Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 35

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 11 months ago
Messages: 40
Thread starter  

தளிர் - 35 

 

மாலை நேரம் சூரியன் மெல்ல மெல்ல மேற்கில் மறையத்தொடங்கிய நேரம் அது . 

 

கதிரும் , தமிழும் அந்த பார்க்கில் அமர்ந்து இருக்க .

 

தமிழோ அனைத்தையும் கூறி முடித்து கதிரை நிமிர்ந்து பார்க்க. 

 

அப்போ

 

" இதழுக்கு செழியனுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா ....?

 

என்று ஆச்சர்யத்துடன் வினவ.

 

தமிழோ

 

" நான் இப்போ எல்லாத்தையும் என்ன ஹிந்தியிலயா சொன்னேன் ஆமா ஆகிடுச்சு , அதோட அவங்க அண்ணனுக்கு வேலை செய்ற இடத்துல அடிபட்டு அவரும் ஹாஸ்பிட்டல்ல இருக்காரு . அதுக்கு அப்புறம் தான் எங்க வீட்டுக்கு வந்தது " 

 

என்று கூறி முடிக்க .

 

கதிரோ எதுவும் சொல்லாமல் ஏதோ சிந்தனையில் இருக்க .

 

அவனை கண்ட தமிழோ அவன் தோள் தொட .

 

அவளோ

 

" என்ன ஒரு மாதிரி இருக்கீங்க " 

 

என்று வினவ .

 

" இல்ல தமிழ் இதுல ஏதோ ஒன்னு மறைஞ்சு இருக்கு , செழியன் அப்படி பண்ண வாய்ப்பு குறைவு தான் "  

 

குழப்பத்துடன் வினவ .

 

தமிழோ

 

" பார்த்தீங்களா நீங்களே வாய்ப்பு குறைவு சொல்றீங்க , அதோட ஏற்கனவே அவருக்கு பெண்களோட தொடர்பு இருந்தது தான??

 

என்று கேள்வி எழுப்ப .

 

கதிரோ

 

" தொடர்பு இருந்தது தான் ஆனா அது அவனோட health க்காக இருந்தான் "  

 

என்க .

 

தமிழோ

 

" எல்லாம் சரிதான் ஆனா இருந்தார் தான , அப்போ ஏன் ரூபாவையும் அவர் யூஸ் பண்ணி இருக்க கூடாது " என்க .

 

கதிரோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க. 

 

அப்போது அவனது போன் அடிக்க .

 

அவனது நண்பன் ரகுவின் அழைப்பு . 

 

" சொல்லுடா ரகு எங்க இருக்க" 

 

என்று கேட்க .

 

ரகுவோ " டேய் நான் சென்னை வந்துட்டேன் ஏர்போர்ட் வந்து பிக் பண்ணு" 

என்க .

 

கதிரோ சரி வரேன் வை என்று வைத்தவனோ .

 

" சரி தமிழ் இதை நாம அப்புறம் பேசிக்கலாம் என் பிரண்ட் ரகு வந்திருக்கான் நான் போய் அவன கூட்டிட்டு வரேன் " 

 

என்றபடி அவன் கிளம்பி சென்று விட.  

 

---------------------------------------‐----------------‐--------

 

இதோ ஒரு வாரம் கடந்து விட்டது செழியனும் , இதழும் பேசியும் , பார்த்துக் கொண்டும் . 

 

இதழோ 

 

" இனி நான் இங்கு இருக்க மாட்டேன் " 

 

என்று கூற .

 

செழியனோ 

 

" என் குழந்தை பிறக்கிற வரைக்கும் இங்க தான் இருக்கனும் , அதுக்கு அப்புறம் நீ எங்க வேணா போ " என்று விட்டேத்தியாக கூற . 

 

இதழோ அப்போ என் அண்ணன் ? 

 

 

செழியனோ " இன்னும் ஆறு மாசம் அவன் ஹாஸ்பிட்டல் தான் இருப்பான் , அதுனால அதை பத்தி நீ வருத்தப்பட வேண்டாம்" ... . என்று முடித்து விட . 

 

அதன் பின் இருவரிடமும் பேச்சு வார்த்தை முற்றிலும் குறைந்து போனது . 

 

இதழோ அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருக்க . அவள் அறையை திறந்து உள் நுழைந்தவனோ 

 

" இனி நீ ஆபிஸ் வரவேண்டாம் " ... என்றவனது குரலோ சற்று கடுமையுடன் வர .

 

இதழோ

 

" நான் ஏன் வரக்கூடாது .... என்று கோபத்துடன் கேட்க. 

 

செழியனோ  

 

" என் குழந்தை பிறக்கற வரை நீ வரக்கூடாது " 

 

என்று சற்று கடுமையான குரலில் கூறியவனோ வெளியே சென்று விட .

 

இதழுக்குதான் ஒரு மாதிரி ஆகிவிட்டது . அப்போது குழந்தைக்காக மட்டும் தான் நான் வேண்டுமா ? என மனம் கேள்வி எழுப்ப . பின்னே நீ சொன்ன வார்த்தைக்கு இப்படிதான் பேசுவார் என்று மனம் அதற்கும் குடைபிடிக்க. 

 

அவளது நினைவோ அன்றைய தினத்தை நோக்கி நகர்ந்தது . 

 

அன்று மயங்கி சரிந்த இதழை தாங்கிய செழியனோ 

 

அவளையே விழிகளில் ஒரு வித அழுத்தத்துடன் பார்த்தவனோ பின் கீழே தூக்கிச் சென்று அவளுக்கான மருத்துவம் பார்க்க பட.

 

சிறிது நேரம் கழித்து கண்விழித்த இதழின் முன் அவளையே விழி எடுக்காமல் பார்த்தபடி அமர்ந்து இருந்த செழியனே தெரிந்தான் .

 

இதழோ படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள முயற்சிக்க.  

 

அவள் அருகில் வந்த செழியனோ கைப்பிடித்து நேராக அமர வைத்தவனோ . 

 

இருவரிடமும் சிறிது நேரம் மெளனமே ஆட்சி செய்தது . 

 

தன் குரலை செருமிய செழியனோ 

 

" எனக்கு இந்த குழந்தை கண்டிப்பா வேணும் , இதை அழிக்க உனக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது , அதோட நீ குழந்தையை பெத்துக் கொடுத்துட்டு நீ உன் வழிய பார்த்துக்க . அதையும் மீறி குழந்தையை அழிக்க வேற எதாவது பண்ண நீ வேற ஒருத்தனை பார்க்க வேண்டி வரும் " ...

 

என்று கோபம் கலந்த குரலில் கூறியவனோ அறையை விட்டு வெளியேற .

 

இதழுக்கோ அவனது குரல் மாற்றத்தில் சற்று பயம் ஏற்பட்டாலும் தன்னை சமாளித்துக் கொண்டவளோ 

 

" ஒரு நிமிஷம் ....

 

என்று கதவின் அருகில் சென்றவனை அழைக்க .

 

செழியனோ என்ன என்பது போல் அவளை பார்க்க. 

 

இதழோ

 

" உங்களுக்கு குற்ற உணர்வே இல்லையா , உங்களால ஒரு உயிர் போய் இருக்கே " 

 

என்றவளது குரலோ சற்று இயலாமையில் இருக்க .

 

செழியனோ அவளையே அழுத்தமாக பார்த்தவனோ. 

 

" எனக்கு அது இல்லை ....

 

என்று கதவை ஓங்கி அடித்துவிட்டு செல்ல .

 

இதழுக்கு அவன் அவ்வாறு கூறியதும் கண்களில் இருந்து கண்ணீர் வழிய . 

 

அதை துடைத்தவளோ சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருக்க.  

 

அப்போ உண்மையாவே அவரு தான் பண்ணி இருக்காரா , நான் சொன்ன எந்த ஒரு விஷயத்தையும் அவரு மறுத்து பேசவே இல்லையே அப்போ என் அக்கா சாவுக்கான காரணம் அவரு தானா என்று நினைக்க நினைக்க மனமோ ரணமாக வலிக்க . 

 

இதை எல்லாம் நினைத்த இதழின் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிய . அதை துடைத்த படி இருக்க . அப்போது அவளது அறையை தட்டும் சத்தம் கேட்க. 

 

கதவை திறந்தவளோ வாசலில் நின்று இருந்த நடுத்தர வயது வேலைக்கார பெண்ணான வசந்தாவை கண்டவளோ என்ன என்பது போல் பார்க்க. 

 

" அவரோ சாப்பாடு தயார் ஆகிடுச்சும்மா வாங்க சாப்பிடலாம் " 

 

என்றழைக்க .

 

இதழோ நான் வரேன் அக்கா நீங்க போங்க என்று அனுப்பி வைத்தவளோ 

சிறிது நேரத்தில் டேபிளில் வந்தமர .

 

அவளுக்கு முன் செழியனும் போனை பார்த்தபடி கையில் ஒரு காபியுடன் அமர்ந்து இருக்க . 

 

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு 

இருக்கையில் அமர்ந்தவளோ தட்டை திருப்பி வைக்க .

 

அவரோ அவளுக்கான சாப்பாட்டை வைக்க .

 

இதழோ இரண்டு வாய் தான் உள் போய் இருக்கும் அடுத்த நொடி குமட்டிக்கொண்டு வர . இதழோ எழுந்து அறை நோக்கி ஓட .

 

செழியனும் பதட்டத்துடன் அவள் பின்னோடு போக .

 

அவளோ பாத்ரூமில் அனைத்தையும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்க .

 

உள் நுழைந்தவனோ 

 

" என்னடி ஆச்சு " 

 

என்று அவள் முதுகை நீவிவிட . இதோ முற்றிலும் ஒரு வாரம் கடந்து இன்று தான் அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். மனதில் இருவருக்கும் ஆயிரம் இருந்தாலும் , காதல் என்றால் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்க மாட்டார்கள் . அதன் வெளிப்பாடு தான் இதோ இப்போது ஓடி வந்தது . 

 

இதழோ வயிற்றில் இருந்த அனைத்தையும் வாந்தியாக வெளியே தள்ளியவளோ அதன் பின்னே நிமிர்ந்தால் . 

 

இதழோ முடியல , சாப்பிட்டது எல்லாம் வந்திடுச்சு என்றவளுக்கோ நிற்க கூட முடியவில்லை . அவன் மீதே முல்லைக்கொடியாக துவண்டு விழ . 

 

அவளை தன் கையில் குழந்தைபோல் ஏந்திக் கொண்டு படுக்கையில் படுக்க வைத்தவனோ விலகி செல்ல பார்க்க. 

 

அவன் சட்டை நுனியை பிடித்தவளோ தவிப்பாக அவன் முகம் பார்க்க. 

 

செழியனோ என்ன என்பது போல் பார்க்க. 

 

இதழோ

 

  " பிளிஸ் என் கூட பேசுங்களேன் , எனக்கு ஒரு மாதிரி இருக்கு " 

 

குரலோ கலங்கி வர .

 

செழியனோ

 

" நீதான்டி என்ன பார்த்தா வெறுப்பா இருக்குன்னு , என் கூட பேச பிடிக்கல , வாழ பிடிக்கல , உன் குழந்தை வேண்டாம் சொன்ன " 

 

என்று அவள் முகத்தை பார்க்க. 

 

இதழோ " ஆமா சொன்னேன் தான் , அதுக்காக என் குழந்தையை நானே அழிப்பேனா, நான் ஒன்னும் அவ்வளவு அரக்கி இல்ல என்றவளுக்கோ கண்கள் கலங்கி வர ....

 

என்னால முடியல ஒரு பக்கம் நீங்க தப்பு செஞ்சு இருக்க மாட்டீங்க தோணுது , இன்னொரு பக்கம் பண்ணி இருப்பீஙகளோன்னு தோணுது நான் என்ன பண்ண , குழந்தை பிறக்கிற வரைக்கும் எதுவம் வேண்டாம் என்கூட எப்பவும் போல இருங்க " 

 

என்று அவன் கைப்பிடிக்க. 

 

செழியனோ எதுவும் சொல்லாமல் அவள் கண்ணீரை துடைத்தவனோ அருகில் அமர்ந்து கொள்ள .

 

இதழோ அவன் தோள் மீது சாய்ந்து கொள்ள . உச்சியில் அழுந்த முத்தமிட்டவனோ சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருக்க . அவளிடம் இருந்து சீரான மூச்சுக் காற்று வரவும் அவள் தூங்கி விட்டால் என்றுணர்ந்தவனோ மெதுவாக படுக்கையில் படுக்க வைக்க . அவளோ 

தூக்கத்திலேயே மீண்டும் அவன் சட்டையை பிடிக்க . செழியனின் இதழ்களில் தன்னை அறியாமல் ஒரு குறுநகை .இது எப்போதும் நடப்பது தான் என்பது போல் இருந்தது அந்த சிரிப்பு . பின் மெதுவாக அவள் கையை விலக்கி விட்டவனோ உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டு , போர்வையை போர்த்திவிட்டு மெதுவாக அறையை விட்டு வெளியேற .

 

வெளியல் வந்த செழியனோ அங்கு நின்ற வசந்தாவை கண்டவனோ 

 

" அக்கா அவ இப்போ தூங்குறா எழுந்ததுக்கு அப்புறம் , லைட்டா ஜீஸ் எதாவது கொடுங்க , அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு கொஞ்ச லைட்டா சாப்பாடு கொடுங்க , அப்புறம் டேபிளட் இருக்கும் போட சொல்லுங்க என்று ஒவ்வொரு கட்டளையாக சொல்லிக்கொண்டே அவன் வாசல் அருகே சென்றவனோ , திரும்பி அவரை பார்த்து கொஞ்சம் பார்த்துக்கோங்க அக்கா நான் வந்துடுறேன் " 

 

என்றபடி அவள் அறையை ஒரு பார்வை பார்த்தபடி இருக்க .

 

அவரோ சரி தம்பி நான் பார்த்துக்கிறேன் என்க. 

 

அவனும் ஆமோதிப்பாக தலையாட்டியவனோ அலுவலகம் கிளம்பி செல்ல .

 

அலுவலகம் உள் நுழைந்தவனை வரவேற்றது கதிரும் , அவனது நண்பனுமான ரகுவும் .

 

" ரகுவோ என்னடா செழியா கல்யாணம் ஆகிடுச்சா " 

 

என்று சிரிப்புடன் அவன் தோள் மேல் கைப்போட .

 

செழியனோ அவன் கையை விலக்கி விட்டபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனோ 

 

" ஆமாடா ஆகிடுச்சு , ஆமா நீ எப்போ மும்பைல இருந்து வந்த " 

 

என்று கேட்க. 

 

ரகுவோ " நான் வந்து இரண்டு நாள் ஆச்சு , ஆமா இப்போ சார தான் எங்கயும் பார்க்க முடியலயே " 

 

என்று கிண்டலுடன் கூற. 

 

கதிரோ 

 

" அட ஏன்டா அவன் ஆபிஸ் வரதே ஏதோ வீட்ல போர் அடிச்சா வர மாதிரி தான் வரான் நீ வேற ஏன் " 

 

என்று கிண்டல் அடிக்க .

 

அதன் பின் நண்பர்களுக்கே உரித்தான கேலிப்பேச்சு பேசிக்கொண்டிருக்க . 

 

கதிரோ அப்புறம் உன் அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க என்று கதிர் கேட்க .

 

 

ரகுவோ " அவங்களுக்கு என்ன அமெரிக்கால ஜாலியா என்ஜாய் பண்றாங்க " 

 

என்று சலிப்புடன் கூற . 

 

கதிரோ  

 

" அதுல உனக்கு என்னடா கவலை " 

 

என்று கேட்க. 

 

ரகுவோ எந்த கவலையும் இல்லை என்றவனது போனை அடிக்க அதை எடுத்து பேசியபடி இருக்க . 

 

சரி நான் வரேன் என்று போனை வைத்தவனோ 

 

சரிடா நான் போய்ட்டு வரேன் , நைட் எங்கயாவது வெளிய போகலாம் என்று சென்றுவிட . 

 

அவன் ரகு , தங்கத்தட்டில் பிறந்து வளர்ந்தவன் , அப்பா , அம்மா இருவரும் தொழில் ஜாம்பவான்கள் , சொல்லவும் வேண்டுமா , பணத்தை பார்த்து பழகும் குணம் கொண்டவர்கள் மத்தியில் குணத்தை பார்த்து பழகும் குணம் கொண்டவன் . அதன் தொடக்கமே இவர்களது நட்பு . 

 

செழியனின் பார்வையில் ஒரு அழுத்தம் குடிக்கொண்டிருக்க . அதை கண்ட கதிரோ 

 

" என்னடா ஆச்சு " 

 

என்று தன்மையாக வினவ. 

 

" ஒன்றும் இல்லை " 

 

  என்றவனோ அன்றைய பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட.

 

தொடரும் ....

 

இப்போ அடுத்து என்ன நடக்கும் , ரூபாவ கொலை பண்ணது செழியன் தானோ 🤔🤔🤔🤔, சொல்லிட்டு போங்க

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top