தளிர் -33
இன்று செழியன் ஏதோ முக்கியமான வேலை இருப்பதால் அவளை மட்டும் காரில் அனுப்பி விட்டு அவன் முன்னதாக வேறு காரில் சென்று விட . இதழும் அலுவலகம் வந்து சேர . எப்போதும் போல் அன்றைய பணிகளும் துவங்கியது .
ஆனால் இதழின் நினைவுகளோ இரண்டு நாட்கள் முன் நடந்து சம்பவத்தில் நிலைகொண்டு இருந்தது .
அன்று இருவரும் சென்று நின்றது குழந்தைகள் காப்பகம். அதை கண்ட இதழோ ஆச்சர்யத்துடன் இங்க எதற்கு என்பது போல் அவனை பார்க்க.
செழியனோ எதுவும் சொல்லாமல் இறங்கி கொண்டவனோ .
அவள் பக்க கதவை திறந்து விட , இதழும் இறங்கி சுற்றியும் பார்க்க.
அவள் கை பிடித்தவனோ உள் அழைத்து செல்ல .
செழியனோ
" இது எங்களோட ஹோம் , இது மாதிரி இன்னும் இரண்டு ஹோம் இருக்கு , கதிர் அப்பா நடத்திட்டு வரார், நானும் இங்க தான் வளர்ந்தேன் "
என்று அங்கிருந்த குழந்தைகள் அறையில் நுழைய .
அங்கிருந்த பணியாளரோ
" அட வாங்க தம்பி என்ன திடீர்ன்னு வந்திருக்கீங்க "
என்று கேட்டபடி அவர்கள் அருகில் வர .
செழியனோ
" இல்லண்ணா சும்மா எல்லாம் எப்படி இருக்குன்னு ஒரு விசிட் பார்த்துட்டு போலாம் வந்தேன் . ஆமா இன்னும் ராமநாதன் சார் வரலையா ?
என்று கேட்டபடி நடக்க .
இதழோ அங்கிருந்த குழந்தைகளையே பார்த்தபடி இருக்க .
குழந்தைகளுக்கு வயது மூன்று அல்லது நான்கு வயது தான் இருக்கும் , சின்ன சிறு பிஞ்சுகள் ஓடியபடியும் , விளையாடியபடியும் இருக்க . அவள் அருகில் வந்த அங்கு வேலை செய்யும் பணிபெண்ணோ
" இந்த குழந்தைங்க எல்லாம் வேண்டாமுன்னு சொல்லி எங்க ஹோம் வாசல்ல போட்டுட்டு போனவங்கம்மா .....
என்று கூற .
இதழுக்கோ அதிர்ச்சி எப்படி இப்பூமுகத்தை பார்த்தும் விட்டுவிட்டு செல்ல மனது வருகிறது . ஒரு தோட்டத்தில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்கள் போலத்தான் அங்கு சுற்றி திரியும் குழந்தைகள் அனைவரும் தெரிந்தனர் .
அவரோ
" செழியன் தம்பி தான்மா எல்லாத்தையும் பார்த்துக்குது. இதுல நிறைய குழந்தைங்க அவர் மீட்டு கொண்டு வந்த குழந்தைகளும் கூட"
என்றுரைக்க.
இதழோ அவரா புரியாமல் அவளை பார்க்க.
அவரோ
" ஆமா மா போலீஸ் ஸ்டேஷன் , அப்புறம் கடத்தல் கும்பல் இப்படி நிறைய இடத்துல இருந்து வர குழந்தைங்க எல்லாம் தம்பி கிட்ட தான் கொண்டு வந்து விடுவாங்க " ....,
என்றபடி இருவரும் நடந்து அறையின் உள் நுழைய .
இதழோ புன்னகையுடன் ஒவ்வொரு குழந்தையுடன் பேசியபடியும் , சிரித்தபடியும் விளையாடிக் கொண்டிருக்க . சிறிது நேரத்தில் அனைத்தையும் சுற்றி பார்த்துவிட்டு அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்த செழியனோ இதழின் புன்னகை முகத்தை கண்டுவிட்டு சுவற்றில் சாய்ந்தபடி நின்று விட .
இதழோ குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறி அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்க.
செழியனோ புன்னகையுடன் அவள் அருகில் வர .
அவனை கண்ட இதழோ பட்டென எழுந்து கொள்ள .
செழியனோ ஏன் எழுந்துட்ட என்று மீண்டும் அவள் கைப்பிடித்து இருவரும் தரையில் அமர்ந்தபடி குழந்தைகளுடன் விளையாட .
செழியனின் இந்த முகம் இதழுக்கு புதிது , இப்படி குழந்தைகளுடன் விளையாடுவான் , ஏன் இப்படி சிரிப்பான் என்று கூட அவளுக்கு இன்று தானே தெரிகிறது . எப்போதும் அலுவலகத்தில் இருக்கும் போது கடுகடுவென்றே இருப்பான் . ஏதோ அவளிடம் மட்டுமே சற்று இறுக்கம் தளர்ந்து பேசுவான் இல்லையென்றால் படபட பட்டாசு தான் மற்றவர்களிடத்தில். ஆனால் இன்றோ அவனது முகம் முற்றிலும் மாறி உள்ளது அல்லவா .
அவனையே பார்த்தபடி இருக்க . செழியனோ அவள் முன் சொடக்கிட்டவனோ என்ன என்று கேட்க.
இதழோ இல்லை என்று தலையாட்டியவளோ அதன் பின் சிறிது நேரம் இருந்து விட்டு இருவரும் கிளம்பி அலுவலகம் சென்றனர் .
அதை எல்லாம் நினைத்த இதழின் மனமோ இவ்ளோ பண்ற இவரு அப்டி பண்ணி இருக்க வாய்ப்பு இருக்குமா என்ன என்று அவளுக்குள்ளாகவே கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருக்க .
அப்போது அங்கு வந்த கனகாவோ இதழ் என்றழைக்க .
அவளோ அவர் கூப்பிடுவதை கூட கவனியாமல் தன் சிந்தனையில் இருக்க .
அவரோ அவள் தோள் தொட்டு இதழ் என்றழைக்க.
இதழோ
" ஹான் சொல்லுங்க அக்கா " என்று
திடுக்கிட்டு அவரை பார்க்க.
அவரோ
" என்ன ஆச்சு கொஞ்ச நாளா எதையோ யோசிட்டும் , வேலையில் கவனம் இல்லாமலும் இருக்க "
என்று கேட்க.
இதழோ
" அதுலாம் ஒன்னும் இல்லக்கா , நீங்க சொல்லுங்க "
என்று சமாளிக்க .
கனகாவோ
" என்னுமோ சொல்ற , சரி இன்னைக்கு மெனு , செக் பண்ணு , அப்புறம் உன்கிட்ட ஒன்னு கேட்கனும் "
என்று தயங்கியபடி கேட்க.
இதழோ
" அதை சரிபார்த்தபடி சொல்லுங்க அக்கா " என்க .
அவரோ
" இல்லை நீ இப்போ எங்க தங்கி இருக்க ....
என்று தயக்கத்துடன் வினவ .
இதழோ அவரை நிமிர்ந்து பார்த்தவளோ
செழியன் வீட்டுல என்று பட்டென்று கூறிவிட.
கனகாவோ அடுத்து ஏதோ சொல்ல வர .
இதழோ
" அக்கா அதை பத்தி பேச வேண்டாம் , இந்தாங்க மெனு "
என்று அவள் வேலைக்கு தாவி விட .
அவரும் அதன் பின் அவளிடம் அதை பற்றி கேட்கவில்லை .
அதே போல் அவளது அலுவலகத்தில் அவளை பற்றி பேசுவதும் , அவளை முன் வி்ட்டு பின்னாக கிண்டல் அடித்து சிரிப்பதும் என்று அனைத்தையும் அவளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள் . அவளும் என்ன செய்து விட முடியும் . மனது ரணமாக வலித்தாலும் அவனுக்கு கொடுத்த வலியை விட இது ஒன்று பெரிது அல்ல தன்னையே சமாதானப்படுத்திக் கொள்கிறாள். இது எப்படியே அரசல் புரசலாக அகல்யாவின் காதிற்கும் சென்றது .
அன்று கேண்டீனில் வேலை செய்து கொண்டிருந்த இதழை அழைத்த கனகாவோ அங்கு அமர்ந்திருந்த அகல்யாவை கண் காட்ட
அகல்யாவை நோக்கி சென்றவளோ
" சொல்லுங்க மேடம் ஏதோ பேசனும் சொன்னீங்களா "
என்று அவள் முன்னிருந்த இருக்கையில் அமர.
அகல்யாவோ இதழை மேல் இருந்து கீழாக ஒரு திமிர் பார்வை பார்க்க.
இதழோ இவ என்ன இப்படி பார்க்கிறா என்று மனதில் நினைக்க .
அகல்யாவோ
" நீதான் செழியன் கூட இருக்க பொண்ணா "
என்று திமிராக கேள்வி வர .
இதழோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க .
அவளோ
" ஆமா அவர் கூட இப்படி சுத்திட்டு இருக்கியே உனக்கு அசிங்கமா தெரியல "
என்று இதழை அருவருப்பு பார்வை பார்க்க.
இதழோ
" மேடம் நீங்க ரொம்ப அதிகமா பேசுறீங்க , உங்களுக்கு என்ன வேணுமோ அதை எல்லாத்தையும் அவர்கிட்ட கேட்டுக்கோங்க "
என்றபடி இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள பார்க்க.
அகல்யாவோ ஏய் என்று அழைக்க .
இதழோ என்ன என்பது போல் அவளை பார்க்க.
" பேசிட்டு இருக்கேன்ல பெரிய இவ மாதிரி எழுந்து போற ," என்று அதட்ட .
அவள் அதட்டலில் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவர்களையே பார்க்க.
இதழோ " மேடம் மெதுவாக பேசுங்க "
என்று சுற்றி இருந்தவர்களை பார்த்தபடி கூற .
அகல்யாவோ அதை எல்லாம் எங்கு கண்டால் , தன்னை அவன் வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் இவள் என்று அறியும் போது வந்த கோபமே இது அனைத்தும் , அப்படி என்ன என்னிடம் இல்லாதது இவளிடம் இருக்கிறது என்ற எண்ணத்தில் தான் அவள் இங்கு வந்து இதோ இப்படி பேசிக்கொண்டிருப்பது .
அகல்யாவோ " ஏய் நான் அப்படி தான் பேசுவேன் என்றபடி , ஆமா ஏதோ உனக்கு கல்யாணம் கூட ஆகிடுச்சாம் , அப்டி இருந்தும் புருஷன் இருக்கும் போது இப்படி ஒரு பொழப்பு நடத்த உனக்கு வெட்கமா இல்லை .....
ஆமா உன் புருஷனுக்கு இது தெரியுமா , இல்லை அவனும் இதுக்கு உடந்தையா "....
என்று நக்கலுடன் அருவருப்பாக வினவ.
சுற்றி இருந்தவர்களுக்கோ அதிர்ச்சி இந்த செய்தி அனைத்தும் புதிது , இதழை அனைவரும் திருமணம் ஆகாத பெண் என்று நினைத்திருக்க . ஆனால் அகல்யாவோ அனைத்தையும் உடைத்து கொண்டிருக்க .
அனைவரும் அவர்களையே காட்சி பொருள் போல் விழி அகலாமல் பார்க்க.
இதழோ
" மேடம் உங்க லிமிட் தாண்டி போறீங்க , அது என்னோட பர்சனல் " ... என்று அவளும் தன்னை மீறி கலங்கிய விழிகளை கட்டுபடுத்தியபடி கூற .
அகல்யாவோ " ஆமா அப்படி தான் பேசுவன் " என்று முறை தவறி என்னென்னுமோ வார்த்தைகள் கொண்டு வதைக்க.
இதழுக்கு ஒன்றும் சொல்ல முடியா நிலை சுற்றி இருந்த அனைவரும் அவளை அருவருப்பான பார்வை பார்ப்பது போல் இருக்க . இதோ இப்போது கூட இவளை சமாளிப்பால் தான் . ஆனால் மூலையோ அவள் பேசும் வார்த்தைகளால் வேலை நிறுத்தம் செய்துவிட . இவ்வளவு நாட்கள் அனைத்தையும் கடந்து வந்தால் தான் ஆனால் எவ்வளவு தான் அவளும் தாங்க முடுயும் .அவளது உடலோ நடுக்கம் எடுக்க . அவர்கள் பார்வையை தாங்கி கொள்ள முடியாமல் அங்கிருந்து அழுதபடி வெளியில் ஓடி வர .
அப்போது தான் வெளியில் சென்று வந்த செழியனோ போன் பேசியபடி கேன்டீன் நோக்கி நடந்து வர .
இதழோ அழுகையுடன் ஓடி வருவதை கண்டவனோ தன் அருகில் வரும் போது அவள் கைப்பற்றி கொள்ள .
இதழோ திடீரென யார் கைப்பிடித்து இழுப்பதை கண்டு திடுக்கிட்டு தலை நிமிர்ந்து பார்க்க.
செழியனோ போனை கட் பண்ணி வைத்தவனோ
" என்னடி ஆச்சு , எதுக்கு அழுகுற "
என்று புருவம் இடுங்க கேட்டவனோ கண்களை துடைக்க வர .
இதழோ அழுதபடி அவனை இறுக அணைத்துக் கொள்ள .
செழியனோ எதுவும் புரியாமல் அவளை அணைத்தவனோ
" என்னம்மா , ஏன் அழுகுற "
என்று தன்மையாக கேட்க.
சட்டென தன்னிலை வந்த இதழோ அவனிடம் இருந்து விலிகியவளோ கையை உருவ பார்க்க. அவள் எதுவும் சொல்லாமல் அவள் பாட்டிற்கு கையை பிரிப்பதில் குறியாக இருப்பதை கண்ட
செழியனோ
" ஏய் இப்ப என்னடி ஆச்சு" , என்று கோபத்தில் ஒரு அதட்டு அதட்ட .
அவன் அதட்டலில் ஒரு கணம் உடல் தூக்கிவாரிப்போட . அவளோ எதுவும் சொல்லாமல் மீண்டும் அமைதியாக தலையை குனிந்து கொள்ள .
அப்போது அவள் அழுதபடி ஓடிவருவதை கண்ட கனகாவோ தேடி கொண்டு வர .
செழியன் அருகில் நின்ற இதழை தயக்கத்துடன் அவர் பார்க்க .
செழியனோ
" கனகா என்ன ஆச்சு , ஏன் இப்படி அழுகுறா ? ...
என்று அவரிடமும் கடுமையான குரலில் கேட்க.
அவரோ " சார் அது அது
என்று தடுமாற .
அவனோ
" இப்போ சொல்லப்போறீங்களா இல்லையா " ....
என்க .
அவரோ நடந்ததை அப்படியே கூறி விட .
செழியனோ இதழை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தபடி உள் அழைத்து செல்ல .
இதழோ
" பிளிஸ் எதுவும் வேண்டாம் " .... என்று அவன் கையை பிடிக்க .
அவனோ
" முதல்ல வாடி "
என்று கோபத்துடன் இழுத்து செல்ல .
அகல்யாவோ இந்நேரத்தில் செழியன் இருக்க மாட்டான் என்ற மிதப்பில் தான் இங்கு வந்து இதழை பேசியது . ஆனால் அவனோ இதழின் கைப்பிடித்து அழைத்து வர . அவன் நடையே கூறியது இப்போது நல்ல மனநிலையில் இல்லை என்பதை .
அவள் முன் நின்ற செழியனின் முகமோ கோவத்தில் நெருப்பாக இருக்க .
அவளோ தனக்குள் பயம் ஏற்பட்டாலும் அதை மறைத்துக்கொண்டு
ஹாய் செழியன் என்று முடிக்கும் முன் ஓங்கி ஒன்று அவள் கன்னத்தில் கொடுக்க.
சுற்றி இருந்தவர்களோ அதிர்ச்சியுடன் அய்யோ என்று தங்களுக்குள் முணுமுணுத்தபடி இருக்க .
அகல்யாவோ வலியில் கன்னத்தை பொத்தியபடி அவனை பயத்துடன் பார்க்க.
அவள் முன் ஒற்றை விரலை நீட்டிய செழியனோ
" தொலைச்சுடுவேன் ராஸ்கல் , எங்க வந்து என்ன பேசிருக்க , யார் உனக்கு அந்த உரிமைய கொடுத்தா ஹான் "
என்று அந்த இடமே அதிர சத்தமிட.
அகல்யாவோ எதுவும் சொல்லாமல் பயத்துடன் உடல் வெட வெடக்க அவனை பார்த்தபடி இருக்க .
செழியனோ அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவனோ .
என்ன நினைச்சிட்டு இருக்கீங்க , நீங்க பேசுறது எதுவும் தெரியாம இல்லை , என்று அனைவரையும் உறுத்து விழித்தவனோ .
" இது என்னோட சொந்த விஷயம் அதை பத்தி பேச நீங்க எல்லாம் யாரு , வேலைக்கு வந்தா அதை மட்டும் பார்க்கனும்".... , என்றபடி கோபத்தில் சீறியவனோ தன் அருகில் இருந்த இதழை தோளோடு சேர்த்தணைத்து
" இவ என் பொண்டாட்டி , இதோ இவ கழுத்துல கிடக்கிற தாலி நான் கட்டுனது , இவ miss பாண்டியன் நெடுஞ்செழியன் .... இதுக்கு மேல எதாவது வார்த்தை வந்தது எல்லாரையும் தொலைச்சு கட்டிடுவேன் ஜாக்கிரதை "
என்று சிங்கமாக கர்ஜித்தவனோ இதழினி என்ற இதழினி தென்றல் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு வெளியேற .
தொடரும் ...
எப்பா தப்பா பேசுன வாய்க்கு எல்லாம் பூட்டு போட்டாச்சு. இனி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் . அது என்னனா நாளைக்கு சொல்றேன் 😀😀😀😀
