தளிர் - 37
கதவை திறந்த இதழோ அங்கு நின்றிருந்த தமிழை கண்டவளோ , ஆச்சர்யத்துடன்
நீ .... தமிழ் என்று அவளை அணைத்துக்கொள்ள .
தமிழோ புன்னகையுடன் அணைத்துக்கொள்ள .
இதழோ
" என்னடி சொல்லாம கொல்லாம வந்துட்ட , சரி வா உள்ள "
என்று வீட்டின் உள் அழைத்து சென்றவளோ இருக்கையில் அமர வைக்க .
இதழோ
" அக்கா ஒரு காபி "
என்று கூறியவளோ தமிழின் கையை பற்றிக் கொண்டவளோ
" எப்படி தமிழ் இருக்க, சித்தி எப்படி இருக்காங்க " என்க .
தமிழோ அவள் வீட்டை விட்டு சென்றதன் பின் அனைத்தையும் கூறி முடிக்க .
இதழுக்கு கண்கள் இரண்டும் கலங்கித்தான் போனது .
தமிழோ ஆதரவாக இதழின் கைப்பற்றியவளோ
" விடுக்கா, அதான் செழியன் மாமா வந்துட்டார் இல்லை அப்புறம் என்ன " என்க .
இதழோ
" இல்லை தமிழ் , நான் என்ன பண்ணேன் ஏன் அவங்க இப்படி பண்ணனும் "
என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட .
அதே நேரம் அங்கு வந்த வசந்தாவோ
காபியை டேபிள் மீது வைத்துவிட்டு இதழை அழுவதை கண்டவளோ
இதழ்
" என்ன ஆச்சுமா ஏன் அழுகுற " என்று பதட்டத்துடன் வினவ .
இதழோ கண்ணீரை துடைத்துக்கொண்டவளோ
" அதுலாம் ஒன்னும் இல்ல அக்கா, நீங்க போங்க "
என்று அவரை அனுப்பி வைக்க.
தமிழோ " அக்கா அழாத அப்புறம் மாமா வந்தா என்னதான் பேசுவார் "
என்று அவள் மேடிட்ட வயிற்றை கண்டவளோ
முகம் மலர
" அக்கா என்கிட்ட சொல்லவே இல்லை "
என்று கேட்க.
இதழோ என்ன என்பது போல் குழப்பத்துடன் வினவ .
தமிழோ அவள் வயிற்றை சுட்டிக்காட்ட .
இதழோ புன்னகையுடன்
" ஆமாடி மூணு மாசம் " என்க .
தமிழோ இதழை மெல்ல அணைத்து விடுவித்தவளோ
வாழ்த்துக்கள் அக்கா என்க .
இதழோ சரி இந்தா காபியை குடி என்று கொடுக்க.
அதன் பின் இருவரும் சிரித்து பேசியபடி இருக்க.
தமிழோ என்னக்கா முகம் ஒரு மாதிரி இருக்கு என்க.
இதழோ
" தெரியலடி , மனசு ஒரு மாதிரி இருக்கு , அவர நினைச்சா தான் ரொம்ப ஒரு மாதிரி இருக்கு , ஒரே குழப்பமா இருக்கு "
என்க .
தமிழோ
" அக்கா உன் மனசு என்ன சொல்லுது அவரு உண்மையாவே அப்படி பண்ணி இருப்பார்ன்னு " ...
இதழோ இல்லை என்பது போல் தலையாட்ட.
தமிழோ
" அப்புறம் ஏன் இவ்ளோ குழப்பம் , உன் மனசு சொல்றத கேளு , அது எப்பவும் நமக்கு என்ன வேணும்கிறத சரியா சொல்லும் "
என்க .
இதழோ சிரிப்புடன் சரிங்க மேடம் , சரி இப்போ நீ எங்க தங்கி இருக்க , நான் பாரு என்கதைய பேசிட்டு உன்ன பத்தி யோசிக்கவே இல்லை , என்று கவலையுடன் கேட்க .
தமிழோ அனைத்தையும் கூறியவளோ தயக்கத்துடன்
அக்கா , நானும் கதிரும் லவ் பண்றோம் அக்கா என்று கூற .
இதழோ சரிதான் , அவரும் நல்ல டைப் தான் , இதனால உன் படிப்பு கெடக்கூடாது தமிழு என்று கண்டிப்புடன் கூற .
தமிழோ அதுலாம் கெடாது , சரிக்கா, நான் கிளம்புறேன் என்றவளோ கிளம்பிவிட .
கள்வன் கண்டுவிடுவான் என தன் காதலியான பூமியை அந்த கள்வனான இருளிடமே ஒளித்து வைத்த மற்றொரு கள்வன் சூரியனோ , தானும் அவ்விடம் விட்டு மறைந்து விட . மெல்ல இருளில் மறைந்து போனால் கள்வனின் காதலி .
சுற்றியும் அடர்ந்த மரங்கள் காற்றில் அசைந்தாட . அந்த கருநிற தார்சாலையில் மெதுவாக உருண்டு கொண்டிருந்தது அந்த நான்கு சக்கர வாகனம் .
அதனுள் இருந்த வித்யா பயத்துடன் சுற்றியும் பார்த்தபடி வர . கார் ஓட்டியபடி இருந்த டிரைவரோ
என்னம்மா பயந்து போய் இருக்கீங்களோ என்க .
வித்யாவோ இல்லண்ணா , என்று சமாளித்தவளோ தனது போனை எடுத்து கதிருக்கு அழைக்க .
அவனோ சொல்லு வித்யா கார் அனுப்பினேன் சரியா ஏறிட்டியா என்க .
வித்யாவோ ஹான் ஏறிட்டேன், எதுக்கு இவ்ளோ தூரம் , அதுவும் யாரும் இல்லாத இடத்துக்கு என்று சற்று பயம் கலந்த குரலில் கேட்க .
கதிரோ ஏய் வித்யா எதுக்கு இப்போ இப்படி பயப்படுறா இங்க யாரும் வரமாட்டாங்க , எல்லாம் உன் பாதுக்காப்புக்கு தான் என்று அவளுடன் பேசிக்கொண்டிருக்க .
வித்யாவோ இருந்தாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு என்றபடி ஒரு கேட்டை தாண்டி கார் உள் நுழைய .
வித்யாவோ நான் வந்துட்டேன் கதிர் என்க .
கதிரோ அப்படியா சரி வா என்க .
வித்யாவோ இப்போ கூட நீ வந்து கூப்பிட மாட்டியா என்று சிணுங்களுடன் கேட்க .
கதிரோ அதான் இவ்ளோ தூரம் வந்துட்டே இல்லை அப்புறம் என்ன வா நான் உள்ள தான் இருக்கேன் என்று கூற.
வித்யாவோ சரி என்று அந்த வீட்டை ஒருகணம் சுற்றி பார்க்க. சுற்றியும் காடு , ஆள் அரவமற்ற பகுதி , அதன் மத்தியில் பங்களா அமைப்பில் வீடு .
வித்யாவோ இந்த இடத்த பாக்கவே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு என்று நடந்து சென்றவளோ கதவின் அருகில் நிற்க .
அதே கதவும் திறந்து கொள்ள .
வித்யாவோ மெதுவாக வீட்டின் உள் நுழைய . வீட்டில் யாரும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்க .
வித்யாவோ கதிருக்கு போனில் அழைக்க .
அவனோ ஒரு நக்கல் சிரிப்புடன் கிளி வந்துடுச்சு என்று சுற்றி இருந்த நண்பர்களை பார்த்து கூறியவனோ அப்போ முதல்ல நான் போய் முடிச்சுட்டு உங்கள கூப்பிடுறேன் என்று போனை பேசியபடி நடக்க.
வித்யாவோ கதிர் எங்க இருக்க என்று சற்று பயத்துடன் வினவ .
கதிரோ கொஞ்சம் திரும்பி பார் என்க .
திரும்பி பார்த்த வித்யாவோ அங்கு போனுடன் நின்ற நபரை கண்டவளோ
நீங்க யாரு என்க .
அவனோ ஒரு சிரிப்புடன் நான் தான் கதிர் .
வித்யாவோ நீ கதிர் இல்லை , நீ வேற யாரோ என்று பயந்தவளோ
" கதிர் கதிர் கதிர் " என்று கத்தி அழைக்க .
அவனோ " ஹாஹாஹாஹா.....
என்று சிரித்தவனோ
" நான் தான் கதிர் வேணா இப்போ பாரு
என்று அவள் போனிற்கு அழைக்க .
வித்யாவோ அழைப்பை பார்க்க. அவனோ எடுத்து பேசு என்க .
அவளோ நடுக்கத்துடன் போனை காதில் வைக்க .
" ஹலோ வித்யா " என்க .
வித்யாவோ அதிர்ச்சியுடன் நடுங்கி போய் நிற்க .
அவனோ " என்னடா facebook ல வேற போட்டோ இருந்ததே , இங்க வேற ஒருத்தன் இருக்கானே ...
அது எல்லாம் பொய் , பொண்ணுங்கள சிக்க வைக்க நான் யூஸ் பண்ற ஒரு டெக்னிக் , அழகான போட்டோ இருந்தா தான வருவீங்க , அதுனால போட்டோ , அப்புறம் கதிர் பேர் எல்லாம் நாங்க மீனுக்கு போடுற தூண்டில் . அந்த மாதிரி போட்டோ பார்த்து ஏமாந்து போய் சிக்கன மீனுங்க ஏராளம் , தாராளம் , அது போலத்தான் இப்போ நீ மாட்டி இருக்க "
. என்றபடி அவள் அருகில் வந்தவனோ அவள் தோள் மீது கை வைக்க .
வித்யாவோ
ச்சீசீசீ கைய எடுடா நாயே "
என்று அவன் கையை ஓங்கி தள்ளியவளோ .
" உனக்கு அசிங்கமா இல்ல , இப்படி பொண்ணுங்கள ஏமாத்திரியே "
என்று கண்களில் வழியும் கண்ணீருடன் கேட்க .
அவனோ
" ஆமாடி அப்படிதான் பண்ணுவேன் , நீ என்ன பண்ணிட முடியும் , இப்போ வா நாம போய் கொஞ்சம் விளையாடலாம் "
என்று அவள் கையை பிடிக்க.
வித்யாவோ விடுடா , விடுடா என்றுவளோ அவனிடம் இருந்து தப்பித்து கதவை நோக்கி ஓடியவளோ கதவை திறக்க பார்க்க. அதுவோ திறக்காமல் இருக்க.
அவனோ
" ஏன்டி இவ்ளோ பண்ண நான் கதவை பூட்டாம இருப்பேனா , நீ எப்ப உள்ள வந்தயோ அப்பவே அது லாக் ஆகிடுச்சு , இனி நீ எங்கயும் தப்பிக் முடியாது என்று கூறியவனோ "
அவள் அருகில் நெருங்கி வர .
வித்யா
" தயவு செஞ்சு என்னை விட்ரு , என்னை எதுவும் பண்ணிடாத "
என்று அழுகையுடன் அவனிடம் கெஞ்ச .
அவனோ
" இப்போ கெஞ்சி என்ன பண்றது , ஆமா உனக்கு எல்லாம் அறிவே இல்லையா , என்னை இதுக்கு முன்னால பார்த்ததும் கிடையாது , வெறும் போன்ல மட்டும் தான் பேசி இருக்கோம் , எதை நம்பி இப்போ நான் கூப்பிட்ட இடத்துக்கு வந்த , ஒருத்தன் யாரு என்ன , எப்படி தெரியாம ஆசையா இரண்டு வார்த்தை பேசுனா அவன நம்பிடுவியா , நம்பி வந்துருவியா "
என்றபடி அவள் கையை பிடித்தவனோ தரதரவென மாடிக்கு இழுத்து செல்ல .
வித்யா
" விடு விடு , என்னை விடு ," என்று
அவன் கையில் இருந்து தன் கையை விடுவிக்க பார்க்க.
அவனோ
" விடுறதக்கா உன்னை கூட்டிட்டு வந்தேன்"
என்று அவன் நண்பர்கள் இருந்த அறைக்குள் தள்ள .
அவர்களோ போதை வெறியில் அறையில் விழுந்த வித்யாவை சதை தின்னும் மிருகம் போல் அவளை பார்க்க.
சுற்றி இருந்தவர்களை கண்ட வித்யாவிற்கோ அனைத்தும் முடிந்த உணர்வு , இனி என்ன செய்தாலும் தன்னால் தப்பிக் முடியாது என்று நினைத்தவளோ .
தன் முன் நின்ற நபர்களை கண்டவளோ
"கை கூப்பி தயவு செஞ்சு என்னை விட்ருங்க " ...
என்று அழகையுடன் கதற .
அவள் கதறைலை கேட்க அது எல்லாம் மனிதர்களாக இருந்தால் தானே , அங்கு இருப்பது எல்லாம் சதை வெறி பிடித்த மிருகங்கள் அல்லவா .
" அட ஏன்மா இப்படி அழுகுற , பெண் குலம் அழுதா என் மனசு தாங்காது "
என்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவனோ அவள் கன்னம் தொட .
வித்யாவோ அழுகையுடன் அவன் கை தன்னில் படாமல் விலகிச் சென்றவளோ
" அண்ணா , அண்ணா தயவு செஞ்சு விட்ருங்க , உங்க தங்கச்சி மாதிரி நினைச்சு விட்ருங்க அண்ணா "
என்று கைகூப்பியவண்ணம் கதறி அழுக .
ஒருவனோ
" டேய் சும்மா பொண்ணு வெடக்கோழி மாதிரி இருக்குடா"
என்றவனோ அவள் அணிந்து இருந்த சுடிதார் சாலை பட்டென இழுத்துவிட .
அவளோ
" ஓஓஓஓஓஓவென கதறியவளோ அய்யோ வேண்டாம் , விட்ருங்க , அய்யோ வேண்டாம் "
வீடே அதிர கத்த .
ஒருவனோ
" அட என்னடா இப்படி கத்துது , வாய மூடுடா "
என்று அவள் கன்னத்தில் ஓங்கி ஒன்று கொடுக்க . அவளது உதடோ அடித்ததில் இரத்தம் கசிய
" அண்ணா வேண்டாம் அண்ணா , விட்ருங்க அண்ணா " என்று கண்ணீடன் கெஞ்ச .
ஒருவனோ அவள் காலை மிதிக்க .
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று அலற.
" டேய் கையையும் காலையும் கட்டு போடுறா " என்க .
வித்யாவோ மறுப்பாக கையையும் , காலையும் உதறியவளோ அவர்களிடம் இருந்து தப்பிக் போராட .
அவர்களோ அவளை தடுக்க பார்க்க.
வித்யாவோ அனைவரையும் ஓங்கி தள்ளிவிட்டு அங்கிருந்த வெளியில் ஓடிச்சென்று திறந்து இருந்த ஜன்னல் அருகே சென்றவளோ பட்டென்று குதித்து விட .
தொடரும் ...
ஏன்மா writer எங்கள எப்பவும் பயத்திலேயே , இல்லை குழப்பத்தில வச்சிருக்கணும் அதுதான நீங்க கேட்கிறது .
அதேதான் மக்களே 😀😀😀
Follow பண்ணிட்டு படிங்கப்பா .
