அத்தியாயம் 1
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி போகும் வழியில் இருக்கும் மிகப்பெரிய ரிசார்ட் "ரிலாக்ஸ்!"
பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.
சாதாரண பிரஜைகளுக்கு எட்டாத கனவு!! எட்டிடாத உயரம்!!
விவிஐபிக்களுக்கும்.. செலிப்ரெட்டிக்களுக்கும்.. பிஸினஸ் மாக்னெட்டுக்களுக்கும் மட்டுமே திறக்கப்படும் அப்பிரம்மாண்டமான நுழைவாயில் கூட!!
அப்பிரம்மாண்ட வாயில் அத்துணை அழகையும் தன்னகத்தே கொண்டது போல கம்பீரமாய் வீற்றியிருக்க… அதை கடக்கும் யாவரும் ஒரு நிமிடமாயினும் அதை நின்று ரசித்துவிட்டு அதன் அழகில் லயித்து விட்டு தான் அடுத்த அடியே எடுத்து வைப்பர், ஆனால் ஒருவன் மட்டும், அது எதனையும் கண்டுகொள்ளாமல் ஓட்டமும் நடையுமாய் பிரம்மாண்ட வாயிலை கடந்து உள்ளே ஓடினான்.
அக்கால மன்னர்களின் அரண்மனையை ஒத்திருந்தது அந்த ரிசார்ட்!! ஒவ்வொரு இஞ்சு அழகும் பளபளப்பும் சொன்னது அதற்கு தண்ணீராய் இரைக்கப்பட்ட பணத்தின் அளவை…
அவற்றில் ஒரு பர்சன் கூட ஓடிய நெடியவனின் கண்களுக்கு புலப்படவில்லை! கருத்திலும் பதியவில்லை!! அவன் முகத்தில் அவ்வளவு கலவரம் அதனை தாண்டிய பயம்!! ஆம்… அவன் சொல்லப் போகும் விஷயத்தை கேட்டு அவனின் பாஸ் என்ன விதமாய் ரியாக்ட் செய்வான் என்று அவனால் சுத்தமாக யோசிக்கவே முடியவில்லை. அந்தளவு மண்டைக்குள் இருந்த மூளை மரத்து போயிருந்தது, அவ்விஷயத்தை கேட்ட நொடியில் இருந்து… இல்லையில்லை பார்த்த நொடியில் இருந்து…
பதற்றத்துடன் அவ்வளவு வேகமாக ஓடி வந்தவன், அக்கதவினை தட்டும் முன் நின்று மூச்சை ஆழமாக உள்ளிழுத்து பின் வெளியிட்டு "ரிலாக்ஸ் ராகவ்..!!" என்று தன்னை தானே நிதானப்படுத்திக் கொண்ட பின் அத்தனை மெதுவாக தட்டினான் அக்கதவினை. அம்மெல்லிய சத்தம் கண்டிப்பாக தன் பாஸூக்கு கேட்டு இருக்கும் என்று அத்தனை திண்ணம் அவனுக்கு!
ஏன்னென்றால் அவனின் பாஸ் அப்படி ஒரு கேட்கும் திறன் கொண்டவன்.. சிறு துரும்பு சத்தமும் அவனின் காதில் மிக நுண்ணியமாக விழும்!!
கதவினை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவன் பார்த்தது… கூரிய கண்கள் இரண்டு மிகக் கூர்மையுடன் தன் எதிரே இருக்கும் ஸ்நூக்கர் பாலினை லாவகமாக தட்ட, அடுத்த நொடி கனகச்சிதமாக அவை சென்று அதற்கான பள்ளத்தில் விழுவதை…
"சொல்லு ராகவ்… என்ன இவ்வளவு டென்ஷன்? எனிதிங் இம்பார்ட்டணட்?" என்று அழுத்தமாக அலட்டல் இல்லாத குரல் கேட்க..
அவன் பேச முடியாமல் எச்சிலை மட்டுமல்லாமல் வார்த்தையை விழுங்கினான்.
"அது… அது… ப்பாஸ்… ப்பாஸ்…" என்று அவன் திக்கி திணற…
அதுவரை தனது இலக்கினை மட்டும் பார்த்து இருந்த அக்கூரிய கண்கள் இரண்டும் மெல்ல உயர்ந்து தனக்கு எதிரே நின்று இருந்த ராகவ்வை பார்த்தது. மீண்டும் மெல்ல அசைந்தது அவனது மெல்லிய இதழ் அடர்ந்த மீசை தாடிக்குள் இருந்து, "என்ன மேன்… ப ப.. னு.. பஸ் ஓட்டுற?" என்று கேலியாக வந்தது. அது.. அவனை இலகுவாக்கும் முயற்சி!
"எதே?? இல்ல.. இல்ல.. ப்பாஸ்…" என்று மீண்டும் அவன் திணற.. மூன்று வருடங்களில் ராகவனின் இந்த திணறல் அவனுக்கு புதிது!
'சோ.. சம்திங் பிஷ்ஷி… அண்ட் இம்பார்ட்டெண்ட்!' என்று நோட் செய்தது அவனது பெரு மூளை!!
மீண்டும் அவனை பார்த்தவன்
"டெல் மீ ராகவ்? எனிதிங் இம்பார்டென்ட்?" அந்தக் குரலே சொன்னது, முக்கியமில்லாததைக் கூறி என் நேரத்தை வீணடிக்காதே என்று!!
ஒவ்வொரு மணித்துளியும் அவனுக்கே அவனுக்கானது! அதனை அடுத்தவர் கையில் கொடுக்க அவனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை! கொடுத்ததுமில்லை!! இனி கொடுக்க போவதுமில்லை!!
அவன்… ப்ரணவ் அதிரூபன்!! தென்னிந்திய பிரபல பாடகன். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் அவன் குரல் கேட்காத இடமில்லை. அவ்வப்போது அவன் அப்பாவுடன் சேர்ந்து இசையும் அமைப்பான் சில படங்களில்… பெரும்பாலும் அவனது விருப்பம் பாடுவது..! பாடுவது..!! பாடுவது!!
இசை என்பது வெறும் காதால் கேட்டு மனதில் நிரப்புவது இல்லை அவனுக்கு!!
உயிரில் கலந்து உணர்வில் பதிந்து சுவாசமாய் விட்ட ஒன்று!!
இசையோடு வந்தோம்…
இசையோடு வாழ்வோம்…
இசையோடு போவோம்…
இசையாவோம்..!!
என்ற பாடல் யாருக்கு பொருந்துதோ இல்லையோ இவனுக்கு சால பொருந்தும்!!
அவன் குரல் அப்படி தான்!! இசை போலவே மெல்லிசையாய் வருடும் அவன் அமைதியாக பேசும் போது! சற்றே ஆளுமையான பாடலாக வரும் அவன் சற்றே உணர்ச்சி வசப்படும் போது! பெரும்பாலும் அப்படிப்பட்ட நிகழ்வுகள் வெகு அரிது!!
ஏனெனில் அவன் அத்தனை நிதானம்! எப்போதும் அவன் கண்களில் இருக்கும் மென்மையும்..
முகத்தில் தவழும் புன்னைகையும் எதிரே உள்ளவரையும் இணைந்து புன்னகைக்க செய்யும், அதனோடு ஒரு பாஸிட்டிவ் வைப்-ஐ பரப்பும்.
எத்தனைக்கு எத்தனை இலகுவானவனோ..
அத்தனைக்கு அத்தனை அழுத்தமானவனும் கூட!!
இப்பொழுதும் அதே அழுத்தமான பார்வையோடு தான் ராகவை அவன் பார்த்திருக்க.. மறுபடியும் அசைந்தது அவனது மெல்லிய இதழ்கள் "எனிதிங் இம்பார்ட்டண்ட்?" என்று!!
'எங்கே இவரு இம்பார்ட்டண்ட் இம்பார்ட்டண்ட்னு கேட்டுட்டு இருக்காரு.. ஆனா அங்கே அவள் இவரை இம்பொட்டண்ட்! என்று கூறிவிட்டாளே!' என்று தன் பாஸை அவதூறாக பேசிய அந்த பெண்ணின் மீது பயங்கர ஆத்திரம் உண்டது ராகவ்வுக்கு!
ஆனால்… அந்த அவள்… இவனுக்கு என்று நிச்சியக்கப்பட்டவள், மகிமா செல்வரத்தினம். பிரபல இயக்குனர் தற்போது தயாரிப்பாளராகவும் இருக்கும் செல்வரத்தினத்தின் ஒற்றை ஆசை மகள்!!
"பாஸ்… மகிமா மேம்…!" என்று மீண்டும் பாதியை முழுங்கினான் ராகவ்.
"என்னை பார்க்க வேண்டும் ஏதும் சொன்னாளா? நோ வே… நான் இங்க ரிலாக்ஸ்க்கு வந்துட்டேன் என்றால்.. டென்ஷனை எல்லாம் ஏத்திக்கிறது கிடையாது! ரிலாக்ஸ் மட்டுமே.." என்று சிறு புன்னகையோடு கூறியவனின் கண்கள் மீண்டும் அடுத்த பந்தினை குறிப் பார்க்க…
"இல்ல பாஸ்… அவங்க… மீடியாவுல.. இண்டர்வியூ.. கொடுத்து இருக்காங்க!" என்று ஒவ்வொரு வார்த்தையும் திக்கி திணறியும் மெல்ல தான் கூறினான் ராகவ்.
"வெல்!! அவ அப்பாவோட அடுத்த புரொடக்சன்ல நடிக்கணும்னு அவளுக்கும் அவங்க அப்பாவுக்கும் ஆசை! மே பீ அந்த நியூஸா?" என்றான் பந்தினை சரியாக இலக்கில் அடித்தவாறு..
"இல்ல.. பாஸ்…! இது வேற..!" என்றவனுக்கு அந்த ஏசி அறையிலும் வியர்க்க.. உடனடியாக தன் ஹன்கீயை எடுத்து வியர்வையை துடைத்து கொண்டவனை வித்தியாசமாக ப்ரணவ் பார்த்தாலும் அவன் கண்கள் மீண்டும் அடுத்த பந்தை கூர்ந்தது.
"என்ன மேன் சொல்லணும்னு வந்துட்டே தானே! சொல்லி முடி!" என்றான் தன் கையில் இருந்த ஸ்டிக்கை ஒரு முறை துடைத்துக் கொண்டு அடுத்ததாக இலக்கை கூர்ந்தவாறு..
"பாஸ்… பாஸ்… அவங்க… உங்கள.. உங்க.. எங்கேஜ்மெண்ட்… ப்ரேக் அப்னு!" என்று இப்போதுதான் வார்த்தைப் பழகும் குழந்தை போல ஒவ்வொரு வார்த்தையாக அவன் கூற..
"வாட்??" என்று ராகவ்வை நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் அத்தனை கேள்விக் கணைகள்.
"எஸ் பாஸ்!" என்று பெருமூச்சு விட்டவன் கட கடவென்று அடுத்து அவன் கேட்ட செய்திகளை கூறலானான். "பாஸ்.. அவங்க வெறும் படத்துக்கான அனவுன்ஸ் மட்டும் கொடுக்கல.. கூடவே உங்க எங்கேஜ்மென்டையும் பிரேக் பண்ணி இருக்காங்க. அதுவும் அவங்க சொன்ன ரீசன் தான்.. என்னால கொஞ்சம் கூட தாங்க முடியல பாஸ்!" என்று வேதனையில் முகம் கசிய கூறியவனை பார்த்து, சிரித்துக்கொண்டே அடுத்த பந்தனை அதன் இலக்கில் சரியாக அடித்தவன்,
"இதெல்லாம் இந்த மீடியா வேல்டில் சகஜம் மேன்! ஜஸ்ட் பிரேக் அப் தானே.. விடு.. விடு.. என்னவோ உன்னை ப்ரேக் அப் பண்ணுன மாதிரி இவ்வளவு பீல் பண்ற மேன்!
ஏற்கனவே அவளுக்கு சினி பீல்டுல நடிகையா வலம் வரணும் ஒரு எண்ணம்! ஆனால் அவங்க அப்பா தான் அதை காதில் வாங்கல.. இப்ப என்னமோ திடீர்னு ஆரம்பிச்சுருக்காரு! தட்ஸ் ஓகே!" என்று இலகுவாக அதனை எடுத்துக் கொண்டவன் அடுத்த பந்தினை குறி பார்த்தான்.
"பாஸ்.. அவங்க சொன்ன ரீசன்னு நா ஒன்னு சொன்னேனே.." என்று உள்ளே போன குரலில் பேசிய ராகவ்வின் கண்களில் தெரிந்த கலக்கத்தை அப்போது பிரணவ் பார்க்கவில்லை. அவன் கண்கள் எல்லாம் அடுத்த பந்தின் இலக்கை நோக்கி இருந்தது.
"சொல்லு மேன்!" என்று அனாயாசியமாக கேட்டவனின் தலையில் அணுகுண்டை போட்ட மாதிரி "உங்கள.. உங்களை இம்பொட்டன்ட்னு சொல்லிட்டாங்க பாஸ்!" என்றான் ராகவ் அத்துணை வலி அவன் குரலிலும்!!
இம்முறை இலக்கு தவறி வேறொரு பாதையில் அந்த பந்து செல்ல "வாட் ரப்பிஷ்?" என்று அழுத்தமான குரலில் நிமிர்ந்தவனின் கண்களில் அத்தனை சிவப்பு!!
தொடரும்...
