காதலி 3.2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 316
Thread starter  

காதலி 3.2

 

அதேநேரம் அரண்மனையில்..

 

 

அவந்திகா இன்னும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாக பிரசாத்.. சோமையா.. நீலிமா.. அவரது கணவர்.. அனுமாலி அனைவரும் மிகமிக ரகசிய அறையில் பேசிக் கொண்டிருந்தனர்.

 

 

 

வெளியே அனைவருக்கும் வாஹினி மருத்துவமனையில் அன்னை கூட இருப்பதாகவும்.. அது தெரியாமல் இங்கே காணும் காணும் என்று தேடி கொண்டிருந்ததாகவும் விஷயம் பகிரப்பட்டு அதுவே உண்மை என்று நம்ப வைக்கப்பட்டது.

 

 

 

"அப்படி எங்கு தான் போயிருப்பா பாப்பா??" என்று சோமையா அழுது அழுது சிவந்த கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் ஒரு தரம் அக்காவையும் மற்றவர்களையும் பார்த்து கேட்டார்.

 

 

 

நீலிமாவும் மூக்கை உறிஞ்சி கொண்டுதான் இருந்தார். என்ன இருந்தாலும் அண்ணனின் ஒற்றை வாரிசு அல்லவா??

 

 

"எங்கே போயிருப்பாள்? எப்படி போயிருப்பாள்?" என்று திரும்பத் திரும்ப இவர்கள் எல்லாம் பேசிக் கொண்டே இருந்தாலும் ஒன்றும் தெரியவில்லை. வீட்டை சுத்தி கேமராக்கள் இருந்தாலும் இவள் அந்த காரில் ஏறியதும் பின்பு தூக்கத்தில் சீட்டிலேயே படுத்து விட்டதும் எதுவும் பதிவாகவில்லை. அதேபோல அந்த கார் வெளியே செல்லும்போது சீட்டோடு சீட்டாக படுத்திருந்த இவளும் தெரியவில்லை.

 

 

அதனால் யாரு எங்கே என்று புரியாமல் தவித்தனர்??

 

 

போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா என்று நினைக்க.. வாஹினியை காணவில்லை என்று விஷயம் தெரிந்தால் அவர்களது பங்குகள் சரியக்கூடும். ஏன் இந்த கேஸ் சோமையா மீதும் நீலிமா மீதும் கூட திரும்ப வாய்ப்புகள் அதிகம்.

 

 

ஆனால் நாக பிரசாத் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தானே கண்டுபிடிப்பதாக அவர்களுக்கு வாக்கு கூறினான். ஒருபுறம் போலீஸ் கமிஷ்னரை அழைத்து மிகமிக இரகசியமாக இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று சோமையாவும் நீலிமாவும் கூறியிருந்தனர். மறுபுறமாக பிரசாத் தன் தொழில் துறை வட்டாரங்களில் இருக்கும் அடியாட்ளை இதற்காக இறக்கி விட்டான்.

 

 

 

வத்ஸவ் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் இது பற்றி விசாரிக்கலாமா என்று நீலிமாவிடம் கேட்க.. வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டார். இக்கால இளைஞர்கள் சும்மா இராமல் சோசியல் மீடியாவின் துணையை தான் தேடுவீர்கள். அது இன்னும் வாஹினியின் உயிருக்கு ஆபத்து என்று தடுத்துவிட்டார். இன்னும் தன்னை சின்ன பிள்ளையாக எண்ணும் இந்த அம்மாவை கண்டாலே வரவர வெறுப்பு தான் மண்டியது வத்ஸவ்வுக்கு.

 

 

 

அதே அரண்மனையில் மறு மூலையில் உள்ள ரகசிய அறையில் இருந்த உருவம் தன்னுடைய ரகசிய அலைபேசியில் இருந்து யாருக்கோ அழைத்தது.

 

 

 

"அவ என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டா.. நாம சொன்ன ஆட்கள் கடத்தல.. எப்படியோ எங்கேயோ மிஸ் ஆகியிருக்கு. பிறந்தநாள் விழாவில் அவளை தூக்கனும்னு எவ்வளவு கச்சிதமா ஸ்கெட்ச் போட்டும் அவத தப்பிச்சிட்டா. ஆனால் அவ எங்கே இருந்தாலும் யார்கிட்ட இருந்தாலும் என் கஸ்டடிக்கு வந்தே ஆகணும் அதை நீ முடிக்க வேண்டும்" என்றது.

 

 

 

இங்கே.. ஜித்து வீட்டில்..

 

 

 

மதியம் கூட உணவுக்கு எழுந்திருக்காமல் நல்ல அடித்து போட்டது போல நன்றாக உறங்கி எழுந்தாள் வாஹினி.

 

 

எவ்வளவு திருப்பள்ளியெழுச்சி பாடியும் கதவு திறக்காததால் கோபம் கொண்டு அதை உதைத்தவன் வெளியிலேயே படுத்து உறங்கிவிட்டான் ஜித்து. 

 

அப்போதுதான் வயிற்றில் ஏதோ அசௌகரிய உணர்வு அவளுக்கு குறுகுறுவென்று பசி ஆரம்பிக்க விழித்தவள் மெல்ல எழுந்து அந்த அறையில் இருந்த குளியலறையில் சுத்தப்படுத்திக் கொண்டு.. கதவை திறந்து பார்க்க மூவரும் மூன்று திசையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

 

 

 

"பசிக்குதே!! என்ன செய்றது?" என்று இவள் சமையலறையில் ஏதோ உருட்ட அந்த சத்தத்தில் சட்டென்று விழித்த ஜித்து.. "ஏ பால் டப்பா கும்பகர்ணியாட்டம் இப்படி படுத்து தூங்குற.. இந்த வீட்டில் பாத்ரூம் டாய்லெட் அந்த ரூம்ல தான் இருக்கு ஒரு ஆத்திர அவசரத்துக்கு மனசன் போக முடியாதடி!!" என்று திட்டிக்கொண்டே அவசரமாக செல்ல.. இவள் அங்கிருந்த ஒவ்வொரு டப்பாவையும் ஆராய்ந்து பார்த்தாள் எதிலும் ஒன்றுகூட இல்லை சாப்பிடுவதற்கு தோதாக.. 

 

 

 

கடுப்பில் வந்தவள் தூங்குகின்ற இருவரையும் பார்த்து வேண்டுமென்றே இருவர் காலையும் நங்கென்று மிதித்து விட்டு சென்றாள்.

 

 

 

ஆஆஆஆஆ… கத்தி கொண்டு எழுந்த ஜிகா மெகா இருவரும் அருகில் பாவமாக அமர்ந்திருந்த வாஹினியை பார்த்து.. 'அவளாக இருக்குமோ? ச்சீ.. பாக்கவே பாவமா இருக்கா.. பக்கத்தில் படுத்திருக்கும் எருமை தான் மிதித்து இருக்கும்" என்று இருவரும் ஒரேமாதிரி சிந்தித்து தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

 

 

 

அறையில் இருந்து வெளியே வந்த ஜித்து.. "டேய் எப்ப பாரு சின்னப்பிள்ளை மாதிரி அடிச்சிட்டு நிப்பிங்களா டா? இந்த காரை இன்னைக்கு நான் போய் பார்ட்டி கிட்ட கொடுத்துட்டு வரணும். நான் வரைக்கும் இந்த பால் டப்பா வெளிய போகாம பாத்துக்கோங்க..

 

ஹரிதா ஒருத்தி கண்ணுல பட்டபோதும் முழு சென்னைக்கு தெரிஞ்ச மாதிரி சரியா??" என்றவன் வாஹினியை முறைத்துக் கொண்டே வெளியில் சென்றான்.

 

 

 

அவன் சென்றதும் இவள் இருவரையும் பார்த்து வயிறு பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று சைகை காட்ட, சரோ கடையில் இருப்பதை பார்த்து அவளுக்கு சாப்பிட வாங்கி வந்து கொடுத்தனர்.

 

 

சாப்பிட்டு முடித்தவள் நல்ல பிள்ளை மாதிரி அமர்ந்து இருந்தாலும் அடுத்து என்ன செய்வது எப்படி வீட்டுக்கு போவது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

 

 

அந்தக் காரை ஜித்து விற்றதோ நாக பிரசாத் ஆள் ஒருவனிடம் தான்.

 

 

இரவோடு இரவாக வந்தவன் ஜிகா மெகாவை பார்க்க இருவரும் ஓரமாக அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். இவள் எதையோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

மெல்ல அவளை தொட்டு எழுப்பியவன் வா போகலாம் என்க.. அவள் புரியாமல் பார்க்க.. "யூ.. கோ.. யுவர் ஹவுஸ். அப்போ தான் எனக்கு பீஸ்" என்றான்.

 

 

 

இப்போதைக்கு வேறு வழியில்லை தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல் என்று நினைத்தவள், போகலாம் என்று தலையசைக்க.. அவன் எடுத்து வந்திருந்த வேறு ஒரு காரில் யாரும் தெரியாமலே அமரவைத்தவன், காரை ஆந்திராவை நோக்கி ஓட்ட.. ஒரு‌மணி நேர பிரயாணத்தில் வழியில் பார்ப்பது எல்லாத்தையும் இவள் கேட்க வேறு வழியின்றி வாங்கி குவித்தான்.

 

 

 

எத்தனை நாள் கனவு இது!! ஸ்ட்ரீட் ஃபுட் பார்க்கும்போதெல்லாம் இவளுக்கு நாவில் வாட்டர் ஃபால்ஸ் வரும். ஆனால் அவள் இருக்கும் நிலையில் இறங்கி அவற்றை சாப்பிடவே முடியாது. வீட்டில் கேட்டால் செய்வதற்கு அத்தனை சமையல்காரர்கள் இருந்தாலும் இந்த டேஸ்ட் வருமா? என்று பலமுறை ஏங்கி இருக்கிறாள்!!

 

 

 

இன்று அவளது ஏக்கங்கள் அனைத்தையும் தீர்த்து வைத்த ஜித்து மீது ஒரு நன்றி உணர்வு வந்தது. கூடவே ஒரு இரவு ஒரு பகல் இவர்களோடு இருந்தாலும் தன் பெண்மைக்கு எந்த வித பங்கமும் வராமல் பார்த்துக் கொண்டு தன் வயிறையும் வாட விடாமல் பார்த்து கொண்டவன் மீது நன்மதிப்பு ஏற்பட்டது வாஹினிக்கு!!

 

 

 

ஆந்திரம் பார்டரை தாண்டி சென்று கொண்டிருந்த நேரத்தில்.. மீண்டும் பசிக்குது என்று அவள் வயித்தை தடவ.. தலையில் அடித்துக் கொண்டான் ஜித்து.

 

 

"உன்னை கட்டுறவன் பாவம்!! உனக்கு தீனி வாங்கி கொடுத்தே போண்டியாக போறான்!!" என்று திட்டினாலும் வேறுவழியின்றி அருகிலிருந்த தாபாவில் இவன் காரை ஓரங்கட்ட..

 

 

 

நடுநிசி வேளை எங்கும் லாரிகளும்.. ட்ரக்குகளும்.. அங்கங்கே சில கார்களும் நின்றிருக்க.. அவளை அழைத்துக்கொண்டு தாபாவுக்கு இவன் சென்று, ஆளுக்கு இரண்டு ஆலு புரோட்டாவை ஆர்டர் செய்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனை பார்த்து அவள் சுண்டுவிரலை உயர்த்தி காட்ட…

 

 

 

சுற்றுமுற்றும் பார்த்தவன் அருகில் இருந்த ரெஸ்ட் ரூமை காட்டு விட்டு இவன் பழையபடி வந்து அமர்ந்து கொண்டான்.

 

 

 

பத்து பதினைந்து நிமிடம் வரை பார்த்தவன், "கக்கூஸ்ல குடும்பமா நடத்துறா?? இவ்ளோ நேரம் ஆகுது!!" என்று யோசித்துக் கொண்டே அவள் செல்ல.. வெளியே கதவு சாத்தி இருந்தது. "எங்க போயிருப்பா??" என்று யோசிக்கும் போது தான் அவனுக்கு அந்த சுற்றுச்சூழலே நினைவில் பட்டது. இவளை இங்கு கூட்டிட்டு வந்திருக்கக் கூடாதோ? என்று அவன் நினைத்த நேரத்தில் வீ

ல் என்று சத்தம் ஒன்று அவன் காதை கிழித்தது.

 

 

சத்தம் வந்த இடத்தை நோக்கி ஜித்து ஓடினான்!! திக் திக் என்ற இதயத்தோடு!!

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top