Share:
Notifications
Clear all

அழகன் 18

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 310
Thread starter  

அழகன் 18

 

 

“ஏன்னா.. உங்க ட்ரஸ் எல்லாம் ரொம்ப நனைஞ்சு போயிருக்கு.. சேஞ்ச் பண்ணிக்கோ னா” என்றாள் ஆண்டாள், வயலிலிருந்து இருவரும் வீட்டிற்கு அப்போது தான் வந்திருந்தனர்.

 

மதியம் உணவை கலையரசி மகனுக்கும் மருமகளுக்கும் அனுப்பி வைத்திருந்தார். தோட்டத்திலேயே உண்டு விட்டு மீண்டும் ஒரு முறை தன் ஆசை தீர போரிலே குளித்து விட்டு வந்தாள்.

 

இவர்கள் வரும் நேரம் அனைவரும் மதிய உறக்கத்தில் இருந்தனர்.

 

அதனால் ஓசைப்படாமல் ஈர உடையுடனே இருவரும் தங்கள் அறைக்குள் புகுந்து விட்டனர்.

 

அப்படியொரு சிரிப்பு இருவருக்கும்..!

 

ஏதோ வீட்டுற்கு தெரியாமல் காதல் செய்யும் பதின்ம வயது காதலர்கள் போல.. 

 

“நல்ல வேள அப்பத்தா பார்க்கல னா..” என்றாள் கிளுக்கி சிரித்து..

 

“ஏன் பாத்தா தான் என்ன? அதெல்லாம் எங்க அப்பத்தா ஒன்னும் சொல்ல மாட்டாய்ங்க” என்றவன் அவளை சுவரின் இடையே மீது இரு கைகளுக்கு இடையே சிறை பிடித்தான்.

 

“உங்க டிரஸ் ஈரமா இருக்கு னா போய் சேஞ்ச் பண்ணுங்கோ.. என்கிட்ட வம்பு பண்ணிட்டு நிக்காதேள்? அப்புறம் உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கும்னா” என்றாள் அவன் சட்டை பட்டனை திருகிக் கொண்டே..

 

“ஆமா அப்படித்தான் ஒவ்வொரு பட்டனா திருகி திருகி அப்படியே கழட்டி விட்டுட்டு நல்லா இருக்கும்” என்றான் குறும்பு புன்னகையுடன்.

 

“அச்சோ.. ஏதோ தெரியாமா பண்ணிட்டேன்?” என்று அவள் கையை எடுக்க.. அவள் கையைப் பிடித்து மீண்டும் தன் சட்டையில் வைத்தவன்,

 

“என் பொண்டாட்டி இருக்கப்ப.. நான் ஏன் மெனக்கெடனும்?'' என்றவன், அளது உதட்டோரம் முத்தமிட்டுச் சிரிக்க.. அவள் கைகளைப் பிடித்துத் தன் நெஞ்சில் அழுத்தினான் அழகன்.

 

காதல் கண்களில் வழிய தன் முன்னே நின்ற கணவனை கண்டவள் “நெஜமாலுமே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் சொன்னதும் நீங்க சந்தோஷப்பட்டேளா னா? என் மேல உங்களுக்கு..” காதல் என்ற வார்த்தையை சொல்ல தயங்கி “அன்பு நேசம் இருந்துச்சா?” என்று கேட்டாள் ஆண்டாள்.

 

 

அவள் பழைய கதைகளை நினைத்து தான் கேட்கிறாள் என்று புரிந்தவன்,

 

“உன்னை நான் சீண்டினாலும் அப்போவே என் மனசுல உன் மீதான நேசம் லேசா இருந்திருக்கிறத நான் உணரவே இல்ல டி பொம்மா.. அதனாலதான் எனக்கு திருமணம் வேறு பொண்ணோட நிச்சயக்கப்பட்டதும் அது நின்னுபோனதும் என்னைய பெருசா அந்த பொண்ணு பாதிக்கல..! அந்த பொண்ணு அப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணி வந்து நின்ன அவமானம் தான் என்ன கொன்று தின்றுச்சு..” என்றதும், கணவனின் நெஞ்சில் இருந்த தன் கையை கொண்டு அவன் இதயத்தை மெல்ல நீவி விட்டாள் ஆண்டாள்.

 

“ஆனா.. பெரியவங்க ஒன்னு சொல்லுவாங்க, ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாது அப்படின்னு.. அது உண்மைதான் போல.. பாரு.. அந்த பொண்ணு அவனுக்கு தேன் பொண்டாட்டி ஆகணும்னு இருந்திருக்கு.. அதான் நான் கட்ட முடியல..! அதே போல இந்த சீனி சக்கரகட்டி எனக்கு தேனு இருந்திருக்கு..” என்றவன் அவள் கண்களை பார்த்து.. "கழட்டு டி பொம்மா?" என்று கேட்க.

 

"ம்ம்ம்" என்ற பெண்ணவளோ, அவனின் ஈர உடையினுடே அவனைக் கட்டி கொண்டாள்.

 

“ஹே.. பொம்மா.. என்னாச்சு?” என்றவன், அவளின் கலங்கிய கண்களைக் கண்டு பதறி அதன் பின் அவள் உணர்வுகளைப் புரிந்து,

 

அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி, பின் பிறை முதலில் மென்மையாக முத்தமிட, அக்கணத்தில் இருவருமே லயித்திருந்தனர்.

 

ஈரமாக இருந்த தன் சட்டையின் மீது அவள் கை வைத்து "இப்போது கழட்டி விடலாம் தானே" என்றான்.

 

பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்றினாள் அவனின் பொம்மா. அவளது தொடுகையில் அவனுக்குள் ஒரு மோக எரிமலை குமுற ஆரம்பித்திருந்தது. அதை வெடிக்க விடாமல் பாதுகாக்க அவன் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

 

அவனின் சட்டை பட்டன்களைக் கழற்றியவள். ஈரமாக இருந்த நெஞ்சில்.. அந்த கருகருவென அவனது சுருள் முடியினை அவளது பட்டுக் கரத்தை வைத்து மெதுவாக தடவினாள். அவனுக்கோ சிலிர்க்க, தன் உடல் மெல்ல நெளிந்தான். அவள் விரல்கள் அவன் மார்பின் மெல்லிய ரோமங்களை வருடின.

 

''ஏய்ய்.. என்ன பண்ற ?''

 

''ஏன் னா. இந்த ஆம்பளைங்களுக்கும் மட்டும் நெஞ்சுல இவ்வளோ முடி.. பொசு பொசுன்னு இருக்கு'' அவளது விரல்கள் அவன் மார்பை வருடியது. அவனுக்குள் சட்டென ஒரு மின் அதிர்வு பாய.. உடல் விறைத்தது.

 

''ஷ்ஷ்.. ஏய்.... விடுடி'' தன் கைகளால் அவளது பட்டுக் கரங்களைப் பிடித்தான்.

 

“ஓஹ்.. உங்களாண்ட வ்க்னெஸ் அங்க இருக்கா?” என்று கண்ணடித்து கேட்டவள், அவன் கொஞ்சம் கூட எதிர் பாராத வகையில் அவள் உதடுகளை அவன் நெஞ்சில் பதித்து மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தாள்.

 

"ஹேய்.. என்ன இது?'' என்றான் சிலிர்த்து புதிதாய் பிறந்த வெட்கத்தோடு.

 

''என்ன மட்டும் எப்ப பாத்தாலும் சீண்டிகிட்டே இருக்கிறேள் இல்லையா.. உங்களுடைய வீக்னெஸை நான் கண்டுபிடிச்சிட்டேன் நானும் இது இப்படி சீண்டுவேன்.'' கண்ணடித்து சிரித்தவளின் விரல்கள் மீண்டும் மீண்டும் அவன் நெஞ்சை வருட..

 

"பொம்மா!!" கிறக்கமாக முனகியவன் அவள் கழுத்தில் விரல்களால் மென்மையாகத் தடவினான். 

 

அவள் சுகித்தப்படி மீண்டும் அவன் மார்பில் முத்தம் கொடுத்தாள்.

 

அவனின் மோகம் சட்டென கிளர்ந்து அவளது ஸ்பரிசத்தில் பரவசத்தில் ஆழ்த்தியது. அவள் கழுத்தில் வைத்த அவன் கை விரல்களில் மெலிதான அழுத்தம் கொடுத்தான். அவளது ஈர உதடுகள் அவன் மார்பெங்கும் மென்மையாக முத்தம் ஊர்வலம் போக ஆரம்பித்தன.

 

'' ம்ம்ம்ம்..'' முனகிக் கொண்டே அவன் இடுப்பினோடு‌ தன் கைகளை கோர்த்து அவனை அணைத்துக் கொண்டாள். அவன் மார்பில் தன் முகத்தை அழுத்தி தேய்த்தாள். அங்கங்கே முத்தம் கொடுத்து அவனைக் கிறங்க வைத்தாள்.

 

"பொம்மா.. வேண்டாமடி.. இன்ப அவஸ்தையா இருக்கு. அப்புறம் என்னைய கன்ட்ரோல் பண்ண முடியாது. நீ பாவம்” என்றவன் அவளது முதுகில் தன் கைகளைப் படர விட்டு தன் நெஞ்சில் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, அவளது காதில் கிசுகிசுத்தான் ரகசியமாய்.. 

 

குபீரென பொங்கிய வெட்கத்தில் சட்டென தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள். வாயைப் பொத்திக் கொண்டு முகத்தை அன்னார்ந்து "இப்படியெல்லாம் இந்த உங்களுக்கு பேச தெரியுமா னா?" சிரித்தாள்.

 

வெட்கத்தில் அவள் உடல் வெளிப்படுத்திய அசைவுகள்.. எத்தனை கோடி கொட்டுக் கொடுத்தாலும் நடிப்பில் கொண்டு வர இயலாது. அவள் வெட்கம் அவனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. வளைந்து நெளிந்து.. ஒரு வழியாக அவள் ஆடி நின்றபோது சில நிமிடங்கள் கரைந்திருந்தன.

 

சிறுது நேரம் அவளின் இந்த அழகினை பார்த்துக் கொண்டிருந்தவன் மீண்டும் "ஏன் நான் பேச மாடாடேனாமாம்? என் உணர்வுகள் உணர்ச்சிகள் அதனால் வெளிப்படும் பேச்சுகள் அனைத்துக்கும் உரியவள் நீ மட்டும் தான். சோ உன்கிட்ட மட்டும்தான் நான் இப்படி பேச முடியும்..! அதே போல தான் நீயும்.. கொஞ்சம் முன்னாடி நீயா கொடுத்து முத்தங்களும் அதற்கான சாட்சிகள் தான்..!” என்றவன்,

 

 

“நான் எல்லாம் செயல் வீரனாக்கும் செயலில் இறங்குவோமா?" என்று கண் சிமிட்டி கேட்டான்.

 

நாணத்தில் கன்னங்கள் ஜிவுஜிவுக்க.. முகம் சிவந்து போய் அவனைப் பார்த்தாள் ஆண்டாள். அவளால் பேச முடியவில்லை. 

 

அவளின் ஈர உதடுகள் ஜன்னலில் இருந்து வந்த மெல்லிய வெளிச்சத்தில் பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்தது. மிருதுவான அவளது இரு வளைக் கரங்களையும் பிடித்து மெதுவாக அவன் பக்கத்தில் நெருக்கமாக இழுத்தான். அவளின் நெஞ்சுக் கனிகள் அவன் நெஞ்சில் உரசியது. அவன் உடலுடன் உடல் உரச நின்றாள்.

 

"இது என்ன வெட்கமா இல்ல தயக்கமா??"

 

அவளின் இரு கைகளையும் எடுத்து அவன் இடுப்பின் இரண்டு பக்கத்திலும் வைக்க அவளது மெத்தென்ற கைகள் பட்டதும் அவனுக்கு ஜிவ்வென்று ஏற.. அவளோ வெட்கம் கொண்டு சிலிர்த்தாள். அவள் கைகள் மெல்ல நடுங்குவதை அவனால் உணர முடிந்தது.

 

“இன்னுமா டி என் அருகாமை உன்னை நடுங்க வைக்கிறது? என் தொடுகை உன்னை சிலர்க்க வைக்கிறது?” என்று அவள் தாடையில் ஒற்றை விரலைக் கொண்டு நிமிர்த்தி கேட்டான்.

 

“அது என்ன இன்னுமா அப்படிங்கற ஒரு கேள்வி? எப்போதுமே உங்களுடைய இந்த ஸ்பரிசம் தொடுதல்.. எனக்கு சிலிர்க்க தான் செய்யும். அதில் என் தேகம் நடுங்க தான் செய்யும். இது பெண்ணின் இயல்புகள் னா” என்றாள்.

 

“நீ நூத்துக்கு கிழவி ஆனதுக்கு அப்புறம் கூடவா?” அவன் சீண்ட..

 

“கண்டிப்பா.. இந்த கிழவன் தீணடும் போது.. என் மேனி சிணுங்க தான் செய்யும்” அவள் பதிலிட..

 

“என் பொம்மா..” என்று இறுக்க அணைத்துக் கொண்டான்.

 

மீண்டும் ஒரு ஆதுரமான அணைப்பு.. இறுக்கமான ஒரு தழுவல்.. அவள் மூச்சுக் காற்று அவன் மார்பில் சூடாய் கோலமிட்டது. அதன் பின் அவளது ஈர உடைகள் களையப்பட, அவளோ வெட்கம் கொண்டு கட்டிலில் போர்வையால் தன்னை மறைத்துக் கொள்ள.. 

 

அழகன் கட்டிலை நெருங்கி அவள் அழகை மறைத்த போர்வையை நீக்கினான். வசந்தம் வீசும் வாலிபத்தின்.. இளமை ரகசியத்தை தனது கைகளால் மறைக்க முயன்று தோற்றாள் ஆண்டாள்.

 

நாணம் கொண்ட மாது அவனையே போர்வையாகி போர்த்தி கொள்ள.. 

அவனோ ஆழமாய் முத்தமிட்டான். அவள் கன்னங்களை முத்தமிட்டு மெல்ல கடித்தான். அவள் சிணுங்கி திரும்ப, வலது பக்கக் கழுத்தில் முகம் புதைத்தான். அங்கேயும் மெல்லிய சத்தத்துடன் அழுத்தி முத்தமிட்டு மெல்லக் கடித்துச் சப்பினான். இதழ்களால் அவளை கொண்டாடினான். அவை முத்தங்களாகவும் சில சமயம் அங்கங்கே கடிகளாகவும்... அவள் விம்மி விம்மித் தணிந்தாள். அவள் நெஞ்சில் முகம் புரட்டி நிமிர்ந்தான்.

 

“பொம்மா.. இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த அழகனுக்கு ஆண்டாள் தான் வேணும்..! எப்பவும்.. என்‌ உயிராய்..! ஈருயிர் ஓருயிராய்..!” என்று அவன் காதலில் கசிந்துருக..

 

அவளும் அதே வார்த்தையை சொல்லத் துடித்தாள். ஆனால் தொண்டையைத் தாண்டி வார்த்தைகள் வரவில்லை. எச்சிலை விழுங்கி கண் நிறைந்த காதலுடன் அவனைப் பார்த்துக் கனிந்தாள். உள்ளத்திலிருந்து ஒரு சொல்லும் எழவில்லை. பேசும் எண்ணமே இல்லை. ஆனால் உள்ளம் அவனையே தியானம் செய்தது. இன்பத்தில் கனிந்தது போன்ற இனிய உணர்வுகளே அவளை ஆக்ரமித்திருந்தன. சொன்னால் தானா??

 

அவன் சொன்னபடி செயல்களால் செய்தாள். அவள் அவனை ஆதூரமாகத் தழுவிக் கொண்டாள்.

 

அவனது 

ஒவ்வொரு தீண்டலும் 

ஒவ்வொரு அசைவும் 

ஒவ்வொரு முத்தங்களும்  

ஒவ்வொரு அணைப்புகளும்

அவளைக் கலையும் முகிலெனக் கரைய வைத்தது. தானற்ற உணர்வுகளில் கரைந்தாள். சத்தமில்லாத நிசப்தம் மட்டுமே!! அவளின் சிணுங்கல்கள் மட்டுமே பேரொலியாய் இன்பமாய் ஒலித்தது 

அவனுள்.

 

 

அழகன் நீள் மூச்சு விட்டு தளர்ந்தபோது ஆண்டாள் மிகவும் களைந்திருந்தாள். அந்தப் பெண்மைக் கசங்கலில் அவளுக்கு துளியும் வருத்தமில்லை. மனதின் சிறைகள் உடைபட்டது போல மகிழ்ச்சி பல மடங்கு கூடியிருந்தது. 

 

அதற்கு முக்கிய காரணம் இன்று இருவரும் மனம் விட்டு பேசியது தான்.

 

பேச்சு என்னவோ முதலில் அங்கயற்கண்ணியை பற்றி ஆரம்பித்து இருந்தாலும்.. முடிவு அவர்களை நெருங்கதான் வைத்திருந்தது உள்ளத்தாலும் தேகத்தாலும்..!

 

ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் ஆனா அவனுக்கு திருமணம் என்று அவன் சொல்லி கேள்விப்பட்டிருந்தவள், ஆனால் அந்தக் கல்யாணம் நின்ற பின் கூட அவன் வருத்தப்படவில்லை. அந்த பெண்ணுக்காய் ஏங்கவில்லை என்று தெரிந்து மனதில் பெரும் குதூகலம் அவளுக்கு. 

 

இப்பொழுது இந்த நிமிடம் இது தான் ஸ்வாசிதம்..! இது தான் உண்மை..!

என்று நிம்மதி பெருமூச்சோடு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்.

 

மாலை போல அவள் எழுந்த போது அருகில் கணவன் இல்லை. வழக்கம் போல வேலையை பார்க்க ஓடிட்டான் என்று புலம்பினாலும்.. அவளுக்காக இன்று ஒருநாள் அவன் வேலை எல்லாம் விடுத்து செலவிட்டது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 

அதோடு கூடிய மன்னவனின் மனம் புரிந்த பின் மஞ்சனை கொண்டதில் வஞ்சியின் வதனமோ முன்னே இல்லாத ஒரு பொலிவு கொண்டது..!

 

அதி பொலிவும் கூடவே புன்னகையுமாக இறங்கி வந்த மருமகளை கண்ட கலையரசி அவள் கன்னம் வழித்து திருஷ்டி எடுத்தவர் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த மொட்டு மல்லிகை திட்டை அவளது கூந்தலில் சூடிவிட்டவர், “போய் விளக்கேத்தி சாமி கும்பிடு பாப்பா” என்றார்.

 

அவளும் அன்று நல்ல மனநிலையில் இருந்ததால் விளக்கேற்றி வைத்தவள் அங்கே அமர்ந்து அவளுக்கு மிகவும் பிடித்த ஆண்டாள் பாசுரத்தை தனது அழகிய குரலில் பாடினாள்.

 

அவளில் குரலில் கனிந்த அந்த பக்தியும் பாவமும் சொக்கியம்மாளையும் சொக்க வைத்து அங்கே பூஜையறைக்கு அழைத்து வந்தது. 

 

ஏற்கனவே மருமகளே பார்த்து நின்றிருந்த கலையரசி கண்டவர் விழிகளாலும் தன் புருவத்தாலும் “உன் மருமகால் சூப்பர்?” என்று அபிநயம் பிடிக்க, அவரோ ஆமாம் என்று பெருமிதத்தோடு தலையாட்டிக்கொண்டார்.

 

மாலை பள்ளி விட்டு வந்திருந்த அங்கயற்கண்ணி தன் அறையில் பள்ளி மாணவர்களுக்காக நாளைய வகுப்பிற்கு தேவையானவற்றை நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

ஆண்டாளின் பாட்டில் மற்றதை மறந்து கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவளின் கண்ணுக்குள்ளே வந்து நடனம் ஆடினான் அவன்.

 

அவனின் மனம் கவர்ந்தவன்.. கண்ணனாய் கந்தர்வனாய் சரபேந்திரன்..!

 

நேற்று இரவு அவர்கள் பேசியது எல்லாம் அவளுக்கு நினைவு வந்தது.

 

“இங்கன என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அதுவும் இந்த ராத்திரி நேரத்துல”என்றாள் சறறே பயந்த குரலில் கண்ணி.

 

அவன் நின்று கொண்டிருந்ததோ அவளது செல்ல தம்பியான காங்கேயன் கட்டிருக்கும் குடிலுக்கு அருகில்.. இவள் இரவில் அவனுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் அங்கே சரபேந்திரனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

 

“நான் என்ன பண்ணா உனக்கு ன்ன டி.. போ.. போய்.. உன் வேலையை பாரு..! அதான் உங்க அண்ணன் ஒருத்தன உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கான் தானே.. அவனை போய் கட்டிட்டு அவனோட பள்ளியறை பாடம் நடத்து இல்ல பள்ளிக்கு போய் தான் பாடம் நடத்து.. என்னவோ போய் பண்ணி தொலைடி..!” என்று அவன் சீறினான்.

 

“இங்க பாரு.. என்னைய என்ன வேணாலும் பேசு. என் அண்ணன மரியாதை இல்லாம பேசின அவ்வளோ தான்” என்று அவள் கண்களை உருட்டி அவனை மிரட்டினாள்.

 

அவனுக்கும் தான் பேசியது தவறு என்று புரிந்தது. அழகன் அவனைவிட பெரியவன். தான் அப்படி பேசவே கூடாது என்று புரிந்தவன் அவள் புறம் பார்க்காமல் திரும்பி நின்று கொண்டு “சாரி..!” என்று உதிர்த்தான்.

 

“இங்கே நின்னுகிட்டு என்ன பண்றிங்க நீங்க? இந்த இருட்டுல எதாவது பூச்சி பொட்டு..” என்று அவன் ஆரம்பிக்க..

 

“பாம்பு கடிச்சு செத்து கூட போவேன். உனக்கு என்ன டி கவலை.. அதான் நான் கேட்டு முடியாதுன்னு சொல்லிட்டேல்ல? போ .. மொத இங்கிருந்து” அவன் குரல் அந்த இரவு வேலையில் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஒலித்தது. அவ்வளவு சட்டென்று அவனை நெருங்கி, அவனது வாயை பொத்தி “சத்தம் போடாதே சர்பம்” என்றவள், சுற்றும் மற்றும் தங்களை யாரும் பார்க்கார்களா என்று பார்த்தாள்.

 

வீடு மாட்டு கொட்டிலில் இருந்து சற்று தள்ளி தான் இருக்கும். பெரும்பாலும் இங்கே பேசுவது அங்கு கேட்காது தான். ஆனால் இரவு நேரத்தில் ஒன்றும் சொல்ல முடியாது அல்லவா? அந்த பயம்தான் அவளுக்கு.

 

ஆனாலும் அவன் பேச்சில் அவளுக்கு அத்தனை வருத்தம்.

அதில் அவள் கண்களோ கலங்கி போக..

 

“சாக்குறதுன்னு ஆசையா இருந்தா சொல்லு? நானே நல்ல பெரிய பாம்பை பிடிச்சுட்டு வந்து.. அதுவும் பட்டுன்னு போட்டா பொட்டுன்னு போற மாதிரி நல்லா விஷமுள்ள பாம்பா புடிச்சுட்டு வந்து உன் வீட்டுக்குள்ள விடுறேன் சரியா? இங்க வந்து நின்னு செத்து கெத்து போய்டாத..!” என்றவள் குரல் அழுகையிலும் கோபத்திலும் வெடித்தது.

 

“வந்துட்டான் பெருசா பேசிக்கிட்டு..! இன்னொரு முறை இங்கன உன்னைய பார்த்தேன்.. என் தம்பியை விட்டு உன்னை விரட்டி விரட்டி முட்ட சொல்லுவேன்” என்றாள் வீராப்பாய்.

 

‘எங்கே முட்ட சொல்லு பார்ப்போம்?’ என்று அவனது கண் சவாலாய் அவளை பார்க்க.. அந்த கண்களின் தீட்சண்யத்தில் ஒரு நிமிடம் சமைந்து நின்று, பின் தடுமாறியவள் திரும்பும் பொழுது அருகில் இருந்த கல்லில் இடித்துக் கொண்டாள். 

 

“ஸ்ஸ்ஆ.. அம்மா..” என்று கத்தியவள் அப்படியே அமர்ந்து விட்டாள். அவள் கத்தும் சத்தத்தை கேட்டு பதறி திரும்பியவனோ, அவள் அருகே வேகமாக ஓடிவந்து,

 

“என்னாச்சு கண்ணி?” என்று அவன் கேட்க.. அவளோ கல்லில் இடித்துக் கொண்டேன் என்பதாய் அந்த கல்லினை காட்டினாள்.

 

“நான் கூட பாம்பு ஏதும் பட்டனு போட்டுச்சானு நெனச்சேன்?” என்று அவளை சீண்டியவன் அவளின் முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்டு நக்கலாக அவளைப் பார்த்தான்.

 

“இந்த ஆறடி சர்பமே என்னைய ஒன்னும் பண்ண முடியல.. மத்ததா பண்ணிட போது?” என்று அவளும் வீராப்பாய் பேச,

 

அடுத்த நிமிடம் அவளை இரு கைகளில் தூக்கி இருந்தான். அவள் கோபத்தோடும் ஆச்சரியத்தோடும் வெட்கத்தோடும் அவனைப் பார்க்க..

 

“ஒன்னும் பண்ண முடியாதுன்னு எல்லாம் கிடையாது. பண்ண கூடாதுன்னு தான் இருக்கேன்” என்றவளை அவளின் வீட்டின் பின்புறம் இறக்கி விட்டவன்,

 

“நானும் உணர்ச்சி உள்ள மனுஷன் தான். சும்மா சும்மா என்னை சீண்டுற வேலைய வச்சுக்காதே..!” என்றவன் இப்பொழுது அழுத்தமாகவே அவளது அதிரங்களில் தன் அச்சாரத்தை பதித்து விட்டே சென்றான் சரபேந்திரன்.

 

இவை அத்தனையும் மொட்டை மாடியில் இருந்து கைகளைக் கட்டியபடி கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் அழகன். 

 

தொடரும்..

 

 

 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top