Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 39

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 11 months ago
Messages: 40
Thread starter  

தளிர் - 39

 

இதழோ ஒரு யோசனையுடன் அமர்ந்து இருக்க. 

 

அவள் முன் இருந்த செழியனோ 

 

" என்னடி சிந்தனை " என்றபடி அவள் தலையை துவட்டி விட .

 

இதழோ " இல்லை அன்னைக்கு நைட் நீங்க ஏதோ குட்டி சிக்கிடுச்சு, அப்படி இப்படி சொன்னீங்க அது எதுக்கு " என்க .

 

செழியனோ அதுவா நாங்க வித்யா மூலமா அவனுங்கள ஆறுமாசம் தேடி அலைஞ்சு , அன்னைக்கு தான் எல்லாரையும் கொத்தா தூக்க வாய்ப்பு கிடைச்சுது , அதனால தான் கதிர் போன் பண்ணி மொத்த ஆட்டுக்குட்டியும் சிக்கிடுச்சு , இன்னைக்கு நைட் முடிச்சிடுலாம் சொன்னான் . அதுதான் நான் இன்னைக்கு செம வேட்டைன்னு சொன்னேன் என்க . 

 

இதழோ சரிதான் , ஆனா இதுல இன்னொருத்தரும் இருக்காருன்னு சொன்னீங்களே அது யாரு என்க .

 

செழியனோ அதை யார் என்று கூற .

 

இதழோ என்னங்க சொல்றீங்க அவரா என அதிர்ச்சியுடன் வினவ .

 

செழியனோ " ஆமா இதழ் , இது எங்களுக்கே இப்போ தான் தெரிஞ்சது , அதோட அந்த நபர் அன்னைக்கு வித்யா இருந்தப்பவும் இருந்து இருக்கார் . ஆனா நாங்க போறத்துக்குள்ள அங்கிருந்து போய்ட்டார் ....

என்றவனது முகமோ ஒரு வித வருத்தத்துடன் இருக்க .

 

இதழோ  

 

" விடுங்க நாம என்ன பண்ணிட முடியும் , ஆனாலும் இதுல ரொம்ப பாதிக்கப்பட போறது அவரோட பையன் தான் " என்க .

 

செழியனும் ஆம் என்பது போல் தலையாட்ட .

 

 

வெய்யோனோ தகதகவென மின்னியபடி மேல் எழுந்து வர . இனிதாக தொடங்கியது காலைப்பொழுது . 

 

தமிழோ எப்போதும் குளித்து முடித்துவிட்டு , தலையை துவட்டியபடி கண்ணாடி முன்பு நிற்க . கண்ணாடியில் கதிரின் உருவம் தெரிய . 

 

" தமிழோ இவர எப்போ லவ் பண்ண ஆரம்பிச்சோனோ அதுல இருந்து எங்க பார்த்தாலும் இவரு தான் தெரியுராரு என்ன பண்ண " 

 

என்று புலம்பியபடி புடவைக் கட்டத் தொடங்க .

 

புடவை கட்டிவிட்டு மீண்டும் நிமிர்ந்து கண்ணாடியை பார்க்க. அதே போல் மீண்டும் அவன் உருவம் மறையாமல் இருக்க . அப்போதுதான் அவளுக்கு ஒன்று புரிந்தது அது பிரம்மை அல்ல, அவன் நிஜம் என .

 

தமிழோ

 

" கதிர் நீங்க இங்க என்ன பண்றீங்க " 

 

என்று அதிர்வுடன் கேட்க. 

 

அட்டகாசமாக சிரித்தபடி அவள் அருகில் வந்தவனோ 

 

" ஏன்டி நான் நிஜம்கிறதையே இப்போ தான் கண்டுபிடிச்சியா என்ன " 

 

என்றபடி அவள் அருகில் நெருங்கி வர .

 

தமிழோ

 

" அப்போ நான் புடவை மாத்தனது எல்லாம் பாத்துட்டீங்களா " என்றவளுக்கோ அதிர்ச்சி மேலிட .

 

கதிரோ தலையை கோதியபடி , கண்ணை சிமிட்டி ஆமா என்பது போல் தலையாட்ட.

 

தமிழோ ம்ம்ம்ம்மம்மம் என்ற சிணுங்களுடன் 

 

" போங்க இனி நான் உங்கிட்ட பேசமாட்டேன் போங்க " 

 

என்று வெட்கத்தில் சிவந்த முகத்தை தன் இரு கைகொண்டு மறைத்து கொள்ள .

 

கதிரோ சிரிப்புடன் அவள் இடை வளைத்து தன்னோடு நெருக்கி கொண்டவனோ 

 

" ஏய் பூனைக்குட்டி என்ன பாரு" 

என்க .

 

அவளோ ஹீம் என்று மறுப்பாக தலையாட்டியவளோ முகத்தை மூடியபடி இருக்க .

 

கதிரோ மூடிய கைகளில் முத்தம் மிட . 

 

தமிழோ அதிர்வுடன் பட்டென கையை இறக்கி அவன் முகம் பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொள்ள .

 

கதிரோ " ஏய் என்னை பாருடி " என்க .

 

அவளோ போங்க கதிர் அவன் மார்பில் தலையை பதித்துக்கொள்ள. 

 

அவள் கன்னத்தில் கைகொடுத்து மெதுவாக முகம் நிமிர்த்தியவனோ அந்திவானமாய் சிவந்திருந்த அவள் முகத்தை ரசனையுடன் பார்க்க. 

 

அவளோ இமைமூடி அவன் தொடுகையில் உடல் சிலிர்த்து மயங்கி இருக்க .

 

கதிரோ " ஏய் கண்ணை திறடி " என்க .

 

அவளோ சிப்பி இமைகளை மெதுவாக திறந்து அவன் கண்ணோடு கண் பார்க்க. 

 

கதிரோ கோவமா என்ன ,என்றபடி அவள் கன்னத்தை ஆசையாக வருட .

 

தமிழோ அவன் கண்கள் தரும் மயக்கத்தில் இல்லை என்பது போல் தலையாட்ட . 

 

கதிரோ சிரிப்புடன் அவள் கன்னம் தட்டியவனோ 

 

" சரி போலாமா " என்க .

 

தமிழோ அவன் கை பிடிக்க .

 

அவனோ என்ன என்பது போல் பார்க்க. 

 

தமிழோ இல்லை உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையே என்க .

 

அவனோ அவள் கேட்க வருவது புரிந்தும் தன்னை சமாளித்துக் கொண்டவனோ 

 

" விதி என்னவோ அது நடந்து தானே ஆகனும் , வா பார்த்துக்கலாம்" 

 

என்றபடி இருவரும் சென்று நின்றது என்னவோ அவர்களது ஆஸ்ரம விழாவில் தான் .

 

பெரிய ஆஸ்ரமம் , அதன் பின் பகுதியில் இருந்த காலி மைதானத்தில் தான் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . அனைவரும் அமர்ந்து இருக்க. மேடையில் செழியனும் , கதிரும் , அவனது அப்பாவும் ஆன ராமநாதனும் அமர்ந்து இருக்க . 

 

விழாவும் தமிழின் வாழ்த்துரையில் இனிதாக துவங்கியது . 

 

குழந்தைகளுக்கு பரிசுகளும் கொடுக்கப்பட . அனைவரும் விழா முடிந்து மேடையை விட்டு கீழே இறங்கும் நேரம் எங்கு இருந்தோ வந்த துப்பாக்கி குண்டொன்று ராமநாதன் நெஞ்சில் பாய . அவரோ சுருண்டு கீழே விழ . அதன்பின் சொல்லவும் வேண்டுமா அந்த இடமே கலவர பூமியாக மாறியது . அனைவரும் அங்கும் இங்கும் ஓடியபடி இருக்க . 

 

கதிரோ மெதுவாக அவர் அருகில் அமர்ந்தவனோ 

 

" வலிக்குதா அப்போ ஒவ்வொரு பெண்ணையும் நீ கொல்லும் போது அவங்களுக்கும் இப்படி தான வலிச்சு இருக்கும் , உன்னை என் அப்பான்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு ச்ச்சீசீ ...... , யாரும் உன்னை காப்பாத்த மாட்டாங்க ,

 

என்று அவர் துடிதுடித்து சாகும் வரை எதுவும் செய்யாமல் இருக்க .

 

செழியனும் அவரையே ஒரு அழுத்தப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க .

 

அவரோ எதுவோ சொல்ல வர .

 

கதிரோ. 

 

" இது எல்லாம் எப்படி தெரிஞ்சுசுன்னு பார்க்கிறீயா , ரகு செத்துட்டான், அவன் மூலமா எல்லாம் தெரிஞ்சுது , எவ்ளோ எச்ச புத்தியோட இருந்து இருக்க . எப்படியோ ஆசிரமத்தைல இருந்தது எல்லாம் குழந்தைங்க இல்லைன்னு அவங்களையும் நீ என்ன பண்ணி இருப்ப ....

 

என்று வார்த்தைகளை கடித்து துப்ப.

 

அவருக்கோ அவன் ஒவ்வொன்றாக கூற கூற அதிர்ச்சியே மேலிட .

 

அவன் கையை பிடிக்க வர . அவரை விட்டு எழுந்து நின்றவனோ அங்கு வந்த ஆம்புலன்ஸோ அவரை தூக்கி செல்ல . அவரின் பார்வை முழுவதும் கதிர் மேல் நிலைத்து இருக்க . அப்படியே அவர் உயிரும் பிரிந்து சென்றது .

 

கதிரோ தன்னையும் மீறி கலங்கிய கண்களை துடைத்து கொள்ள .

 

அவன் தோள் மீது ஆதரவாக செழியனன் கை வந்து விழ .

 

அவனை திரும்பி பார்த்த கதிரோ அவன் விழி பார்வையில் என்ன கண்டானோ ஒரு சிரிப்பில் வருத்தத்தை மறைத்துக் கொள்ள . 

 

செழியனோ அவனை மெல்ல அணைத்து கொள்ள . அங்கிருந்து இருவரும் தங்களது கருப்பு பக்கங்களை அழித்து புதிய அத்தியாயங்களை தொடங்கினர் .

 

சில மாதங்கள் கழித்து 

 

அந்த மண்டபமே கூட்டங்கள் நிறைந்து வழிய . கதிரும் , தமிழும் வந்த விருந்தினர்களை வரவேற்று கொண்டிருக்க . ஒரு பக்கம் மேளதாளங்கள் வாசித்தபடி இருக்க , மற்றொரு பக்கம் ஐய்யரோ மணமக்களை அழைத்து வாருங்கள் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க.

 

அதற்கு உரிய தம்பதியனரோ முத்தப் பாடத்தில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்க . ஒரு கட்டத்தில் முடியாமல் அவனை விலக்கி தள்ளிய இதழோ மூச்சு வாங்க அவனை முறைக்க .

 

செழியனோ மீண்டும் அவள் இதழில் கவி எழுத வர . 

 

இதழோ அவன் செஞ்சி கைவைத்து தடுத்தவளோ 

 

" ஏன் இப்படி பண்றீங்க ஏற்கனவே நேரம் ஆகிடுச்சு , கல்யாணம் பண்ண வேண்டாமா " 

 

என்று சிணுங்க .

 

செழியனோ அதுதான் ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தையே பிறக்க போகுதுல அப்புறம் எதுக்குடி மறுபடியும் கல்யாணம் என்று கூறியவனோ அவள் இடையில் ஒரு கிள்ளு கிள்ள .

 

ஸ்ஸ்ஆஆஆஆ என்று சிணுங்கிய இதழோ 

 

எப்போ பார்த்தாலும் இந்த இடுப்பையே பிடிச்சு கிள்ளுறீங்க, அப்படி என்ன தான் இருக்கோ என்று புடவையை சரி செய்தவளோ 

 

ஆமா கல்யாணம் தான் ஆச்சு எப்படி ஆச்சு , கிராமத்துல உங்க பிறந்த நாள் அப்போ உன்னை அங்கீகாரம் இல்லாம தொட மாட்டேன் சொல்லி நைட்டோட நைட்டா பெட் ரூம்ல வச்சி தாலி கட்டுவதுதான் கல்யாணமா என்று தன் தலையை சரி செய்து கொள்ள .

 

செழியனோ தன் சட்டையை எடுத்து மாட்டியபடி அவள் பின்னோடு வந்து அணைத்துக் கொண்டவனோ .

 

இந்த இடுப்புல என்ன இருக்குன்னு தான கேட்கிற , நான் விழுந்த இடமே இதுதான்டி என்க .

 

எங்க நடந்தா என்ன கல்யாணம் , கல்யாணம் தான் , என்க .

 

அவன் பக்கம் திரும்பி அவன் சட்டை பட்டன்களை போட்டபடி   

 

" ஆமா ஆமா கல்யாணத்தையும் , வளைகாப்பையும் ஒரே மேடையில் வைக்கிறவரு நீங்க தான்" 

 

என்றபடி இருவரும் அறையை விட்டு வெளியில் வர .

 

இதழோ அவன் கையை மெதுவாக பிடித்து நடந்து வந்தவளோ அங்கு போடப்பட்டு இருந்த மணமேடையில் இருவரும் அமர .

 

அனைவரது கண்ணும் அவர்கள் மீதே நிலைத்து இருந்தது .

 

இதழோ சுற்றியும் ஒரு பார்வை சுழல விட்டவளோ அனைத்து இளம் வயது பெண்களின் பார்வையும் தன் கணவன் மீது இருப்பதை கண்டவளோ 

 

தன் கண்ணில் இருந்த மையை எடுத்தவளோ அவன் காதோரம் வைத்துவிட .

 

செழியனோ என்னடி பண்ற என்க. 

 

இதழோ " நல்லா வேட்டி சட்டையில அம்சமா இருக்கீங்க இங்க இருக்க எல்லார் கண்ணும் உங்க மேல தான் இருக்கு " 

 

என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சற்று பொறாமை மேலிட கூற .

 

செழியனோ " சிரிப்புடன் யார் என்னை பார்த்தாலும் இந்த கண்ணு எப்பவும் உன்னை மட்டும் தான் பார்க்கும் " 

 

என்று தங்க ஜரிகை வைத்த பட்டில் , தங்கம் வைரம் என மின்ன , அது அழகை எல்லாம் மிஞ்சும் வகையில் தன் அருகில் அமர்ந்து இருந்த இதழை ஆசையுடன் பார்க்க. 

 

இதழோ அவன் கூறியதை கேட்டு பட்டென திரும்பி அவன் முகம் பார்க்க. 

 

செழியனோ அவளையே விழுங்குவது போல் பார்க்க. 

 

அவன் பார்வையில் வெட்கம் மேலிட .

 

" ஏன் இப்படி பார்த்து வைக்கிறீங்க ,எல்லாரும் என்னை நினைப்பாங்க " என்க.

 

செழியனோ 

 

" யாரு என்னை நினைச்சா என்ன , நான் என் பொண்டாட்டியை சைட் அடிக்கிறேன் " 

 

என்றவனோ அவள் இடையில் கைப்போட்டு தன்னோடு ஒட்டி அமர வைத்துக் கொள்ள.

 

இதழோ அய்யோ என்னங்க நீங்க என்று சிணுங்கியவளோ , அதன் பின் அமைதியாகிவிட .

 

கதிரோ " டேய் போதும் நீ சைட் அடிச்சது , தாலியை கட்டுடா ஐய்யரு ஒரு மந்திரத்தையே ஆயிரம் முறை சொல்லி இருப்பாரு " என்று கூற .

 

செழியனோ அதன் பின் தாலியை வாங்கி ஆசையுடன் அவள் முகம் பார்த்தவனோ 

 

" தகிக்கும் தளிரே சம்மதமா " என்க.

 

இதழோ புன்னகையுடன் 

 

" இந்த தளிர் எப்பவும் தகிக்கும் , என் பாண்டியனுக்காக என்றவளோ அவன் கண்ணோடு கண் பார்த்து 

சம்மதம் கூற ......

 

அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு இனிதாக துவங்கியது அவர்களது மாங்கல்ய பந்தம் .

 

அதே மேடையில் கதிருக்கும் , தமிழுக்கும் திருமணம் முடிய .

 

 

அடுத்த ஒருமணி நேரம் கழித்து பெண்கள் புடைசூழ இதழை அழைத்து வந்து மேடையில் அமரவைக்க.

 

" எல்லாவற்றையும் சரி பார்த்த ஒரு முதிய வயது பாட்டியோ சரிப்பா எல்லாம் சரியா இருக்கு.

சுமங்கலி பொண்ணு வளையல் போட்டு தொடங்கி வைங்க " என்க .

 

செழியனோ " ஒரு நிமிஷம் முதல்ல நான் தான் வளையல் போடுவேன் "  

 

என்றபடி இதழின் கைபிடித்தவனோ அவன் வாங்கி வந்த வைரம் பதிக்கப்பட்ட தங்க வளையலை அணிவித்து தொடங்கி வைக்க . 

 

அதே போல் கதிரும் தமிழும் வைர வளையலை அணிவிக்க . சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்க . 

 

அதன் பின் ஒவ்வொருவராக வந்து வளையல் அணிவிக்க , இனிதாக நடந்து முடிந்தது வளைகாப்பு விழா .

 

அனைவரும் வீடு வந்து சேர மாலை ஆகிவிட்டது . இப்போது அனைவரும் ஒன்றாகத்தான் வசிக்கிறார்கள் . 

 

வீட்டின் உள் நுழையும் முன் அவர்களை தடுத்த வசந்தாவோ 

 

" தம்பி இருங்க ஆராத்தி எடுக்கனும் " என்றபடி ஒரு தட்டில் ஆழம் கரைத்துக் கொண்டு வர .

 

நால்வரையும் ஒன்றாக நிற்க வைத்து சுற்றியவரோ , நெற்றியில் திலகம் இட .

 

இப்போ உள்ள போங்க என்று வழி விட .

 

நால்வரும் ஹாலில் இருந்த சோபாவில் அமர .

 

இதழுக்கோ கால் இரண்டு நன்றாக வீங்கிவிட. 

 

செழியனோ மெதுவாக அவள் காலை பிடித்து விட .

 

தமிழோ " சரி மாமா எனக்கு ரொம்ப டயர்ட் நான் போய் தூங்குறேன் " ... என்றவளோ கதிருடன் தங்கள் அறையில் நுழைந்து கொள்ள .

 

இதழோ செழியனையே விழி எடுக்காமல் பார்க்க. 

 

செழியனோ வீட்டின் உள் நுழைந்த வசந்தாவை கண்டவனோ 

 

" அக்கா கொஞ்சம் பால் மட்டும் சூடு பண்ணி கொடுங்க என்றபடி அதை வாங்கி இதழுக்கு கொடுத்தவனோ " .... 

 

அவளை மெதுவாக அழைத்துக் கொண்டு தங்கள் அறை நோக்கி நடக்க.

 

இதழோ அப்படியே நின்றுவிட .

 

செழியனோ என்ன என்பது போல் பார்க்க. 

 

இதழோ இருக்கையை விரித்து தூக்கு என்பது போல் பார்க்க. 

 

செழியனோ புன்னகையுடன் குழந்தை போல் தூக்கி கொள்ள .

 

இதழோ கலகலவென சிரிப்புடன் ஆசையாக அவன் கன்னத்தில் முத்தமிட .

 

தொடரும் ....

 

எப்பா ஒரு வழியாக கல்யாணம் , வளைகாப்பு எல்லாம் முடிஞ்சது .

 

எல்லாரும் வாழ்த்து சொல்லிட்டு போங்க. நம்ம இரண்டு ஜோடிக்கும் ..😀😀😀

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top