இருந்த மற்றொரு குட்டி அறையை திறந்து உள் நுழைய .
இதழோ அவனிடம் இருந்து குதித்து இறங்கியவளோ
அவன் முகத்தை பார்க்க.
அவன் பார்வை மாற்றத்தை கண்ட இதழோ அவனிடம் இருந்து விலகி செல்ல . செழியனோ சுவரோடு சுவராக அவளை நெருக்கி பிடித்தவனோ அவள் முகம் நோக்கி குனிய . அதன் பின் இருவரும் வெட்கம் கலைந்து , காதல் கொள்ள.
அனைத்தும் முடிந்து அவன் மார்பில் தலைவைத்து படுத்திருந்த இதழோ அவன் முகம் பார்க்க.
செழியனும் குனிந்து அவள் முகம் பார்க்க.
செழியனோ இந்த தகிக்கும் தளிர் எப்பவும் எனக்காக மட்டும் தான் தகிக்கனும் என்று அவள் இதழில் ஆசையாக முத்தமிட .
இதோ இருவரும் ஒருவருக்கு ஒருவர் தகித்தும், அன்பு கொண்டும், காதல் கொண்டும், என்றென்றும் இருக்க வாழ்த்தி நாமும் விடைபெறுவோமாக.
................ முற்றும் ...............
வெற்றிகரமாக எனது இரண்டாவது கதையும் முடிவடைந்தது . இதுவரை வாசித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகள் .
இனி அடுத்த ஒரு காதல் கதையில் சந்திப்போம் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள்
- அவள் " பொற்சுவை "
