அதிகாரத்தின் அந்தப்...
 
Share:
Notifications
Clear all

அதிகாரத்தின் அந்தப்பக்கம் காதல் 06

 

(@kaniathargagmail-com)
Member Moderator
Joined: 3 weeks ago
Messages: 10
Thread starter  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

துணி எல்லாம் எடுத்து வீட்டிற்கு வந்தனர் வானதி, பத்மா இருவரும். அவர்கள் போகும் போது மேனகா வீட்டில் இல்லை அதனால் வீட்டை பூட்டி விட்டு சென்றனர் ஆனால் இப்பொழுது வீடு திறந்திருந்தது. அதை கண்ட பத்மா 

 

"வீட்டுக்கு வந்துட்டா போல" தன் மகள் இருப்பாள் என்று பத்மா உள்ளே சென்றாள். அவள் பின்னே வந்த வானதி 

 

"அம்மா! நான் டிரஸ் ரூமில் வைக்கிறேன் நீ பிரிச்சு எடுத்துக்கோ" பெண்ணவள் கூறியவாறு தன் அன்னையை நிமிர்ந்து பார்க்க அங்கே அவளே ஆச்சரியத்தில் உறைந்திருந்தாள். 

 

"அம்மா! என்னாச்சு?" பெண்ணவள் வினவ 

 

"உன் அக்கா பண்ற அநியாயத்தை பாருடி"

 

"என்ன பண்ணா?" என்ற ரீதியில் அவள் பார்க்க அங்கே மேனகா அருகே இன்னொரு ஆடவன் அமர்ந்திருப்பதை கண்டாள் 

 

"அம்மா! யாரு இவன்?" உண்மையில் வானதிக்கு அவனை தெரியவில்லை அதான் கேட்டாள். 

 

"நம்ம அப்பாவுக்கு எதிரா போட்டி போட்ட பழனி இவன் தான். நம்ம எதிர்கட்சியோட தலைவர் பையன்"

 

"அவனா?" என்ற ரீதியில் வானதி பார்க்க பத்மா பொறுமை காக்க முடியாமல் 

 

"மேனகா" உரக்க அவள் பெயரை சொல்லி கத்திவிட  அவளும் பார்த்தாள் ஆனால் அந்த பார்வையில் எந்த பயமோ இல்லை பதைபதைப்போ இல்லை அதற்கு பதில் திமிரும் தான் என்ற ஆணவம் தான் இருந்தது 

 

"என்ன காரியம் பண்ற?"

 

"நீ இவ்வளவு கோபப்படுற அளவுக்கு நான் என்ன பண்ணேன்?"

 

"இவனை ஏன் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்த?"

 

"அம்மா! அவரை மரியாதையா பேசுங்க"

 

"என்ன மரியாதை வேண்டி இருக்கு? இவன் யாருன்னு தெரியும் இல்லை"

 

"தெரியும் தெரிந்ததால் தான் கூட்டிட்டு வந்தேன் "

 

"நீ எப்படி கூட்டிட்டு வரலாம். உடனே அவன் இங்கே இருந்து வெளியே போகனும் அப்படி போகலை நானே கழுத்தை பிடித்து வெளியே கொள்ளுவேன்" 

 

"அம்மா உனக்கு என்ன பைத்தியமா நீ எதுக்கு அவர வெளியே போக சொல்ற அவரை நான் கூட்டிட்டு வந்தேன் என்னோட கெஸ்ட் நான் பேசிட்டு தான் அனுப்ப முடியும்" 

 

"மேனகா என் பொறுமையை நீ  ரொம்ப சோதிக்கிற அவன் இங்க இருக்கவே கூடாது சொல்லப்போனால் உன் அப்பா இறந்ததற்கு ஒரு வகையில அவனும் தானே காரணம் அதுக்கு காரணமான அவனை  நடு வீட்டுல உட்கார வச்சி பேசிட்டு இருக்க எனக்கு இது  சுத்தமா பிடிக்கல இப்ப நீ அவனை வெளிய அனுப்பல நிஜமா நான் இப்பவே அவன்  கழுத்தை புடிச்சு வெளியே தள்ளிடுவேன்" பத்மா ஆவேசமாக கத்த அதில் எழுந்து நின்ற பழனி தனக்குரிய திமிரான நடையுடன் அவளருகே வந்தான். 

 

"மேனகா என்னால பிரச்சினை வேண்டாம் நாம இன்னொரு நாள் சந்திக்கலாம் இப்ப நான் வெளியே போறேன்"

 

" நீங்க வெயிட் பண்ணுங்க  நீங்க என்னோட கெஸ்ட் நான் தான் உங்களை கூட்டிட்டு வந்தேன் நீங்க ஏன் வெளியே போகணும்" 

 

" மேனகா நீ என் பொறுமையை  ரொம்ப சோதிக்கிற.  அடிச்சேன்னா பல்லு எல்லாம் கொட்டிடும்"

 

" அம்மா உனக்கு என்ன இப்போ அவர்  வெளியே போகணும் அவ்வளவு தானே நாங்க போறோம்"

 

" நீ எங்கடி போற?"  அவள் கையைப் பற்றி  பத்மா கேட்க 

 

" நான் எங்க வேணா போவ அதை நீ ஏன் கேக்குற உனக்கு தான் நான் தேவை இல்லையே நான் சின்ன பொண்ணு வந்துட்டேன்னு ஓவரா ஆடுற"

 

"நீ தான் எது சரி எது தப்புன்னு தெரியாமல் இருக்க"

 

"எனக்கு எல்லாம் தெரியும்"

 

"மேனகா"

 

"அம்மா! இதுக்கு மேல் நீ பேசின ராத்திரி வீட்டுக்கு கூட வரமாட்டேன். இப்போ சொல்லு" அவள் கடைசி ஆயுதத்தை போட்டு உடைத்து விட பத்மா வாயை மூடி கொண்டாள்.  பின்ன பழனி போனால் அதுவே போதும் என்று அமைதியாக மேனகா அவன் பின்னே சென்றாள். 

 

"அம்மா!"

 

"பார்த்தீயாடி அவள் பண்ற வேலையை கண் முன்னாடி இதெல்லாம் நடக்குது நீயும் வேடிக்கை பார்த்துட்டு இருக்க நாலு வார்த்தை நீயும் கேட்க வேண்டியது தானே"

 

"அம்மா நான் அப்பவே சொல்லிட்டேன் அவளோட விஷயத்துல தலையிட மாட்டேன்னு. நான் இங்க வந்தது உன்னை என் கூட கூட்டிட்டு போக மட்டும்தான் நீ அவளுக்கு கல்யாணம் பண்றேன்னு சொன்னதால மட்டும் தான் நான் இவ்ளோ நாள் இங்க இருக்க ஒத்துக்கிட்டேன். இல்லன்னா நான் எப்பவோ கிளம்பி ஊருக்கு போயிருப்பேன் எனக்கு இந்த பீல்டு வேணாம் நான் இதுக்குள்ள வரவும் விரும்பல நான் இதுக்குள்ள வரக்கூடாதுன்னு தான் எனக்கு இத்தனை அநியாயம் நடந்துச்சு உனக்கு எல்லாம் தெரியும் இல்லை தெரிந்தும் ஏன் என்னை இதுக்குள்ள இழுக்க பாக்குற?"

 

"வானதி! எனக்கு பயமா இருக்கு"

 

"அம்மா! அவள் ஒன்னும் குழந்தை இல்லை நீ எடுத்து சொல்லி கேட்க. அவளோட இஷ்டத்துக்கு தான் இருப்பா அது அவளோட பேச்சிலும் செயலிலுமே தெரியுது. அப்படி தெரிந்தும் நீ ஏன் தொடர்ந்து ஆர்கியூமென்ட் பண்ற"

 

"பத்து நாளில் கல்யாணம் அதுக்குள்ள ஏதாவது தப்பா முடிவு எடுத்தா என்ன பண்ண?"

 

"உனக்கு அவ்வளவு பயமா இருந்தா நீ சீக்கிரம் கல்யாணத்தை நடத்து அதை விட்டு ஏன் அவகிட்ட ஆர்கியூ பண்ற"

 

"நீ சொல்றது தான் சரி நான் சொன்னா அவளோட காதுக்கும் ஏறாது புத்திக்கு ஏறாது சீக்கிரம் இந்த கல்யாணத்தை முடிக்கணும் நான் இன்னைக்கே அண்ணன் கிட்ட பேசி பத்து நாளைக்குள்ள முகூர்த்த தேதி  குறிக்கிறேன் இப்படி பண்ணா தான் இவளோட தான் என்கிற  எண்ணத்தை என்னால் ஓரளவுக்கு அழிக்க முடியும் இப்படியே இருந்தா உங்க அப்பா பெயரை கெடுத்துடுவா" பத்மா தீர்க்கமான முடிவு எடுத்தவள் போல் கண்ணனிடம் பேச சென்றாள். வானதிக்கு சந்தோஷம் பின்ன பத்து நாள் இந்த ஊரில் இருக்கனுமா என்று நினைத்தவளுக்கு தான் சீக்கிரமே கிளம்ப போவதை நினைத்து மகிழ்ச்சி தான். 

 

****************************

 

நண்பனோடு ஊர் சுற்றி கட்சி ஆபிஸ் சென்று மீட்டிங் முடித்து வீரசிம்மன் வீட்டிற்கு வரவே நல்லிரவு ஒரு மணி எப்பொழுதும் அந்த நேரத்தில் தூங்க சென்று இருக்கும் கண்ணன் இன்று விழித்திருந்தார். நடுக்கூடத்தில் அமர்ந்திருந்த தன் தந்தையை கண்டவன் 

"அப்பா நீங்க இன்னும் தூங்க போல"

 

"உனக்காக தான் காத்திருந்தேன் எவ்வளவு நேரம் வர மணி ஒன்னுடா"

 

" அது வேலை கொஞ்சம் அதிகமா இருந்துச்சு அதனால வர முடியல  அதுக்காக நீங்க தூங்காம இருக்கீங்க உங்க கிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன் ஆபீஸ் விட்டு வந்தா சீக்கிரம் தூங்குங்க அப்படின்னு ஆனால் இன்னைக்கு ஒரு மணி வரைக்கும் முழிச்சிட்டு இருக்கீங்க"

 

" உங்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும் அதுக்காக தான் முழிச்சிட்டு இருந்தேன். நீ நான் போன் பண்ண அப்பவே எடுத்திருந்தா நான் உன்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு போய் தூங்கி இருப்பேன் நீ தான் நான் போன் பண்ணா எடுக்கவே இல்லையே அதனால் தான் இவ்வளவு நேரம் முழிச்சிட்டு இருக்க வேண்டியதா போச்சு"

 

"முழிச்சிட்டு இருந்து சொல்ற அளவுக்கு என்ன முக்கியமான விஷயம்"

 

" உன் கல்யாண விஷயம் தான்"

 

"அதுக்கு தான் இன்னும் பத்து நாள் இருக்குல்ல" 

 

"இல்லடா இன்னும் நாலு நாள் தான் இருக்கு"

 

" இன்னும் நாலு நாளா என்ன திடீர்னு மாத்திட்டீங்க"

 

"  தங்கச்சி பத்மா போன் பண்ணா. அவள்  தான் சொன்னா நாலு நாளில்  கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு அதனால நானும் சரின்னு சொல்லிட்டேன் பெருசா பண்ண போறது இல்ல சிம்பிளா பண்ணிக்கலாம்"

 

" நீங்க சிம்பிளா பண்ணனும் நினைச்சாலே நம்மள பொறுத்த வரைக்கும் பெருசா தான் பண்ணனும்"

 

"சிம்பிளா பண்ணிக்கலாம்டா அதான் நமக்கு நல்லா தான் இருக்கும்"

 

"அது உங்க இஷ்டம் ஆனால்  ஏன் அத்தை திடீர்னு நாலு நாளைக்குள்ள கல்யாணம் வைக்க  சொல்லிட்டாங்க"

 

"தங்கச்சி  என்னிடம் காரணம் சொல்லல ஆனா நான் நம்ம கட்சி ஆளுங்க மூலமா கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். மேனகா எதிர்கட்சி பையன் பழனி அவன்கூட சுத்தறதா?" அதை கேட்டு வீரசிம்மன் அதிர்ச்சியானன் என்பது என்னமோ உண்மை தான்.  ஒரு வகையில் பாலாஜி மரணத்திற்கு அவனும் ஒரு காரணம் 

 

"டேய்! சிம்மா"

 

"அப்பா"

 

"என்னடா அப்படியே நின்னுட்ட"

 

"நீங்க சொன்னதை கேட்ட அதிர்ச்சி அதான்"

 

"அதிர்ச்சி எல்லாம் ஆகாதே அவளோட மனசில் நண்பன் என்கிற எல்லை இருக்கும்னு தான் நான் நினைக்கிறேன். அதான் இன்னும் நாலு நாளில் கல்யாணம் நடக்க போகுதில்லை பார்த்துக்கலாம் நான் போய்ட்டு தூங்கறேன். நீயும் சாப்பிட்டு தூங்

கு சரியா"

 

"சரிப்பா!" அவன் தன் தந்தையிடம் விடை பெற்று அறைக்கு சென்றவன் மூளை படு பயங்கரமாக யோசிக்க ஆரம்பித்தது. 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top