அழகன் 20
பள்ளி ஆண்டு விழாவை எல்லாம் முடித்துவிட்டு சற்றே கலைப்பாக வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் அங்கயற்கண்ணி.
வீட்டுப் பெண்கள் உணவை முடித்திருக்க.. மகள் வந்ததும் “ஆத்தா கண்ணி.. உடனே படுக்க போயிடாத ஆத்தா.. சாப்பிட்டு போ. நீ போய் போய் படுத்தினா உனக்கு இருக்கிற அலுப்புல படுத்த உடனே தூங்கி போய்டுவ, சாப்பிட்டு போய் படு ஆத்தா..”’என்ற கலையரசியைக் கண்டவள் அலுப்புடன்
“நிஜமாவே அவ்வளவு டயர்டா இருக்குமா. என்னால சாப்பிட முடியாது. சாப்பாடு வேணாம்” என்றாள் கண்கள் சொருகியப்படி.
உடனே தன் கண்களை விரித்து உருட்டி “இதுக்கு தேன் உன்னைய நான் வேலைக்கே போக வேணான்னு சொல்றேன். பொம்பள புள்ள வீட்டிலேயும் வேலை பாத்து வெளியில் வேலை பாக்க.. சத்து வேணாம்? நாளைக்கு கல்யாணம் கட்டி புள்ள பெக்குறதுக்கு உடம்பில் தெம்பு வேணாம்? இனிமேட்டு அந்த ஸ்கூலுக்கு வர மாட்டேன்னு சொல்லி லெட்டர் போட்டுடு” என்றார் ஆவேசமாக..!
கலையரசி பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வேலைக்கு செல்லக்கூடாது என்று கட்டாம்பெட்டித்தனம் கொண்ட பெண்மணி எல்லாம் கிடையாது.
ஏன் இவரும் சொக்கியம்மாளும் கூட பொழுதுக்கும் வீட்டு வேலை பார்த்தாலும் மீதி நேரம் தங்கள் கணவர்களுக்கு ஒத்தாசையாக வயல் தோப்பு துறவு என்று சுற்றுபவர்கள் தான்..!
ஆனால் என்னதான் வேலைகள் செய்தாலும் அதற்கு தக்க உழைக்கும் உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?
இப்படி சோர்வாக இருக்கிறது.. அலுப்பாக இருக்கிறது.. என்று உண்ணாமல் உறங்கச் சென்றால் அந்த உடம்பு என்னத்துக்கு ஆகும் என்பதுதான் அவரது கவலை..!
கலையரசியின் பேச்சில் அதிர்ந்து போனவள் “நம்ம ஆத்தாவ தெரிஞ்சுகிட்டு வாய் கொடுத்தது நம்ம தப்புதேன்” என்று முணுமுணுத்தவள்,
“இதோ இரண்டே நிமிசம் மா.. டிரஸ மாத்திட்டு சாப்பிட வரேன்” என்றாள்.
சொன்னது போல அடுத்த பத்து நிமிடத்தில் உடையை மாற்றி விட்டு வந்தாள்.
இல்லை என்றால் சாத்திருக்கும் கதவை டொக் டொக் என்று தட்டிக் கொண்டே இருப்பார் கலையரசி, அவள் வெளியே வரும் வரை என்று நன்கு அறிந்திருந்தாள் அன்னையைப் பற்றி..!
மகளுக்கு பரிமாறிக் கொண்டு அருகில் அமர்ந்திருந்த அம்மாவை பார்த்து “நீங்க எல்லாம் சாப்டாச்சா?” என்று கேட்டாள்.
“அப்பவே ஆச்சது ஆத்தா.. நானு உங்க அப்பத்தா பாப்பா எல்லாருமே சாப்பிட்டோம்” என்றாள்.
பாப்பா என்று கலையரசி குறிப்பிட்டது ஆண்டாளை தான்.
உடனே அங்கயற்கண்ணி இரண்டு நாட்களாக ஆண்டாளின் தரிசனமே தனக்கு கிடைக்கவில்லையே ஏன் என்று யோசித்தாள்.
அங்கயற்கண்ணி பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் “அத்தாச்சி..” என்று கூவிக் கொண்டே ஓடி வந்து அருகில் அமர்ந்து பள்ளியில் நடந்த கதைகளை எல்லாம் சொல்ல சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பாள்.
அவ்வப்போது “உன் காதல் கதைய சொல்லு அத்தாச்சி.. நான் கேட்டே ஆகணும்..!” என்று அலும்பு பிடித்து அடம்பிடிப்பவளை பேசி பேசிய சரி பண்ணி அதை சொல்லாமல் தவிர்த்து விடுவாள் அங்கயற்கண்ணி.
“ஏன் இந்த பால்கோவா ரெண்டு நாளா வரவே இல்ல என்னைய பார்க்க? எப்ப ஸ்கூல் விட்டாலும் வந்துருவாளே?” என்று யோசனையோடு அமர்ந்திருந்தவளின் கையைத் தட்டிய கலையரசி,
“என்ன சாப்பாடு அப்படியே வச்சிட்டு எதுக்க வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருக்குறவ? முதல்ல சாப்பிடு. அப்புறம் ரோசனா பண்ணுவியாம்” என்று கலையரசியின் அதட்டி லவ் “இதோ மா” என்று இட்லியை விட்டு வாயில் வைத்தாள்.
சாப்பிட்டுக் கொண்டே அன்னையைப் பார்த்து “எங்கம்மா இந்த பால்கோவாவ ஆள காணும்? அதுக்குள்ளேமா சாப்பிட்டு படுத்துடுட்டாளா?” என்று கேட்டதும்,
அவள் முதுகில் ஒரு தட்டு தட்டி “பகல்ல பக்கம் பார்த்தே பார்த்து பேசணும்.. இராவுல அது கூட பேசகூடாதுனு உனக்கு தெரியாது? என்னதேன் உனக்கு அவ மாமா பொண்ணு இருந்தாலும் இப்போ உனக்கு அவ அண்ணி..! இதே பேச்சு தான் நாளைக்கு நீ கட்டி கொடுத்து போற வீட்டிலும் வரும். அங்கன உன் பொறந்த வீட்டு மரியாதைங்கிறது நீ பேசுற பேச்சிலையும்.. நீ எங்களுக்கு கொடுக்கிற மரியாதையிலும் தேன் இருக்கு. இந்த பால்கோவா பாஸந்தி இதெல்லாம் வீட்டுக்குள்ள மட்டும் வச்சுக்கோ..! அதுவும் நீங்க ரெண்டு பேரும் இருக்கும்போது மட்டும் வச்சுக்கோ..!” என்று அவர் பெரிதாக அறிவுரை வழங்க..
“ஆத்தா.. மாரியாத்தா தெரியாத்தனமா சொல்லிப்புட்டேன். இனிமே உன் எதிர்க்க பால்கோவானு சொல்லவே மாட்டேன் சரியா? அண்ணினு அழகா அன்பா ஆசையா மரியாதையா கூப்பிடுறேன் போதுமா?” என்றாள் இரு கைகளையும் கூப்பி..
“என்னவோ புத்தியோட பொழைச்சுக்கிட்டா சரி.. இதுல இவ டீச்சராமாம். இவளே உறவுக்கு வயசுக்கு ஒழுங்கா மரியாத குடுத்து பேச மாட்டேங்குறா.. இதுல நாலு பிள்ளைக்கு எப்படி மரியாதை சொல்லிக் கொடுப்பான்னு எனக்கு தெரியல..! அக்கம் பக்கத்தில் உள்ள பிள்ளைகள் எல்லாம் இவ ஸ்கூல்ல சேர விடாம.. வேற ஸ்கூல்ல சேர்க்க சொல்லணும்” என்றவர் புலம்பியப்படி மகள் சாப்பிட்டதும் மீதி உணவுகளை உள்ளே வைத்துக் கொண்டிருந்தார்.
அன்னையை முறைத்துக் கொண்டிருந்தவள், ‘ம்ஹூம்.. இன்னைக்கு தாத்தா கிட்ட கொடுத்து வாய் மீள முடியாது. நமக்கு உடம்பு ஏற்கனவே டயர்டா இருக்கு.. நாளைக்கு வந்து வச்சுப்போம் கச்சேரியை” என்று அறைக்குள் சென்று முடங்கி விட்டாள்.
மாடி மேலிருந்து அங்கயற்கண்ணி பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் தான் இருந்தாள் ஆண்டாள்.
ஆனால் அவளிடம் சென்று பேசவில்லை ஆண்டாள்.
அன்று போலியாய் ஒரு காதல் கதை சொல்லி தன்னை ஏமாற்றியது ஒரு பக்கம் கோபம்.. நிச்சயதார்த்தத்தில் நடந்து கொண்ட விதம் மறுபக்கம் கோபம்.
ஆம்.. அன்று அழகன் சொன்னதிலிருந்தே இரு பக்க சூழ்நிலைகளை புரிந்து கொண்டவளுக்கு தன் கணவன் பேசியது சரி என்று புரிந்தது.
முதலில் அங்கயற்கண்ணியின் செய்கைகள் எல்லாம் பெரிதாக சாகசங்கள் போல அவளுக்கு தோன்றியது. கதையில் வரும் கதாநாயகிகளின் தீரத்தை படிப்பது போல ஒரு உற்சாகத்தை கொடுத்தது ஆண்டாளுக்கு.
ஆனால் தன் கணவன் இதனால் அவமானப்பட்டு இருக்கிறான் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று புரிந்ததும் தான், ஒரு குடும்பத் தலைவியாக எல்லா பக்கமும் அவளது யோசனை சென்றது.
“தான் காதலிப்பதை வீட்டில் முன்னமே சொல்லி இருந்தா அதற்கு தக்கன ஏற்பாடு செய்திருப்பாங்களோனோ அத்தையும் மாமாவும்..!
அதை விட்டுட்டு நிச்சயம் நடக்கும் இடத்தில.. சொந்த பந்தங்கள் சூழ இருக்கும் நிலையில்.. அதுவும் தன் அண்ணனுக்கு பார்த்த பெண்ணை மற்றொருவனுக்கு எப்படி இவாளால கல்யாணம் செய்து வைக்க முடிந்தது? அப்போது தன் அண்ணனின் மனநிலை.. குடும்பத்தின் நிலை இதெல்லாம் இவா யோசிக்கவே மாட்டாளா? அப்படி என்ன இந்த காதல் கன்றாவியெல்லாம் பெருசா இருக்கு இவாளுக்கு?” என்று அவளுக்கு கடுப்பாக இருந்தது.
அந்த கடுப்போடும் ஆத்திரத்தோடும் பேசினால் கண்டிப்பாக ஏதாவது வாய் விட்டு விடுவாள்.. அது இருவரது உறவு நிலைக்கும் சரியானது அல்ல..!
ஒரு மாமா பொண்ணாய் அத்தை பெண்ணிடம் பேசுவது வேறு..!
அண்ணனின் மனைவி அண்ணியாய் பேசுவது வேறு அல்லவா?
உறவுகளும் அதன் கணங்களும் மாறும் அல்லவா?
அதனால் பேசும் விஷயத்தை சற்று ஆறப் போட்டு மனம் தணிந்ததும் பேச வேண்டும் என்ற முடிவெடுத்து இருந்தாள் ஆண்டாள். அதற்காக அங்கயற்கண்ணி வாழ்க்கையை அப்படியே விட்டுவிட மனம் வரவில்லை அவளுக்கு.
ஒரு பக்கம் தங்கையின் காதலை தெரிந்திருந்தும் தன்னிடம் வரவில்லையே என்று ஆதங்கத்தில் கோபத்தில் அமைதியாக விட்டுப் பிடிக்கிறான் அழகன்.
மறுபக்கம் ‘தன் காதலை அவரிடம் சொல்ல பயந்து என் அண்ணனின் கல்யாணத்திலேயே குழப்பம் விளைத்து விட்டோமே?’ என்ற ஒரு குற்ற உணர்வில் தான் அண்ணனை நெருங்காமல் தள்ளியே நிற்கின்றாள் அங்கயற்கண்ணி.
வீட்டில் உள்ளவர்களுக்கு இது பெரிதாக தெரியவில்லை என்றாலும்.. இருவரையும் நன்றாக கவனித்து வந்த ஆண்டாளுக்கு இது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக புரிந்தது.
‘இதற்கெல்லாம் ஒரே தீர்வு அண்ண தங்கச்சி இரண்டு பேரையும் பேச வைக்கணும். அவா அவா மனசுல உள்ளது என்னவோ கோபமோ விருப்பமோ, வெறுப்பு ஆதங்கமோ ஆற்றாமையோ அன்பு அரவணைப்போ எதா இருந்தாலும் இவா ரெண்டு பேரும் ஒருத்தர் மத்தவாளிடம் பேசி தீர்த்தாக வேணும். பேசினால் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவுக்கு வரும்..’ என்று எண்ணியவள்,
“இல்லன்னா.. அத்தாச்சி வீட்டை எதிர்த்து போய் அந்த சரபேந்திரன கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ள மாட்டா.. அதேபோல தங்கையாக வராமல் அவரும் இதை முன்னெடுக்க மாட்டார். பத்தாக்குறைக்கு கலையரசியத்தை பொண்ணுக்கு நல்வாழ்க்கை அமைய ஊர்ல உள்ள கோயிலுக்கெல்லாம் நேர்த்திக்கடன் வேண்டிக்கொண்டு இருக்கா..”
“இந்த மாமாவோ.. அவர் பங்குக்கு ஜாதக கட்ட தூக்கிண்டு கல்யாண புரோக்கர் முதல் மேட்ரிமோனி வரை அலையோ அலைனு அலைசிண்டு இருக்காரு..”
“ம்ஹீம்.. இப்படி நாலு பேரும் நாலு திசையில சுத்திண்டே தான் இருக்க போகிறா.. இதுக்கு ஒரு முடிவு வரப்போவதில்லை..!
ஆண்டாளு.. நாம தான் இத பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்.. பீ ப்ரேவ் ஆண்டாள்” என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டவள், அதற்கு முதலில் கணவனிடம் பேச வேண்டும் என்று தீர்மானமாக தீர்மானித்தாள்.
அன்று இரவு அழகனுக்காக வெகு நேரம் காத்திருந்தாள் ஆண்டாள்.
“ஹாய் பொண்டாட்டி.. என்ன இந்நேரம் வரை முழிச்சிருக்கிறவ.. மதுரைக்கு எதும் மழை வர போகுதா?” என்று சிரிப்போடு கேட்டுக் கொண்டு அறை உள்நுழைந்தவனை பார்த்து உதட்டை சுழித்தவள்,
“ஏன் இந்நேரத்துக்கு உங்களுக்காக நான் காத்திண்டு இருந்தது இல்லையானா?” என்று கேட்டாள்.
“இந்நேரத்துக்கு தான? ஆகா.. பேஷா காத்திண்டு இருப்பாளே என் மாமி..! எப்படி தெரியுமோ? நன்னா கட்டில கை கால பரப்பிண்டு கொஞ்சமும் நேக்கு இடம் விடாம.. வாயில ஜலம் வடிச்சிண்டு.. பப்பரக்கானு தூங்கிண்டு இருப்பியோனோ?” என்று கிண்டலோடு அவளை போலவே கேட்டவனை முறைத்தவள்
“முதல்ல கை கால கழுவிண்டு வாங்கோ.. அப்புறம் வச்சிக்கிறேன் உங்களாண்ட” என்று முறைத்தாள்.
“அபச்சாரம்.. அபச்சாரம்..! அபிஸ்டு மாமி.. கட்டின புருஷன வச்சுக்கிறேன்னு சொல்றியே.. இது நோக்கு தப்பா தெரியலே” என்று அவளை நெருங்கி நின்று இடையில் கைகோர்த்து தன் இடையோடு அவளை இறுக்கமாக அணைத்தவனை கண்டு பொய்யாக முறைத்தவள்,
“நா ஒன்னு அபிஸ்டு இல்லை.. எங்க ஆத்து மாமா தான் அபிஸ்டு..! என்னை கட்டிண்டு அபச்சாரம் பண்றார்” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு..!
“ஆஹா.. சம்சாரத்துக்கு கிட்ட அபச்சாரம் ஏதுடி பொம்மா.. ஆல் சமாச்சாரம் மட்டும் தேன்” என்றவன் கைகளோ அவளது
நாபிக் குழியைத் தடவியது. அவள் மெல்லிய சிலிர்ப்புடன் அவன் விரல்களைப் பிடித்தாள். அவள் நாபிக் குழியைச் சுற்றி ஒற்றை விரலால் கோலமிட்டபடி அவள் கழுத்தின் மிருதுவான தோலைக் கடித்தவன், மீண்டும் அவள் கன்னத்துக்கு உதட்டை நகர்த்தினான். அவளின் காமச் சிணுங்கலை ரசித்தபடி சூடேறி சிவந்திருந்த அவளின் பருவக் கன்னத்தை கடித்து சுவைத்தான். அவள் முனகி நெளிந்து கன்னத்தை விடுவித்தாள்.
“போங்கோ.. போங்கோ.. போய் சுத்தம் பண்ணிட்டு வாங்கோ” என்று அவள் துரத்த..
“எப்படியும் முடிஞ்சதும் சுத்தம் பண்ணித்தானே ஆகணும். எதுக்கு வேஸ்ட்டா ரெண்டு தடவை.. அப்பவே பண்ணகப்போம் டி பொம்மா” என்றவன் அவளது காது மடலை கவ்வினான்.
அவனின் மோக விளையாட்டை தாங்காது ஒரு ஆழமான பெருமூச்சுடன் அப்படியே பின்னால் சரிந்து மல்லார்ந்து படுத்தாள் பாவை. அவள் இடையருகில் சரிந்து படுத்து அவளின் மென்மையான வயிற்றையும் நாபியையும் முகத்தால் தேய்த்தான். நாபியைச் சுற்றி படர்ந்திருந்த அவளின் பொன்முடிகள் சிலிர்த்து நிமிர்ந்திருந்தன. அவற்றை இதழ்களை குவித்து ஊதினான்.
“ஸ்ஸ்.. னா.. என்ன பண்றேள்?” என்று வெட்கச் சிணுங்கலுடன் அவன் கையைப் பிடித்தாள் ஆண்டாள்.
“அழகுடி பொம்மா நீ..” அவள் வயிற்றின் மேல் முகத்தை கவிழ்த்து ஆழ்ந்து முத்தமிட்டான்.
“ஆவ்வ்வ்” சிலிர்த்து சிணுங்கி இடையை ஆட்டினாள்..
அவனோ விடா கண்டனாக அங்கேயே தன் முகத்தை வைத்து சின்ன சின்ன குட்டி குட்டி முத்தகங்களை இட்டான்.
அவளோ ஆகப்பெரும் உணர்ச்சி பிடியில் சிக்கித் துடித்தாள்.. தவித்தாள்..!
அவன் புஜங்களையும் பிடறியையும் பலமாக தன் விரல்களால் இறுக்கிப் பிடித்தாள். அவன் நாவும், பற்களும் கொடுக்கும் சுகம் தாங்க முடியாமல் நெளிந்து முன்னும் பின்னுமாக அசைந்தாள்.
அவளை தீராத ஆசையுடனும்.. அடங்காத மோகத்துடனும்..
அளவில்லா நேசத்துடனும்..
கலந்து கலவிக் கொண்டு களைந்தான்.. அவளையும் கலைத்தான்.. களைத்தான்..!
அவளை அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தை தடவிக் கொண்டு இருந்தவனின் தாடையை பற்றி தன் முகம் பார்க்க வைத்தாள் ஆண்டாள்.
“ஓய் மாமி.. என்ன அடுத்த ரவுண்டா?” என்று கேலியாக கேட்டவனின் நெஞ்சத்தை தன் பற்கள் கொண்டு தண்டித்தாள்.
“உங்களாண்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் னா” என்றவள் காலையிலிருந்து தான் யோசித்து வைத்து ஒவ்வொன்றாய் சொன்னாள்.
“அத்தாச்சி இப்படி இருக்கிறது அத்தைக்கு மாமாவுக்கும் எவ்வளவு வருத்தமா இருக்கும்? அதை யோசிச்சேளா? அவாளுக்கும் என் வயசு தானே? நீங்க கொஞ்சம் பிடி கொடுங்கோ ரா.. அவா தான் சின்ன புள்ள முறுக்கிட்டு இருக்கிறானா நீங்களும் அப்படியே இருக்களாமோ? கொஞ்சம் இறங்கி வாங்கோனா” என்றாள்.
மனைவி பேசி முடிக்கும் வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவனோ அடுத்த நிமிடம் வீறுட்டென்று எழுந்து அமர்ந்தான்.
அவளோ பயந்து அவனை பார்க்க..
“ஒன்னும் இல்ல நீ தூங்கு. நான் கொஞ்சம் யோசிக்கணும்” என்றவன் மெல்ல எழுந்து வழக்கமான அவன் வேட்டி கையில்லா வெள்ளை பனியனோடு பால்கனி அருகே சென்று நின்றான்.
அவளும் உடைமாற்றி வந்து “என் மேல கோபமா னா?” என்று டெல்லியில் குரலில் கேட்க..
“அதான் வீட்டுக்கு தலைவி பேசிட்டீங்க தானே.. அதை பத்தி முடிவு எடுக்க வேணாமா?* என்று வேண்டுமென்றே வெறுப்பேற்றினான்...
"ச்ச.. உங்களாண்ட போய் பொறுமையா பேசினேன் பாருங்கோ" என்று சலித்துக்கொண்டவள் அங்கிருந்து விறுவிறுவென வேகமாக அறைக்குள் சென்றுவிட்டாள்.
இதழை வளைத்து சிரித்தவனின் முகமோ அதன்பின் இறுக்கத்தை தத்தெடுத்தது. இருட்டிய வானத்தை பார்த்தவாறே நின்றிருந்தான்.
வெகுநேரம் அந்த அந்தக்கார இருளையே வெறித்துக்கொண்டு நின்றிருந்தான்.
மறுநாள் காலையில் கணவன் தன்னிடம் ஏதாவது பேசுவான் என்று ஆவலாக எதிர்பார்த்த ஆண்டாளின் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டு, அன்றும் வெகு சீக்கிரமாகவே தனது பர்னிச்சர் கடைக்கு சென்று விட்டான் அழகன்.
“சரியான இம்சை புடிச்ச குடும்பம்.. திமிரு புடிச்ச குடும்பம்.. ஒன்னாவது இறங்கி வருதா பாரு? எல்லாம் உச்சாணி கொம்புல தான் ஏறிண்டீ உக்காந்துட்டு இருக்கா.. நல்ல ஆத்துல வந்து வாக்கப்பட்டேன்” என்று அவள் சலித்துக் கொள்ளத்தான் முடி
ந்தது.
ஆனால் அழகனோ வழக்கமாக அவனது கடைக்கு செல்லவில்லை. அன்று காலை சரபேந்திரன் முன்னால் தான் அமர்ந்திருந்தான். அவனை கண்களால் கூர்ந்து அளந்தபடி..!
தொடரும்..
