மௌனமாக வந்த காதல்
 
Share:
Notifications
Clear all

மௌனமாக வந்த காதல்

 

(@nikitha-sree)
Member Moderator
Joined: 1 month ago
Messages: 21
Thread starter  

 

 

அத்தியாயம் 14

 

பழைய சேமிப்புக் கிடங்கு

 

“அந்தக் ஃபைல்களை உனக்குக் கிடைச்சிருக்கக் கூடாது…”

 

ரவியின் வார்த்தைகளைக் கேட்ட ஆதித்யா அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான்.

 

“மாமா, ஏன் இப்படிச் சொல்றீங்க? அந்தக் ஃபைல்களை என்ன இருக்கு? சேகர் சார் எங்கே?”

 

ரவி சுற்றிலும் பார்த்தார்.

 

“முதல்ல இங்கிருந்து வெளியே போகலாம். இந்த இடம் பாதுகாப்பானது இல்லை.”

 

“இல்லை! நான் எங்கேயும் வர மாட்டேன். இத்தனை வருஷமா என் அப்பாவைப் பத்தி உண்மை தெரியாம இருந்திருக்கேன். இப்போ இந்தக் ஃபைல்களை கிடைச்சிருக்கு. இதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம நான் போக மாட்டேன்.”

 

ரவி பெருமூச்சு விட்டார்.

 

“ஆதித்யா, உன் அப்பாவை நான் ஏமாத்தல. அவரைக் காப்பாற்றத்தான் முயற்சி செய்தேன்.”

 

“அப்படின்னா அவர் ஏன் இறந்தார்?”

 

அந்தக் கேள்வி ரவியின் மனதைப் பாதித்தது.

 

அவர் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு பேசத் தொடங்கினார்.

 

“உன் அப்பா இறப்பதற்கு முன்னாடி, அந்த பிசினஸ் அக்ரீமெண்ட் நடந்த மோசடியைக் கண்டுபிடிச்சார். அந்த மோசடியைச் செய்தவர் நம்ம குடும்பங்களுக்கு நெருக்கமானவர். அவரைப் பற்றிய ஆதாரத்தை உன் அப்பா சேகரிடம் கொடுக்க நினைச்சார்.”

 

“அப்போ சேகர் சார்விடம் அந்த ஆதாரம் இருந்ததா?”

 

“ஆமாம். ஆனா அந்த ஆதாரம் வெளியே வந்தால் பலருடைய வாழ்க்கை பாதிக்கப்படும். அதனால்தான் அதை மறைக்க முயற்சி செய்தாங்க.”

 

ஆதித்யா ஃபைல்களைத் திறந்தான்.

 

அதற்குள் இருந்த டாக்குமெண்ட் ஒரு பெயர் மட்டும் சிவப்பு மையால் வட்டமிடப்பட்டிருந்தது.

 

விக்ரம்.

 

ஆதித்யாவின் முகம் மாறியது.

 

“விக்ரமா? என் நண்பனா?”

 

ரவி தலையசைத்தார்.

 

“அந்தப் பெயர் மட்டும் பார்த்து முடிவு செய்யாதே. இந்த டாக்குமெண்ட்த்தில் இருக்கிற கையெழுத்து உண்மையானதா என்பதையும் நாம் கண்டுபிடிக்கணும்.”

 

ஆதித்யாவால் நம்ப முடியவில்லை.

 

“விக்ரம் என் நண்பன். இத்தனை வருஷமா என்னோட இருந்திருக்கான். அவன் எப்படி இதுல சம்பந்தப்பட்டிருக்க முடியும்?”

 

“உண்மை எதுவாக இருந்தாலும், ஆதாரத்தோட நிரூபிக்கணும்.”

 

அப்போது இருவருக்கும் பின்னால் ஒரு சத்தம் கேட்டது.

 

ஆதித்யா திரும்பிப் பார்த்தான்.

 

அங்கே சேகர் நின்றிருந்தார்.

 

அவருடைய முகத்தில் காயம் இருந்தது.

 

“சேகர் சார்!”

 

ஆதித்யா அவரிடம் ஓடிச் சென்றான்.

 

“உங்களுக்கு என்ன ஆச்சு?”

 

“என்னைப் பற்றிக் கவலைப்படாதே, ஆதித்யா. அந்தக் ஃபைல்களை யாரிடமும் கொடுத்துவிடாதே.”

 

ரவி உடனே அவரிடம் சென்றார்.

 

“சேகர், உங்களை யார் தாக்கினது?”

 

சேகர் பதில் சொல்லாமல் ஆதித்யாவைப் பார்த்தார்.

 

“உன் நண்பன் விக்ரமைப் பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டிய உண்மை இருக்கு. ஆனா அவசரப்பட்டு அவனை எதிர்கொள்ளாதே.”

 

ஆதித்யாவின் மனதில் சந்தேகம் அதிகரித்தது.

 

அனன்யாவின் பதற்றம்

 

அனன்யா ஆதித்யாவைத் தொடர்புகொள்ள முயன்றாள். ஆனால் அவனுடைய போன் இணைக்கப்படவில்லை.

 

அவள் பிரியாவை அழைத்தாள்.

 

“பிரியா, ஆதித்யாவைத் தொடர்புகொள்ள முடியல. அவர் எங்கே இருக்கார்னு தெரியுமா?”

 

“தெரியலடி. ஏன், என்ன ஆச்சு?”

 

“அவர் பழைய சேமிப்புக் கிடங்குக்குப் போயிருக்கலாம். அங்கே ஏதோ ஆபத்து இருக்குன்னு எனக்குப் பயமா இருக்கு.”

 

பிரியா உடனே சொன்னாள்.

 

“நீ தனியா அங்கே போகாதே. முதல்ல அவரைப் பற்றிய தகவலைக் கண்டுபிடிப்போம்.”

 

அனன்யா பதற்றத்துடன் நடந்துகொண்டிருந்தபோது, அவளுடைய போன்க்கு ஒரு படம் வந்தது.

 

அந்தப் படத்தில் ஆதித்யா, ரவி, சேகர் ஆகிய மூவரும் பழைய சேமிப்புக் கிடங்கில் இருந்தார்கள்.

 

அதற்குக் கீழே ஒரு செய்தி இருந்தது.

 

“உன் அப்பா மறைத்த உண்மை இப்போ ஆதித்யாவுக்குத் தெரிஞ்சிடுச்சு. இனிமேல் அவன் உன்னை நம்ப மாட்டான்.”

 

அனன்யாவின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

 

“யார் இப்படி செய்றாங்க? எங்களை ஏன் பிரிக்க நினைக்கிறாங்க?”

 

அவள் உடனே ஆதித்யாவுக்கு ஒரு செய்தி அனுப்பினாள்.

 

“ஆதித்யா, என்ன நடந்தாலும் என்னிடம் உண்மையை மறைக்காதீங்க. நான் உங்களை நம்புறேன்.”

 

அந்தச் செய்தியை அனுப்பிய பிறகும் அவளுடைய மனம் அமைதியடையவில்லை.

 

விக்ரமின் ரகசியம்

 

மறுபுறம், விக்ரம் தனியாக அமர்ந்திருந்தான்.

 

அவனுடைய போன்யில் ஒரு அழைப்பு வந்தது.

 

“சொல்லுங்க.”

 

“ஆதித்யாவுக்கு அந்த ஃபைல்களை கிடைச்சிடுச்சு.”

 

விக்ரம் அதிர்ச்சியடைந்தான்.

“என்ன சொல்றீங்க? அந்த ஃபைல்களை இன்னும் சேகர்கிட்டதான் இருக்குன்னு நினைச்சேன்.”

 

“இப்போ அது ஆதித்யா கையில இருக்கு. நீ என்ன செய்யப் போற?”

 

விக்ரம் பதற்றத்துடன் எழுந்தான்.

 

“அந்த ஃபைல்களை அவனிடம் இருக்கக் கூடாது. அதுல இருக்கிற சில விஷயங்கள் வெளியே வந்தா, நான் மட்டுமில்லை… இன்னும் சிலரும் மாட்டிக்குவாங்க.”

 

“அப்படின்னா உனக்குத் தெரிஞ்ச வேலையைச் செய்.”

 

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

விக்ரம் தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டான்.

 

“மன்னிச்சிடு, ஆதித்யா. நான் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியாது.”

 

அவன் பழைய அலமாரியைத் திறந்து ஒரு புகைப்படத்தை எடுத்தான்.

 

அந்தப் புகைப்படத்தில் விக்ரமின் அப்பாவும் ஆதித்யாவின் அப்பாவும் ஒன்றாக நின்றிருந்தார்கள்.

 

புகைப்படத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்த வரிகளைப் படித்ததும் விக்ரமின் கண்கள் கலங்கின.

 

“நடந்த தவறுக்காக என் மகனைத் தண்டிக்காதீர்கள்.”

 

விக்ரம் அந்தப் புகைப்படத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.

 

“அப்பா… நீங்க செய்த தப்பைச் சரி செய்ய நான் இன்னும் எவ்வளவு நாள் பொய் சொல்லணும்?”

 

பழைய நட்பின் சோதனை

 

ஆதித்யா வீட்டிற்குத் திரும்பியதும் விக்ரமை அழைத்தான்.

 

“விக்ரம், உன்னிடம் முக்கியமான விஷயம் பேசணும். உடனே என்னைப் பார்க்க வா.”

 

விக்ரம் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு பதிலளித்தான்.

 

“சரி, வர்றேன்.”

 

சில நேரத்தில் விக்ரம் வந்தான்.

 

ஆதித்யா அவனுக்கு முன்னால் அந்தப் புகைப்படத்தையும்   ஃபைல்களைலிருந்த டாக்குமெண்ட் வைத்தான்.

 

விக்ரமின் முகம் மாறியது.

 

“இந்த டாக்குமெண்ட்த்தில் உன் அப்பாவோட பெயர் இருக்கு. இதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?”

 

விக்ரம் பதில் சொல்லாமல் நின்றான்.

 

“விக்ரம், நான் உன்னை என் நண்பனா நம்புறேன். அதனால்தான் நேரடியா கேட்கிறேன். உன் அப்பாவுக்கும் என் அப்பாவோட மரணத்துக்கும் என்ன சம்பந்தம்?”

 

விக்ரம் தலையைக் குனிந்தான்.

 

“ஆதித்யா, நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.”

 

“அப்படின்னா சொல்லு!”

 

“ஆனா அதுக்கு முன்னாடி நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். என் அப்பா செய்த தவறுகளுக்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கத் தயாரா இருக்கேன். ஆனால் நான் செய்யாத தவறுக்கு என்னைக் குற்றவாளியா நினைக்காதே.”

 

ஆதித்யா அதிர்ச்சியடைந்தான்.

 

“அப்படின்னா உன் அப்பாவுக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியுமா?”

 

விக்ரம் கண்களை மூடிக்கொண்டு தலையசைத்தான்.

 

“ஆமாம்.”

 

“என் அப்பாவுக்கு என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியுமா?”

 

விக்ரம் பதில் சொல்ல முயன்றான். ஆனால் அவனுடைய கண்களில் கண்ணீர் நிறைந்தது.

 

“உன் அப்பா இறந்த அந்த இரவு… என் அப்பா அவரைச் சந்திச்சார்.”

 

ஆதித்யா எழுந்து நின்றான்.

 

“என்ன சொல்ற?”

 

“அந்தச் சந்திப்புக்குப் பிறகு என் அப்பா வீட்டுக்கு வந்தபோது அவருடைய சட்டையில் ரத்தம் இருந்தது.”

 

ஆதித்யா அதிர்ச்சியில் உறைந்து போனான்.

 

“அப்போ உன் அப்பாதான்…”

 

“இல்லை!” என்று விக்ரம் உடனே கத்தினான்.

 

“அந்த ரத்தம் எப்படி வந்ததுன்னு எனக்குத் தெரியாது. நான் கேட்டப்போ அவர் பதில் சொல்லல. அடுத்த நாள் முதல் அந்தச் சம்பவத்தைப் பற்றி பேசவே கூடாதுன்னு என்னை எச்சரித்தார்.”

 

ஆதித்யாவின் கண்களில் கோபமும் வலியும் கலந்திருந்தன.

 

“இதை இத்தனை வருஷமா என்கிட்ட ஏன் மறைச்ச?”

 

விக்ரம் கண்ணீருடன் பதிலளித்தான்.

 

“என் அப்பாவைக் காப்பாற்றணும்னு நினைச்சேன். ஆனால் இப்போ உன்னிடம் பொய் சொல்லிக்கிட்டே இருக்க முடியல.”

 

அனன்யாவின் முடிவு

 

அனன்யா ஆதித்யாவைச் சந்திக்க வந்தாள்.

 

அவன் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்ததும் அவள் அருகில் சென்றாள்.

 

“ஆதித்யா, என்ன நடந்தது?”

 

அவன் அவளைப் பார்த்தான்.

 

“விக்ரமின் அப்பாவுக்கும் என் அப்பாவோட மரணத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. ஆனா முழு உண்மை இன்னும் தெரியல.”

 

அனன்யா அவனுடைய கையைப் பிடித்தாள்.

 

“நாம எல்லா ஆதாரங்களையும் சேர்த்து உண்மையைக் கண்டுபிடிப்போம்.”

 

ஆதித்யா அவளைப் பார்த்தான்.

 

“அனன்யா, இந்தப் பிரச்சினை நம்ம காதலைப் பாதிக்குமோன்னு பயமா இருக்கு.”

 

அவள் அவனுக்கு அருகில் வந்து நின்றாள்.

 

“உண்மையைத் தேடுறதால நம்ம காதல் அழியாது. நாம ஒருத்தரை ஒருத்தர் நம்புறதை நிறுத்தினாதான் அது அழியும்.”

 

ஆதித்யா அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

 

“என்னை விட்டுப் போயிடாதே.”

 

“நீங்க உண்மையை மறைக்காத வரைக்கும் நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்.”

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

 

அந்த நேரத்தில் ஆதித்யாவின் கபோன்க்கு ஒரு புதிய செய்தி வந்தது.

 

“விக்ரமின் அப்பாவை மட்டும் சந்தேகப்படாதே. உன் அப்பாவின் கடைசி அழைப்பைப் பெற்றவர் யார் என்று கண்டுபிடி.”

 

அந்தச் செய்தியைப் படித்த ஆதித்யா மெதுவாகத் தலையை உயர்த்தினான்.

 

அவனுடைய அப்பாவின் கடைசி அழைப்பு…

 

அதைப் பற்றி லட்சுமி ஒருமுறை குறிப்பிட்டிருந்தாள்.

 

ஆனால் அந்த அழைப்பைப் பெற்றவர் யார் என்று அவள் சொல்லவே இல்லை.

 

ஆதித்யா உடனே தன் அம்மாவை அழைத்தான்.

 

“அம்மா, அப்பா இறந்த அந்த இரவு அவருடைய கடைசி அழைப்பு யாருக்குப் போனது?”

 

மறுமுனையில் சில நொடிகள் அமைதி நிலவியது.

 

பிறகு லட்சுமி நடுங்கும் குரலில் பதிலளித்தாள்.

 

“அந்த அழைப்பு… அனன்யாவின் அப்பா ரவிக்குப் போகவில்லை, ஆதித்யா. அது உன்னோட அப்பாவோட வழக்கறிஞருக்குப் போனது.”

 

ஆதித்யா அதிர்ச்சியுடன் கேட்டான்.

 

“அவர் யார், அம்மா?”

 

லட்சுமி சொன்ன பெயரைக் கேட்டதும் ஆதித்யாவின் முகம் வெளிறியது.

 

அந்த வழக்கறிஞர் வேறு யாருமில்லை… இப்போது ஆதித்யாவின் குடும்பத்துக்காக வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்தான்!

 

தொடரும்… ❤️

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top