அழகன் 4
ருக்மணி சொன்ன அழகில் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்தே விட்டாள் ஆண்டாள்.
“அட பெருமாளே..! இந்த நாள எப்படி கடந்து நான் சம்சார சாகறதுக்குள் குதிக்க போகிறேனோ? நேக்கு பயந்து பயந்து வருதே..!” என்று தன் அருகில் தன்னைவிட நெடுநெடு என்று வளர்த்தியாய் முரட்டு தேகத்தோடு நின்று கொண்டிருந்த அழகனை கண்டு தொண்டைக்குள் ஏதோ ஒன்று அடைக்க… எச்சில் விழுங்கினாள் அவனை பய பார்வை பார்த்தப்படி..!
ருக்மணி எதோ மனைவி காதல் சொல்லியதும்.. அவள் அதிர்ந்து அமர்ந்ததும்.. தன்னை ஓரக் கண்ணால் அளவிடுவதையும்.. கண்டு அவனுக்கும் ஒரு அனுமானம் இருக்க, அக்கற்றை மீசையின் அடியில் ஒளிந்துக் கொண்டது அவனின் குறுநகை..!
“பொம்மா..! இருக்குடி ராவு உனக்கு” என்றவன், இடது கையால் மீசையை நீவிக் கொண்டான்.
அங்கயற்கண்ணி அழகனின் தங்கை..! ஆண்டாளை ஒராண்டு மூத்தவள், இன்னும் அவளுக்கு வரன் அமையவில்லை..!
அதனால் அவள் ஜாதகத்தில் கோளாறோ.. அழகில் கோளாறோ.. இல்லை வசதியில் கோளாறோ.. என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை..!
அவளுக்கு கோளாறு புத்தியில்.. அதாவது அவளது லட்சியத்தில்..!
அப்படி என்ன லட்சியம் என்று தானே கேட்கிறீர்கள்? அதை கதையின் போக்கில் புரிந்து கொள்வீர்கள்..!
அழகன் அங்கயற்கண்ணி எங்கே என்று தேட, அவளோ அப்போது தான் வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்த வரை கலைவாணி பிடித்துக் கொண்டு அத்தனை பேச்சு..!
அனைத்தையும் முகத்திலிருந்து பாவம் என்று வாங்கிக் கொண்டவர் நான் போய் அதனை கூட நிக்கேன் என்றவள் ஆண்டாள் அருகில் வர,
“கண்ணி.. நீ மயனிய பாத்துக்கோ, என் மகன் கத்திகிட்டே இருக்கா நான் என்னென்னு போய் பார்க்குறேன். கோடிப்பய மவேன் எப்பவும் கக்கத்துலேயே வச்சு சுத்த சொல்றியான்” என்று ருக்மணி அலுப்போடு மகனை தேடி நகர்ந்துவிட்டாள்.
அழகன் தங்கையை பார்த்து, “கண்ணி ஒன் மதனிய கொஞ்சம் ஓய்வா கூட்டுட்டு போய் வா..” என்றதும் அதன் அர்த்தம் புரிந்தவள்,
“வா மதனி” என்று ஆண்டாளை அழைக்க..
“எங்க அத்தாச்சி?” என்று கேட்டாள்.
வா கொஞ்ச நேரம் ரெஸ்ட் ரூம் போயிட்டு வருவோம் என்று உங்களை அழைத்துக் கொண்டு மணமகள் அறைக்கு செல்ல அங்கு ஒரு கூட்டமே அமர்ந்திருந்தது பாவமாக அருகில் இருந்து அங்கையர்க்கரணியை பார்த்தால் ஆண்டாள்.
இந்த கூட்டத்துக்குள்ள உன்ன விட்டா அவ்வளவுதான் பிரிச்சு மேஞ்சிடுவேன் நீ வா அங்க அண்ணன் ரூமுக்கு போகலாம் என்று அங்கே அவர்கள் உள்ளே போக இருந்து ஒன்று இரண்டு ஆண்களும் ஓய்வெடுக்கணும் என்பதை நீங்க எடுத்துக்கோங்க என்று நாகரீகமாக நகர்ந்து விட்டனர்.
கதவைத் தாள் போட்டுவிட்டு ஏசியை கூட்டி வைத்து அப்பாடா என்று அமர்ந்தனர் இருவரும்..!
”உன்னைய எல்லாம் நான் மதனினு கூப்பிடுற காலம் வரும்னு நான் கொஞ்சம் கூட நனைக்கல டி பால்கோவா” என்று நக்கல் அடித்தாள் அங்கயற்கண்ணி.
ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவள் என்பதாலும் அவர் அன்னையைப் போல வெள்ளை நிறத்தில் இருப்பதாலும் அவளை பால்கோவா என்று தான் சிறுவயதில் இருந்து அழைப்பால் அங்கயற்கண்ணி.
திருமணம் நிச்சயமானதிலிருந்து அவ்வாறு அழைக்கக்கூடாது என்று கலைவாணி கண்டிஷன் ஆக கூறி இருக்க அதனால் மற்றவர்களுக்கு முன் மாதிரி என்று கூப்பிட்டாலும் தனியாக இருக்கும்போது அந்த பால்கோவா தான் அவள் வாயில் வரும்.
“நேக்கு மட்டும் என்ன ஆசையா இப்படி தொக்க உங்க கைல வந்து மாட்டிக்க..! எல்லாம் உங்க அப்பத்தா சொக்கியம்மா செய்த சதி” என்று இவளும் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
”ஹா.. ஹா.. ஹா..” என்று வயிறு பிடித்துக் கொண்டு சிரித்தாள் கண்ணி.
“எதுக்கு அத்தாச்சி இப்படி சிரிக்கிற ஐயோ வாய மூடு..! உன் சத்தத்தை கேட்டு யாராவது கதவ உடைச்சிண்டு உள்ள வந்துட போறா?” என்று பதறினாள் ஆண்டாள்.
”அதில்லடி பால்கோவா..! இனி உனக்கும் எங்க அப்பத்தாவுக்கும் நடக்க போற கூத்த நினைச்சேன்னா சிரிப்பு வந்துட்டு” என்று மீண்டும் சிரித்தவளின் முதுகில் வேகமாக ஓர் அடி போட்டுவிட்டு “நான் ரெஸ்ட்ரூம் போறேன்” என்று குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.
திருமண விருந்தில் அழகனின் பங்காளி வீட்டு பிள்ளைகளும் அதாவது தம்பி தங்கைகள் முறையில் உள்ளவர்கள் எல்லாம்
“மதனிக்கு ஸ்வீட்டு ஊட்டு ணே..!
“இன்னும் நிறைய எடுத்து ஊட்டு..”
“நல்ல வாய் நிறைய ஊட்டு.. கிள்ளி ஊட்டாத ணே அள்ளி ஊட்டு..!” என்று அவர்கள் செய்த அலப்பறையில் ஒரு வழியாகி போனது என்னவோ ஆண்டாள் தான்.
அவளையும் விட்டு வைக்காமல் “என்ன மதனி.. இத்தூண்டுடு எடுத்து ஊட்டுறிக.. எங்க அண்ணன் யார் தெரியுமா ராஜ்கிரணுக்கே டஃப் கொடுக்குறவரு எலும்பு கடிக்கிறதுல நீ என்னமோ இத்தனைக்கு கொடுக்குறியே?”
“மயனி.. அந்த ஜாங்கிரி அப்படியே எடுத்து ஊட்டு அதெல்லாம் எங்க அண்ணே ஒரே வாயில திண்ணுடுவாரு” என்று அவளையும் பயமுறுத்தி அவர்கள் சொல்வதை எல்லாம் செய்ய வைத்தனர்.
இது எல்லாம் ரங்கநாயகி ஒருவித களிப்போடு மன நிறைவோடு பார்த்திருந்தார்.
“மதுரையிலையா பொண்ணு கொடுக்க போறீங்க? ஐயோ அங்கெல்லாம் வெட்டு குத்துன்னு இருக்குமே?” என்று அவர் வீட்டுக்கு அருகிருந்தவர்கள் எல்லாம் ரங்கநாயகி பயமுறுத்தி இருந்தனர்.
ஆனால் அவருக்கு தான் தெரியுமே நாத்தனாரின் குடும்பத்தை பற்றி..!
வெளியில் முரட்டுத்தனமாக தெரிந்தாலும் உள்ளுக்குள் அத்தனை குழந்தைத்தனமும் அன்பும் கொண்டிருப்பார்கள் பலாப்பழத்தை போல..!
இனி மகளின் வாழ்க்கை நலமோடு இருக்கும் என்று திருப்தியை தவிர வேறு என்ன வேண்டும் பெற்றவர்களுக்கு?
ஆண்டாளை இரவுக்கு தயார்படுத்துக் கொள்ளும் வேலையை ருக்மணி எடுத்துக்கொண்டாள்.
தங்கையை பார்த்து “ஓடு ஓடு என்னதான் நீ மதனியோட பெரியவளா இருந்தாலும்.. இங்கன நீ நிக்க கூடாதடி கண்ணி” என்று ருக்மணி அங்கயற்ண்ணியை விரட்ட, அதனைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தாள் ஆண்டாள்.
“ம்க்கும்.. சரி தான் போங்கடி..!” என்றவள், “அடியே பால்கோவா.. அங்கன போய் எங்க அண்ணன் அழகுல மயங்கி மயக்கம் கியக்கம் போட்டு தொலைச்சிடாதடி” என்று ஆண்டாளின் காதை கடித்து விட்டு ஓடினாள் அங்கயற்கண்ணி.
“ஏதே?” அதிர்ந்து பயந்த பார்வையோடு தான் அமர்ந்திருந்தாள் ஆண்டாள்.
அதன்பின் பெரியோர்களிடம் ஆசி வாங்கியப்பின், ருக்மணி ஆண்டாளை கொண்டு வந்து அழகனின் அறைக்கு வெளியே விட்டு சென்றாள்.
ஒரு பெரும் தயக்கத்தோடுதான் உள்ளே சென்று அவளுக்கு சற்றே நிம்மதி..! ஏனென்றால் அங்கு அழகன் இல்லை..!
“அப்பா..! பெருமாளே..!” என்று ஆசுவாச பெருமூச்சினை விட்டவள், அதன் பின் அழகனைப் பற்றி யோசனையில் மூழ்கி விட்டாள்.
“நேக்கு மட்டும் ஏன் இந்த அழகன் மாமாவை பிடிக்கவே இல்லை” என்று முதலிரவு அறையில் முழு அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தவள், அங்கே மேகத்தில் ஒளிந்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த நிலவினைப் பார்த்து கேட்டாள்.
அந்த வெண்ணிலவோ இந்த பெண் நிலவை பார்த்து “ஏன் உனக்கு தெரியாதா? இப்படி ஒரு முறை என்னைப் போல நீயும் பதுங்கி பதுங்கி விளையாடி அவரிடம் மாட்டிக் கொண்டு பின் அடி வாங்கியதை மறந்து விட்டாயா? அதனால் கூட இருக்கலாம்..!” என்று சொல்லி சிரித்து மீண்டும் மேகதினுள் மறைய..
‘ஒருவேளை அப்படியும் இருக்குமோ?’
என்று யோசித்தாள் ஆண்டாள்..!
‘அன்று நடந்த நிகழ்வு தான் என்னுள் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமோ? அவனை கண்டாலே பயந்து பதுங்கி ஓடும் அளவிற்கு?’ என்று சிந்தித்தவளின் சிந்தனை அன்றைய நாளுக்குச் சென்றது.
ஆண்டாள் தந்தை சாரங்கபாணியின் தாயார் இறந்திருந்த சமயம்..!
சாரங்கபாணி ஒரு பிராமண பொண்ணை திருமணம் செய்து கொண்ட விஷயம் அவ்வூரில் அனைவருக்குமே தெரியும்.
அவ்வப்போது குலதெய்வ கோவில் வழிபாடு பொங்கல் தீபாவளி என்று அனைத்து விசேஷங்களுக்கும் மனைவியையும் பெண்ணையும் தவறாமல் இங்கே அம்மா இருக்கும் தன் பூர்வீக ஊருக்கு அழைத்து வந்துவிடுவார் சாரங்கபாணி. அவரது தாயார் பார்வதியும் மருமகளையும் பேத்தியும் நன்றாகவே கவனித்துக் கொள்வார்.
அம்மாவைப் போல ஆண்டாள் அசைவத்தை ஒதுக்கினாலும் அப்பாவைக் கொண்டு அனைத்து உறவினர்களிடமும் நன்றாக தான் பழகுவாள்.
அப்பொழுது தான் பிளஸ் டூ அவள் முடித்திருந்த சமயம். அடுத்து என்ன செய்வது? என்று யோசித்து பெரிய சாதனையை படைக்கும் அளவுக்கு எல்லாம் அவள் சிங்கப்பெண் இல்லை சாதாரண பெண் மட்டுமே..!
அதனால் ‘ரிசல்ட் வரட்டும் பாத்துக்கலாம்.. அதன் பின் யோசிக்கலாம்.!’ என்று இவள் ரங்கநாயகியோடு கோவில் குளம் தன் பரதநாட்டியம் வகுப்பு என்று சுத்தி கொண்டு இருந்த நேரத்தில் அப்பாத்தா இறந்து விட்டார்கள் என்று சாரங்கபாணி இங்கே அழைத்து வந்துவிட்டார்.
அன்றுதான் பால் தெளி முடிந்து அனைவரும் அடுத்து எப்பொழுது காரியம் வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
இவளோ பெரியவர்களோடு பேசும் அளவுக்கு பெரியவளும் இல்லை. சிறு பிள்ளைகளோடு கலந்து விளையாடும் அளவுக்கு சிறுபிள்ளையும் இல்லை..!
அங்க எத்தனை இருந்திருந்தாலாவது அவளுடன் அவள் தன் நேரத்தை கழித்திருப்பாள். ஆனால் அங்கயற்கண்ணிக்கு அப்பொழுது செமஸ்டர் எக்ஸாம் நடந்து கொண்டு இருக்கு அவள் பால்த்தெளி முடிந்ததுமே அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டாள்.
ஆண்டாளோ என்ன செய்வது என்று தெரியாது ஓரமாக அமர்ந்திருந்தவளை அவளது ஒன்று விட்ட பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள் வந்து அழைத்து “வாங்க அக்கா விளையாடுவோம்” என்று இழுத்துச் செல்ல.. அன்னையிடம் தலையாட்டி விட்டு அவர்கள் பின்னே சென்றாள்.
சாரங்கபாணியின் வீடு சற்றே பெரிய வீடு. தாழ்வாரம் நான்கு கட்டு அடுக்கு பின் சமையலறை, வீட்டின் முன்னால் பெரிய இடம் என்று இருந்தது.
அந்த இடத்தில் தான் சாமியானா பந்தல் போட்டு வந்தவர்கள் இளைப்பாற நாற்காலிகள் எல்லாம் போட்டு வைத்திருந்தார்கள்.
சில ஆண்கள் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க.. பெண்கள் எல்லாம் வீட்டில் உள்ளே அமர்ந்து இருக்க..
இவள் பிள்ளைகளோடு ஓடிப் பிடித்து விளையாண்டு கொண்டிருந்தாள்.
அவளின் ஒன்று விட்ட சித்தாப்பா மகன் குமரன் இவளை துரத்திக் கொண்டு வர, வேகமாக ஓடி வந்தவளோ சட்டென கால் இடறி கீழே விழப்போனாள்..
அவள் கால் இடறிய வேகத்தில் அவளது இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக் கொள்ளும் முயற்சியில்.. அகலமாக விரித்துக் கொண்டு சரியப் போன வேளையில்… எதிரே வந்து கொண்டிருந்த அழகன் மேல் போய் பொத்தென்று மோதினாள் ..!!
கையில் மொபைலை வைத்து.. நோண்டிக்கொண்டே வந்த அழகன் சுதாரித்துக் கொள்ளும் முன்.. வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த ஜல்லிக்கட்டு காளையாய்… அவனை அவள் ஒரே முட்டாக முட்டித் தள்ளி விட்டாள்..!
அவ்வளவுதான்.. அவள் இடது பக்கத்தில் சரிந்து விழ, அவள் மீது விழுந்து விடக்கூடாது என்று சுதாரித்த அழகனோ அவனுக்கு இடது பக்கத்தில் இருந்த.. நாற்காலியில் மீது போய் மோதி தடுமாறி கீழே விழுந்தான்.
அவளுக்கு எங்கு அடிபட்டது என்றுகூட அவள் கவனிக்கவில்லை.
“அய்யய்யோ மாமா மேல மோதிட்டோமே..! இவர் வேற கோவக்காரராச்சே… போச்சு.. போச்சு..! ரங்கநாதா என்னை காப்பாத்து..!” என்று
அவளின் ஈரக்குலை எல்லாம் நடுங்க பதறி எழுந்து நின்றாள். அவளுக்கு பேசக்கூட வார்த்தைகள் வரவில்லை. நாக்கு தந்தி அடிக்க… அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள..!!
தடுமாறி எழுந்தவனோ தரையில் மோதிய மண்டையை தேய்த்துக் கொண்டான். சுர்ரேன்று வலியும் கோபமும் உச்சி மண்டைக்கு ஏறியது அவனுக்கு.
நாற்காலிக்கு அடியில் கிடந்த அவனது மொபைலை தேடி எடுத்தவன், அதை துடைத்து பார்த்தான். அதுவோ எப்பொழுதோ அதன் உயிரை இழந்து இருந்தது..!
சட்டென நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.. இல்லை இல்லை கண்களால் எரித்தான்..!
அந்த கண்களில் தெரியும் எரிமலை தனலை.. தாங்க முடியாமல்.. பயத்தில் பின்னுக்கு நகர்ந்தவள்,
“சாரி.. சாரி..”என மனதுக்குள் கதறிக் கொண்டிருந்தாள்.
ஆனால் ஒரு எழுத்து கூட அவளின் தொண்டையை தாண்டி வெளியே வரவில்லை. அவளின் கண்கள் நீர் கோர்த்துக் கொண்டது. அவள் மனதில் சொன்ன ஆயிரம் சாரிகளில் ஒற்றை சாரியை வாய் திறந்து அவள் கூறி இருந்தால் கூட அவனது கோபம் அடங்கி இருக்குமோ என்னவோ?
ஆனால் அழுத்தமாக தன்னை பார்த்துக் கொண்டு நின்றவளை கண்டு இவன் பல்லை கடித்தான்..!
(அடப்பாவி அந்த புள்ள பயந்து பார்க்கிறது.. உனக்கு அழுத்தமாக பார்க்கிற மாதிரி தெரியுதா??)
அடுத்தது என்ன நடக்கும் என்பதை அவள் ஓரளவு யூகித்தே இருந்தாள். அதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று அவள் சுற்றும் முற்றும் பார்க்க..
ஆனாலும் பயம் அவளை எங்கும் நகர விடவில்லை.. !!
இதற்கிடையில் அவளைத் துரத்திக் கொண்டு வந்த வாண்டு போன இடம் தெரியவில்லை..!!
ஆனால் வேறு சிலர் அவர்களை சுற்றி கூடியிருந்தது அவளுக்கு கொஞ்சம் மனப்பயத்தை போக்கியது.. இத்தனை பேர் இருக்கும் போது மாமா ஏதும் செய்து விடமாட்டார் என்று அவளை நம்பிக்கையை தகர்த்து எறிந்தான்.
அவன் எதுவுமே பேசவில்லை. நேராக அவளின் முன்னால் வந்து நின்றவன், அவள் என்ன என்று பார்க்கும் முன்,
”பளீர்.. !!” என அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
அவ்வளவுதான் அவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. கண்களுக்குள் மின்மினிகள் கூட்டம் கூட்டமாக பறக்கத் தொடங்கியது..!!
“பொம்பள புள்ள பார்த்து புதுசா நடந்துக்க தெரியல? வயசு என்ன ஆகுது? இப்பதான் சின்ன பிள்ளைகளோட ஓடி விளையாடுறியா? ஏத்தாப்புல யார் வராங்க என்ன வராங்கன்னு தெரிய வேணாம்..! அதுவும் வயசு பொண்ணுக்கு தெரிய வேணாம்? இப்படித்தான் மேல வந்து தொப்புன்னு விழுவியா? எங்க உங்க அம்மா அப்பா..” என்று அவன் போட்ட அதட்டலில்.. அவளுக்கோ மயக்கம் வராத குறை..!
அதற்குள் சத்தம் கேட்டு அங்குள்ளவர்கள் எல்லாம் வந்து இவர்களை சுற்றி கூடி விட்டார்கள்..!
யார் யாரோ வந்தார்கள்..
யார் யாரோ அவனை தடுத்தார்கள்.. என்னமோ திட்டினார்கள்..
யாரோ இவளிடம் ஆறுதலாக பேசினார்கள்..
இவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்..
ஆனால் இது எதுவுமே ஆண்டாளுக்கு தெரியவில்லை.. !!
அவளை யாரோ கன்னம் தடவி அவளை தோளோடு அணைத்து உள்ளே அழைத்துக் கொண்டு போனது மட்டும் தான் அவளுக்கு தெரிந்தது..
ரங்கநாயகி மகளை அழைத்து தனியாக வந்து “தப்பு உன் பேர்லையா?” என்று சற்று கோபமாக கேட்டார்.
மெதுவாக தலையை ஆட்டினாள்.
” ம்ம்.. !!” என்று..! அவளின் அழுகை ஓய்ந்து விட்டிருந்தது..! ஆனால் பயம் குறையவில்லை..!
அவன் அடித்த அடியில் கன்னம் மட்டும் இன்னும் தீயாக எரிந்து கொண்டிருந்தது.!
அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு வந்த கலைவாணியோ மருமகளின் கன்னத்தை தாடையை பற்றி திருப்பி திருப்பி பார்த்து,
”அடிச்சானா.. அவன்??” என்று நம்ப மாட்டாமல் கேட்க அவளும் ஆம் என்று தலையசைத்தாள்.
அவளை லேசாக அணைத்தபடி என் கன்னம் தொட்டு வருடிய அவளின் அத்தையோ,
”மொரட்டு பய மொவன்.. எப்படி அறைஞ்சிருக்கியான் பாரு.. ?? ஒரு வயசுப் பொண்ணுணு கூட பாக்காம..? அவன.? ரொம்ப வலிக்குதா டா தங்கம்..?” என்று அக்கறையும் ஆத்திரமுமாக கேட்ட கலைவாணியின் கையை பற்றிக் கொண்டவள்,
”இல்ல அத்த.. வலியில்ல!!” சமாளித்துக் கொண்டு சொன்னாள்.
“அவனுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் டா தங்கம்” என்று கேட்டு அத்தையின் இந்த வார்த்தையை கண்டு
“அய்யய்யோ அத்த நீங்க ஏன் என்னாண்ட மன்னிப்பு கேட்கிறேள்? அப்படி எல்லாம் நேக்கு வலிக்கல தப்பு என் மேல தான். நான் தான் அவர் வருவதை பார்க்காம மேலே போய் மோதிட்டேன்” என்ற மருமகளை கண்டு மனதுக்குள் ஓர் நிம்மதி..
கண்டிப்பாக வேறு யாராக இருந்தாலும் இந்த பிரச்சனை பெரிய பிரச்சினையாக உருமாறி இருக்கும். அதுவும் ஒரு வயசு பொண்ண எப்படி இவன் கைநீட்டி அடிக்கலாம் என்று பஞ்சாயத்தை கூட்டி இருப்பார்கள்.
என்னவோ தன் தம்பி மகள் அமைதியான பெண் என்பதால் இந்த பிரச்சனை இதோடு முடிந்து விட்டது என்ற கலைவாணிக்கு மகனின் மீது அத்தனை கோபம் ஆத்திரம்..!
‘இந்த அம்மா விசேஷம் எல்லாம் முடியட்டும் அப்புறம் இருக்குடா மவனே.. உனக்கு?’ என்றும் மனதுக்குள் திட்டிக்கொண்டார் மகனே.
”அவேன் சின்ன வயசுலருந்தே அப்படித்தான் ரொம்ப மொரட்டு தனமா வளந்துட்டியான். நானே இப்பக்கூட அவன்கிட்ட பேசனும்னா.. ஒரு பத்தடி தள்ளி நின்னுதான் பேசுவேனா பார்த்துக்கோயேன்.. அவேன் என் மகன் தான்.. ஆனாலும் அவன் கோபத்த பாத்தா எனக்குமே பயம் வந்துரும். என்னடா கண்ணு பண்றது? அவன எப்படி சரி பண்றதுனே இங்கன யாருக்கும் தெரியல…!!” என் கன்னம் வருடிக் கொண்டே கூறினார்.
”ஏன் அத்த.. அவரு அவ்வளவு கோபக்காரரா? பரவால்ல அத்த.. நான் ஒரு அடியோட தப்பிச்சேனே.. அதுவே பெரிய விசயம்..!” சொல்லி விட்டு லேசாக சிரித்தாள் ஆண்டாள்.
“பார்ரரா.... கன்னத்துல விரல் பதியற மாதிரி அறை வாங்கிட்டு அதையும் சிரிச்சிட்டே சொல்றா? ” என்றார் தம்பி மகளுக்காக உருகினார் கலைவாணி.
மருமகளின் இந்த புரிந்து தன்மையை கண்டு மெச்சுதல் அத்தையான கலைவாணிக்கு. அருகிருந்த ரங்கநாயகி முகமும் சற்றே சோகமாக இருப்பதைக் கண்டு “மன்னிச்சுக்கோ நாயகி இப்படி ஒரு மொரட்டு பீச வளர்த்து வச்சிட்டேன்.. நான் அவனுக்கு சொல்லி புரிய வைக்கிறேன். நீயும் மனசுல எதுவும் வச்சுக்காத ஏதோ ஒரு கோபத்தில் பண்ணிட்டியான்” என்று ரங்கநாயகியை அவர் சமாதானப்படுத்தினார்.
கலைவாணி நாத்தனார் என்று தன் அடக்குமுறை அராஜகத்தை எல்லாம் ஒருபோதுமே நாயகியிடம் காட்டியதில்லை. தன் சொந்த தங்கை போலவே தான் பாவித்து அத்தனையும் செய்வார்.
அவரின் நற்குணத்தை புரிந்து கொண்ட நாயகியும் “தம்பி அப்படி கோபப்பட்டதுல நீங்க என்ன பண்ணி பண்ணுவேள் மன்னி.. இதை பெரிய விஷயமா பார்க்க வேண்டாம் மறந்துடுவோம் விடுங்கோ..” என்று பெருந்தன்மையாக கூற..
“உனக்கு ரொம்ப பெரிய மனசு நாயகி” என்று தம்பி மனைவி கட்டிக் கொண்டவர், சட்டென்று மருமகளின் கன்னத்தை பார்த்து அதிர்ந்து
“கன்னத்துல விரல் தடம் அப்படியே இருக்கே..!! வா. வா.. உனக்கு மஞ்சப் பத்து போடுறேன்” கையோடு மருமகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் கலைவாணி..
ரெண்டு நாள் ஆகியது அந்த கன்னிப்போன கைத்தடம் கன்னியவளின் கன்னத்திலிருந்து மறைய..!!
அதை பார்க்கும் போதெல்லாம் அவன் மீதான பயமும் இருந்து கொண்டே இருந்தது ஆண்டாளுக்கு..!
எப்போதுடா அப்பத்தாவின் காரியம் முடியும் ஊருக்கு ஓடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அந்த நாளைக்கு பிறகு அவள் அழகனை பார்க்கவே இல்லை. பார்க்கும் சந்தர்ப்பமும் அமையவில்லை..! அப்படியே சந்தர்ப்பம் அமைந்தாலும் அவன் கண்முன்னே இவள் வரவே மாட்டாள்.
அப்படி பயந்த பிள்ளையை தான் பிடித்து அவனுக்கே கட்டி வைத்திருக்கின்றனர் இந்த உறவுக்காரர்கள்..!
என்ன
சொல்வது விதியின் விளையாட்டை..!!
அப்பொழுது அரை கதவு திறக்கப்பட்ட சத்தத்தில் இவள் அதிர்ந்து திரும்ப.. அங்கே அறை கதவை அடைத்தப்படி திரும்பினான் அவள் எண்ணத்தின் நாயகன்..!
ஆண்டாளின் அழகன்.. கள்ளழகன்..!
தொடரும்..
