Thread starter 07/01/2026 10:10 am
அத்தியாயம் 48
சோ ஸ்வீட்.. எங்க மாமா எவ்வளோ ஸ்வீட்.. அத்தையும் கூடத் தான்.!” என்று அதுவரை கதை கேட்டுக் கொண்டிருந்த ஆருஷி தன் தாய் மாமனையும் மாமியையும் புகழ..
“ஏன்னா.. அவர் என் அப்பா” என்றான் கண் சிமிட்டி இராவண்..!
அவளோ உதடு சுழித்து ரகசிய பாஷை பேசினாள்.
ஆருஷி மட்டுமல்ல அங்கிருந்த வள்ளியம்மை ரூபிணி சுக்ரேஷ் என அனைவருமே அந்த மெல்லிய அழுத்தமான காதல் இழையோடிய சிவேந்திரன் குளோரியா காதல் கதையில் தங்களை தொலைத்து தான் இருந்தனர்.
இந்தியாவில் இருந்தவரை தன் கைக்குள்ளேயே சுற்றி வந்த மகன் அமெரிக்கா சென்றதும் தானாக ஒரு வாழ்வை தேடிக் கொண்டதை ஏற்க முடியாமல் இருந்த வள்ளியம்மைக்கு,
மகனின் மனதில் எத்தனை அழகாக அழுத்தமாக அந்த பெண் குடிபுகுந்திருக்கிறாள் என்று ஆச்சரியமே..!
ஆனால் காதலே ஒரு ஆச்சரியம் தானே..!
எங்கே?? எந்த புள்ளியில்?? எவர் எவருக்கு இடையில் அது தோன்றும்? என்று அந்த ஈசனை அன்றி யாருக்கு தெரியும்??
வள்ளியம்மை தன் மகனை நினைத்து ஒரு மோன நிலையிலேயே அமர்ந்திருக்க.. “அத்த..!” என்று அவரை அசைத்த ரூபிணியை கண்டவர் கலங்கிய கண்களை மெலிதாக முந்தானையில் ஒற்றி எடுத்துக் கொண்டார்.
அதுவரை சிவேந்திரன் குளோரியாவின் ஒரு மெல்லிய காதல் நூல் இலையில் ஆட்கொண்டிருந்த அந்த குடும்பம் இப்பொழுது மகனை இழந்த தாயின் துக்கத்தில் ஆட்பட்டு மீண்டும் ஒரு அமைதியை தத்தெடுத்தது.
“என் பேராண்டி நிறுத்திட்ட.. இன்னும் சொல்லு.. என் சிவாவை பத்தி சொல்லு.. நிறைய நிறைய சொல்லு.. நான் நிறைய கேட்கணும்.. என் காலம் இருக்கும் வரை அவன பத்தி நான் கேட்டுகிட்டே இருக்கிறேன். சொல்லுடா.. என் சிவாவை பத்தி சொல்லு டா..” என்று மெல்லிய குரலில் ஆரம்பித்தவரின் குரல் உடைய கடைசியாக விசும்பி அழ ஆரம்பித்தார்.
ஆருஷி வழக்கம் போல ராவண்னை முறைத்து “இப்ப யாரு உங்கள மாமா பத்தி பேச சொன்னது? பாருங்க எங்க ஆச்சி அழுகுறாங்க..” என்று அவளும் அந்த பெரிய வயிற்றை தூக்கிக்கொண்டு “அழாதீங்க ஆச்சி..!” என்று ஆறுதல் படுத்தினாள்.
“இவ ஒருத்தி ஆ.. வூனா என்ன முறைக்க ஆரம்பிச்சிடுவா..! எங்க அப்பாவ பத்தி கேட்டது இவ.. ஆனா திட்டு எனக்கு” என்று வாய்க்குள் திட்டிக்கொண்டே மனைவியை பார்த்தான் இராவண்.
பின்னே.. வாய் விட்டு திட்டும் அதிகாரம் தான் என்றோ பறந்து போனதே!!
“ஆச்சி… நீங்க வாங்க நாம உள்ள போகலாம்..! இங்க காத்து சரியில்ல” என்று இராவண்னை முறைத்தப்படி சென்றவளை கண்டு இராவண் இடவலமாக தலையாட்டி சிரித்தான்.
சுக்ரேஷோ “ப்ரோ உங்க பொழப்பு கொஞ்சம் கஷ்டம் தான்…” என்று சிரிக்க…
“ரொம்ப சந்தோஷப்படாத ப்ரோ..! உன் ஆளை என் ஆளோட ப்ரண்டாக்கி விட்டுறேன்.. அப்புறம் உன் கதியும் என் கதி தான்.. உஊஊஊஊ…” என்று அவன் சைகை காட்ட.. இருவரும் வெடித்து சிரித்தனர், உள்ளே சென்று கொண்டிருந்த மூன்று பெண்களும் திரும்பி அவர்களை பார்க்க.. அதுவும் ஆருஷி முறைத்துப் பார்க்க.. அதில் இன்னும் வெடித்து சிரித்தான் இராவண்.
“உங்க பேரனுக்கு ரொம்ப கொழுப்பு ஏறிப் போய்டுச்சு ஆச்சி.. என்ன கிண்டல் பண்ணி தான் ஏதோ சிரிக்கிறாரு” என்று கடுகடுத்தாள் ஆருஷி.
“என்னமோ நீ தினமும் ஆக்கிப்போட்டு அதை அவன் சாப்பிட்டு அவன் கொழுப்பு ஏறுன மாதிரி சொல்ற?” என்று பேத்தியை வாரினார் வள்ளியம்மை.
“அதானே.. செல்லப் பேரன சொன்ன உடனே உங்களுக்கு மட்டும் ரோஷம் பொங்கிட்டு வந்துருமே.. பேரன்னா பாசம்.. பேத்தினா வேஷம்..!” என்று அவள் சிணுங்கி அழ..
“கள்ளி.. நீலிக்கதை வடிக்கிறத பாரு..” என்று சிரிப்போடு பேத்தியின் கன்னத்தில் லேசாக குத்தினார் வள்ளியம்மை.
அவளோ அவரை முறைத்துக் கொண்டே “என்னை குத்திட்டீங்கள.. என்னை திட்டிட்டீங்கள.. நான் கோவிச்சுக்கிட்டு எங்க வீட்டுக்கு போறேன்..! இப்பவே போறேன்..! போகும்போது சும்மா போக மாட்டேன் உங்க ஆசைப் பேரனையும் கூட்டிட்டு போறேன்.. எப்ப என் கோபம் குறையுதோ, அப்பதான் உங்க பேரனையும் இங்க கூட்டிட்டு வருவேன்” என்று வீராப்போடு வெளியில் சென்றவளை கண்ட ரூபிணியோ…
“ஆருக்குட்டி..! நைட்டுக்கு ஆப்பமும் பால் பணியாரமும் செய்ய சொல்லி இருக்கேன்..” என்று ராகமாக இழுத்துக் கூற..
“யூ டூ அத்த..” என்று முறைத்தாலும் கால்களை தரையில் வேகமாக அழுத்தி நடந்து, “நைட்டு சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் நான் கோவிச்சுக்கிட்டு எங்க வீட்டுக்கு போறேன்” என்று வீட்டுக்குள் சென்ற பேத்தியை கண்ட வள்ளியம்மை தன் மகனை மறந்து “சரியான சாப்பாட்டு ராமி” என்று சிரித்தார்.
இரவு உணவு முடித்து வழக்கம் போல தங்கள் வீட்டுக்கு சென்றனர் இராவண்னும் ஆரூஷியும்.
ஆனால்.. வழக்கத்துக்கு மாறாக அவளும் அவனிடம் முறைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.
அவள் முறைப்புக்கு காரணம் என்னவென்று தெரிந்தாலும் இவன் சென்று சமாதானப்படுத்தவில்லை..!
இராவண்னோ தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க.. அவன் இருக்கும் இடத்திலேயே அவனை முறைத்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்தாள் குட்டி போட்ட பூனை போல…
அவன் உடை மாற்றினால் அந்த அறைக்கு வெளியே அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்..
அவன் தண்ணீர் குடிக்க சமையலறை சென்றால்.. அங்கே பின்னோடு சென்று முறைத்து பார்த்தாள்…
ஆன்லைனில் சில கிளாஸ் எடுக்க அவன் லேப்டாப்போடு அமர்ந்தால்.. அப்பொழுதும் அவை முறைத்தபடி எதிர் சோபாவில் அமர்ந்தாள்..
அவளின் கோபத்தையும் முறைப்பையும் அந்த சிறு பிள்ளைத்தனமான வீம்பு நடையும் கண்டவனுக்கு சிரிப்பு முகிழ்த்தாலும் அதனை காட்டாமல் தன் வேலையில் கவனமாக இருந்தவன், அவளுக்கு இன்னும் இன்னும் கோபத்தை ஏற்றினான்.
அவனை முறைத்துக் கொண்டு படுக்கைக்கு சென்று விட்டாள் ஆருஷி.
“எப்படி இருந்தாலும் படுக்க இங்க தானே வந்தாகணும்.. பாப்பா.. பாப்பானு வருவயில்ல.. அப்ப இருக்கு டாக்டரே உனக்கு? அதுவும் இப்படி பின்னாடி கட்டிபிடிச்சி உன் கழுத்த என் பின்னங்கழுத்துல தேய்ச்சிட்டே தூங்குவல.. அப்ப இரு.. ஒரே தள்ளா தள்ளி விடுறேனா இல்லையானு பாரு.. கண்டுக்காமலாய் இருக்க..! படுவா டாக்டரே..!” என்று தலையணையை தலைவனாய் பாவித்து அவள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது..
தன் வேலையை முடித்து வந்தவன் இரு கைகளையும் மார்புக்கு குறுக்கேக் கட்டிக் கொண்டு அவளைத்தான் தீர்க்கமாக பார்த்தான்.
“என்ன ஆருஷி மேடம்.. தனியே பொலம்பி கிட்டு இருக்கீங்க.. ஆமா.. யாரு ராத்திரியில பூனை போல பிராண்டுறது?” என்றவன் கேள்வியில் திருதிருவென விழித்தாள் ஆருஷி.
முற்பாதியில் ஆருஷி சொன்னது என்னவோ உண்மை.!
அதன் பின் அவன் தூங்கும்போது இவளோ “தூக்கம் வரல..!”
“இப்படி படுக்க முடியல.. அப்படியும் படுக்க முடியல..!” என்று இரவெல்லாம் அவன் மீது ஏறிப் படுத்து.. கடைசியாக அவன் தோள் சாய்ந்து உட்கார்ந்து என்று அவனை பூனை போல பிராண்டி வைத்துவிடுவாள் ஆருஷி.
அவனிடம் கோபத்தில் இருக்கும் தன்னை சமாதானம் செய்யாமல் சீண்டும் அவனை கண்டு இன்னும் கொதித்தவள்,
“சும்மாயிருக்காம என்னை சீண்டாதிங்க டாக்டரே..! அப்புறம் நைட் கஷ்டப்படுவீங்க” என்றாள் கோபமாக..
''சீண்டவா? தீண்டவா? பாப்பா?'' என்று விவகாரமாய் இராவண்!!
''தீண்டிடுவீங்களோ?'' என்று கோபமாய் ஆருஷி!
''அப்போ நான் உன்ன தீண்ட ஆசை தான். இல்லையா? அதான் என்னை சீண்டி உன்னை தீண்ட வைக்குற?” என்றவனின் உதடு ரகசிய சிரிப்பில் நெளிய..
''உங்க வாய்க்கு கண்டப்படி பேசுனா, அதுக்கு நான் ஆளில்லை.?'' என்றாள் உதட்டை சுழித்தப்படி முகம் திருப்பி..
“அப்போ நைட்டு நான் வேணாம்? என் அருகாமை வேணாம்? என் தோள் வேணாம்? அதில் சாஞ்சிக்க வேணாம்? என் மடி வேணாம்? அதில் நீ தலைசாஞ்சிக்க வேணாம்?” என்று அவன் அத்தனை கேட்க..
மொத்தத்துக்கும் வேண்டாம் என்றாள் ஒத்த வார்த்தையாய்..!
''வாய் தான் வேணாம் சொல்லுது. ஆனா முகமெல்லாம் இப்பவே வேணும்னு சொல்லுதே” என்றான் வம்பு இழுக்கவென்றே..
அதில் ரோஷம் கொண்டவளும்
''யாருக்கு ஆசை? இந்த ஆருஷிக்கா? நோ நெவர்.. எவர்..! ஒருவேள ஆசை உங்களுக்கு தான் போல'' என்றாள் அவளும் விடாமல்..
''எஸ் ஆஃப் கோர்ஸ்..! இந்த கோப பாப்பா மேல ரொம்ப ரொம்ப ஆசை தான். ஆசைய காட்ட வா டி பாப்பா”' மீசையை இரு பக்கமும் நீவிச் சிரித்தான் இராவணன் மயக்கும் மாயவனாய்..!
“சிரிச்சு மயக்குறானே.. மயக்குறானே..! மயங்கிடாதடி ஆருஷி..” என்று தனக்குள் உரு போட்டுக் கொண்டவள்,
'”எதே? ஆசையை காட்டவா? அச்சோ…! நீங்க இதுவரைக்கும் காட்டின ஆசையே எனக்கு போதும் சாமி..! நான் இப்போ ட்யூ டைம்ல இருக்கேன்.. நீங்க என்ன விட்டு ரெண்டு அடி தள்ளியே இருங்க”
என்றாள் கண்களை உருட்டி மிரட்டி.. இத்தனைக்கும் அவன் அவள் அருகில் கூட நெருங்கி செல்லவே இல்லை. அவளிடம் இருந்து இரண்டு அடி தள்ளி தான் நின்று பேசிக் கொண்டு இருந்தான்.
“ஆஹான்.. அப்ப சரி..! நீ அன்னைக்கு போனதுக்கு அப்புறம் எங்க அம்மா என்ன சொன்னாங்கன்னு உன்கிட்ட மட்டும் சொல்லலாம் நினைச்சேன்...”
என்றான் தாடையை தடவியபடி யோசனையாக..
அவள் முகம் மாறுவதை கண்டவன்,
“ஆனா.. நீ தான் தள்ளியே இருக்க சொல்லிட்டியே.. நான் உன் பேச்சை மீறுவேனா.? சரி நானும் கவுந்தடிச்சு தூங்குறேன்” என்று அவன் அவளை அவளை விட்டு இரண்டு அடி வேண்டுமென்று தள்ளிப் படுத்து போர்வையால் தன்னை மூடிக்கொண்டு தூங்க முயல..
“அதைத்தானே இத்தனை நாளும் தெரிஞ்சுக்கணும்னு நான் இருந்தேன். இப்படி அவசரப்பட்டு வாய் கொடுத்து கெடுத்துக்கிட்டோமே.!” என்று மனதோடு புலம்பியவள்,
“நோ.. நோ.. அப்படியெல்லாம் உங்களை தூங்க விட முடியாது. ஒழுங்கா சொல்லுங்க.. சொல்லுங்
கங்க.. சொல்லுங்க டாக்டரே..!” என்று இப்பொழுது நிஜ கோபப் பூனையாய் மாறி அவனை பிரண்ட ஆரம்பித்தாள் ஆருஷி.
