தளிர் - 36
அன்று எப்போதும் போல் குளித்து முடித்து அலுவலகம் கிளம்பி செல்லத் தயாராகினால் வித்யா . அவள் தங்கி இருப்பது ஒரு தனியார் விடுதியில் . தனது ஆடையை சரி செய்தபடி ரூமை பூட்டிவிட்டு வெளியில் வர . அவளது மனமோ தவியாய் தவித்து தான் போனது . அவளது போனை பார்த்தபடி நடக்க.
அப்போது அவளது காதலன் கதிர் இடம் இருந்து அழைப்பு வர . முகம் மலர அதை எடுத்து காதுக்கு கொடுத்தவளோ
" என்ன கதிர் ஏன் இப்படி பண்ற , நீ இல்லன்னா நான் இல்லன்னு தெரியும் இல்லை , அப்புறம் ஏன் இப்படி எங்கிட்ட பேசாம போற "
என்று தவிப்புடன் கேட்க .
அவனோ
" பின்ன இவ்ளோ நாள் தான் facebook ல மட்டுமே பேசிட்டு இருந்தோம் இப்போ தான் நீ சென்னை வந்துட்ட இல்லை அப்புறம் ஏன் என்ன பார்க்க வரமாடன்னா எப்படி வித்யா "
என்று குரலோ சற்று வருத்தத்துடன் வர .
அவன் வருத்தத்தில் உருகிய வித்யாவோ
" அதை தவிர வேற எதாவது கேளேன் , எங்க ஹாஸ்ட்டல் ரொம்ப strict , நீ வேற என்னோட நைட் டிரைவ் வர சொல்ற " ...
என்று தனது அலுவலகம் செல்லும் பேருந்திற்காக காத்திருக்க .
கதிரோ
" பிளிஸ் வித்யா , பிளிஸ் வித்யா என்னக்கா வாடி "
என்று கெஞ்சி , அவளை கொஞ்சி ஒரு வழியாக சம்மத்திக்க வைக்க .
அவளோ
" சரி சரி வரேன் , இந்த வாரம் கடைசி நாள் போகலாம் "
என்றபடி அவள் பேருந்தில் ஏறி அமர்ந்துவிட . அதன் பின் என்ன அவள் அலுவலகம் போகும் வரை தங்கள் காதல் பாசை பேச .
அவள்
" அலுவலகம் வந்து விட சரி அப்புறம் பேசுறேன் "
என்று போனை வைத்துவிட.
அங்கு போனை வைத்தவனோ தன்னையே சுற்றி ஆவலாக பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களை நோக்கி கட்டை விரலை தூக்கி காட்ட .
அவர்களோ " ஹேய் "
என்று உற்சாக குரல் எழுப்ப .
அவனது நண்பர்களோ
" கதிர் "
என்று கோரசாக அனைவரும் அழைக்க
அவனோ
" ஆமா நான் தான் "
என்று நக்கலாக கேலியுடன் வினவ .
அவர்களோ
" ஆமா நீ கதிர் தான் , கதிரே தான் "
என்று இழுவையுடன் கோரசாக மீண்டும் சொன்னவர்களோ கேலியுடன் கொள்ளென சிரித்து ஒருவர் மாற்றி ஒருவர் கைகளில் அடித்துக் கொள்ள .
அதில் இருந்த
" ஒருவனோ அப்போ இந்த வாரம் செம என்ஜாய் மெண்ட தான் " என்க .
மற்றொரு நண்பனோ
" அப்போ இந்த வாரம் சரக்கு வேணும் ல , நான் நம்ம ஆளுகிட்ட போன் பண்ணி சொல்லிட்டு வரேன் "
என்று வெளியேறிவிட .
அவனோ
" ஆமா ரொம்ப நாள் கழிச்சு ஒரு பொண்ணு தொக்கா மாட்டி இருக்குல்ல அப்போ வச்சு செய்ய வேண்டியதுதான் "
சரி எல்லாம் ரெடி பண்ணிடுங்க , என்ன பண்ணனும் தெரியும் ல "
என்றவன் கண்களிலோ அவ்வளவு பெண் சதை வெறி .
" கடைசியா கிடைச்ச பொண்ணுங்களயே அந்த ரூபா தான்டா நல்லா இருந்தா "
என்று ஒரு மனித மிருகம் பச்சை பச்சையாக வர்ணிக்க .
சுற்றி இருந்த கேடு கெட்ட ஜென்மங்களும் அதை ரசித்து கேட்டபடி இருக்க . அதே நேரம் உள் நுழைந்த மற்றொரு கேடுகெட்ட நண்பனோ அவர்கள் கூட்டணியில் இணைந்து கொள்ள .
வெளியில் போன் பேசிவிட்டு வந்தவனோ
" ஆமா இவ்ளோ நாள் நீ எங்கடா போன "
என்று அவன் அருகில் அமர.
அவனோ
" வேற எங்க நமக்கு என்ன தேவையோ அதை வாங்கத்தான் "
என்று தன் கையில் இருந்த போதை மாத்திரை நீட்ட .
அதை கண்ட அனைவர் கண்களும் பளிச்சென மின்ன , அதை ஆளுக்கொன்றாக எடுத்து கொள்ள .
அனைவரும் போதையில் உழன்று கொண்டிருந்தனர் .
அன்று குளித்து முடித்த தலையை துவட்டிக்கொண்டிருந்த இதழோ ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த தோட்டத்தை பார்க்க . அவளது கண்களோ ஆச்சரியத்தில் விரிந்து கொண்டது .
முகமோ புன்னகையில் பூவாக மலர்ந்து விட . வேக வேகமாக நடந்து சென்றவளோ வாசற் படி தாண்டு நேரம் கால் லேசாக தடுக்கி விட .
இதழோ அம்மா என்று கீழே விழும் முன் ஒரு வலிய கரம் அவளை இடையோடு தாங்கி பிடித்துக் கொள்ள .
இதழுக்கு தான் கீழ் விழவில்லை என்பது உணர்ந்தவளோ மெதுவாக கண்களை திறந்து பார்க்க.
செழியனோ அவளை முறைத்தபடி நின்றிருக்க .
இதழுக்கோ அப்போதும் பயம் தெளியாமல் இருக்க .
செழியனோ அவள் கைப்பிடித்து நேராக நிற்க வைத்தவனோ .
" எங்கடி ஓடுற , ஏன் இவ்ளோ அவசரம் "
என்று கடிந்து கொள்ள .
இதழோ அது அது என்று இன்னும் பயம் தெளியாமல் தடுமாற . அவள் நெஞ்சோ இன்னும் படபடவென அடித்துக் கொண்டிருந்தது . இப்போது அவன் மட்டும் வரவில்லை என்றால் என்னவாகியிருக்கும் என்று நினைக்கவே அவளுக்கு உடலோ நடுங்கித்தான் போனது . தானாக வயிற்றில் கைவைத்துக்கொள்ள .
அவள் பயந்த முகத்தை கண்ட செழியனோ அங்கிருந்த இருக்கையில் மெதுவாக அமர செய்தவனோ
வசந்தா அக்கா என்று அவரை அழைத்து தண்ணீர் கொண்டு வரச் செய்ய .
அவரோ தண்ணீரை கொண்டு வந்து கொடுக்க .
இதழின் கையில் அதை கொடுக்க . அவளோ இன்னும் முகம் தெளியாமல் இருக்க .
செழியனோ
" ஏய் தண்ணிய குடி , அதான் நான் வந்துட்டேன் இல்லை ,"
என்று பயத்தில் வியர்த்த முகத்தை தன் கைகொண்டு துடைத்து விட .
இதழோ அவன் கையை இறுக பற்றிக்கொண்டவளோ
பயந்துட்டேன் ,என்றவளோ மெதுவாக தண்ணீரை குடிக்க . சிறிது நேரம் இருவரும் அமைதியாக அமர்ந்து இருக்க .
செழியனோ
" ஆமா இப்போ ஏன் இவ்ளோ அவசரமா ஓடி வந்த "
என்று அவளை இயல்பாக்கும் பொருட்டு கேட்க .
அதன் பின்னே இதழுக்கு தான் ஏன் ஓடி வந்தோம் என்பது நினைவுக்கு வர .
புன்னகையுடன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள பார்க்க.
செழியனோ
" இப்ப எங்கடி போற " என்று கடிந்து
கொள்ள .
அவளோ இருங்க என்று நடந்து சென்றவளோ தோட்டத்தின் மத்தியில் இரு மீன்கள் முத்தமிடுவது போல் இருந்த அழகிய செயற்கை நீருற்றை கடந்து சென்றவளோ அங்கு குடைபோல் வளைந்த மல்லிகை பந்தல் .
அதனடியில் மர ஊஞ்சல் ஒன்றிருக்க . அதன் அருகில் சென்றவளோ ஆசையாக அதை வருடிவளோ அதில் மெதுவாக அமர்ந்து கொள்ள .
செழியனோ ஏன்டி இதுக்குதான் இவ்ளோ அவசரமா வந்தியா முகமோ கோவத்தில் கடுகடுவென மாற .
அவனுக்கும் ஒருகணம் தூக்கி வாரிப்போட்டுவிட்டது அல்லவா . அதன் வெளிப்பாடே இந்த கோவம் .
அவளோ அசட்டு சிரிப்புடன் தலையை மேலும் கீழும் ஆட்ட .
மூச்சை இழுத்து ஊப் என்று ஊதியவனோ இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியபடி அங்கிருந்து வீட்டின் உள் நுழைய .
இதழோ போகும் அவனையே பார்த்தபடி இருக்க .
அன்றைய தினத்திற்கு பிறகு அவளுடன் பேசுவான் ஆனால் எப்போதும் போல் பேசுவான் என்றால் அது கிடையாது முன்பு இருந்த ஒட்டுதல் இப்போது இல்லை , கேட்ட கேள்விகளுக்கு அவனிடம் இருந்து பதில் வரும் , அவளுக்கு தேவையானது அனைத்தும் அவள் கேட்கும் முன் வந்து சேர்ந்துவிடும் , வாரம் ஒரு முறை அவள் அண்ணனை பார்க்க அழைத்து செல்வான் . இதழும் அண்ணனிடம் ஒன்று விடாமல் அனைத்தையும் கூறிவிட்டு தவிப்புடன் அவன் முகம் பார்க்க.
ஆனந்தனோ
" உன் விருப்பம் என்னவோ அதை செய் , நான் அதுல தலையிட மாட்டேன் , ஆனா எந்த முடிவு எடுத்தாலும் யோசிச்சு முடிவு எடு , நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உன் கூட இருப்பேன் "
என்று அவன் முடித்து விட .
அதன் பின்னே சற்று ஆசுவாசம் அடைந்தால் .
இங்கு வீட்டின் உள் நுழைந்த செழியனோ
" அக்கா அவ தோட்டத்துல இருக்கா , நீங்க கொஞ்சம் அங்க போங்க "
என்று அவரை துணைக்கு அனுப்பி வைக்க .
அவரோ ஒரு மென் புன்னகையுடன் கையில் ஒரு பழக்கலவையுடன் தோட்டம் நோக்கி நடக்க .
இதழோ மெதுவாக ஊஞ்சலில் ஆடியபடி இருக்க .
அவள் கையில் தான் கொண்டு வந்த பழக்கலவையை கொடுத்தவரோ . மல்லிகை பந்தலில் இருந்து பூக்களை பறிக்க.
அவரோ
" தம்பிக்கு உன் மேல ரொம்ப பாசம் அதிகம் ம்மா "
என்று சிரிப்புடன் கூற.
அவர் கூறியதை கேட்ட இதழின் முகமோ செவ்வானத்தின் நிறத்தை தத்தெடுத்துக்கொள்ள .
அவரோ
" அட என்ன இதழு அவர் பேர் சொன்னாவே இப்படி சிவந்து போற .
இதழோ போங்க அக்கா என்று வெட்கி சிவந்த தன் முகத்தை மறைக்க பெரும்பாடு பட .
அவரோ
" சரிதான் இப்படி ஒரு மனுசன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் , அதே போல அவரும் தான் "
என்றபடி அவளை நெட்டி முறிக்க .
இதழோ புன்னகையுடன் அமர்ந்து இருக்க .
இங்கு அறையின் உள் நுழைந்த செழியனின் போன் அடிக்க . அதை எடுத்து காதுக்கு கொடுக்க .
" ஹான் சொல்லு கதிர் என்ன ஆச்சு"
என்க .
கதிரோ
" இன்னைக்கு குட்டி வேட்டை உண்டு "
என்று அட்டகாசமாக புன்னகை செய்ய .
செழியனின் முகத்திலும் அதே புன்னகை இழையோட .
" அப்போ இன்னைக்கு சரியான வேட்டைன்னு சொல்லு "
என்றபடி போனை வைத்தவன் முகத்திலோ அவ்வளவு அழுத்தம் குடிக்கொண்டது .
செழியனோ அலுவலகம் கிளம்பி கீழே வர . அப்போதுதான் இதழும் வீட்டின் உள் நுழைய .
அவனோ வாசல் நோக்கி நடக்க . அவன் கைப்பற்றியவளோ சாப்பிட்டீங்களா என்று கேட்க.
அவள் கையை விலக்கி விட்டவனோ நான் ஆபிஸ்ல சாப்பிட்டுக்கிறேன் என்று அவளை கடந்து சென்றுவிட.
இதழுக்குத்தான் ஒரு மாதிரி ஆகிவிட. அதன் பின் வீட்டின் உள் நுழைந்தவளோ எப்போதும் போல் தனது அறையில் நுழைந்து கொள்ள.
சிறிது நேரம் தூங்கி எழுந்த இதழோ மதிய நேரம் சாப்பிட வர .
டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க .
வசந்தாவோ ம்மா இன்னும் கொஞ்சம் சாப்பிடுமா என்று அவள் தட்டில் கொஞ்சம் காய்கறிகளை சேர்த்து வைக்க .
இதழோ அக்கா போதும் , இதுக்கு மேல சாப்பிட்டா எல்லாம் வெளிய வந்திடும் என்று கையை கழுவியவளோ ஹாலில் சிறிது நேரம் அமர்ந்து கொள்ள .
அப்போது வீட்டின் காலிங் பெல் அடிக்க . வசந்தாவோ கிச்சனில் வேலையாக இருக்க .
இதழோ மெதுவாக எழுந்து சென்று கதவை திறக்க .
வாசலில் நின்ற நபரை கண்ட இதழோ அதிர்ச்சியுடன்
நீ .....ஆஆஆ என்க .
தொடரும் ...
இப்ப சொல்லுங்க செழியன் தான எல்லாத்துக்கும் காரணம் .
படிக்கிறவங்க follow பண்ணிட்டு படிங்கப்பா , updates சீக்கிரம் வரும் .
