50
நிரஞ்சன் தன் முன்னால் குலுங்கி அழுவதை எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தாள் வதனி.
“நான் செஞ்சது சரின்னு சொல்லல.. தெரியாம செஞ்சேன்னு சொல்லி தப்பிக்க விரும்பல.. அந்த நேரத்து ஏதோ ஒரு உந்துதல்.. ஏதோ ஒரு இனக்கவர்ச்சி.. தப்பான வழியில் போய்ட்டேன்” என்றவனின் கண்டு இகழ்ச்சியாக உதடு சுளித்தாள் வதனி.
“எத்தனை பொண்ணு என் வாழ்க்கையில் வந்தாலும்..” என்று அவன் முடிக்கும் முன் அவன் உச்சி முடியை கொத்தாக பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி இருந்தாள் வதனி. வலித்தாலும் அதில் சிறு நிம்மதியும் கூட அவனுக்கு.
ஏய்.. ஏய்.. முழுசா சொல்ல விடு மேகா..” என்றவன்,
“எத்தனை பொண்ணுங்க கிராஸ் பண்ணி இருந்தாலும் நீ.. நீ.. மட்டும் தான் நிதர்சனம் உண்மை..! அது காதலா இல்லை காமமா இல்லை உரிமையா.. இல்ல எதுவுமே இல்ல..
என் மனதின் உன் அரவணைப்பு தான்…!!” என்றான்.
அதுவரை அசட்டையாக கேட்டுக் கொண்டிருந்தவள் குனிந்து அவனை பார்த்தாள்.
“ஆமா மேகா.. அரவணைப்பு தான்.
மனதின் தேவை தான் முதல் காரணி.. உடல் தேவை மற்றவை எல்லாம் ரெண்டாவது தான்.
ஏன்னா… ஒரு கண்வன் மனைவியிடம் மட்டும் தான் மயங்கி நிற்பான். அவ சொல்லுக்கு தலையாட்டுவான். அதே உடல் சுகத்திற்காக வெளியே செல்லும்
தாசியிடம் மயங்கி நிற்பதில்லை.
மனைவி கொடுக்கும் அரவணைப்பும்.. கொடுக்கும் நம்பிக்கையும் யாருடமும் கிடைக்காது..” என்றான் உள்ளார்ந்து..!
“ம்ஹூம்.. நம்பிக்கை..??!!” விரக்தியாக சிரித்தாள் வதனி.
“உண்மையே மேகா. ஒரு ஆணுக்கு தேவை எல்லா சூழ்நிலையிலும்
தன்னை நம்பி, துணை நிற்கும் ஒருத்தி… தன்னை முற்றிலும் நம்பும் ஒருத்தியிடம் அவன் மயங்கியே தான் நிற்பான் என்பது நியதியும் கூட..!
ஆனா.. அந்த நம்பிக்கையையும்,
அரவணைப்பையும் உனக்கு நான் தர தவறிட்டேன்” என்றவன் மீண்டும் அவள் கால் முட்டியில் தலையை வைத்து குலுங்கி அழுதான்.
அவளோ ஜன்னல் வழியே வெளியே வெறித்தாள்.
மீண்டும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், “எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் செய்த தப்பு நியாயப்படுத்த முடியாது கூடாது ஆனால் அதுக்காக என்ன அப்படியே விட்டு விடாதே நான் செஞ்ச தப்பு மன்னிக்க முடியலன்னாலும் அது கடந்து வந்திடுவது என்று அதிலேயே இருந்து என்னை நீ பார்க்காத இப்ப கூட சக்தி சொல்லும்போது நீ மறுபடியும் வேற ஏதாவது ஆப்புல மாட்டிக்கிட்டியானு நான் கேட்கும் போது தன் நெஞ்சு தொட்டு காட்டியவன் எங்கே சுருக்கு சுருக்குன்னு அப்படி வலிக்குது என்றதும் அவள் கண்கள் ஒரு நிமிடம் கலவரத்தில் அங்கும் இங்கும் உருண்டன..!
பயப்படாத அப்படியெல்லாம் உங்கள நிற்கதியில் விட்டுட்டு நான் போயிட மாட்டேன் என்றதும் இவள் மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
மேகா.. மேகா.. நான்.. இங்கேயே இருக்கிறேனே..! உன்னையும் பிள்ளைகளையும் விட்டுட்டு இருக்க சத்தியமா என்னால முடியாதுடி..! அட்லீஸ்ட் கணவனா எனக்கு மறுத்தாலும் ஒரு கம்பெனியனா.. ஒரு பெஸ்ட் பிரண்டா..” என்றதும் அவள் சட்டென்று திரும்பி அவனை தீப் பார்வை பார்த்தாள்.
“புரியுது..! கஷ்டம் தான்..!” என்றவன் அடுத்து என்ன பேசவென்று தெரியாமல் அவள் முகத்தையே ஏக்கமாக பார்த்திருந்தான்.
ஒரு பெருமூச்சு விட்டவள் அவனின் கைகள் இன்னும் தன் முட்டியில் இருப்பதை கண்டு அவைகளை மெல்ல விலக்கி விட்டாள்.
“உங்களுக்கு பல பெண்கள் உங்க லைப்ல கிராஸ் பண்ணி இருக்கலாம்.. ஆனா என் லைஃப்ல கிராஸ் பண்ண ஒரே ஆண் நீங்க மட்டும் தான்..! எனக்கு இனக்கவர்ச்சிக்காகவோ.. இல்லை வேற எந்த ஒரு விஷயத்துக்காகவோ மற்ற ஆண் பக்கம் என்னோட எண்ணம் என்ன பார்வை கூட போகாது..!” என்றவளின் தீர்க்கமான வார்த்தைகளில், தான் மட்டும் ஏன் அப்படி இல்லை என்று துடி துடித்து போனான் தன் செய்கையை எண்ணி நிரஞ்சன்.
“ஈஸியா கடந்து வா கடந்து போன சொல்ற? எப்படி கடந்து வர முடியும்? நீ இன்னொரு பொம்பளையோடு இருந்தத பாத்து இருந்தா கூட என்னால கடந்து வந்திருக்க முடியும்..! ஆனா ரெண்டு வருஷம் காதல் வாழ்க்கை.. பத்து வருஷம் தாம்பத்திய வாழ்க்கைனு என் கூட வாழ்ந்துட்டு எப்படி அவளை நினைச்சு என் கூட நீ இருந்த சொல்லுடா?” என்று இடது கையால் எக்கி அவனது சட்டையை பிடித்து கேட்டாள் வதனி.
“அதையெல்லாம் என்னால கொஞ்சம் கூட மறக்க முடியாது. கடந்து வரவும் முடியாது. உன்னை மன்னிக்கவும் முடியாது..!” என்றாள் ஆணித்தரமாக..!
“ஆனா ஒன்னே ஒன்னு பண்ண முடியும்..!” என்றதும் அதுவரை தலை கவிழ்ந்து வேதனையோடு அமர்ந்திருந்தவன் “என்ன?” என்று அவசரமாக நிமிர்ந்து கலங்கிய வழிகளோடு அவளைப் பார்த்தான்.
“நீ சொன்ன மாதிரி ஒரு கம்பேனியனாவோ லைக் கலிக்கா.. இல்லை ஒரு ஹவுஸ் மேட்டாகவோ இந்த வீட்ல நீ இருக்கலாம். அதுவும் உனக்காக இல்ல.. நீ பண்ண தப்புக்காக தந்தையின் பாசம் கண்டிப்பு இது எதுவும் இல்லாம குழந்தைங்க வளர கூடாதுங்குற ஒரே காரணத்துக்காக..!”
“கூடவே எந்த கோயில் குளத்துக்கு போனா மகளின் வாழ்க்கை சரி ஆகும்? எந்த விரதம் இருந்தால் அவளது திருமண வாழ்வு நேராகும்? என தவிச்சிட்டு இருக்க எங்க அம்மாவுக்காகவும்.. மகளின் வாழ்க்கையை அப்பவே பேசி நேராக்கி நம்மளோட பேச வைத்திருக்கனுமோனு காலம் கடந்து தவிக்கும் என் அப்பாவுக்காகவும்.. ஒவ்வொரு முறை என்னை பார்க்கும் போதும் பிரச்சினை எதுவும் பேசி என்னை வீட்டை விட்டு போக சொல்லிடாதயேனு பார்க்கும் உன் அம்மாவுக்காகவும்.. மட்டும்தான்..!” என்றதும் தலையசைத்து அதனை ஆமோதித்தான் நிரஞ்சன்.
“அதனால.. உன் லிமிட்டுல நீ இரு.. என் லிமிட்டுல நான் இருப்பேன். இந்த வீட்டு செலவு வாடகை எல்லாம் இரண்டா டிவிட்டை பண்ணிப்போம். என்னாலேயும் சமாளிக்க முடியும். உன் பணத்தை நான் தொடவே மாட்டேன்.. எக்காலத்தாலும்..! இப்ப இவ பேசும்போது சரி சரின்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் நம்ம இஷ்டப்படி நடந்து போப்போனு நெனச்சினா.. எக்காலத்திலும் என் கூட்டுக்குள்ள நீ வரவே முடியாது” என்றதும் இவ்வளவுக்கு இவள் இறங்கி வந்ததே பெரிது என்று வேக வேகமாக அனைத்திற்கும் தலையாட்டினான்.
“இன்னோன்னு.. இவ மனசு மாறிடுவா கணவனுக்கான உரிமையை எடுக்கலாம்னு நீ நெனச்சே…??” என்றதும் முகத்தை வருத்தமாக வேறு பக்கம் திரும்பிக் கொண்டவன் “கண்டிப்பாக மாட்டேன் மேகா” என்றான்.
“எனக்கு நீனும் என் பிள்ளைகளும் என் கண்ணெதிரில் இருக்கணும் என் பிள்ளைகளை நான் கொஞ்சி விளையாடனும். என் அம்மாவுக்கு நீ பணிவிடை ஏதும் செய்யணும்னு அவசியம் இல்லை. ஆனா.. அவர்களை வருத்தி பேசிடாத..! தாங்க மாட்டாங்க..! நீ பிரிஞ்சு வந்து இத்தனை காலத்துல அவங்க என் கூட பேசவே இல்ல.. நீ நம்பலனாலும் அதான் நெசம். உன்னை திட்டி பேசினவங்க நீ இல்லாத நேரம் உன் அருமையை நல்லா புரிஞ்சிக்காட்டாங்க.. இனியும் தள்ளி இருக்கக் கூடாதுன்னு தான் லிப்ட் இல்லனாலும் மூட்டு வலியோட இங்க மாடிப்படி ஏறி இறங்கி நம்மளோட இருக்காங்க” என்றதும் இவள் அமைதியாக கோர்த்த கைகளை பார்த்த வண்ணம் இருந்தாள்.
“நான் மட்டும் உன் அம்மாவுக்காக பார்க்கணுமா? அப்ப நீ என் குடும்பத்தை இத்தனை வருடம் பார்க்கல தானேனு உன் நியாயம் எனக்கு புரியுதுக்ஷ இனிமேல் அப்படி இருக்க மாட்டேன் மேகா. இப்பதான் மண்டையில் அடித்தது மாதிரி எல்லாமே எனக்கு தெளிவா புரியுது. உறவுகள் அருமை தெரியுது. அத்தைகிட்டேயும் சக்திகிட்டேயும் என் உறவை சரிபடுத்திக்கிட்ட மாதிரி தங்க பாஸ்கரன் கிட்டேயும்..” என்று கூற வந்தவன் நாக்கு கடித்துக் கொண்டு இரு காதையும் பிடித்து அவளை பாவமாக பார்த்தான் அவள் விழிகளை உருட்டவும்…
“சாரி.. சாரி.. உன் அப்பா கிட்டயும் உறவை சரிப்படுத்துகிறேன்” என்றான்.
இகழ்ச்சியாக ஒரு புன்னகை அவள் முகத்தில் “நீ சரி படுத்திட்டாலும் படுத்துக்கலேனாலும் எனக்கு ஒரு நஷ்டமும் கிடையாது. உன் அம்மா இந்த வீட்ல இருக்குற மாதிரி என் அம்மா அப்பா தம்பி இந்த வீட்டுக்கு வருவாங்க போவாங்க.. அதை தடை சொல்ல நீ முடியாது.. ஏன்னா இது உன் வீடு கிடையாது. என் வீடு..!” என்றாள் இப்பொழுது நிமிர்வாகவே..!!
எத்தனை வருட ஏக்கம் இது.. அம்மா அப்பா தம்பி தன் வீட்டில் வந்து உறவாட வேண்டும்.. பேசி சிரிக்க வேண்டும்.. மகள் சமைத்து அதை பாசத்தோடு உண்ண வேண்டும்.. என்று..!
இது வதனியின் ஏக்கம் மட்டும் கிடையாது. பல பெண்களின் ஏக்கமும் கூட..!
இத்தனை நாள் அந்த ஏக்கம் ஏக்கமாகவே இருக்க என்று அது பலித்து விட்ட மகிழ்ச்சி அவளிடம்..!!
அதன் பின் எதுவும் நிரஞ்சனிடம் பேசவில்லை வதனி. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். இருவரின் நிலை என்னவென்று இப்பொழுது புரிந்துவிட ஒருவித நிம்மதி தென்பட்டது நிரஞ்சனின் முகத்தில்..!
இரு அம்மாக்களும் மிருவோடு வீடு சேர்ந்த நேரம் வதனி உறங்கிக் கொண்டிருக்க.. அம்மாவிடம் பேசியது போலவே மேகலாவிடமும் அத்தனை உரிமையோடு பேசியவனை கொஞ்சம் ஆனந்தமாக பார்த்தார் அவர்.
கூடவே மகனின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு தெளிவு கண்டுக்கொண்ட பிரேமா, “நீங்க சொன்னது போல அந்த பெருமாள் சக்தி உள்ளவர் தான். என் பிள்ளை கிட்ட ஏதோ ஒரு தெளிவு இருக்கு” என்றார்
இரு அன்னைகளுக்கும் மனதில் பாலை வார்த்தது.
