Share:
Notifications
Clear all

அழகன் 17

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 310
Thread starter  

அழகன் 17

 

“என்னது அத்தாச்சியா? அவா ஏன் அந்த பொண்ணுக்கு போய் கல்யாணம் பண்ணி வைக்கணும்? அதுவும் உங்களுக்கு நிச்சயமாகுற பொண்ணுனு அவாளுக்கு நன்னா தெரியும் தானே?” என்று அதிர்ச்சி குறையாமல் கேட்டவளை கண்டு கசந்த புன்னகை ஒன்றை கொடுத்தான்.

 

“சொல்லுங்கோ னா.. ஏன் அத்தாச்சி அப்படி பண்ணுனா? காரணம் சொல்லுங்கோ?” என்றவள் கணவனின் தோள்பட்டையை பற்றி உலுக்க..

 

அவளை தள்ளி பிடித்து மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் “ம்ஹீம் காரணம்ம்ம்…” என்று இகழ்ச்சியாக சிரித்தவன் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு, “ம்ம்.. அந்த பாழாப் போன காதல்..!”

 

“புரியல னா” என்றாள் ஆண்டாள்.

 

“அன்னைக்கு ஜல்லிக்கட்டுல வச்சு உன் அத்தாச்சி என்னை பெருசா பில்டப் பண்ணுனான்னு சொன்னேன்ல.. அது என்னான்னா ‘எங்க அண்ணன் பெரிய முரட்டு சண்டியரு.. அவேன் ஜல்லிக்கட்டுல இறங்குனியான்.. அத்தன காளையும் புடிச்சு அடக்கிப்புட்டு தேன் மறுவேலையே.. ஏதோ இன்னைக்கு நீ வந்திருக்கேன்னு கொஞ்சமா ஏழு எட்டு காளைய மட்டும் அடக்கிட்டு வந்திட்டுடியான்..’ அப்படி இப்படின்னு இவ நாலு பிட்ட எக்ஸ்ட்ரா போட்டு இருக்கா..! அந்த பொண்ணு அதிலேயே பாதி பயந்துடுச்சு போல.. அங்கேயே ஒருத்தன் ஒரு பொண்ணுகிட்ட ஓரண்டைய இழுத்தான்னு, நான் அவேன் பொறடிலேயே ரெண்டு போட்டேனா.. அத பாத்ததும் இன்னும் பயந்துடுச்சு போல.. அதுக்கு தக்கன உன் அத்தாச்சிகாரியும் என்னை முரட்டு சண்டியர் அளவுக்கு பில்டப் பண்ணி பேச பேச அந்த பொண்ணுக்கு என் மேல பயம் வந்து, சுத்தமா எங்க கல்யாணத்துல விருப்பம் இல்லாம‌ போச்சு” என்றான் எங்கோ பார்த்து அழகன்..!

 

“நீங்க ஒருத்தன அடிச்சத பார்த்து அந்த பொண்ணு பயந்திடுச்சா? இதெல்லாம் நம்படியா இருக்கு? அதுவும் மதுரைக்கார பொண்ணு ஒரு சின்ன அடிதடிக்கு பயந்துருச்சாமாம்.. இந்த ஊர்ல எங்க திரும்பினாலும் அடித்தடி தானே?” என்றாள் அசட்டையாக, அவன் சட்டென்று அவளை முறைத்து பார்த்தவன்,

 

“அடியே பொம்மா.. மதுரயில நாங்க என்ன வேல வெட்டி இல்லாம பொழுதனைக்கும் வீட்டு திண்ணையில உட்கார்ந்து வரவன் போறவன் கிட்ட எல்லாம் வம்பு வளர்க்குறோமா? இல்ல தெருவுல முக்கு முக்கு நின்னு அங்க வரவியங்க கிட்ட லந்து பண்றோமா? இல்ல ஓரண்டையை இழுக்குறோமோ? பொழுதனைக்கு மதுரையில உள்ளவியங்களுக்கு வேற வேலையே இல்லாம அடிதடி தான் வேலைன்னு சுத்திகிட்டு இருக்கோமா?” என்று அவளின் காதை வலிக்க திருகி அவன் கேட்க..

 

அவளுக்கு காதும் வலித்தது அதைவிட அவன் அருகாமையும் அவளுக்கு உள்ளுக்குள் தகித்தது.

 

“அச்சோ.. வலிக்குது னா.. நிஜமா வலிக்குது விடுங்கோ‌ னா..” என்று அவள் சிறு குரலில் கெஞ்ச,

 

“அப்படி எல்லாம் விட முடியாது.. நீ எப்படி எங்கள பத்தி அப்படி சொல்லலாம். மதுரையில பூரா பொழுதும் சண்டை போட்டுக்கிட்டு இருக்காய்ங்கனு எவன்டி உங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தது?” என்று இப்பொழுது காதை விடுத்து நறுக்கு என்று அவள் தலையில் ஒரு கொட்டு கொட்டினான். 

 

அது தன் ஊரின் பெருமையை இப்படி புரளியாய் பேசி பங்கப்படுத்துகின்றனரே என்ற ஆதங்கம்..!

 

“சாரி.. சாரி..! தப்பு தான்.. தப்பு தான்..! நேர பாக்காம எதையும் தீர விசாரிக்காம பேசியது தப்புதான்” என்று அவள் கன்னத்தில் போட்டுக்கொள்ள.. அவன் கண்களின் கோபக்கண்ணால் தற்போது குறைந்து தாப கனல் ஏறியது.

 

அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, “எதேயும் தீர விசாரிக்காம பேச கூடாது டி” என்று சரசமாய் கோபப்பட்டான்.

 

அவளோ உதடு குவித்து அழகாய் “சாரி” என்று சொல்ல,

அவளின் ஈர உதடுகள் வெளிச்சத்தில் பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்தது. மிருதுவான அவளது இரு வளைக் கரங்களையும் பிடித்து மெதுவாக அவன் பக்கத்தில் நெருக்கமாக இழுத்தான். அவளின் நெஞ்சுக் கனிகள் அவன் நெஞ்சில் உரசியது. அவன் உடலுடன் உடல் உரச அவளை இறுக்கி அணைத்தவன்,

 

பின் மெல்லிய குரலில்,

“பொம்மா.. எல்லா ஊரிலும் தான் சண்டை சச்சரவும் இருக்கு.. சந்தோஷமும் இருக்கு.. சடங்கு விழாவும் இருக்கு.. சங்கடமும் இருக்கு. அதே மாதிரி இங்கேயும் அமைதியான இடமும் இருக்கு.. சில இடத்துல அடிதடியும் இருக்கு..! அதனால தொட்டத்துக்கு எல்லாம் இனி இப்படி பேசின. அவ்வளவுதான்..! அதைவிட யாரு பேசினாலும் இனி நீ பேசவே கூடாது.! ஏன்னா நீயும் மதுரைக்காரி தான்” என்றதும் அவளோ பவ்யமாக தலையாட்டிக் கொண்டாள்.

 

“சரி.. சரி.. ஊரு பெருமையை சொன்னது போதும். கதைய சொல்லுங்க. அந்த.. அந்த பொண்ணு எப்படி திடுதுப்புன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்க முடியும்? அந்த பொண்ண கட்டிக்கிட்டவரு யாரு? இதெல்லாம் நீங்க சொல்லவே இல்லையே?” என்று அவள் கேட்க..

 

“அதுவா.. அந்த பொண்ண ஒருத் தலையா விரும்பிட்டு இருந்திருக்கிறான் ஒருத்தன். அவன மறுபடியும் இந்த பொண்ணு எங்கையோ பார்த்து இருக்கு.. இந்த முறை அவன் கிட்ட தைரியமா பேசி இருக்கு.. ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்காய்ங்க..

தன்னோட காதலுக்கு உதவி பண்ண உன் அத்தாச்சி அதான் அகிலாண்ட நாயகி அங்கயற்கண்ணிய 

கேட்டு இருக்காய்ங்க... இவளும் பெரிய அந்த அன்னபூரணினு மனசுல நினைச்சுகிட்டு ரெண்டு பேருக்கும் நாங்க பூ வைக்கிற பங்ஷனுக்கு அன்னைக்கே கல்யாணத்தை முடித்து விடுகிற மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்கா.. எல்லாரும் கவனமும் இங்கே இருக்க.. பொண்ணுங்க ரெண்டும் கோவில்ல சுத்தி வர மாதிரி போய் அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா…” என்றான் அழகன்.

 

“வர்ரே வாவ்..! அத்தாச்சி பிளான் சூப்பரோ சூப்பர்..! ஐ லவ் ஹர்.!” என்று இவள் கைதட்டி பாராட்டு பத்திரம் வாசிக்க அவளது காதை பிடித்து மீண்டும் திருகினான் கணவன். 

 

“ஏன் டி அறிவு இருக்கா உனக்கு? உங்க அத்தாச்சி பண்ணது பெரிய நல்ல காரியமா கைதட்டி பாராட்டுறவ?”

 

“இல்லை னா.. அப்படி இல்லன்னா இதெல்லாம் எவ்வளவு த்ரில்லிங்கான விஷயம் தெரியுமா? இத செய்ய எவ்வளவு தைரியம், ப்ளானிங் வேணும் தெரியுமா?” என்று அவளும் சடைத்துக் கொள்ள..

 

“போடி லூசு.. இதுக்கு பேரு தைரியமான காரியம் கிடையாது. முதுகுல குத்துறது..! நம்பிக்கை துரோகம் பண்றது..! தைரியம்னா என்னென்னு தெரியுமா? தான் தப்பே செஞ்சாலும் அதை நிமிர்ந்து நின்னு ஊருக்கு உறவுக்கு முன்ன ஒத்துக்குறதுக்கு பேரு தான் தைரியம்..!

 

ஆமா.. இப்படி ஒருத்தன நான் காதலிக்கிறேன்.. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு இந்த பொண்ணு தைரியமா சொல்லி இருந்தா இரண்டு குடும்பத்துக்கும் எந்த பிரச்சனையும் வந்திருக்காது..!” என்றான் வருத்தமாக..!

 

“இந்த கல்யாணத்தால ரெண்டு குடும்பத்துக்குள்ள பிரச்சனை வந்துடுச்சா னா?” என்று கேட்டாள் ஆண்டாள். 

 

“நீயே யோசிச்சு பாரு? அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சது உன் அத்தாச்சி? அப்போ அவங்க வீட்ல என்ன நினைப்பாய்ங்க அவள பத்தி? இல்ல உன் அத்தாச்சி தான் இந்த பொண்ணு இப்படி இன்னொருத்தனை விரும்புதுனு என்கிட்டயாவது வந்து சொல்லி இருந்தா.. எனக்கும் அத்தனை பேரு முன்னால அவ்வளவு அவமானம் இருந்திருக்காது தானே?” என்றவன் மனதினுள் அன்று அவனுக்கு ஏற்பட்ட அந்த தலைக்குனிவும் அவமானமும் இன்றும் மனதில் பச்சை ரணமாய் வலித்துக் கொண்டுதான் இருந்தது.

 

அதற்காக அழகன் காதலுக்கு எதிரி என்றெல்லாம் கிடையாது. ‘இப்படி தனக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என்றால்.. அதை முகத்திற்கு நேராக சொல்ல வேண்டியது தானே? அந்த பொண்ணுக்கு தன் பெற்றோரிடம் சொல்ல பயமிருந்தால் என்னிடம் ஆவது சொல்லி இருக்கலாம் தானே? அதைவிட அவர்களுக்கு உதவி செய்த தன் தங்கையின் மீதும் ஏக கோபம்.

 

கணவன் கூறியதும் தான் அந்த வழியில் யோசிக்க ஆரம்பித்தாள் ஆண்டாள்.. உண்மையில் கணவன் பட்டு அவமானம் அவளுக்கு புரிய அவன் புஜத்தை இறுக்கமாக பற்றி கொண்டாள்.

 

“ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இத்தனை பேரோட மானம் மரியாதை போயிருக்காது இல்ல.. சொல்லு? எத்தனை உறவுக்காரங்க அந்த விசேஷத்துக்கு வந்து இருக்காய்ங்க.. எத்தனை எத்தனை ஏற்பாடுகள்.. எத்தனை செலவாகி இருக்கும். இதெல்லாம் நீங்க யாரும் யோசிக்க மாட்டீங்களா? அப்படி என்ன காவிய காதல் கேட்குது?” என்று அவன் கடுப்பாக கேட்டான்.

 

கணவன் கேட்டப்பின் தான் அதன் பின்னே உள்ள விஷயங்கள் அவளுக்கு புரிய ‘ஆமாம் இல்ல இவருக்கு எவ்வளவு தர்ம சங்கடமா இருந்திருக்கும்? அதே நேரத்தில் அந்த பொண்ண பெத்தவங்களுக்கும் எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்?’ என்று யோசித்தவள் மன்னிப்பை யாசிக்கும் பார்வையை பார்த்தாள்.

 

“இந்த மன்னிப்பு யாசிக்கிற பார்வை எல்லாம் எனக்கு தேவையில்லை.. நீயே யோசி..! உனக்கு பிடிச்ச உன் அய்த்த மாமா அந்த நேரத்துல எப்படி கூனி குறுகி இருப்பாய்ங்கன்னு நீயே யோசி? அத விட எங்க அப்பத்தா.. எப்படிப்பட்ட பொம்பள தெரியுமா? நம்ம கட்டு சொந்தத்துக்கு எல்லாம் எங்க அப்பத்தா வைக்கிற தேன் சட்டம்..! அந்த அளவுக்கு குடும்பத்த உறவுகள அனுசரிச்சு போற பெரிய கட்டு பொம்பள.. அவங்களுக்கு எவ்ளோ மன உளைச்சல் தெரியுமா இதனால?” என்றவன், அன்றைய மன வலியை இன்று கண்களில் காட்டினான்.

 

 

“கோச்சுக்காதிங்கோ னா..! உணர்ச்சிவசப்பட்டு நானும் கை தட்டிட்டேன். என்ன இருந்தாலும் ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்கு தானே புரியும். அது போல அந்த பொண்ணோட காதல ஏற்கனவே ஒருத்தனை காதலிச்சிட்டு இருக்குற அத்தாச்சிக்கு தவிர வேறு யாருக்கும் நல்லா புரியும். சொல்லுங்கோ?” என்று அவள் கேள்வி கேட்டதும்..

 

அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்து “என்ன சொன்னா உங்க அத்தாச்சி காதலா? உன் கிட்ட அப்படி சொன்னாளா அவ?” என்றதும் ஆமாம் என்று வேக வேகமாக தலையை ஆட்டினாள் ஆண்டாள். 

 

மெல்ல சிரித்தவன் தலையாட்டி “அப்படி என்ன உன் கிட்ட சொன்னா உன் அத்தாச்சி? எங்க சொல்லு பாப்போம்.. அந்த காவிய காதல் கதையை?” என்றான் நக்கலாக.

 

 ‘என்ன இவரு அத்தாச்சி காதலை கதை என்கிறார்?’ என்று அவள் யோசனையோடு அவனைப் பார்த்தாள். 

 

“சொல்லுடி கேக்குறேன்ல..!” என்று அவன் அதட்டல் போட. 

 

“அத்தாச்சியோட ஒரு தலை காதல் உங்களுக்கு கதை போலவா இருக்கு?” என்று கணவனை கோபமாக பார்த்துக் கேட்டாள் ஆண்டாள். 

 

“முதல்ல நீ உன் அத்தாச்சி சொன்னத சொல்லு? அது காவியமா கதையானு நான் சொல்றேன்” என்றான் அந்த கயிற்றுக் கட்டிலில் பின்னால் தன் கைகள் இரண்டையும் ஊற்றிக்கொண்டு அவளை தெனாவட்டாக பார்த்து..!

 

அன்று குளத்தங்கரையில் காங்கேயனை குளிக்க அழைத்து வரும் நேரத்தில் அங்கயற்கண்ணி சொன்ன அவளின் காதல் கதையை எல்லாம் ஒன்று விடாமல் அப்படியே அவனிடம் ஒப்புவித்தாள் ஆண்டாள்.

 

அவள் சொன்னதை கூர்மையாக கேட்டவன் “அவ உன்கிட்ட கதை சொன்ன போது அந்த இடத்துலே வேறு யாரும் இருந்தாய்ங்களா? நல்லா யோசிச்சு சொல்லு?” என்று கேட்டான்.

 

“யார் இருந்தா?” என்று யோசித்தவள், 

 

“ஆஹான்.. யாரோ ஒரு மாட்டு டாக்டராம்.. பிள்ளைகளை குளிக்க கூட்டிட்டு வந்தாருனு நினைக்கிறேன்” என்றாள் இவர் யோசனையோடு..

 

“எது மாட்டு டாக்டரா? லூசு பொண்ணே..! வெட்னரி டாக்டர் ன்னு சொல்லு” என்றவன்,

 

“அப்புறம் என்ன சொன்னா சொல்லு?” என்று கேட்டான்.

 

மீண்டும் ஒருமுறை அங்கயற்கண்ணி கூறியவற்றை ஞாபகப்படுத்தி அனைத்தையும் கூறினாள்.

 

அவள் சொல்லியதும் கலகலவென்று சிரித்தவன் “உன்னை நல்ல ஏமாத்திட்டா உன் அத்தாச்சி” என்றான்.

 

“அத்தாச்சி ஒன்னு என்கிட்ட பொய் சொல்லல.. எவ்வளவு உருக்கமா அவா காதல் கதையே என்கிட்ட சொன்னா.. அதுவும் அத்தாச்சிய ஏமாத்திட்டு அந்த கடங்காரன் வேற பொண்ணோட போயிட்டானாம். கேட்ட நேக்கே எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா? உங்களுக்கெல்லாம் கல் மனசு” என்று அதை நினைத்து இப்பவும் மூக்கு உறிஞ்சியவளை பார்த்து இன்னும் சிரித்தான் அழகன்.

 

“என்ன ரொம்ப நீங்க கிண்டல் பண்றேள்? என்ன கிண்டல் பண்ணா கூட பரவாயில்லை னா.. ஆனா அத்தாச்சிய கிண்டல் பண்ணாதேள். பாவம் அவா.. கூடவே அவா காதல் எவ்வளவு உத்தமமான உன்னதமான காதல் தெரியுமா?” என்று‌ அழுகையிலும் கோவத்திலும் முகமும் மூக்கும் சிவக்க கேட்டவளை ரசித்துப் பார்த்தான் அழகன்.

 

 

“போடி லூசு அவ உன்னகிட்ட கதை விட்டு இருக்கா.. அவ காதல் ஒரு தலை காதல் இல்லை..! அவளே ஒரு தறுதலை.. அவ இன்னொரு தருதலையே காதலிச்சா..” என்றான்.

 

“அத்தாச்சிய தறுத்தல சொல்லாதேள்..!” என்று ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள்.

 

அவள் விரலை தனது ஒற்றை விரலால் பற்றியவன், “என்னடி மாமன்ட்ட விரல் நீட்டி பேசுறது?” என்று அவள் விரலோடு விரலை பிணைத்தவன், பின் அந்த விரலை தன் வாயிலிட்டு சுவைக்க.. அவளுக்கோ உலகம் அவனைச் சுற்றிச் சுழன்றது, அவனது எச்சிலில்.. அவனது காதலில்‌.. அவனது தாபத்தில்.. அவனது மோகத்தில்..!

 

ஆண்டாளும் தனை மறந்து அவனது மோக வலையில் விழுந்து அவன் அவளது விரலை சுவைக்க… சுவைக்க.. இவள் கிறங்கி போனாள்.

 

இருவரும் இருவரையும் மறந்து.. தாங்கள் இருக்கும் இடத்தையும் மறந்து.. ஒருவரின் விழி வீச்சில் மற்றொருவர் மயங்கி முயங்கி கிறங்கி இருக்க.. இருவரின் இதழ்களும் இடைவெளியை குறைத்துக் கொண்டிருந்தன..!

 

அந்நேரத்தில் தோட்டத்தில் கேட்க பச்சைக்கிளிகளின் கீச்சு கீச்சுப் பேச்சுகளில் தன்னிலை மீண்டனர்,

 

“போங்கோ.. போங்கோ‌.. நீங்க கள்ளாட்டம் ஆடுறேள்..! பாதி கதைய சொல்றேள்.. மீதி கதைய கண்டினியூ பண்ணாம… அது.. அது..” என்று அவள் திணற,

 

“சொல்லேன்.. சொல்லேன்..! என்ன பண்றேனாம் நானு?” அவனும் அவளை விடாமல் வார்த்தைகளில் சீண்டி.. விரல்களால் தீண்ட.. தவியாய் தவித்துப் போனாள் ஆண்டாள்.

 

“நீ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்னா அதை வீட்டிலேயே சொல்லி இருப்பேனே டி பொம்மா.. உன்னை எதுக்கு இப்படி தனியா ஆள் இல்லாத தோப்புக்கு தள்ளிட்டு வந்தேன்னு நினைக்குற?” என்று கண்ணடித்து சரசமாய் பேசியவனின் கரங்களோ அவளை முழுதாக அணைத்து தன் மேல் போட்டிருந்தான்.

 

“அட ஆமாமில்ல..” என்று யோசித்தவளுக்கு அதன்பின்னே தான் புரிந்தது, இவனின் தந்திரங்களும்.. அவள் மீது போட்ட காதல் மந்திரங்களும்..!

 

 

“ஆக மொத்தம் நீங்க நான் கேட்டதுக்கு பதில் சொல்ல அழைச்சிட்டு வரல?” என்றாள் அவள் முறைப்பாய்..!

 

“அதுக்கு மட்டுமே அழைச்சிட்டு வரல..!” என்றான் அவன் சிரிப்பாய்..!

 

“இதெல்லாம் நல்லா இல்ல னா” தவிப்பாய் அவள்..!

 

“நல்லா இருக்குறதுனால தான்டி பொம்மா.. திரும்ப திரும்ப வரேன்” தாபமாய் அவன்..!

 

“அச்சோ.. நேக்கு வெட்க வெட்கமா வர்ரறதுனா.. எதா இருந்தாலும் நம் ஆத்துல.. நம் ரூம்ல.. வச்சிப்போம்னா” கெஞ்சலாய் அவள்..!

 

“நம்ம வீட்ல நம்ம ரூம்ல தான் எப்பவும் செய்றோமே..! அதுல என்ன கிக் இருக்கு? இப்படி பரந்த வெளியில.. இயற்கை காத்துல.. இயற்கையோடு இயற்கையா சேர்ந்து…” கொஞ்சலாய் அவன்..!

 

கொஞ்சலும் மிஞ்சலும்..

 

தாபமும் தவிப்பும்..

 

மோகமும் பயமும்..

 

தீண்டலும் தள்ளலும்..

 

சீண்டலும் சிவத்தலும்…

 

என்று.. அவனும் அவளும்… அங்கே கொஞ்சி குலாவினர்..!

 

அவளின் ஈர உதடுகள் அவன் உதடுகளை ஸ்பரிசிக்கும் தூரத்தில்... அவளின் சூடான மூச்சுக் காற்று முகத்தில் உரச.. அவள் கன்னங்களை தாங்கி அவளின் சிவந்த கனிந்த இதழ்களைக் கவ்வினான். அவள் இதழ்களை கவ்வி இழுத்தவன் தன இதழ்களுக்குள் பொதித்துக் கொள்ள... அதி மோகமோ.. பெரும் தாபமோ காட்டவில்லை. வெறும் மென்மையாகச் சுவைத்தல் மட்டுமே!! ஆம்!! ஆழ்ந்து சுவைத்தான்!!

 

ஆண்டாளின் மூச்சு வேகமாகி.. அதிர்வான இதயத் துடிப்பை தன் நெஞ்சில் உணர்ந்தான். அவள் தோளினை வருடியபடி,

 

“பொம்மா.. பொம்மா..” என்று பிதற்றினான் அழகன்.

 

அவள் உதட்டைக் கவ்விச் சுவைத்தான். கண்களை மூடி அவன் முத்தத்தில் கிறங்கி அவன் முதுகை இறுக்கினாள் ஆண்டாள். அவளின் இறுக்கம் பலமாக இருப்பதை உணர்ந்து லேசாக வியந்தவன், இன்னும் இன்னும் இறுக்கி கொண்டான் இதழ்களை!!

 

இந்த முறை இன்னும் ஆழமாக அழுத்தமாக முத்தமிட்டு இதழ்களைப் பிரித்தான். இதழ்களால் அவள் மூக்கில் தேய்த்து.. கன்னக் கதுப்பில் கோலமிட்டு.. நெற்றியில் உலா வந்து.. இதழில் இளைப்பாறியது. அவள் முதுகில் தொடங்கிய அவன் விரல் ஊர்வலத்தில் அவள் நெளிந்தபடி அவன் அணைப்பில் கட்டுண்டு கிறங்கிக் கிடந்தாள்.

 

மெல்ல மெல்ல அவன் முகம் அவள் கழுத்துக்கு இறங்கியது. அச்சங்கு கழுத்தில் முத்தமிட்டு மெல்ல கடித்தான். அவளோ உச்சகட்ட தவிப்பை அடைய... அவள் தேகமோ அவனின் தீண்டலில் தாப உணர்ச்சியின் தீவிரத்தை தாங்க முடியாது, பாம்பைப் போல நெளிந்தவள் அவனையும் அவளோடு பின்னி பிணைத்துக் கொண்டாள்.

 

உணர்வுகளுக்கு உணர்ச்சிகளுக்கும் ஆண் பெண் என்ற பேதம் ஏது? 

 

அதுவும் தன் இணையிடம் மட்டுமே காட்டும் அந்த உணர்வுகளுக்கு தான் சட்ட திட்டம் ஏது?

 

அவளுடன் தனிமையான பொழுதை கழிக்கவே இங்கே தோப்பிற்கு அழைத்து வந்தானே ஒழிய.. இப்படி பட்ட பகலில்.. வெட்ட வெளிச்சத்தில் அவளோடு உறவாட இல்லை..!

 

மெல்ல மெல்ல அவளை தன் இறுக்கமான அணைப்பிற்குள் அவன் கொண்டு வர, ஒரு கட்டத்தில் அவளே தன் உணர்வு பிடியிலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்து சுற்றுப்புறத்தை ஆராய்ந்து முகத்தை மூடிக்கொண்டாள்.

 

“அச்சோ.. பெருமாளே இப்படி நட்ட நடு தோப்புல.. நேக்கு.. அச்சோ.. போங்கே.. போங்கோ..எல்லாம் உங்களால தான்..” என்று அவனிடமிருந்து பிரிந்து தளிர் கைகளால் அவனது நெஞ்ச த்தில் மெலிதாக குத்தினாள்.

 

ஹா ஹா.. என்று அத்தனை ஹாசிய மகிழ்ச்சி அவனிடம்.

 

கோபத்தோடு அவள் எழுந்து கொண்டாள் அவனின் சிரிப்பில்..!

 

எந்த கணவனுக்கு தான், தான் தொட்டவுடன் தன் கைகளில் காதலோடு உருகி கரையும் மனைவியைக் கண்டு கர்வம் வராது இருக்கும்?

 

 

“சரி சரி விடுங்கோ.. நான் கிளம்புறேன்..” என்றாள்.

 

“போகணுமா பொம்மா?” என்று அவள் காதில் அவன் முகத்தால் தேய்த்து கொண்டே கேட்டான். 

 

அவின் மூச்சு காது அவள் காதுக்குள் போய் அவளுக்கு மீண்டும் உஷ்ணத்தை கிளப்பியது. 

 

“ஸ்ஸ்ஆ… மாமா…” என்றவாறு அவளும் தலையை ஆட்டி கொண்டு நின்றாள். சட்டென அவளை இழுத்து கட்டி அணைத்தான்.

 

அவளோ எக்கி அவர் கழுதை பிடிக்க முயற்சித்தாள். ஆனால் முடியவில்லை. பிறகு நெஞ்சோடு சேர்த்து கட்டி பிடித்தாள். கொஞ்ச நேரத்தில் எக்கி ஒரு வழியாக அவர் கழுத்தோடு சேர்த்து கட்டி பிடிக்க அவனோ அவளை இறுக்கி கட்டி பிடித்து அப்படியே தூக்கினன்.

 

“ஆ.. விடுங்கோ னா..” என்று அவள் பயந்து சொன்ன பின்னே விட்டான்.

 

“நீங்க சரியில்லை னா என்னையும் பேட் கேர்ளா மாத்றேள்.. நான் இங்கே இருந்து முதலில் போறேன்..” என்று ஓடியவளை இழுத்து பிடித்தவன் 

 

“முழுசா உன் அத்தாச்சி கதையை கேட்டுட்டு போடி” என்றவனை, அவள் செல்ல சிணங்கலோடு பொய்யான கோபத்தோடு அவனை முறைத்து பார்த்தாள்.

 

“உன் அத்தாச்சி அந்த பொண்ணுக்கு ஹெல்ப் செஞ்சதெல்லாம் ஒரு பெண்ணுக்கு பெண்ணா மட்டும் கிடையாது. என் கல்யாணத்தை நிறுத்த தான்” என்றான் அழகன்.

 

“எதே? உங்க கல்யாணத்தை நிறுத்த அவங்களுக்கு ஹெல்ப் பண்ணாங்களா? எதுக்கு அத்தாச்சி அந்த பொண்ணுக்காக யோசிச்சு.. ஹெல்ப் பண்ணி உங்க கல்யாணத்தை நிறுத்தணும்?” என்று புரியாமல் கணவனை பார்த்தாள்.

 

 

“இன்னுமாடி உனக்கு புரியல..! மட்டி மட்டி..! எனக்கு அந்த பொண்ணோட கல்யாணம் பேச்சு நின்னா.. அப்புறம் இவளுக்கும் மணிமாறனுக்கும் கல்யாணம் நடக்காது இல்ல. அதான் உன் அத்தாச்சி செய்த மாஸ்டர் பிளான்..!” என்றான்.

 

“ப்ரேவோ..! அத்தாச்சி அசத்தல்..!” என்று கையை தூக்கி குழந்தை போல சிரித்து கத்தினாள் ஆண்டாள். 

 

அழகனோ ஆண்டாளை முறைத்து பார்த்தான். 

 

“ஓகே ஓகே கூல் கூல்..! என்ன இருந்தாலும் அத்தாச்சி பாவம் இல்லையா னா? அவா ஒரு தலை காதலை மறக்க முடியாம கஷ்டப்படுறா.. கொஞ்ச நாள் போச்சுன்னா அவாளே அதிலிருந்து வெளிவந்து நம்ம சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்குவா” என்று கணவனை சமாதானப்படுத்தினாள்.

 

“போடி லூசு..! ஒரு தலை காதல் இல்லை.. ஒரு மண்ணும் இல்லை..! நீ சொன்ன அந்த மாட்டு டாக்டர்..‌ அதான் அந்த வெட்னரி டாக்டர் சரபேந்திரன் அவன தான் லவ் பண்றா..! அவ மட்டும் இல்ல அவனும் தான்..!” என்ற குண்

டை அழகன் போட.

 

 

“எதே?” என்று அதிர்ந்தவள்,

 

 

“நெஜமா நீங்க எல்லாம் மனுசங்களாயா.. எத்தனை டுவிஸ்ட் எத்தன டுவிஸ்ட்.. என் சின்ன மனசு பர்ஸ்ட்” என்று திகைத்து நின்றாள் ஆண்டாள்..!

 

தொடரும்..

 

 

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top