தூகை 41

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

41

 

அன்று…

 

 

“மேகா…” என்றான் அதிர்ச்சி விலகாமல்..! மேகாவில் கா அவன் தொண்டைக்குள்ளேயே மறைந்தது.

 

அவள் கூறியதை அவனால் ஏற்க முடியவில்லை. 

 

‘நான் தப்பு செய்தவன் தான்.. மனைவி அல்லாது வேறு பெண்ணுடன் பேசி பழகியது சிலர் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்தது தப்புதான்..! பெரும் குற்றம்தான்..! ஆனால் இவள் வேற என்னென்னவோ சொல்கிறாளே? அதைப் போல எல்லாம் நான் செய்ததே கிடையாதே..! எங்கணம் அப்படி ஒரு துரோகத்தை நான் செய்வேன்? முன்னை விட இதுதான் மிகக் கொடியதாக இருக்கிறதே..!’ 

 

பெண்ணுக்கோ உடலைக்கூட மனதால் மட்டுமே தொட வேண்டும். அப்படி அவளின் நம்பிக்கையை பெற்றவன் விலகுவதை அவளால் தாங்க இயலாது…! உயிர் பிரியும் வலியாக எண்ணிக் கதறுவாள்..!

 

ஆனால் ஆணுக்கோ பெண்ணின் உணர்வுகள் புரியாது அவர்களின் உணர்ச்சிகளும் புரியாது..!

 

அவர்களின் கலவி கூட மோகத்தாலும் தாபத்தாலும் இணை மீது கொண்ட நேசத்தால் மட்டுமே இருக்கும்..!

 

பெண்ணின் இந்த அதீத உணர்வு வேகம் கண்டு பயந்து திரும்பவே வர முடியாத இடத்துக்கு சில சமயம் போய்விடுவான். 

 

“என்ன எல்லாத்துக்கும் ஓவரா ரியாக்ட் பண்ணுறா?” அப்படி தான் நினைப்பான். 

 

 

ஆனால் அது போல எல்லாம் மேகா கிடையாது. எத்தனையோ முறை அவனது அன்னையும் சகோதரிகளும் அவளை தாக்கி பேசும் போதெல்லாம்.. அவனை உணர்ச்சிகளால் பிளாக்மெயில் செய்தது கிடையாது.

 

“ இப்படி இவங்க பேசினா நான் இங்க இருக்க மாட்டேன். வாங்க தனியா போகலாம்..” இப்படி எல்லாம் அவள் கூறியதே கிடையாது.

 

இந்நாள் வரை அப்படி இருப்பவள், இப்படி ஒரு விஷயத்தை பொய் சொல்வாளா?

 

‘இல்லை..! கண்டிப்பாக அவளது இந்த அழுகையும் கோபமும் ரௌத்திரமும் உண்மை..! அது நான் தான் தப்பை அழுத்தமாக ஆணித்தரமாக சுட்டிக் காட்டுகிறது. நானா இப்படி???’ என்ற தலைமுடி பிடித்துக்கொண்டான்.

 

“சொல்லு டா சொல்லு?? நான் தான உன் பொண்டாட்டி? அப்புறம் எதுக்கு என் கூட ஒன்னா கூடி குலாவும் போது அவ பெயர நீ சொன்ன?” என்றவளுக்கு பதில் அளிக்க முடியாமல் தலை கவிழ்ந்தான் நிரஞ்சன்.

 

“என் கூட இருக்கும்போது அவ பேரு சொல்லி இருக்க.. அப்போ அவ்வளவு விருப்பம் இருக்கு அவ மேல அப்படித்தானே? அப்புறம் எதுக்கு உனக்கு இங்க நான் பொண்டாட்டினு? அவளையே கூட்டி வந்து வச்சுக்க வேண்டியது தானே?”

 

 

“இங்க பாரு மேகா.. சத்தியமா சொல்றேன். அவள நான் விரும்பவில்லை. ஏன் பார்த்தது கூட இல்லை. முதலில் அவள் என்னை விரும்பினாளா.. இல்லையான்னும் தெரியாது..! விளையாட்டா நாங்க பேசி சிரித்து சில விஷயங்கள ஜோக்குகளை ஷேர் பண்ணி.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நாங்கள் நெருக்கமானோம்..!

என் பிறந்த நாள் அன்னைக்கு நான் தனியாக இருந்தபோது அவ எனக்கு முத்த ஸ்மைலி அனுப்பி வாழ்த்து சொனானபோதுதான்.. அது.. முதன் முதலா எங்களுக்குள் இம்மாதிரி ஷேர் செய்தோம்” என்று அவன் முடிக்கும் முன் ப்ளாரென்று மீண்டும் ஒரு அறை விட்டாள் அவன் கன்னத்தில்..!

 

மேகம் மெல்லிய உடலமைப்பு கொண்டவள் தான். ஆனால் அவளது கையொ வஜ்ரம் போல இறுக்கமாக இருக்க, அவள் விரல் தடம் அவன் கன்னத்தில் அழுத்தமாக பதிந்திருந்தது.

 

“அவள பாத்தது கூட இல்ல ஆனா.. அவளோட அந்தரங்கத்தில் பகிரளவுக்கு நெருக்கம் அப்படித்தானே? அப்போ நேரா பார்த்து இருந்தா.‌ அவ கூடவே போய் இருப்ப இல்ல.. இன்னும் எனக்கு தெரியாம மறைச்சு மறைச்சு அவ அவ கூடையும் படுத்துட்டு வந்து இருப்ப இல்லையா?” என்றதும் 

 

“இல்ல டி.. இல்ல டி.. அவ எப்பேர்பட்ட ரதியா இருந்தாலும் உங்க பின்னால எல்லாம் போயிருக்க மாட்டேன். என் காதலும் மோகமும் உன்னிடம் மட்டும்தான்”

 

“அப்ப காமம் மட்டும் கண்ட கழுதகளோடவா?”

 

“மேகா.. ப்ளீஸ்.. சாரி டி..! என்னே மன்னிச்சிடு..!” 

 

“த்தூ.. பொண்டாட்டி இல்லாத போது இவர் தனியாக இருக்கும்போது அவன் முத்த ஸ்மைலி அனுப்பினாளாம், இவரும் திருப்பி அனுப்புறாராம். ஆனா அதுக்கு அப்புறம் நான் இருக்கும் போது தானே நீ அனுப்புன? நான் உன் குடும்பத்துக்காக வேர்வ வழிய வழிய சமையல் வேலை வீட்டு வேலை உங்க அம்மாவ பாத்துக்குற வேலை செஞ்சிட்டு இருக்கேன். நீ அவ கூட ஏ ஜோக் ஷேர் பண்ணுற? ம்ம்ம்..! அப்புறம் என்ன? லவ் யூ சொல்ற.. மிஸ் யூ சொல்ற.. கிஸ் யூ சொல்ற.. இன்னும் ஃபக் யூ தான் நீ சொல்லல.. அதையும் சொல்லி இருப்ப.. இன்னைக்கு நான் இதை பத்தி பேசலைனா..!” என்றவள் மூச்சு இரைக்க இரைக்க பேச ஸ்தம்பித்து அவளை பார்த்தான் நிரஞ்சன்.

 

“அந்தரங்கமா பேசும்போது.. அதான் அந்த சிறுக்கி கிட்ட நீ இந்த மாதிரி அந்தரங்கமா பேசும் போது உனக்கு பொண்டாட்டி இருக்கானு ஞாபகம் வரல.. உனக்கு ஒரு பொண்ணு இருக்கானு ஞாபகம் வரல.. உன் அக்காங்க அவங்க பொண்ணுங்க ஞாபகம் வரல.. எங்களை எல்லாம் உனக்கு ஞாபகம் வரல..??” என்று அவனின் நெஞ்சத்தை விரலால் தொட்டு அவள் கேட்கும் கேள்விகளுக்கு அவனால் பதில் அளிக்க முடியாமல் ஊமை ஆகினான். 

 

“அவளுக்கு நீ கல்யாணம் ஆனவன்னு தெரியுமா?” என்றதும் தெரியும் என்று தலையசைத்தான்.

 

“ச்சை என்ன பொழப்பு டா இதெல்லாம்? பிரெண்ட்ஸ்ன்னு உள்ள போய் அந்த ஆப்புல சேரீறுங்க.. லிங்க் ஷேர் பண்றீங்க.. உங்க வீட்டல நடக்குறதை ஷேர் பண்றீங்க‌.. உங்களோட அந்தரங்கத்தை ஷேர் பண்றீங்க.. அடுத்து உங்களையும் ஷேர் பண்ணுவீங்களா? அது இன்னும் எவ்வளவு தூரத்தில்? என்ன அடுத்தது வீடியோ கால்ல அது தானே பண்ணுவீங்க…?” என்று அவள் ரௌத்திரமாய் கேட்ட போது அவன் இல்லை என்று தலையசைக்க எட்டி அவன் சட்டைக் காலரைப் பற்றி இப்பொழுது மறு கன்னத்தில் விட்டாள் ஒன்று.

 

“மேகா…” என்று அவன் அழுகையோடு அவளல பார்க்க..

 

உன்ன அப்படியே கண்ணம் கண்ணம்மா அரஞ்சு வெட்டி போடணும்னு கை எல்லாம் துடிக்குது ஆனா உன்னை வெட்டி கொலை பண்ணிட்டு நான் போய் எதுக்கு ஜெயில்ல உட்காரனும் எதுக்கு எனக்கு தண்டனை கொடுக்கணும் தப்பு செஞ்சு உனக்கு தான் தோண்டவே கிடைக்கும் என்ற அவள் எட்டி அவனது போனை எடுத்து அவர்களது சேட்டுக்குள் சென்றவள், 

 

“ப்ளடி பிட்ச்..” என்று ஆரம்பித்து இன்னும் சில கெட்ட வார்த்தைகளால் அந்தப் பெண்ணை திட்டி, “அடுத்தவ புருஷன் கிட்ட இப்படி எல்லாம் ஷேர் பண்றீயே உனக்கு வெக்கமா இல்ல? நிஜமாலுமே உங்க அம்மா உன்னை உங்க அப்பாக்கு தான் பெத்து போட்டாளா? இல்ல இப்ப நீ பண்ற மாதிரியே தான் உன் அம்மாவும் உன் அப்பன விட்டுட்டு வேறவொருத்தனுக்கு உன்னை பெத்தாளானு கேளு?” என்று அனுப்பியவள், 

 

அந்த ஃபோனை தூக்கி போட்டு உடைக்க அது சில்லு சில்லாக உடைந்து சிதறியது.

 

“இல்ல மேகா.. இனி.. இனிமே இது மாதிரி..” என்று அவன் அடுத்து பேச வரும்போது அவனிடம் உஷ் என்றவள், 

 

“இனி எந்த நம்பிக்கையில நான் இருக்க.. அதான் ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டியே..” உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, எப்பொழுதும் எடுத்துச் செல்லும் ஹேண்ட் பேக்கில் போனை எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள், அடித்து ஊற்றும் மழை என்றும் பாராமல்..!

 

எப்படி இந்த வீட்டிற்கு திருமணம் ஆகி வரும் பொழுது கட்டிய புடவையோடு வந்தாளோ அதே போல கட்டிய புடவையோடு மட்டுமே இப்பொழுதும் சென்றாள்..!

 

சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றவன் அவள் பின்னே மேகா மேகா என்று ஓட.. அதற்குள் அவள் லிப்ட்டில் கீழே இறங்கி மழையில் நனைந்து கொண்டே ஆட்டோ ஏறினாள். வெளியே வந்து பார்த்தவன் பின்னால் வந்த ஆட்டோவில் ஏறி அவனும் சென்றான்.

 

“அந்த ஆட்டோவ பாலோ பண்ணுங்க.. அந்த ஆட்டோவ விடாம கிட்ட போய் ஃபாலோ பண்ணுங்க” என்று ஆட்டோ ஓட்டுனரிடம் முறையிட்டுக் கொண்டே வந்தான்.

 

வதனி அவள் பிறந்த வீட்டு வாயிலில் இறங்கும்போது இவனும் பின்னோடு வந்து அவளை பிடித்து “வேணாம் மேகா.. எதா இருந்தாலும் நம்ம வீட்டிலேயே வச்சே பேசிக்கலாம்” என்றவனை முறைத்து பார்த்தவள், 

 

“அது இனி உன் வீடு. இனி ஒரு முறை என்னைத் தேடி வந்த?? அப்புறம் என்னையும் புள்ளையும் உயிரோடு பார்க்க மாட்ட” என்றபடி அவர்கள் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.

 

அவளை தடுத்து நிறுத்த முடியாத கையாலாகத்தனத்தோடு அந்த மழையிலேயே நின்றிருந்தான் நிரஞ்சன்.

 

“இந்த நேரத்துல யாரு?” என்றப்படி தூக்க கலக்க விழிகளை தேய்த்தபடி கதவைத் திறந்த மேகலா,

கொட்டும் மழையில் நனைந்து அதுவும் பிள்ளையோடு நின்றிருந்த மகளை கண்டதும், “வதனி..” என்று அவர் அலற.. உறங்கிக் கொண்டிரு

ந்த தங்க பாஸ்கரனும்.. தன் அறையில் இருந்து விகர்த்தனனும் ஓடி வந்தனர்..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top