அவனது ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சை தைக்க, விதிர்விதிர்த்து நின்றிருந்தாள். அவள் ஏதோ கூற வாய் திறவ, அதற்குள் எண்ண துவங்கியிருந்தான்.
"7
6
5
4
3"
தலை கவிழ்ந்தபடி அறை நோக்கி சென்றவளை கண்டு, உஷ்ண மூச்சிரைக்க தனலாக பார்த்தான். இதுநாள் வரையில் அவளுக்காக எல்லாம் செய்தவள், அவளின் அக்காவிற்காக இப்படியொரு காரியத்தை செய்ய துணிந்தவளை அவனால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.
'தான் இவளையா நம்பி உருகி காதலித்தோம்? இக்காதலும், இவளும் தேவை தானா?' என்ற எண்ணமே தலைதூக்கியது.
கட்டிலில் முகம் புதைத்து அழுதப்படி இருந்தவள் மனம் சுக்குநூறாக நொறுங்கியிருந்தது. வரம்பு மீறிய கேள்வியை கேட்டு நோகடித்து விட்டான் என எண்ணி உடல் குலுங்கி தேம்பி அழ..
மடாரென கதவை அறைந்து சாற்றி உள்ளே வந்தவன் அவள் விருப்பத்தை கூட கேட்காமல், அவள் மேலே படர்ந்து இதழை வன்மையாக சிறை செய்ய முயல..
"பிரதீஷ்.. வேணாம்.." என்றாள் அவனுக்கு முகம் காட்டாமல்.
அவள் கெஞ்சலில் கன்னத்தில் பலமாக அறைந்து விலகியவன், "எனக்கு தெரியும் டி இது நீயா பண்ணல. யாரோ சொல்லி தான் இந்தளவு பண்ணுற. எப்போ நீ உன் அக்காவுக்காக என்கூட படுக்க வந்தயோ, வாழ்க்கையில இனி நான் பாக்கவே கூடாதுன்னு நினைக்கிற ஒரு ஆள் நீயா தான் இருப்ப..
வெளிய போடி.. போ.. கெட் லாஸ்ட்.. என் கண்ணு முன்னாடி வந்துடாதே.. மீறி வந்த செத்துடுவ.. வந்துட்டா.. படிச்சு படிச்சு சொன்னே டி.. என் உணர்வோட விளையாடாதேன்னு.. ஏன் டி உனக்கு மட்டும் தான் மனசு இருக்கா? நான் என்ன கல்லா டி? எவன் கூடயோ போய்..." என்றவன் இறுதி வார்த்தையை கூட கூற மனமின்றி வெளியே இழுத்து வந்தான் அவளை.
சில நொடிகளுக்கு முன்பு வரை அக்கா என பல்லவி பாடியவள் உதடுகள் அவன் வார்த்தையில் முன்பு அவனடைந்த காயம் நினைவுக்கு வர, "என்னை மன்னிச்சுடுங்க.. பிரதீஷ்!" என்றாள் தேம்பலான குரலில்.
"இன்னைக்கி இங்க வரை வந்தவ, நாளைக்கி இதே போல எவன் எது சொன்னாலும் செய்ய மாட்டன்னு என்ன நிச்சயம்? போடி வெளியே..
என்னை இப்படி நீயும் புலம்ப வச்சுட்டயே. நிம்மதியா டி? சந்தோஷமா? உன்னால.." என்றவன் விழிகள் நீரை ஊற்றெடுக்க, காதலித்தவளோ அவன் பேசிய வார்த்தையை விட அவன் சிந்திடும் கண்ணீரில் ஜீவனற்று நின்றாள்.
"பிரதீஷ்.."
"நான் செத்த பிறகு சொல்லு டி.. என் பேரை.. துரோகி.. வெளியே போ.. உன் அக்காவை கல்யாணம் பண்ணிக்கணுமா? எனக்கும் மனசு தான் டி இருக்கு! என்னைய மட்டும் கல்லுலயா செஞ்சு அனுப்பி வச்சான் அந்த கடவுள்!" என்று அலறியவன் விழிகளில் வழியும் நீரை பார்த்திட மனம் தாளாமல், அழுது கொண்டே கிளம்பி விட்டாள்.
பல வசனம் பேசி தான் அவளை இச்சைக்கு அழைத்தான். துளி கூட மனம் அதில் உடன்படவில்லை. அவளோடு தனிமையில் பல சந்தர்ப்பம் அமைந்த போது கூட முத்தங்களால் அவளோடு பேசி விலகியவன்.
அவர்கள் இருந்த தனிமையில் மனம் சலனப்பட்டு நெருங்கியவனை, அவள் துளியும் தடுக்கவில்லை. அவளே சம்மதித்தாலும், தான் செய்வது தவறு என உணர்ந்து மன்னிப்புக் கோரினான் அப்போதே.
அவள் அக்கணத்தில் மௌனமாகவே இருக்க, "உன்மேல அப்படியொரு தாட்ல கிட்ட வரல ராசிகா! ஸாரி.. ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ஃப்!" என்றவன் யாதவ் வீட்டில் தனிமையில் இருந்த போது விலகி செல்ல..
அவள் எதுவும் பேசாதிருந்த மௌனமும், விழி அசைவும் என்னவென புரிய வைக்க..
"ராசிகா.. ஜஸ்ட் ரிலாக்ஸ்!" என்றவன் காது மடலில் முத்தமிட, "ஸாரி!" என்றாள் விழிகள் கலங்க அவன் நெஞ்சில் துஞ்சியப்படி.
"எதுக்கு?"
"என்னால தானே.. நீங்க இப்போ.. வேணாம்ன்னு சொன்னீங்க.."
"ராசிகா.. நீ என்கூட இருந்த போதும்.. இதுநாள் வரை உன்னை அப்படியொரு பார்வை கூட பாத்தது இல்லை. நீயும் நானும் எத்தனையோ நாள் பாலக்காடுல தனியா இருந்துருக்கோம். இன்னேக்கி கொஞ்சம் கண்ட்ரோல் இல்லாம நடந்துட்டேன்.."
"இல்லை பிரதீஷ்.. இப்போ நீங்க எதுக்கு விலகி போனீங்கன்னு தெரியும்.. எனக்கு ஒன்னும் பிராப்லேம் இல்லை.. வாங்க.." என்றவள் மீண்டும் அவன் நெஞ்சோடு ஒட்டிக்கொள்ள, "நீங்க ஓவர் இமேஜின் பண்ண வேணாம். ஃப்ரியா விடுங்க ராசிகா மேடம்.." என்றவன் அவளை மீண்டும் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு கதை பேசி அமர்ந்திருந்தான்.
அத்தனை நிகழ்வுகளும் அவளுக்குள் அசைபோட, தேடி தேடி காதலித்தவனை வேண்டாமென கூறிய நிர்பந்தத்தை எண்ணி நொந்தவள், வாய் விட்டு கதறி அழுதாள்.
அவனுக்கோ பன்மடங்கு வலி. அனைத்தையும், வெகுநேரம் யோசித்தவனுக்கு தலைவலியே வர தூக்க மாத்திரை ஒன்றே இதற்கு தீர்வென யோசித்து உறங்கிப் போனான்.
இருவரின் வலியும், விலகளும் ஏதோ ஒரு சூழ்ச்சியில் நிகழ்ந்திருந்தாலும் தன்னை விட்டு செல்ல துணிந்தவள் தனக்கு வேண்டாமென தீர்மானித்தான்.
அவளோ, தான் செய்தது சரியா? தவறா? என யோசிக்காது குடும்ப கவுரவமே முக்கியம் என நினைத்து மனதை தேற்றிக் கொண்டாள்.
நாட்களோ அதன் போக்கில் உருண்டோடியது. பிடிவாதத்திற்கு பிறந்தவன் குணம் முன்பை விட வீம்பாக இருக்கும் என பிரதீஷ் வீட்டினருக்கு நன்கு அறிந்த ஒன்று தான்.
அதனால் சாவித்திரி பாட்டியை பகடை காயாக்கினர்.
அவர் அதற்கிணங்க மறுக்க, சதாசிவம் அவர்களோ குடும்ப மானம் அது இதென கூறி நாடகமாட நம்பி விட்டார்.
பலவித அறிவுரைகளையும், எச்சரிக்கையையும் கூறி அவரை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
வந்தவர் வேலை முடித்து வந்த பேரனிடம் பேச முயல, அவன் வழக்கம் போல் பேசாமல் உதாசீனம் செய்து கடந்தான்.
இரண்டு நாட்கள் அவன் இதே நிலையில் இருக்க, மனதை கல்லாக்கிக் கொண்டு பேரனை அழைத்தார் அறைக் கதவை தட்டி.
அவனோ விழிகளை சுருக்கி என்னவென கேட்க, அவரோ "பிரதீஷ்.. ஏன் பா என்கிட்டே பேசாம இருக்க? பாட்டி என்ன பண்ணேன்?" என அப்பாவியாக கேட்டவரிடம் கோவத்தை அள்ளி வீசினான்.
"கண்ணா.. கோவத்தை விடு பா.. எல்லாம் உன் நல்லதுக்கு தானே பண்ணுறோம்."
"எது நல்லது? ஹான்.. எது நல்லது? நான் லவ் பண்ணுனவளை என்னை விட்டு விலகி போக வச்சாங்களே.. அதான் எனக்கு செய்ற நல்லதா? இல்லை என் சந்தோசத்தை கெடுக்குறது நல்லதா?
நீங்க நடுத்தெருவில வச்சு அசிங்கப்படுத்துனதை விட இது எவ்வளவு வலியா இருக்கு தெரியுமா? ஏன் இப்படி சுயநலம் பிடிச்சு அழையுறீங்க?
நீங்களா பத்திரிக்கை அடிச்சு வச்சிட்டு, ஊரை கூட்டி கல்யாணம் நடத்தணும்ன்னா நீங்க பெத்த பிள்ளைக்கு நடத்துங்க. என்னை ஆளை விட்டுருங்க. இல்லை.. நான் இங்க இருந்து போக வேண்டியதா இருக்கும்." என்றவன் பேச்சில் அதிர்ந்த சாவித்திரி அவர்களோ, "பாட்டியை விட்டு போய்டுவயா? அப்போ நான் உனக்கு வேணாமா?" என்றார் ஆற்றாமையாக.
அதையெல்லாம் காதில் வாங்காதவன், "நான் ஒரு பொண்ணை லவ் பண்ணேன் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?" என்றவன் கேள்வியில் பெரிதாக அதிர்ந்தார்.
"நீ லவ் பண்ணுனயா? ஏன் கண்ணா பாட்டி கிட்ட சொல்லல?"
"ஏன் உங்க புருஷன் கிட்ட சொன்னேனே அந்த ஆளு சொல்லலையா?" என்றவன் தனது பாட்டியை கூட சந்தேகமாக பார்த்து புருவம் உயர்த்த..
அவரோ, "எனக்கு எதுவும் தெரியாது பா.. என்கிட்டே யாரும் எதுவும் சொல்லல.. என் பேச்சை யாரு கேக்குறா? நீ என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிருந்தா இந்த பொண்ணு பாக்குறதுக்கு முன்னாடியே பேசி முடிச்சுருக்கலாமே!" என பேரனது வலியை புரிந்து கொண்டு வினவ..
"இனி அதை பேசி ஒன்னும் ஆகாது. அவ அக்காவை கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டு வேணாம்ன்னு சொல்லிட்டா. பிருந்தா தங்கச்சியை தான் லவ் பண்ணேன். எனக்கு இப்போ கல்யாணமே வேணாம்.." என்றான் விடாப்பிடியாக..
அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் திகைத்திருந்தார் சாவித்திரி.
எப்படி அவனை பிருந்தாவை திருமணம் செய்து கொள் என கூற முடியும்? அவனே காதல் தோல்வியில் விரக்தியில் பேச, பேசி பலனில்லை என யோசித்தவர் கோவம் கணவன் மற்றும் மகன் மீது தலை தூக்கியது.
"கண்ணா நிஜமா எனக்கு எதுவும் தெரியாது பா. என்னை மன்னிச்சுடு பிரதீஷ்.."
"உங்க மன்னிப்பை வச்சு நான் என்ன செய்ய போறேன். முதல வெளியே போங்க. உசுரு ஒன்னு தான் என்கிட்டே இருக்கு. அதுவும் நீங்க படுத்துற பாடுல போய்டும். அள்ளிப் போட்டுட்டு அழகு பாருங்க.." என்றவன் விறுவிறுவென வெளியேறினான்.
"பிரதீஷ்.. தம்பி.. நில்லு பா.. எங்க போற?"
அவரும் தழுதழுக்க அழைத்தப்படி அவன் பின்னாடியே ஓட்டமாக ஓடி வர, காரை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டான்.
சிறிது தூரம் தான் கார் சென்றிருக்கும் அந்த ஆள் அரவமற்ற சாலையில்.
எதிரே அவள்!
தனியே நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அவனை பார்த்ததும் நகர மறுத்தன கால்கள் இரண்டும். அவன் எவளோ ஒருவள் போல் கண்டும் காணாமல் சென்று விட்டான்.
இந்த உதாசீனம் அவள் எதிர்பார்த்த ஒன்று தான். அவனை மறக்க முடியாமல் அவள் படும் பாடு அவளுக்கு மட்டுமே அறியும். அழுது கொண்டே வீடு வந்தவள், கதவை அறைந்து சாற்றி உள்ளே சென்ற வேகமே ஜனனிக்கு காரணமென்ன என புரிய வைத்தது.
அவளும் முடிந்த வரையில் ஆறுதல் கூற, "எனக்கு எவ்வளவு வலிக்குதுன்னு சொல்ல கூட முடியல ஜனனி.. சத்தியமா என்னால இனி இங்க இருக்க முடியாது.." என்றவளை அறைய வேண்டும் போல் இருந்தது ஜனனிக்கு.
"அப்போ என்ன மசுருக்கு உன் அக்காவை கல்யாணம் பண்ணிக்க சொன்ன அவர்கிட்ட?
"ஹேய்.. நீயும் என்ன டி இதையே.. கேக்குற? பத்திரிக்கை அடிச்சு தாலி வாங்கியே வச்சுட்டாங்க.. நானும் அவங்களும் லவ் பண்ணுறோம்ன்னு சொல்லவா முடியும்?"
"அப்போ ஏன் அவங்களை பாத்து பாத்து அழுற? உன் அக்காவை கல்யாணம் பண்ணிட்டு அங்க இருக்கும் போது இப்படி தான் அழுவயா? இல்லை அப்பவும் அவர் பாக்காம போறாருன்னு சொல்லுவயா?"
"ஜனனி!"
"என்ன டி? நீ தான் முட்டாள் மாதிரி அழுதுட்டுருக்க. மறக்க முடியலன்னு டெய்லியும் அழுற. அப்பறம் ஏன் டி லவ் பண்ணுற? என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லைன்னு கல்யாணம் பண்ணிக்கோ.."
"முடியாது.. ஜனனி.. என்னால இந்த கல்யாணம் நிக்க கூடாது.."
"அப்போ உன் லவ்வரை, அக்கா புருஷனா அழகு பாரு.." என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல், அவளும் கடிந்து செல்ல கேவி அழுதுக் கொண்டிருந்தாள்.
அவளின் அழுகை ஜனனிக்கு மேலும் கோவத்தை தூண்ட, ஒன்னு துணிஞ்சு வாழு.. இல்லை தூரமா போய்டு.. ரெண்டுக்கும் மத்தியில மாட்டிட்டு ஒப்பாரி வைக்காதே.. " என்றவள் வார்த்தையில் தூரமா போ என்பதே அவள் செவியில் அழுந்த பதிய, அதுவே சரியென யோசித்தாள்.
கண்டும் காணாமல் சென்றவனுக்கோ உயிரின் ஆழம் வரை அவள் நெருக்கமும், காதல் சொல்லி மலர்ந்த நொடியே பரவியது.
காரை ஓரங்கட்டியவன், 'எனக்கென்னன்னு இருக்கா பாரு. இவளை போய் லவ் பண்ணி, இப்படி புலம்ப வச்சுட்டா. அக்காவை கல்யாணம் பண்ணிக்கணுமா. எல்லாம் துரோகிங்க.' என புலம்பியவன் ஸ்டேரிங்கில் பலமாக குத்திக் கொண்டான்.
கோவமோ, வலியோ மாறவில்லை. புலம்புவது தான் அவனது நிலையென இருந்தது. அதை தேற்றிடும் விதமாக அமைந்தது நண்பன் யாதவ் வருகை.
சாவித்திரி பாட்டியின் அழைப்பில் இரண்டு நாட்களுக்கு பின் யாதவ் மற்றும் ஷியாம் அவனை காண வந்தனர். வந்தவர்கள் பேசிய பேச்சு முழுவதும் ராசிகாவை கட்டாய திருமணம் செய்து கொள் என்னும் அறிவுரையே.
பிரதீஷ் அதனை இம்மியளவு கூட ஏற்கவில்லை. என்று எதை பற்றியும் யோசிக்காது, முடிவு எடுத்தாளோ அவளை வேண்டவே வேண்டாமென்றான்.
யாதவ், "அப்போ அவ அக்காவை கல்யாணம் பண்ணிக்கோ. ஏன் தேவையில்லாம வேணாம்ன்னு சொல்லி போனவளை பத்தி ஃபீல் பண்ணுற மச்சான்." என அவன் இயல்பாக கூற..
பிரதஷோ, "அவ குடும்பமே வேணாம்ன்னு தான் சொல்லுறேன்." என மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வர..
ஷியாம், "மச்சி ஒரு விஷயம் சொல்லுறேன். அவளை மாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு நினைக்காதே. என்ன சூழ்நிலையில அவ வேணாம்ன்னு சொன்னான்னு தெரியல. ஒருடைம் பேசி பாரு. இல்லை உன் விருப்பம் தான்." என அவனுக்கு தோன்றியதை கூற, பிரதீஷ் அவளிடம் பேசப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான்.
வேறு வழியற்று யாதவே அவளுக்கு அழைத்தான். ஓரிரு அழைப்புக்கு பின் அழைப்பை ஏற்றாள்.
"ஹலோ.. யாரு?"
"நான் யாதவ் பேசுறேன். பிரதீஷ் ஃபிரண்ட்."
"ம்ம்.. சொல்லுங்க என்ன விஷயம்?"
"விஷயமே நீ வேணாம்ன்னு சொன்னது தான் மா.. ஏன் அப்படி சொன்ன? யாருனால உனக்கு பிரச்சனை?"
"யாதவ், எனக்கு இதை பத்தி பேச இப்போ நேரமில்லை. சொல்ல போனா நான் முடிஞ்சு போனதை பத்தி ரீ கால் பண்ணுறது இல்லை.. ப்ளீஸ்.. எனக்கு இது சம்மந்தமா போன் பண்ணாதீங்க..
இது ரிலேட்டடா நான் உங்க பிரண்ட் கிட்ட எல்லாம் பேசிட்டேன். ப்ளீஸ் எனக்கு நிறைய ஒர்க் இருக்கு நான் போனை வைக்கிறேன்." என்றவள் யாரோ ஒருவள் போல் பேசி போனை வைக்க..
பிரதீஷ் தான் கொதித்து போயிருந்தான் அவளின் பேச்சில். நேரில் இருந்திருந்தாள் நிச்சயம் தக்க வெகுமதி பரிசாக அளித்திருப்பான்.
"நான் தான் சொன்னேன்ல. அவளை எவனோ நல்லா கீ குடுத்து விட்டு பேச வைக்கிறாங்க. அது என் தாத்தாவா கூட இருக்கட்டும். இவளுக்கு எங்க டா போய்டுச்சு அறிவு?"
"டேய் அவ வேணாம்ன்னு சொல்லறா. நீ ஏன் போனவளை பத்தியே பேசிட்டுருக்க?"
"ஷியாம், நீ நினைக்கிற மாதிரி இல்லை டா. அவளை ரொம்ப நம்புனேன். ஏன்னா, அவ பேசுன விதம் அப்படி. அதான் இப்போ கூட இதை டையஜிஸ்ட் பண்ண முடியல."
"நீ சரின்னு சொல்லு நான் தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.." என யாதவ் வழக்கம் போல் அவனது டையலாக்கை பேச, ஷியாம் தான் கலகலவென சிரித்தான்.
"டேய் முட்டாளா நீ? வேணாம்னு சொல்லுறவ முன்னாடி கெத்தா வாழணும் டா. அதை விட்டுட்டு இப்போ தான் கடத்துறேன். கட்டுறேன்ன்னு பேசுற." என அவன் அளித்த பதில் ஒருக்கணம் பிரதீஷை ஆழ்ந்து யோசிக்க வைத்தது.
அதே நொடி, "மச்சி நீ என்ன முடிவுல இருக்க? கல்யாணத்துக்கு ரொம்ப நாள் இல்லை. ரெண்டே வாரம் தான் இருக்கு.
அவ மாதிரி இவ இருக்க மாட்டா. வந்தா தொலைஞ்சு போனான்னு நினைச்சுக்கோ. இனியாவது நல்லது நடக்கட்டும். ஏன் உன்னால அவ கண்ணு முன்னாடி நல்லா வாழ முடியாதா?" என யாதவ் கூறிய இறுதி வார்த்தை ஏதோ ஒன்றை நினைவுறுத்தியது.
அது வேறொன்றும் அல்ல. அன்று அவள் விட்டு சென்றால் என்ன செய்வாய் என கேட்டதற்கு, மூன்றாவதாக ஒன்று உள்ளது என்றான். அது அவன் கூற நினைத்தது இது தான்.
'உன்னை விட சிறந்தவளை தேடி திருமணம் செய்து கொண்டு வாழ்வேன்.' என்பதை தான் கூறாமல், நடக்கும் போது கூறுகிறேன் என்றான். ஆனால், இன்று அது நிதர்சனமாக அவளே காரணகர்த்தா ஆகினாள்.
"போனவளை விட்டுட்டு வாழ்க்கையை பாரு. யாரையும் நம்பாதே."
"யாதவ், அதுக்கில்லை. இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா என் அப்பா, தாத்தா ஜெயிச்ச மாதிரி ஆகிடும். எனக்கு அவங்க மூஞ்சியெல்லாம் பாக்கவே பிடிக்கல டா."
"மச்சான்.. இவளுக்கு முன்னாடி வந்தது அவ தான். கூட பிறந்தவங்களா இருந்தாலும், ஒரே குணத்துல இருக்க மாட்டாங்க."
"எஸ் பிரதீஷ்.. எனக்கும் யாதவ் சொல்லுறது சரின்னு தோணுது.. ஏன் போனவளை பத்தி நினைக்கணும்? அவளுக்கே பெரிசா ஃபீல் இல்லை. நீ மட்டும் ஃபீல் பண்ணி சாக உனக்கென்ன தலைவிதியா? இல்லை இவ என்ன பேரழகியா?"
சில நொடிகள் ஆழ்ந்து யோசித்த நண்பனை வெறித்திருந்தனர் இருவரும். பதில் சாதகமாக வரும் என்னும் நம்பிக்கையில். மீண்டும் முதலில் இருந்து அவன் துவங்க, யாதவ் தான் பொறுமையிழந்து கத்தி விட்டான்.
அதில் பிரதீஷே ஒரு நொடி அதிர்ந்து போனான்.
"டேய் மனுஷனா நீ? வேணாம்ன்னு சொல்லுறவளை விட்டுட்டு, எவ சரின்னு சொல்லுறாளோ அவளை கல்யாணம் பண்ணிக்கோ. சும்மா பைத்தியக்காரன் மாதிரி புலம்பாதே."
அவனது கர்ஜனையில், பிரதீஷ் வாயே திறக்கவில்லை. சற்று விலகி சென்று மெத்தையில் அமர்ந்தவன், தீவிரமாக யோசித்தான்.
"நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் மச்சான். அவ எங்கையும் தூரமா போக கூடாது இந்த கல்யாணம் முடியுற வரை. தாலி கட்டுற வரை அவ என் எதிர்ல இருக்கணும்!"
'ஒருவேளை மாத்தி கட்ட பிளான் பண்ணுறானோ?' என நண்பன் ஷியாம் யோசனையை உணர்ந்தவன், "அதுக்கு வாய்ப்பில்லை டா.." என்றான் உறுதியான குரலில்.
அவனது இம்மாற்றம், பிருந்தாவின் வருகையால் வசந்தமாகுமா?
தேன்மழை 💞
