வஞ்சகன் - 21

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 29
Thread starter  

அத்தியாயம் 22

 

ப்ரணவ்வால் தன் கண் முன்னால் இருக்கும் பேப்பரை நம்பவே முடியவில்லை.. 

 

எனக்குப் பெண்ணா?.. அதுவும் யாதிரா எனக்குப் பிறந்தவளா?.

 

நான் ஒரு பெண்ணைக் காதலித்தது உண்மை.. ஆனால், அவளின் மேல் என் சுண்டுவிரல் கூட பட்டதில்லையே.. அப்பேற்பட்ட நிலையில்.. 

 

யாரின் பெண் யாதிரா?.. அப்பா நான் என்றால், அவளின் அம்மா யார்?.. என்பதே அவருக்குள் பெரும் கேள்வியாக எழுந்தது.. 

 

தீவிர சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்தார் ப்ரணவ்.. 

 

“சார்..” என்ற குரலில், லேசாக திரும்பினார் ப்ரணவ்.. 

 

“உங்களைப் பார்க்க ஒரு லேடி வந்திருக்காங்க.. 

 

“ஏதாவது பிரச்சினை ன்னா, கேட்டு அனுப்புங்க சண்முகம்.. ரொம்ப டயர்டா இருக்கு..” என்றார் ப்ரணவ்.. 

 

“இல்லை சார், உங்கக்கிட்ட மட்டும் தான் பேசணுமாம்?.. பேரு சந்தனமல்லி ன்னு சொல்லுங்க.. தெரியும்னு சொன்னாங்க..” என்றதும், சட்டென்று தன் சேரில் இருந்து எழுந்தார் ப்ரணவ்.. 

 

“சண்முகம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க போங்க..” என்றவர், தன் வயதை மறந்து வெளியே வந்தார்.. 

 

தன்னை உள்ளே அழைப்பார் என காத்திருந்த, சந்தனமல்லிக்கு.. ப்ரணவ் வெளியே வந்தது சற்று திகைப்பு தான்.. 

 

“ஹாய் மல்லி..” என்றதும், அங்கிருந்த அத்தனை தலைகளும் ஒன்று போல் ப்ரணவ்வை நோக்கி திரும்பியது.. 

 

அனைவரின் பார்வையை உணர்ந்த சந்தனமல்லிக்குத் தான் சற்ற சங்கடமாகிப் போனது.. 

 

“நீங்க பிசியா இருந்தா, நான் அப்புறம் வரவா?..” என தயக்கத்துடன் அங்கிருந்து செல்ல முயன்றார் மல்லி.. 

 

“மல்லி.. மல்லி.. நில்லுங்க..”என ஓடி வந்து, அவரின் முன்பாக நின்றார்..

 

“வாங்க நாம காபி ஷாப்ல போய் பேசலாம்..” என்றவர், அவருடனே நடந்தார்..

 

இருவரும் ஒன்றாக வருவதை பல கண்கள் பார்த்தது.. 

 

அதில் ஒரு ஜோடி கண்கள் நம் சயந்தனுடையது.. 

 

“என்ன சார், உங்க மாமாவுக்கு பொண்ணு அமைஞ்சிடுச்சி போல?..” 

 

“அதெல்லாம் அமைய விட்டுருவேனா நானு, அந்தாளு ஆயுள் முழுக்க தனிக்கிளி தான்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ஜாலியா இருந்துட்டுப் போகட்டும்..” என்றவன், போகும் அவர்களைப் பார்த்துக் கொண்டே, ஜீப்பில் சாய்ந்து அமர்ந்தான்.. 

 

“ஆமா ஏட்டு, அந்த தாரக் ரூபி என்னாச்சி?.. இன்வெஸ்டிகேஷன் பண்ணீங்களா?.. இல்லை எனக்கு அடிப்பட்டதும், நான் போய் சேர்ந்துடணும்னு வேண்டிக்கிட்டீங்களா?..” 

 

“அய்யோ சார், நீங்க நல்லபடியா திரும்பி வரணும்னு, நான் வேண்டிக்கிட்டேன்..” என்ற ஏட்டை திரும்பிப் பார்த்தவன், 

 

“நம்புற மாதிரி பொய் சொல்லு ய்யா..” என கடிந்தவன், 

 

“இன்வெஸ்டிகேஷன் எந்தளவுல இருக்கு.. விசாரிச்சீங்களா, இல்லையா சார்?..”  

 

“சார் இன்வெஸ்டிகேஷன் பண்ணேன் சார்.. எனக்கு எந்த க்ளூவும் கிடைக்கலை சார்.. வாசுதேவன் சாருக்கும் எந்தக் க்ளூவும் கிடைக்கலை..” என்ற ஏட்டை முறைத்தவன், 

 

“என்ன விளையாடுறீயா நீ?.. அவனை நம்புனா, அந்த தாரக் ரூபியை நான் தான் கொன்னேன்னு கேஸை முடிக்கத்தான் பார்ப்பான்..” என சிடுசிடுத்துக் கொண்டே, நேரா வண்டியை தாரக் ரூபி ப்ரெண்ட் வீட்டுக்கு விடு ய்யா.. அந்த அரைலூசு வேற சாகுறதுக்கு முன்னாடி எனக்குப் போன் போட்டு செத்துப் போயிட்டா..” என புலம்பியபடி ஜீப்பில் கம்பீரமாக ஏறியமர்ந்தான்.. 

 

காபி ஷாப்பிற்குள் நுழைந்த ப்ரணவ்வையும், சந்தனமல்லியையும் பார்க்கும் அனைவரும், ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேச் சென்றனர்.. 

 

ப்ரணவ் காக்கிச்சட்டையில் கம்பீரமாக வந்ததால் இருக்கலாம்.. 

 

மல்லிக்கு சற்று சங்கடமாக இருந்தது.. “ஏன்டா, பேச வந்தோம்?..” என்று.. 

 

“வாங்க..” என அழைத்துக் கொண்டே, பக்கவாட்டாக இருந்த மாடியை நோக்கிச் சென்றார்..

 

பல தடவை அவர் இங்கு வந்திருக்கிறார் என்பது புரிந்தது..  

 

மாடிக்குச் சென்ற மல்லியை தழுவிச்சென்றது, மாடித்தோட்டத்தின் தென்றல் காற்று.. 

 

இருவரும் கார்னர் டேபிளில் அமர்ந்தனர்.. 

 

“அப்புறம் சொல்லுங்க மல்லி.. என்னைத் தேடி வந்திருக்கீங்க, ரொம்ப மிஸ் பண்ணீங்களோ?..” என்ற ப்ரணவ்வை முறைத்துப் பார்த்தார் மல்லி.. 

 

“எனக்குத் தாலி வேணும்.. அதைக் கேட்கத் தான் வந்தேன்..” என்ற மல்லியை அதிர்ந்துப் பார்த்தார் ப்ரணவ்.. 

 

“என்ன சொல்லுறீங்க?.. தாலியா?..” காவலனுக்கே, கரண்ட் ஷாக் கொடுத்தார் மல்லி.. 

 

ப்ரணவ்வின் அதிர்ச்சியான முகத்தைப் பார்த்தபின்பு தான், தான் சொன்ன வார்த்தையே ஞாபகத்திற்கு வந்தது..

 

“அச்சோ.. நான் அந்த மீனிங்க்ல கேட்கலை..” என பதறியவர், 

 

“என் தாலிச்செயின் உங்கக்கிட்ட இருக்குல்ல, அதை வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்.. பத்து பவுன்.. இப்போ தங்கம் விக்கிற விலைவாசிக்கு, உங்கக்கிட்ட கொடுத்துட்டுப் போக மனசில்லை..” 

 

“ம்ம்.. செயின் வீட்டுல இருக்கு.. ஒரு நாள் நானே கொண்டு வந்து தர்றேன்.. அர்ஜென்ட்னா சொல்லுங்க மல்லி.. இப்பவே வீட்டுக்குப் போகலாம்..” என்ற ப்ரணவ்வை ஆழமாக ஒரு பார்வை பார்த்தார்  

 

“அர்ஜென்ட் எல்லாம் இல்லை.. ஞாபகப்படுத்த வந்தேன்..” என்ற மல்லி, 

 

“என்னாச்சி?..” என்றார்.. 

 

“என்ன என்னாச்சி?..” என திருப்பிக் கேட்டார் ப்ரணவ்.. 

 

“இல்லை, முகத்துல ஏதோ கவலை?..” என தயக்கத்துடன் நிறுத்தினார்.. 

 

“ம்ம்.. ஒரு குழப்பம் மல்லி.. அதை எப்படிச் சொல்லுறதுன்னே எனக்குத் தெரியலை..” 

 

“அப்படியென்ன குழப்பம்?.. சொல்லணும்னா, சொல்லுங்க.. இல்லைன்னா வேண்டாம்.. ஏதாவது கேஸ் விஷயமா?..” 

 

“கேஸ் பத்தி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்.. அதை நானே பார்த்துப்பேன்.. இது பெர்சனல்..” என்ற ப்ரணவ், தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கவரை எடுத்து மல்லியின் புறமாக நீட்டினார்.. 

 

“என்னதிது?..” 

 

“பிரிச்சிப் பாருங்க.. உங்களுக்கேப் புரியும்?..” 

 

“ம்ம்..” என பிரித்துப் பார்த்த மல்லியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.. 

 

அவருக்குத் திக்கென்று இருந்தது.. 

 

என்னவென்று பிரித்தறியா உணர்வில் சிக்கித் தவித்தார்.. 

 

“நீங்க.. நீங்க?..” என இழுத்தவருக்கு, எப்படிக் கேட்பது என தயக்கமாகவும் இருந்தது?.. 

 

“ம்ம்.. நான் தான் யாதிராவோட அப்பான்னு, நியூஸ் வந்திருக்கு?..” 

 

“ஆனா எப்படி?..” 

 

“அதாங்க எனக்கும் தெரியலை.. நான் இதுவரைக்கும் எந்தப் பொண்ணையும் தொட்டதுக்கூட இல்லை தெரியுமா?..” என்ற ப்ரணவ்வை ஓரக்கண்ணால் சந்தேகமாக பார்த்தார் மல்லி.. 

 

“அட ப்ராமிஸ்ங்க.. நான் சத்தியமா இதுவரைக்கும் எந்தப் பொண்ணையும் தொட்டதில்லை..”

 

“நம்புற மாதிரியாங்க இருக்கு?.. இத்தனை வருஷம் நீங்க பிரம்மச்சாரியா இருந்தீங்கன்னு, சொன்னா.. யாரு நம்புவா?..” என இலகுவான குரலில் கேட்டார் மல்லி.. 

 

“அட நீங்க வேற ங்க.. நான் 21 வயசுல ஆர்மிக்குப் போயிட்டேன்..” என்றவரை புருவம் முடிச்சிட பார்த்தார் மல்லி.. 

 

“ஆமாங்க.. ஆர்மிக்குத் தான்.. நான் முதல்ல ஆசைப்பட்டது எல்லாமே ஆர்மியில இருக்கணும்னு தான்.. அதுனாலையே மனசை எப்பவும் கட்டுப்பாடா வச்சிப்பேன்..” 

 

“ம்ம்.. இப்போ தானே ஒரு பொண்ணைக் காதலிச்சேன்னு சொன்னீங்க?..” என லேசான கோபத்துடன், ப்ரணவ்வை முறைத்தார் மல்லி.. 

 

“அடச் சொல்லுறதைக் கேளுங்க.. அந்தப் பொண்ணு சின்ன வயசுல இருந்தே, என்கூடவே படிச்சா.. சோ அதை பப்பி லவ் னு வேணும்னா சொல்லலாம்..” 

 

“ஓஹ்..” என்றார் மல்லி.. அவரின் குவிந்த இதழ்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.. 

 

கண்களை வேறு பக்கம் திருப்பவே முடியவில்லை.. 

 

“அப்புறம், நான் ஆர்மிக்குப் போயிட்டேன்.. 4 வருஷம் நல்லாப் போச்சி.. பட்..” என்றவர், ஒரு கணம் தயங்கி..

 

“அங்கே நடந்த பாலிட்டிக்ஸ் எதுவும் எனக்குப் பிடிக்கலை. அதுனால நான் வெளியே வந்துட்டேன்..” 

 

அப்புறம் ஐபிஎஸ் எக்ஸாம் எழுதினேன்.. ஜாயிண்ட் பண்ணேன்.. இப்போ கமிஷனரா இருக்கேன்.. இதுவரைக்கும் நான் எந்தப் பொண்ணு மேலேயும் ஆசைப்படலை. அப்புறம் எப்படி?.. என கேட்ட ப்ரணவ்வை புருவம் இடுங்கப் பார்த்த மல்லி, 

 

“ஐ திங்க.. சயந்தன் க்கு, யாதிராவோட அம்மாவைப் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு?..” என்றதும், சட்டென நிமிர்ந்துப் பார்த்தார் ப்ரணவ்.. 

 

“ஆமா ங்க.. கண்டிப்பா யாதிராவோட அம்மா யாருன்னு, சயந்தன்க்கு தெரிஞ்சிருக்கணும்.. அது மட்டுமில்லை.. யாதிராவோட அப்பா நீங்கன்னு, அவருக்கு தெரிஞ்சிருக்கணும்.. அதுனால வீட்டுல இத்தனை எதிர்ப்பைத் தாண்டி, அவரோட மாமா பொண்ணையைக் கல்யாணம் முடிச்சிக்கிட்டாரு..” என சன்னமான சிரிப்பை ஒன்றை உதிர்க்க, 

 

அந்த சிரிப்பு இப்பொழுது, ப்ரணவ் முகத்திலும் ஒட்டிக் கொண்டது.. 

 

“ம்ம்.. சரியான கேடிப்பய.. எல்லா உண்மையும் தெரிஞ்சி வச்சிக்கிட்டுத் தான், எங்களையெல்லாம் அலற விட்டுருக்கான்..” என்றவர், 

 

“சரிங்க.. போகலாம்..” என இருவரும் ஒன்றாகவே நடந்து வெளியே வந்தனர்.. 

 

“இன்னைக்கும் காரா?..” என்றார் ப்ரணவ் சிறு சிரிப்புடனே, 

 

“இல்லை.. ஸ்கூட்டி..” என்றபடி தன் வெஸ்பாவைக் காட்டினார்.. 

 

“ம்ம்.. ஓகே போகலாம்..” என இருவரும் ஒன்று போல் பார்த்துக் கொண்டே பிரிந்துச் சென்றனர்.. 

 

பள்ளிக்கூடத்தின் வளாகத்தின் சோகத்தின் மறு உறுவமாய் அமர்ந்திருந்தாள் யாதிரா.. 

 

அவள் வாழ்க்கையில் என்னென்னவோ நடந்து விட்டது.. வந்தவர்கள், போனவர்கள் என அனைவருமே அவளை துன்புறுத்தித் தான் பார்க்கின்றனர்.. 

 

பெற்றவர்களே வேடிக்கைப் பார்க்கிறார்களே, என கோபமும் வந்தது.. 

 

ஆனால் யாரிடம் காட்டுவது தன் கோபத்தை.. 

 

அமைதியாக கண்ணீர் வழியே நின்றுக் கொண்டிருந்தவளை நோக்கி புட்பால் ஒன்று வந்தது.. 

 

சட்டென தன் முன்னால் வந்த பாலை தன் கைககளால் லாவகமாகப் பற்றிக் கொண்டாள்.. 

 

தன் கைகளில் இருந்த பாலை லேசாக தூக்கி எறிய, அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அபிஜித்.. 

 

அவனை மல்லியின் வீட்டில் பார்த்திருப்பதால், நன்கு அடையாளம் தெரிந்தது யாதிராவிற்கு.. 

 

அபிஜித்திற்கும், யாதிராவின் பிரச்சினை என்னவென்று தெரியும் என்பதால் சிறிது நேரம் அமைதியாக அவளையே பார்த்தான்.. 

 

அவனின் ஆளைக்கொல்லும் பார்வை, யாதிராவை என்னவோ செய்தது.. 

 

“எதுககு இப்படி பார்க்கிற?..” என எரிந்து விழுந்தாள்.. 

 

அதற்கும் அமைதியே அவ்விடம்.. 

 

“ஏன் இப்படி பார்க்கிறேன்னு கேட்கிறேன் ல..” என எரிந்து விழுந்தாள்.. 

 

“இல்லை எனக்கு ஒரு சந்தேகம் அதான், உன்கிட்ட கேட்கலாமா?.. வேண்டாமான்னு யோசிக்கிறேன்..” என்றான் அபிஜித்… 

 

“என்ன சந்தேகம்?..” என்றாள் தடுமாற்றத்துடன்.. 

 

“நீ அந்த போலீஸ்காரனை காதலிக்கிறே?.. ரைட்ட்..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தாள் யாதிரா.. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top