அத்தியாயம் 37
தன் அருகில் மதியம் உணவு உண்பவனை சற்று அதிர்ச்சியோடும் துளி கர்வத்தோடும் தான் பார்த்திருந்தாள் பெண்ணவள்.
காலையில் தான் கத்தியதும் இவன் தன் வேலையை பார்த்துக் கொண்டு சென்று விடுவான் என்று இவள் நினைத்து தூக்கம் வராமல் புலம்பிக் புரண்டு கொண்டே படுத்து ஒரு கட்டத்தில் தூங்கிப் போய் இருந்தாள்.
ஆனால் இராவண்னோ அவ்வப்போது அறைக்குள் வந்து அவளது உடல் நிலையை கண்டு விட்டு போனான்.
அறை ஏசியின் குளுமையை குறைத்து வைத்தவன், ஜன்னல்களை திறந்து விட்டு இயற்கை காற்றுக்கும் வழிவகை செய்து கொடுத்ததெல்லாம் அவள் அறியவில்லை.
சரியாக 11 மணி போல் வந்து அவளை எழுப்பி “இந்த ஜூஸ் மட்டும் குடிச்சிடு டி பாப்பா” என்று குரலுக்கு கேட்டு, ஏதோ கனவில் நிடப்பது போல தூக்கத்திலேயே இருந்து அவன் கொடுத்த பழச் சாற்றை குடித்து மறுபடியும் உறங்கி விட்டாள்.
“சரியான லேஸி.. தூங்கு மூஞ்சி..! சோம்பேறி.. டி பாப்பா நீ. என் பிள்ளைங்க நாளைக்கு உன்னை மாதிரி தான் இருக்க போறாங்களோ?” என்று வெளிப்படையாகவே யோசித்தவன்,
“நோ.. நோ.. அவங்கள என்னைப் போல மாத்திடுவேன். ஆனாலும் இந்த லேஸி கேர்ள தானே எனக்கு பிடிச்சிருக்கு” என்று அவளின் கன்னத்தை வருடி விட்டு சென்றான்.
மதியம் அதுபோல சரியாக ஒரு மணி வந்து அவளை எழுப்பி விட முதலில் அத்தையோ என்று நினைத்து “தூக்கம் தூக்கமா வருது. அத்த..” என்றவள் மீண்டும் போர்வைக்குள் ஒளிய..
அடுத்த நொடி அந்த மூடிய போர்வையினுள் அவனின் இறுகி அணைப்பில் இருக்க.. அதுவும் மலைப்பாம்பென இறுக்கி அவன் தேகத்தோடு உரசி இருந்தவனின் முரட்டு அங்கங்கள் அவளை சோதிக்க… அதிலும் அவனை விட அதிக அதிகாரமாக தன் முகத்தில் கழுத்தில் விளையாடும் அவனின் கற்றை மீசையும்.. குறுக்குறுக்கும் தாடியும் அவளை மிகவும் சோதிக்க..
அதிர்ந்து விழுத்து அவனிடமிருந்து விலக போராடிய போராட்டத்தில் அவள் தூக்கம் தூரப்போக…
தன்னை முறைத்துப் பார்த்தவளின்
கன்னத்தை குறுச்சிரிப்புடன் தட்டியவன்,
“ஏய் தூங்குமூஞ்சி பாப்பா.. சாப்பிட்டு வந்து தூக்கத்தை கண்டினியூ பண்ணலாம்” என்றதும்
இப்பொழுது அவள் அவனின் புஜத்தில் குத்தியவள் “நான் என்ன தூங்குமூஞ்சியா?? போயா ராட்ஷஸ இராவணா…! நான் குளிச்சிட்டு வரேன்” என்று அவள் குளியல் அறையில் புகுந்து கொள்ள…
“டேய் இராவண்.. உன்னோட கேரியர் காலியாக போதுடா இவள இப்படியே நீ பேம்பர் பண்ணிக்கிட்டே இருந்தேனா..” என்று அவனது மருந்துவ அறிவு எச்சரித்தது.
“போன போகட்டுமே..! ஹூ கேர்ஸ்..! இப்போதைக்கு எனக்கு என் பாப்பாவும் அவ வயித்துக்குள்ள இருக்குற என் குட்டி பாப்பாங்களும் தான் முக்கியம்..! அவங்கள கேர் பண்ணுறது தான் முக்கியம்” என்று கூறிக்கொண்டவனை கண்டு மருத்துவ அறிவு பீதி கொண்டது.
குளித்து வந்தவளுடன் மதிய உணவு உண்டான். அடிக்கடி தன்னை பார்த்துக்கொண்டே உணவை சாப்பிடும் ஆருஷிய கண்டவனுக்கு உள்ளுக்குள் குறும்புத்தனம் கூத்தாட..
சட்டென்று தன் தட்டில் இருந்த உணவு எடுத்து அவளுக்கு ஊட்டி விட.. அவளோ அதிர்ந்து எதிரே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை பார்த்து, பின் இவனை முறைத்தாள்.
“இதுக்கு தானடி பாப்பா நீ ஆசைப்பட்டு அடிக்கடி திரும்பி திரும்பி மாமன பார்த்து நயன பாஷையிலே கேட்ட? எதுக்கு முறைக்குற? யாரு ஏத்தாப்ல இருக்கா உங்க அத்தையும் உன் ஆச்சியும் தானே? அவங்க அதெல்லாம் தப்பா நினைச்சுக்க மாட்டாங்க..” என்றவன் சத்தமாகவே கூற..
இப்பொழுது அவளுக்கு வாயில் வைத்த உணவு தொண்டைக்கு இறங்க போராட..
எதிரில் உணவு உண்டு கொண்டிருந்த வள்ளியம்மையும் ரூபிணியும் அவளைக் கண்டு நமட்டு சிரிப்பு சிரித்தனர்.
இவளுக்கோ கோபம் மிகுந்தது ‘இல்லாத ஒன்றை இருக்கு’ என்பது போலவே பில்டப் செய்யும் இவனை என்ன செய்வது? என்று புரியாமல் அவசர அவசரமாக வாயில் உள்ளதை மென்று விழுங்கி விட்டு அவனை திட்ட வாய் திறக்க..
அடுத்த கவளைத்தையும் அவன் ஊட்டி விட அதிர்ச்சியில் அயர்ந்து விட்டாள் மாது..!
இப்படி அவள் சுண்டு விரல் கூட அசைவ விடாமல் ஸ்கோர் செய்பவனை என்ன செய்வது என்று புரியாமல் பார்க்க.. அப்போதைக்கு அவனை பார்வையால் எரிக்க மட்டுமே ஆருஷியால் முடிந்தது..!
உணவு முடிந்ததும் உறங்கப் போனவளை இழுத்து தோட்டத்திற்கு அழைத்து வந்தவன், “வா வீட்டை மூணு சுத்து சுத்து..! அதுக்கு அப்புறம் போய் ரெஸ்ட் எடுக்கலாம்” என்றதும் அவன் கையை உதறிவிட்டு,
“இது என்ன கர்ப்ப கிரகமா மூணு சுத்து சுத்துவதற்கு?” என்று வீட்டை பார்த்து அவள் கேலியாய் கேட்க..
“கண்டிப்பா..! ஒவ்வொரு வீடும் கர்ப்ப கிரகம் போலத்தான் பாப்பா.. எனக்கு ஆன்மீகம் தெரியாது. ஆனா அறிவியல் தெரியும்..!” என்றவன், அந்த வீட்டே பார்த்தவன் மனக்கண்ணில்,
அவனின் தந்தை சிறு வயது முதல் வளர்ந்து விளையாடி உறவாடிய வீட்டினை அத்தனை ரசித்துப் பார்த்தான். ஒவ்வொரு இடமும் மூலையும் அவனுள் அவன் இறந்த தந்தையின் இருப்பை நினைவூட்ட.. கண்களை மூடி நின்றவனை விசித்திரமாக பார்த்தாள் மாது.
“என்ன தூங்க கூடாதுனு சொல்லிட்டு, நீ தூங்குறியா மேன்?” என்று அவள் கிண்டல் செய்ய..
“ம்ம்.. ஏதோ நினைவு..! ஹான் என்ன சொன்னேன்.”
“வீடு.. கர்ப்ப கிரகம்னு சொன்ன” என்றாள் அவள் இழுத்து..
“ஆஹான்.. கரெக்ட்..! நம்மளை இவ்வளவு நாளா தாங்கிக்குது.. வெயில் மழை புயல்காத்துனு.. ஏன் பேண்டமிக் சுச்சுவேஷன்ல எவ்வளவு பெரிய வைரஸ் கிட்ட இருந்து நம்மளை காத்தது நம்ம வீடு தானே? அதனால அது கோவிலாக நினைத்து சுத்துறது ஒன்னும் தப்பு இல்ல.. சுத்து சுத்து..” என்றதும் மறுவார்த்தை பேசாமல் அவள் சுற்ற ஆரம்பிக்க..
“அட.. என்ன ஆச்சரியம் மாமா சொன்னத கேட்டு உடனே நல்ல பிள்ளையை சுத்த ஆரம்பிச்சுட்ட? அவ்வளவு நல்லவளாடி பாப்பா நீ?” என்று அவள் கையை பற்றி தன் புறம் திருப்பி ஆச்சரியமாய் இராவண் கேட்க..
“பெரிய மாமா இவரு? சொன்னத கேட்டுட்டு தான் மறு வேலை பார்க்கணும்..” என்று முகத்தை தாடையில் இடித்துக் கொண்டவள்,
“இப்பதான் வீட்டுக்கு பெரிய லெக்சரர் கொடுத்த.. நான் அடுத்து வேற ஏதாவது சொன்னா.. அடுத்து இருக்கிற தோட்டம்.. அந்தா இருக்கிற பெஞ்ச்.. அடுத்தாப்புல இருக்குற காம்பவுண்ட் காரு வண்டி சைக்கிள்ல எல்லாத்துக்கும் நீ லெக்சர் எடுத்துக்கிட்டே இருப்ப.. அதை கேட்கிற பொறுமை எனக்கு இல்ல. அதுக்கு இந்த வீட்ட மூணு என்ன முப்பது சுத்து கூட சுத்திட்டு வந்துருவேன் நானு..” என்றவள் வேகமாக நடந்து முன்னே செல்ல..
அவள் பின்னாலே “பாப்பா.. பாப்பா..” என்று சிரித்தபடி ஓடி வந்தவன்,
“இவ்வளோ வேகமாக நடக்கக்கூடாது. அப்புறம் ஒரு ரவுண்டு கூட உன்னால போக முடியாது. பொறுமையா நட டி.. புள்ளதாச்சி நடக்கிற மாதிரி நட டி பாப்பா” என்று அவன் கிண்டல் அடித்தான்.
“எது இந்த டிவி சீரியல் படத்துல எல்லாம் வர மாதிரி ஒரு கையை இப்படி பின்னாடி புடிச்சி தாங்கிக்கிட்டு.. இன்னொரு கையை முன்னாடி வயித்த புடிச்சுகிட்டு வாத்து மாதிரி நடப்பாங்களே.. அந்த மாதிரியா?” என்று அவள் சற்றே தாங்கி தாங்கி பென்குயின் போலத்தான் நடந்து காட்டினாள்.
அவனோ அவள் நடையை பார்த்து இரு பக்கமும் தலையாட்டி சிரிப்பை உதட்டுக்குள் அடைத்துக் கொண்டு நடக்க…
“யோவ் இராவணா..உண்மையை சொல்லு? என்ன பத்தி இப்போ ஏதோ வில்லங்கமா நினைச்சு தானே? என்ன நினைச்ச சொல்லு சொல்லு?” என்றவள் அவன் புறம் திரும்பி அவன் சட்டை பட்டனோடு கொத்தாக பிடிக்க..
“இப்படி நீ சட்டையை கொத்தா பிடிக்கும்போது எனக்கு மொத்தமா நினைப்பெல்லாம் வேறு எங்கே போகுது டி பாப்பா” என்று அவன் ஹஸ்கி வாய்ஸில் அவள் காதில் குனிந்து கூற..
அவர்களின் நெருக்கத்தையும் அவன் கற்றை மீசை முடி உரசும் அந்த உரசலையும் கண்டவள்,
அவன் என்ன சொல்ல வருகிறான் என்ற புரிந்து சட்டென்று அவன் சட்டையை விடுவித்தாள்.
“பார்ரா பாப்பாவுக்கு மத்ததெல்லாம் விட இந்த சப்ஜெக்ட் மட்டும் சட்டுன்னு புரிஞ்சிடுது.. ஏன்னா.. டிரைனிங் கொடுத்தது மாமனாச்சே” என்று அவன் சட்டை காலரை தூக்கிக் கொள்ள..
திரும்பி அவன் புறம் விரல் நீட்டி பத்திரம் சொன்னவளால் அடுத்து எதுவும் பேச முடியவில்லை. இவள் எது சொன்னாலும் அவன் எப்படி அதுக்கு பதில் பேசுவான் என்று புரிந்து கோபத்தை அடக்கி கொண்டு முசுமுசுவென்று மூச்சை விட்டப்படி மெல்ல நடக்கலானான்.
அவனும் அவளோடு இணைந்து நடந்து மெல்ல அவள் கையை கோர்த்தபடி நடக்க.. கையை விடுவிக்க போராடிய அவளின் முயற்சிகளை தோற்கடித்தவன்,
“நோ.. நோ..! நீ என்ன ட்ரை பண்ணாலும் கையை எடுக்க மாட்டேன். பின்னால இப்படி எல்லாம் கர்ப்ப காலத்துல என் கைய புடிச்சிட்டு போகலையேனு நீ பீல் பண்ண கூடாது பாரு..! எல்லாம் உனக்காக தான் டி பாப்பா” என்றவனின் தொடர் பேச்சில் ஆருஷி அயர்ந்து தான் போனாள்.
அவள் கையைப் பற்றிய அந்த வீட்டினை இரண்டு முறை மட்டும் தான் சுற்றிவர முடிந்தது. அதற்கு மேல் அவளுக்கு நடக்க முடியாமல் இரைக்க.. “இன்னிக்கு இது போதும் வா” என்று அழைத்து சென்றான்.
“தூங்க வேணாம் பாப்பா.. வேற ஏதாவது உனக்கு புடிச்ச விஷயம் பண்ணு. இல்ல சாங்க்ஸ் கேளு இந்த மாதிரி ஏதாவது பண்ணு” என்றதும்,
“இங்க பாரு.. உன் டாக்டர் அட்வைஸ் எல்லாம் ஹாஸ்பிடல் வைச்சுக்கோனு ஏற்கனவே உன் கிட்ட சொல்லிட்டேன். ஆனா நீ கேட்கிற பாடில்ல.. 24 மணி நேரம் இந்த கொசு மாதிரி காதுல ங்கொய்ங்.. ங்கொய்ங்னு.. கத்திகிட்டே இருக்காத மேன். எனக்கு இதுவே ஸ்ட்ரெஸ் ஆகுது” என்றாள் கண்களை உருட்டி…!
சிறிது நேரம் அவளை அவள் போக்கில் விட்டுவிட்டு இவன் ரூபிணியிடம் கேட்டு அதே தளத்தில் வேறு ஒரு அறையில் தனது லேப்டாப் சகீதம் அமர்ந்து கொண்டான்.
ஆன்லைனில் சில நேரங்களில் இவன் டியூட்டராக வேலை பார்ப்பதுண்டு..! சில ஜூனியரின் கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதும் உண்டு. அதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தான், நேரம் போவதை தெரியாமல்..!
மாலை போல ஆருஷியை பார்க்க சென்றவனோ ஸ்தம்பித்து நின்றான் அவள் இருந்த நிலையை கண்டு..! அவளின் அழகை கண்டு..!!
வருவான் அசுரன்...
