Share:
Notifications
Clear all

நெஞ்சிலே 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 237
Thread starter  

அத்தியாயம் 3

 

"நான் இம்பொட்டண்ட் சொன்னாங்க இல்லையா… அப்போ பொட்டண்ட் பத்தி அவங்களுக்கு நிறையவே… தெரிஞ்சிருக்கு போல!" என்று அந்த நிறையவில் அவன் அழுத்தம் கொடுத்து பேச… அதனைக் கேட்ட அத்தனை நிருபர்களும் ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டனர்.

இப்படி ஒரு அதிரடி பதிலை.. அதுவும் அவளையே திருப்பி தாக்கும் பதிலை யாரும் எதிர்க்கவில்லை! 'நான் அப்படி எல்லாம் இல்லை என்னை பற்றி இத்தனை வருடத்தில் உங்களுக்கு தெரியாதா?' என்றோ 'இத்தனை நாள் இல்லாமல் இப்போது என்ன திடீர்னு பேசுகிறாள், எல்லாம் ஹீரோயினாக  வேண்டுமென்று அவதூறு பரப்புகிறாள்' என்றோ அவளை தாக்கி பேசுவான் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க…

ஆனால் ப்ரணவ்வோ வெகு நிதானமானதாக இருந்தான். பெரும் அதிர்ச்சி அவர்களுக்கு!!

 

இந்த கேள்வியில் கண்டிப்பாக கோபப்பட்டு கத்துவான்.. கத்தி தீர்ப்பான், அதையெல்லாம் அப்படியே கேமிராவில் கேப்சர் செய்து, நித்தமும் ஒரு போட்டோவை  வீடியோவை போட்டு.. தங்கள் இஷ்டப்படி எல்லாம் அதை கன்டென்ட்டாக மாற்றி, டிஆர்பிஐ ஏத்தலாம் என்று பல கற்பனைகளோடு அவர்கள் காத்திருக்க… ஒற்றை வரியில் முழுவதையும் அவள் புறம் திருப்பி விட்டவனை என்னவென்று சொல்ல?

சாமர்த்தியமானன் என்று அழகான அழுத்தமான தனது ஸ்மார்ட்டான பதிலில் கூறிவிட்டு சென்றவனை ஆஆவென்று பார்த்தனர் அனைவரும்.

அன்றிரவே அதுவும் வைரலாக தீப்பற்றி எரிய.. இது எதையும் அறியாமல்… சூட்டிங்கு தேவையான டிரஸ் பிட்டிங்கில் பிஸியாக இருந்தாள் மகிமா. மறுநாள் காலை வரை எதுவும் அவளுக்கு தெரியவில்லை. பெரிதாக அதிரடியை எல்லாம் அதிரூபனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை!! ஏனென்றால் அவள் அறிந்த பிரணவ் அம்மாதிரி பட்டவன் இல்லை!!

ஆனால் வருணரூபன், ப்ரண்வ் அதிரூபனின் தந்தை, இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை அவரால்.

தன் பிள்ளையின் ஆண்மையை கேள்விக்குறியாக்கி பேசியவளை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கண்ணில் கோபத்தோடு தான் காத்திருந்தார் மகனுக்காக!

எப்படியும் மகன் பதிலுக்கு வலிக்க கொடுத்திருப்பான் என்று தெரியும்! அது அவனது பக்கத்தில் இருந்து.. 'பெற்ற தந்தையாக அவர் என்ன செய்தார்?' என்று தனக்குள்ளே கேள்வி கேட்டு எரிமலை கனலாக தகித்து இருந்தவரின்.. கைகளை ஆதரவாக ஒரு கரம் பற்ற..  மெல்ல நிமிர்ந்து பார்த்தார்.

 

அங்கே அவரது எண்ணங்களின் நாயகன், அவரது அருமை புத்திரன் அதே வாடாத புன்னகையோடு தந்தையை பார்த்து சிரித்தான்.

சற்று முன் தான் அவரது பிஏ முரளி வந்து ப்ரணவ் பேசி அது வைரலாகி வந்ததை அவரிடம் காட்டி விட்டு சென்றான். "எனது மகனை இந்த சமுதாயத்தின் முன் தலை குனிய வைத்து விட்டாளே.. அவளை..  ஏதாவது ஒன்னு அவளுக்கு திருப்பி செஞ்சே ஆகணும் பிரணவ்!" என்றார் வருண்.

"டேட்… ஏற்கனவே நான் கொடுத்ததே போதாதா டாட்?" என்று அவர் அருகில் அமர்ந்து கொண்ட மகனை வாஞ்சையாக பார்த்தவர் "அது மட்டுமே அவளுக்கு போதாது ப்ரணவ். செல்வரத்தினம் நல்லா தெரிஞ்சவன் அவன் பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாக வந்தால் நன்றாக இருக்கும்னு நான் தான்… ஆசை ஆசையாக செல்வரத்தினம் கேட்டவுடன் எதையும் விசாரிக்காமல் சம்மதம் சொல்லி இந்த எங்கேஞ்மெண்ட்டை நடத்திட்டேன்! இப்ப நான் ரொம்ப கில்டியா ஃபீல் பண்றேன் ப்ரணவ்.. மை சன்…" என்றார் வருத்தம் மிகுந்த குரலில்.

"இதுல உங்க தப்பு என்ன இருக்கு டாட்? நீங்க கில்ட்டியா ஃபீல் பண்ண அவசியமே கிடையாது! நம்ம பீல்டுல இந்த மாதிரி பிரேக் அப் எல்லாம் சகஜம் தானே!" என்ற மகனை கூர்ந்து பார்த்தவர், "நம்ம குடும்பத்தில் அப்படி கிடையாது! நானும் அப்படி கிடையாது! என் மகனும் அப்படி கிடையாது!!" என்றார் அழுத்தமாக…

உண்மைதான்..!! ஒருவனுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை மட்டுமே இராமன்! வாய்ப்பு கிடைத்தால் அவன் இராவணனே என்று கூற்றுக்கு விதிவிலக்கு வருணரூபன். 

இந்த பீல்டோடு அவரோடு ஒத்துப் போக முடியாதென அவரது மனைவி பிரிந்து சென்றுவிட… அதுவும் ப்ரணவ் ஐந்து வயதாக இருக்கும்போதே!!

 

அதன்பின் தனித்து நின்றார். அவரின் அனைத்துமாய் ஆனான் மகன்!! அன்று முதல் இன்று வரை அவரின் சந்தோஷம் துக்கம் சோகம் வெற்றி அனைத்தும் மகனுடன் மட்டுமே!!

ஒற்றை பிள்ளையோடு தானே இருக்கிறார் வளைத்து போடலாம் என்று இசையமைப்பாளரை வலம் வந்த கன்னிகள் ஏராளம்!! ஏன் டிவோர்சானவர்கள் கூட நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்டும்.. அனைத்திற்கும் 'இன்னும் நான் என் மனைவியை காதலிக்கிறேன்!' என்று ஒற்றை வார்த்தையில் அனைவரையும் தள்ளி நிறுத்தி வைத்து விட்டார்.

அப்படிப்பட்டவரின் மகன் இதுவரையும் அப்படித்தான்!! இனியும் அப்படித்தான் என்பதில் அவருக்கும் அத்தனை உறுதி.  ஆனால் இந்த பிரேக் அப் மகனாக செய்ததில்லையே.. கொழுப்பெடுத்து போய் அவளாக செய்தால்.. அதற்கு தன் மகன் பொறுப்பில்லை என்று மனம் உணர்ந்தாலும், எப்படி என் மகனை அவள் இம்மாதிரி சொல்லலாம் என்று கோபம்!!  தந்தைகேயுள்ள தார்மீக உள்ள கோபம்!!

அதுவும் தாயுமானவராய் இருந்து இந்நாள் வரை பேணி வந்தவருக்கு தன்னாலே தன் பிள்ளைக்கு ஒரு அவப்பெயர் என்பதை தாங்க முடியவில்லை.‌ திருப்பி கொடுத்து ஆக வேண்டும் என்று எண்ணம்! செல்வரத்தினத்திற்கு ஒருமுறை இவர் கால் செய்ய… அவரோ அதை தவிர்த்து விட்டார்.

"ஆக.. இவனும் சேர்ந்து தான் கூட்டு!" என்று புரிந்தவர் அசோசியேஷனில் சில வேலைகளை செய்து விட்டு மகனுக்காக காத்திருந்தார்.

"நாளைக்கு ஒரு பிரஸ் மீட் வச்சிடலாம் பிரணவ்!" என்றார் அழுத்தமாக..

 

"ஓகே டாட்! இப்ப போய் ரெஸ்ட் எடுங்க!" என்று எழுந்தவன் தந்தையின் கேர் டேக்கரை அழைத்து  

தந்தையை பார்த்துக்க சொல்லிவிட்டு தான் தன் அறைக்கு சென்றான்.

ஏனோ… ப்ரணவ்வுக்கு இன்று‌ மனம் முழுவதும் நிம்மதியாக தான் இருந்தது. அவள் பேசியது அவனை ஹர்ட் செய்ய தான் என்று‌ புரிந்தது.‌ ஆனாலும்..  அதையும் தாண்டி அவளது இந்த விலகல் மனதிற்கு ஏதோ நிம்மதியாய் இருந்தது. 

'அப்படியென்றால் அவளை நாம் காதலிக்கவில்லையா?' என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவனை அந்த காதல் கண்டு சிரித்தது!

இதற்கு பெயர் காதலா?? தெரிந்தவளை இதுவும் இந்த பீல்டை தெரிந்தவளை திருமணம் செய்து கொண்டால் அப்பாவை போல தனித்திருக்காமல் இருக்கலாம் என்று நீ நினைத்தாய்…

வெல் செட்டில் அதே நேரம் பிரபலமான ஒரு செலிபிரெட்டியை திருமணம் செய்து கொண்டால் தான் ராணியாக உலா வரலாம் என்று அவள் நினைத்தாள்…

ஆக மொத்தம் காதல் இல்லாத வெறும் கமிட்மெண்ட் வாழ்க்கையை தான் நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்!!

இதில் காதல் எங்கே உள்ளது?

'காதல் என்றால் என்னவென்றாவது உனக்கு தெரியுமா ப்ரணவ்?' 

என்று எள்ளி நகையாடியது காதல்!!

திரும்பவும் தந்தையுடன் பேச வேண்டும் என்று தோன்ற வேகமாக எழுந்து வந்தவன் அவர் அறையின் வெளியே அவரின் கேப்டன் இருப்பதை பார்த்து உள்ளே தந்தை வெகு வெகு முக்கியமான காலில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டான்.

 

ஒரு வருடத்திற்கு முன்பு வருணரூபனுக்கு மைல்ட் அட்டாக் ஒன்று வந்ததில் இருந்து அவருக்கு கேர் டேக்கராக ஒருத்தரை நியமித்து விட்டான். தந்தை எவ்வளவு சொல்லியும் கேட்காமல்… பெரும்பாலும் இரவும் அவரின் வெளியே இருக்கும் அறையில் தான் படுத்துக் கொள்வான் அந்த வாலிபன், வினய்.

ப்ரணவ்வை பார்த்ததுமே "சார்.. முக்கியமான காலில் இருக்கிறார் சார்" அதனால்தான் அவன் வெளியே நிற்பதும் புரிந்தது என்பதன் போல தலையாட்டி தன்னறைக்கு சென்று விட்டான்.

மறுநாள் காலை வழக்கம் போல எழுந்து இவன் தன் ஆபிசுக்கு செல்ல கிளம்பினான். அவர் அப்பா வைத்திருக்கும் மியூசிக் சென்டர் மேல் மாடியில் தான் இவனது ஆபீசும்.

தன் தந்தை இசையமைப்பில் பாடுவதை காட்டிலும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடுவது தான் அதிகம். அதற்கென்று தான் தனியாக அக்கட்டிடத்தின் மேலே மாடியில் இவனுக்கென்று ஆபீஸ்.

இவன் டைனிங் ஹாலை நோக்கி வரும்போது வருணரூபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்‌ "மார்னிங் டேட்!" என்றபடி எதிரே அமர,  "வெரி குட் மார்னிங் ப்ரணவ்!" இன்னைக்கு நம்ம ஆபீஸ்லயே ஒரு சின்ன பிரஸ்மீட் இருக்கு" என்றதும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் தலையாட்டி ஆமோதித்தான்.

"பட் எனக்கு ஒரு கண்டிஷன் டேட். இதுல எங்கேயும் நீங்க தலையிட வேண்டாம். இது எனக்கும் அவளுக்குமானது. நான்  பார்த்துக்கொள்கிறேன்" என்றதும் ஒரு நிமிடம் யோசித்தவர் "டேட்…" என்று இவன் சற்று குரலை உயர்த்தி அதேசமயம் அதில் சற்று சிணுங்கலும் சேர்ந்து கேட்க "ஓ

கே ஓகே.. யூ டேக் கேர்!" என்றார்.

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top