Share:
Notifications
Clear all

நெஞ்சிலே 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 237
Thread starter  

அத்தியாயம் 2

 

"வாட் ரப்பிஷ்?" என்று அழுத்தமான குரலில் நிமிர்ந்தவனின் கண்களில் அத்தனை சிவப்பு!!

 

"எஸ் பாஸ் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க.. அவங்க… படத்தோட அனௌன்ஸ்மென்ட்டோட இந்த விஷயத்தையும் சேர்த்து சொல்லி இருக்காங்க" என்றவன் அந்த கிளிப்ங்ஸை தனது மொபைலில் ஓட விட்டு ப்ரணவிடம் காட்டினான்.

முதலில் இருந்த கோபம் இப்போது இல்லை அவனிடம்! நிதானமாக அதனை வாங்கியவன், அதனை விட வெகு நிதானமாக அந்த கிளிப்பிங்ஸை பார்த்தான்.

யாரோ ஒரு பத்திரிக்கையாளர் அவளிடம் "உங்க முதல் படத்துக்கு வாழ்த்துக்கள் மேடம்! ஆனா கொஞ்ச நாள் முன்னாடி தானே நீங்க பிரபல பாடகர் ப்ரணவோடு எங்கேஜ்மென்ட் பண்ணி இருக்கீங்க.. நீங்க நடிக்கிறதுக்கு உங்க பியான்சி ஒத்துக்கிட்டாரா? அலோ பண்ணிட்டாரா?" என்று நல்லா இருக்கும் குடும்பத்தில் நாலே நாலு கேள்விகளால் புகைச்சலையும் பொறாமையையும் தூண்டிவிடும் வண்ணம் அவன் கேட்க…

ஏற்கனவே இதனை இந்த பிரஸ் மீட்டில் பேசிவிடும் எண்ணத்தில் வந்தவள், கொஞ்சம் கூட தாமதக்காமல் தனது ஒப்பனைகள் கலையாத வண்ணம் பின்னால் வளைந்து நெளிந்து ஒரு சிரிப்பை சிரித்து "வாட் இஸ் திஸ் சில்லி… என்னை அனுமதிக்க அவர் யார்? ஒரு பெண்ணோட சுதந்திரம் அவளுக்குள் அவகிட்ட தான் இருக்கு! அதை ஆண்கள் தரவேண்டும் நினைப்பது முட்டாள்தனம்!!" என்று பெண்ணியம் பேசி மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவள், "அதைவிட இம்பார்ட்டன்ட் நியூஸ் உங்களுக்கு… நான்.. எங்க எங்கேஜ்மென்ட்டை கேன்சல் பண்றேன்!" என்று அதிரடியாய் அறிவித்தாள்.

"என்னது எங்கேஜ்மென்ட்டை கேன்சல் பண்றாளா? அதுவும் ப்ரணவ் அதிரூபனுடனா?" என்று வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் அனைவருக்குமே வெகு அதிர்ச்சி!!

 

அதோடு தங்கள் கல்லாப்பெட்டியை கட்டிக்கொள்ள டிஆர்பியை ஏற்ற ஒரு பெரிய செய்தி கிடைத்தது என்று அதனை தாண்டி சந்தோசம் அங்குள்ளவர்களின் வக்கிர மனதில்…

பெரும்பாலானவர்கள் இப்படித்தான் பணம் என்றும்.. தன்னுடைய சுயநலம் என்றும்.. வந்து விட்டால் மனதில் வக்கிரம் புகுந்து கொள்ள, அடுத்தவரின் எண்ணங்களையும் அவர்களின் வலிகளையும் ரணகளையோ பார்ப்பதில்லை. அவ்விடத்தில் வெறும் அவர்கள் கண்டெண்டுகளாக பார்த்து அவற்றை கரன்சிகளாக மாற்றும் வித்தை என்னவென்று ஆராய்வார்கள் அவர்கள்.

"என்ன மேடம் இப்படி சொல்றீங்க? இன்றைய இளம் ரசிகைகளின் கனவு நாயகன்!  சில பேருக்கு குரல் மட்டுமே அழகாக இருக்கும். ஆனா…

பிரணவ் சாருக்கோ குரலிலும் சரி கம்பீரத்திலும் சரி யாருக்கும் சளைத்தவர் இல்ல.. இன்னைக்கு இருக்கும் இளம் கதாநாயகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவு பர்சனாலிட்டி கொண்டவர்!" என்று மாறி மாறி அங்கு உள்ளவர்கள் எல்லாம் கேள்விக் கணைகளை தொடுக்க…

"ஜஸ்ட் ஸ்டாப் இட்!! வெறும் கம்பீரமும் கவர்ச்சி மட்டும் இருந்து என்ன புண்ணியம்?" என்றவள் தனது ஸ்டைலான தமிழில் உச்சரிக்க..

"பின் அதைவிட வேற ஆணுக்கு என்ன வேணும்னு எதிர்பார்க்கிறீங்க? இப்போ உள்ள பெண்களோட முதல் சாய்ஸ்.. அழகு, அறிவு, கம்பீரம் அதனோடு சேர்த்து செல்வமும் செல்வாக்கும்?! இது அத்தனையும் உடையவர் பிரணவ் அதிரூபன். இதைவிட இன்னும் என்னை எதிர்பார்க்கிறீங்க நீங்க? இல்ல.. எங்களுக்கு புரியல!" என்று ஒரு ஆண் நிருபர் கேட்க.. 

 

"இதை எல்லாத்தையும் விட முக்கியமான ஒன்னு தேவை! அதி முக்கியம்.. அதிரூபனுக்கு அது இல்ல!" என்று இகழ்ச்சியாக உதட்டை வளைத்தாள் மகிமா.

"என்ன மேடம்.. இப்படி சொல்லிட்டீங்க? இதைவிட முக்கியமான தகுதியா? இவ்வளவு நாள் அவர் பீல்டுல இருந்தும் எந்த ஒரு பெண்ணும் கூடவும் கிசு கிசுக்கப்படவே இல்லை! அவ்வளவு ஒழுக்கமானவர் என்று பெயர் எடுத்தவர்.. இதையும் விட வேற என்ன தகுதி வேணும்னு நீங்கள் எதிர்பார்க்கிறீங்க?" என்று ஒரு பெண் நிருபர் கேட்க…

*கிசுகிசுக்கப்படனும் என்றால்… அங்கு ஏதாவது சங்கதி இருக்கனும் இல்லையா?" என்று மீண்டும் புரியாத வண்ணமே பதிலளித்தவளை அங்கிருந்து நிருபர்கள் சற்று குழப்பத்தோடு பார்த்தனர்.

"புரியல.. மேடம்!" என்று அனைவரும் அவளிடம் இருந்து என்ன வருமோ என்று எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்க..

அவள் அருகில் அந்த படத்தின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த மதன்ராஜ் மற்றும் இயக்குனர் அசிஸ்டன்ட்டும் நின்றுயிருந்தனர். ஆனால் இவளது கண்களோ மதன்ராஜ்ஜை கேள்வியாக நோக்க... அவனது கண்களோ ஆம் என்று அதனை அணைத்துக் கொள்ள.. பின் பத்திரிக்கையாளர்களின் பக்கம் திரும்பியவள் "பிகாஸ்.. ஹிஸ் இம்பொட்டண்ட்! அப்படிப்பட்டவனால் எப்படி மத்த பெண்களோடு இருக்க முடியும்? பெண்களோடு இருந்தா தானே கிசுகிசுப்பு வரும்!!" என்று நக்கலாக கூறியவள், அடுத்து ஒரு வணக்கத்தோடு சென்றுவிட்டாள்.

அங்கிருந்த நிருபர்களுக்கு அதிர்ச்சி என்றால் இவளை வைத்து இயக்கும் அந்த புதுமுக இயக்குனருக்கோ இன்னும் பயங்கர அதிர்ச்சி!!

 

மகிமா பின்னாடியே ஓடிய அந்த புதுமுக இயக்குனர் கபிலன் "என்ன மேடம் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுட்டு வந்து இருக்கீங்க? இது எப்படி வெடிக்கும் தெரியுமா? என்னோட முதல் படம் மேடம் இது! இதுல ஏதாவது பண்ணி விட்டுறாதீங்க.." என்று அவன் கெஞ்ச..

"அதெல்லாம் பாத்துக்கலாம் சார்! எங்க அப்பா இருக்காரு.. அப்புறம் நம்ம மதன் சார் வேற இருக்கார்" என்றவள் தான் போட்ட அணுக்குண்டு எந்த வகையில் வெடிக்கும் என்று அறியாதவளாய் விபரீத விளையாட்டை தொட்டவளாய் சென்றுவிட்டாள்.

பிரஸ் மீட்டில் அவள் கொடுத்த இன்டர்வியூவை நிதானமாக பார்த்துக் கொண்டிருந்த ப்ரணவின் இதழ்களோ ஏளனமாக வளைந்தது.

"ராகவ்.. உன் போனை வாங்கிக்கோ" என்று அவன் நீட்ட ராகவ் பாய்ந்து சென்று வாங்கியவன் ப்ரணவ் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க….

"உத்து உத்து பாக்காத மேன்! எனக்கு ஷையா இருக்கு" என்று கண்களை திறக்காமல் இதழ்களில் புன்னகை மலரக் கூறியவனை கண்டவனுக்கு 'எப்படி இந்த ரணகளத்திலும் இவரால் குதூகலமாக இருக்க முடியுது?' என்றுதான் தோன்றியது.

"பாஸ்.. நம்ம இதுக்கு பதிலடி கொடுத்தே ஆகணும்! நம்மளும் உடனே ஒரு பிரஸ்மீட் கூப்பிடுறோம். பதிலுக்கு நம்மளும் இன்டர்வியூ கொடுக்கிறோம்!" என்று தன் பாஸில் மேலே உள்ள விசுவாசத்தையும்…

மகிமாவின் மேலுள்ள கோபத்தையும்.. அவன் கொட்ட..

" ஜஸ்ட் ரிலாக்ஸ் மேன்!" என்று தன்னருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவனை நோக்கி தூக்கி எறிய அதை கேட்ச் பிடித்த ராகவ் "வொய் பாஸ்? எப்படி ரிலாக்ஸா இருக்க முடியும்?" என்று கேட்டான்.

 

"இதுக்கு எதுக்கு நாம தனியா பிரஸ்மீட் எல்லாம் வச்சு கஷ்டப்படணும். எப்படியும் நம்ம போற இடத்துக்கு எல்லாம் இந்த மீடியா பீபுள் நம்மள ஃபாலோ பண்ண தான் போறாங்க.. நம்ம கண்ணீல படாமலா இருப்பாங்க? அப்ப நாமளே கொடுத்துக்கலாம்! த பெஸ்ட் இண்டர்வியூ!" என்று தனது மொபைல் எடுத்து பார்க்க ஏகப்பட்ட கால்கள்.

இவன் இந்த ரிலாக்ஸ் ரிசார்ட்டுக்கு வரும் போது எப்பொழுதும் மொபைலை சைலண்டில் வைத்து விடுவான். வெகு முக்கியம் என்றால் மட்டுமே ராகவ்வுக்கு அழைப்பார் அவனது தந்தை.

இப்போதும் தந்தையிடமிருந்து அழைப்பு வந்திருக்க.. தந்தைக்கு விஷயம் தெரிந்து விட்டது என்று அறிந்தவன் "எஸ் டேட்!" என்றான் எந்த பாவத்தையும் குரலில் காட்டாதவாறு..

மகனைப் பற்றி அறிந்தவர் அல்லவா? "ரொம்ப ஹார்சா ஏதும் பேசிட வேணாம் ப்ரணவ்!" என்றார்.

அவனும் சிரிப்புடன் "பார்த்துக்கலாம் டாட்! நோ ப்ளான் நௌ!" என்று விட்டு ஃபோனை அணைத்தவன், தனது வேக நடையுடன் வெளியே செல்ல அவன் பின்னாலையே வால் பிடித்து வேகமாக ஓடி வந்தான் ராகவ்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே அந்த ரிசார்ட்டின் வெளியிலேயே பத்திரிக்கையாளர்கள் கூட்டம் நின்றிருந்தது. அலை மோதியது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆனால் உள்ளே வர அனுமதி இல்லை.

இவன் காரில் சென்றவன் அவர்கள் வந்த இடம் கையசைத்து மெல்ல போகும்படி டிரைவரிடம் உரைக்க..

அவரும் மெதுவாக செல்லும்போது பத்திரிகையாளர்கள் இவனிடம் பேச, இவனை நோக்கி ஓடி வந்தனர் இனிப்பை மொய்க்கும் ஈக்களாய்…

 

அவர்களை வழக்கம்போல அவனின் டிரேட் மார்க் புன்னகையோடு பார்த்தவன், மென் சிரிப்புடன் "நான் இம்பொட்டண்ட் என்று அவங்க சொன்னாங்க போல.. அப்போ அவங்களுக்கு பொட்டன்ட் பத்தி நிறையவே.. தெரிஞ்சிருக்கு!" என்று அந்த நிறையவில் அழுத்தம் கொடுத்து கூறினான்.

 

அவள் தொடுத்த கணை, திரும்பி அவளை தான் தாக்கியது!

தாக்க வைத்தான் பிரணவ்!!

 

ஊஞ்சலாடும்…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top