Share:
Notifications
Clear all

நெஞ்சிலே 4

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 237
Thread starter  

அத்தியாயம் 4

 

அவனது அப்பா ஆஃபீஸில் வாயிலில் மிகப்பெரிய இடம் இருக்கும். அங்கே தான் பிரஸ் மீட்டை வைத்திருந்தான் வெறும் பத்து நிமிஷங்கள் மட்டுமே என்று கூறியவன், "ரிப்ளை பண்ணிட்டேன் திரும்பவும் இப்படி பிரஸ்மீட் வைக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் ஃப்ர்தரா எதுவும் பிரச்சினை வேண்டாம்னு தான்! சின்ன வயசுல இருந்து பீல்டுல இருக்கேன் இந்த பீல்டோட அப் அண்ட் டவுன்.. இன் அண்ட் அவுட் எனக்கு தெரியும். 

சோ இந்த பீல்டு தப்பு செய்வதற்கான நிறைய சான்ஸ் இருந்தும் இன்னும் எங்க அப்பா சிங்கிள் பேரண்ட்டா தான் இருக்கார்.

அவருக்கு பிறந்த நான் வேற எப்படி இருப்பேன்? அஃப் கோர்ஸ்… கல்யாணத்துக்கு முன்னால ரிலேஷன்ஷிப்ல எனக்கு விருப்பமில்லை.. அவங்க எதிர்பார்த்தாங்க, ஐ செட் ஜஸ்ட் நோ! அது தான் அவங்களுக்கு கடுப்பு போல.. " என்று அவன் மென்னகையுடன் கூற.. 

பார்த்திருந்த நிருபர்களுக்கு வேற கேள்வி கேட்க வேண்டும் என்றே தோன்றவில்லை. ஏனென்றால் அவனது பதில் அவ்வளவு சாதாரணமாக இருந்தது. எந்த ஒரு முகப்பூச்சோ நடிப்போ இல்லாமல்…

"அவங என்னை கோபப்படுத்த பார்க்குறாங்க… அதற்கு ரியாக் செய்யும் பர்சன் நான் கிடையாது" என்பது போல தான் அவன் பதில் இருக்க.. அவனின் அந்த சிறு புன்னகையிலேயே உறைந்து போய் தான் பார்த்திருந்தனர்.

"அட்லாஸ்ட் ஒன் அட்வைஸ்!! மிஸ்டர் செல்வரத்தினம் உங்களுக்கு தான்…

பொண்ண பொண்ணா வளருங்க சார். நமக்குன்னு சில சமுதாய கோட்பாடுகள் இருக்கு.  என்னதான் நம்ம சினி பீல்டில் இருந்தாலும் நமக்குன்னு எக்ஸ்ட்ரா ரெண்டு கையோ காலோ ரெண்டு இறக்கைகளோ கிடையாது. வீ ஆர் ஜஸ்ட் ஹுமன் பீயிங்! எவ்வளவோ பாப்புலரா இருந்த செலிப்ரட்டிஸ் எல்லாம் இப்போ போன இடம் தெரியல.. ஆனா அவங்க வாழ்க்கை முறை தான் சொல்லும் அவங்க இடத்த! சோ பீவர் ஆப் யுவர் டாட்டர்!!" என்றதோடு தன் பேட்டி முடித்துக் கொண்டு சென்று விட்டான்.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் அடுத்த வைரலாகியது ப்ரணவ்வின் இந்த பேச்சு தான். அதிலும் செல்வரத்தினத்துக்கு அட்வைஸ் என்று அவன் கூறியதை பார்த்து அவனது ரசிகர்களோ "சரியான செப்பல் ஷாட்!!" என்று சிலாகித்தனர்.

செல்வரத்தினம் இதை பார்த்து ஒன்றும் கூற முடியவில்லை. வேறு என்னதான் பண்ண முடியும்? பெண்ணின் இந்த திடீர் புத்தி மாற்றத்தை அவர் தான் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு தான் சொல்லிப் பார்ப்பது ஒரு கட்டத்திற்கு மேல் அவரது அதிகாரமும் அன்பு எதனாலும் அவளை கட்டுப்படுத்த முடியாமல், புகழ் பணம் என்று போதை அவளை ஆட்கொண்டு இருக்க.. அதிலிருந்து அவளை மீட்கும் வழி தெரியாமல் தான் தவித்துக் கொண்டு இருந்தார்.

அதனால்தான் வருணரூபன் அழைத்த போதும் கூட அவரை எதிர்கொள்ள முடியாமல் ஃபோன் காலை தவிர்த்து விட்டார்.

அதே நேரம் பெண்ணை தனியாக விடவும் பயம். இந்த காலத்தில் யாரை தான் நம்புவது? ஏதாவது ஒரு மோசமான பேனரில் போய் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக தான் அவளின் படத்தை அவரே தயாரிப்பதற்காக ஒத்துக் கொண்டுள்ளார்.

அதன்பின் மகிமா என்ற ஒருத்தியை மறந்து தன் கெரியரில் முனைப்பாக இருந்தான் பிரணவ். அடுத்தடுத்து அவனுக்காக பாடல்கள் அணிவகுத்து நின்றிருக்க.. அவற்றையெல்லாம் பாடி முடித்தவன், தனித்துவமான ஆல்பம் சாங் இரண்டில் பாடி முடித்தான்.

 

ஆறு மாதங்கள் ஓட்டம்.. உண்ண ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் அத்தனை ஓட்டம். அவனின் அத்தனை ஓட்டத்திலும் அவனுக்கு கை கொடுத்தது ராகவ் தான்.

இவன் எள் என்பதற்கு முன் எண்ணெயாய் நிற்பான் ராகவ். அவனின் இந்த சுறுசுறுப்பும் கொஞ்சமும் முகம் சுளிக்காத உழைப்பும் தான் ராகவ்விடம் மிகப் பிடித்தது ப்ரணவ்வுக்கு.

மகனின் இந்த பிஸி செடியுளில் அவனது உடல்நிலை குறித்து கொஞ்சம் கவலை இருந்தாலும் மகன் அந்த மகிமா பிரச்சனையிலிருந்து முழுவதுமாக வெளிவந்து விட்டான் என்று நிம்மதி உற்றார் வருணரூபன். அவரின் நிம்மதிக்கு அல்பாயுசு என்று அப்போது அவருக்கு தெரியவில்லை!! ஆம்.. அப்படி இல்லை என்பதை காண்பித்தான் மகன்.

மகிமா பிரச்சனையில் இருந்து மட்டுமல்ல ஏற்கனவே பிரிந்து சென்ற தாயினாலும் அவனது மனம் பலமாக பாதிக்கப்பட்டிருந்ததை வருணரூபன் உணர்ந்த தருணம்!!

கூடவே காதல் தேவதை அவனுக்கு காதலை கற்றுக் கொடுக்க நேரம் பார்த்து இருக்க…

அந்த நேரமும் இதுதானோ?? 

ஆம்… காதல் கல்யாணம் பிரிவு தாம்பத்தியம் என்று கேட்டாலே ஏதோ கசப்பான மருந்து போல முகம் சுழிப்பவனை..  அது மருந்து மட்டுமல்ல வாழ்வியலின் மற்றொரு பரிமாணத்தை காட்டும் அமிர்தம் என்று உணர்த்த வந்தாள் நித்திலா!!

வெறும் பாடலில் மட்டுமே அன்பு காதல் மோகம் பாசம் நேசம் என்று அனைத்து உணர்வுகளையும் வெளி காட்டிய பாடகன், உண்மையில் மனதுக்குள் அவற்றுக்கு எல்லாம் பெரிய இரும்புத்திரை போட்டு மூடி வைத்திருக்க.. அந்த இரும்பு திரையை தன் தளிர் கரங்களால் தட்டி.. அவனையும் மோகக் கடலில் வீழ்த்தி.. தாபம் எனும் நீச்சலோடு.. காதலில் இரு கரையும் கண்டு தேவனாக ஆக்க வரும் தேவதை பெண் அவள்!!

 

பெண் மனநல மருத்துவர்

நித்திலா!!

 

தொடரும்...

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top