மாமனே 15
முறைப்படி மாணிக்கவேல் மற்றும் மலர்விழியின் திருமணம் கருமத்தம்பட்டியில் நடக்க இருப்பதால், ஏற்கனவே சுந்திரவேலு அல்லி மலர் சார்பாக அவரது பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் வந்து மலர்விழியின் சொந்தக்காரர்களில் அதி முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து விட்டு சென்றிருக்க… அங்கேயும் செல்ல தான் மொத்த குடும்பமும் கிளம்பிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் வேதாமணி கதிரேசனை அழைத்து "பாப்பாவிற்கு எதாவது வேணுமானு கேட்டுட்டு வரியா கதிரேசா? போன போட்டாலும் எடுக்க மாட்டேங்கற! நீ கொஞ்சம் நேர்ல பார்த்து கேட்டுட்டு வாயேன்! தேவையான நகை புடவை ஏற்கனவே எடுத்ததெல்லாம் இருக்கு. அது தவிர அவளுக்கு ஏதும் வேணுமானு கேட்கணும்! அது மாப்பிள்ளைக்கு நேரா கேட்காத.. சமயம் பார்த்து கேளு" என்று அனுப்பி வைத்திருந்தார்.
அதை கேட்க தான் வந்திருந்தான் கதிரேசன். ஆனால் எங்கே கேட்க விட்டான் இந்த மாணிக்கவேல். அடிக்கு ஒருமுறை "விழி.." "விழி.." என்று அழைத்து அவன் வேலை வாங்க.. மாமன் மகள் கஷ்டப்படுவதை பார்த்த கதிரேசன் கடுப்புடன் வந்து விட்டான்.
திருமாறன் தங்கச்சி மகேஸ்வரியின் கணவர் சந்திரசேகர் மற்றும் மனைவியின் அண்ணன் கலியபெருமாள் ஆகியோரோடு பேசிக் கொண்டிருக்க..
மகளுக்கு எடுத்த நகைகளை தன் அண்ணி அமுதாவிடமும் நாத்தனார் மகேஸ்வரிடமும் காட்டிக் கொண்டிருந்தார் வேதாமணி!
யாருக்கு வந்த விருந்தோ என்று களஞ்சியம் தான் இது எதையும் கண்டு கொள்ளாமல் தனியாக துக்க கடலில் மூழ்கி இருந்தான்!
காரணம் இன்று மருமகனாக மறு வீட்டுக்கு வந்திருக்க வேண்டியவனை மணமகனுக்கு தோழனாக இருக்க சொன்னால் அவனுக்கு
வருத்தம் வருமா? வராதா?..
சோகம் பொங்குமா? பொங்காதா? துக்கம் பீறிடுமா? பீறிடாதா??
"போங்கடா!! நீங்களும் உங்க கல்யாணமும்!" என்று அவன் போனில் மூழ்கியிருக்க.. அப்பொழுது வேகமாக உள்ளேன் அந்த கதிரேசன் "மாமி தண்ணி குடுங்க!" என்று கேட்க.. முகத்திலும் குரலிலும் அத்தனை கடுப்பு அவனிடம்!!
"மலர்விழியை பார்க்க போனியான், என்ன ஏதோ கடுப்போடு வந்திருக்கியான்?" என்று பெண்களுக்குள் பேசிக்கொண்டே, அவனுக்கு நீர் மோர் கரைத்து வந்து கொடுத்தார் வேதாமணி.
குடிக்கும் வரை அமைதியாக இருந்தவர் "என்னாச்சு கதிரேசா?? கேட்டியா அவகிட்ட என்ன வேணும் வேணான்னு?" என்று வேதமணிக்கு "அட போங்க மாமி!! அந்த பய எங்க கேக்கவிட்டியான்?" என்று சத்தம் போட்டான்.
கதிரேசன் சட்டென்று மரியாதை இல்லாமல் பேசியது களஞ்சியத்துக்கு ஆர்வம் பொங்க தலையை தூக்கி "என்னடா அங்கே நடக்கிறது?" என்று பார்த்தான்.
பொதுவாக கதிரேசன் சட்டென்று யாரையும் இப்படி தூக்கி எறிந்து பேசி விடமாட்டான் களஞ்சியத்தை போல.. கொஞ்சம் பொறுப்பானவன் தான்.
"கதிரேசு என்ன இருந்தாலும் அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை! இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசக்கூடாது!" என்று சந்திரசேகர் மகனை கண்டிக்க..
"ஆமாம் கதிரு..!" என்று கலியபெருமாளும் ஒத்து ஊத..
"அட.. நீங்க சும்மா இருங்க பெரியப்பா! அவன் இன்னைக்கு என்ன மலரு புள்ள கிட்ட பேசக்கூட விடல தெரியுமா?" என்றதும் அனைவருக்கும் பக் என்றானது.
நகைகளை பார்த்துக் கொண்டிருந்த அமுதாவும் மகேஸ்வரியும் கூட அப்படியே அதை விட்டுவிட்டு இவன் அருகே வந்து "என்னடா சொல்ற புள்ளைய பார்க்க கூட விடலையா? பேசக்கூட விடலையா? அப்படியாடா அடச்சு வச்சிருக்காய்ங்க?" என்று வருத்தமாக கேட்டார் மகேஸ்வரி. அண்ணன் மகள் மீது அவருக்கு தனி வாஞ்சை தான்.
"இல்லையே முந்தாநாள் கூட நான் பேசினானே.. அப்ப கூட நல்லா தானே பேசினா?" என்று அமுதா தாடையில் கை வைத்து சந்தேகமாக கேட்க…
"நீங்க வேற பெரியம்மா.. அவன் இன்னைக்கு அடிச்ச கூத்துக்கு எனக்கு வந்த கடுப்புக்கு.. மலர் பிள்ளைக்காக அமைதியா இருந்துட்டேன். ஆனா இந்த மதுரைக்காரன் யாருன்னு அந்த கோயம்புத்தூர் குசும்பு பிடிச்சவனுக்கு காட்டுறானா இல்லையானு மட்டும் பாருங்க!" என்று பல்லை கடித்துக் கொண்டான்.
வேதாமணிகோ மொத்தமும் பதறியது நெஞ்சம்! கொஞ்ச நாள் முன்னால் வந்த மாணிக்கவெலின் அக்கா மாமா இருவரும் தன்மையாக தான் பேசி விட்டு சென்றார்கள். ஃபோனில் அழைத்து சுந்தரவேல் அல்லிமலர் கூட அவ்வளவு அன்பாக தான் பேசி உறவுகளையும் அழைத்து இருக்க.. "இவன் என்ன திடீர்னு இப்படி பேசுறியான்? தலையில் குண்ட இல்ல அணுகுண்ட தூக்கி போடுறியான்!" என்று பதைப்பதைத்தவர், அவன் பக்கத்தில் அப்படியே அமர்ந்து விட்டார்.
"என்னன்னு சொல்லு கதிரேசா? எனக்கு அப்படியே படப்படனு வருது! இந்த பொண்ணுக்கு கல்யாணத்தை ஒன்னு முடிக்கறதுக்குள்ள நாங்க படுற பாடு எங்களுக்கு தானேன் தெரியும்! என்னால முடியல…" என்று அவர் முந்தானையில் மூக்கை உறிஞ்ச…
"அதுக்கு நாம என்ன பண்ண முடியும் மாமி! அவதான பாத்து விரும்பி கட்டிக்கிட்டா.. அந்த ஆளு என்கிட்ட பேசக்கூட இல்ல தெரியுமா? நான் போனப்ப அப்பதான் மாடியில் இருந்து தூங்கி எந்திரிச்சு வந்தவர் என்னைம பாத்து வாங்கன்னு சொல்லிட்டு போய் ரூம்குள்ள போயிட்டாரு.. அதுக்கு அப்புறம் மலருபுள்ள என்கிட்ட பேச வந்தா..
"வந்தா… வந்தா…" என்று மொத்த குடும்பமும் அவன் முகத்தை தான் பார்த்தது. ஏன் கட்டிலில் படுத்திருந்த களஞ்சியம் கூட சுவாரசியமாக எழுந்து அமர்ந்து விட்டான்.
"விழி.. விழின்னு அத்தனை தடவை கூப்பிடுகிறாரு! அடிக்கு ஒரு தரம்
கூப்பிட்டு விழி பிரஷ் எடுத்துட்டு வா.. விழி குழாயில் தண்ணீர் திறந்துவிடு.. விழி டவுல் எடுத்துட்டு வானு அத்தனை வேலை கொடுக்கிறார்! ஏன் இவள கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி இதெல்லாம் யாரு செஞ்சா? அந்த ஆள் தானே செஞ்சுக்கிட்டாரு! இப்ப என்னடானா தொட்டத்துக்கும் விழி விழின்னு…. அதையும் அதட்டல் போட்டு கூப்பிடுகிறாரு.. எனக்கு பார்க்கவே ஒரு மாதிரியா ஆயிடுச்சு!!" என்று அவன் பேசிக் கொண்டிருக்க…
"அடப்பாவி..!!" என்று சுற்றி இருந்த பெண்கள் நெஞ்சில் கை வைக்க.. ஆண்களோ நமட்டு சிரிப்போடு தங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டனர்.
"பாத்திங்களா நான் சொல்லும்போது உங்களுக்கே இவ்வளோ அதிர்ச்சியா நெஞ்சை பிடிச்சிட்டு இருக்கீங்க… அப்ப பார்த்த எனக்கு எப்படி இருக்கும்?" என்றதும் மகேஸ்வரியோ மகனின் குமட்டில் ஒரு குத்து குத்தி "இப்ப மட்டும் இல்லடா.. உனக்கு எப்பவுமே கல்யாணமே நடக்காது! ஒரு அம்மாவா இதை சொல்லக்கூடாதுனு தான் நானும் பார்க்கிறேன். ஆனாலும் என் வாயாலே சொல்ல வைக்கிற பாரு… மதனி வாங்க.. அவன் கிடக்கிறான் போக்கத்த பய.." என்று எழுந்து சென்று விட்டார்.
அமுதாகவும் "நல்ல புள்ள போ நீ.. கொஞ்ச நேரத்துல எங்களை எல்லாம் பதற வச்சுட்ட!" என்று செல்ல..
வேதாமணியோ அதுவரையும் பிடித்திருந்த மூச்சை இழுத்து விட்டு கொண்டு "ஒரு நிமிஷம் என் உசுரே போயிடுச்சு மதனி.. உள்ளுக்குள்ள நடுக்கமே வந்துடுச்சு.. பார்த்தா இப்படி சொல்றியான்!" என்று மூவரும் சிரித்துக் கொண்டு மீண்டும் நகைகளை பார்த்து பத்திரமாக எடுத்து வைக்க சென்றார்கள்.
அமுதாவுக்கும் மகேஸ்வரிக்கும் மலர்விழி தங்களுக்கு மருமகளாக வரவில்லை என்று ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும், அதை மீறி அவளுக்கு பிடித்த வாழ்க்கை அவள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று நல்லெண்ணம் கொண்டவர்கள்!
உறவுகள் என்றாலே டாக்ஸிக் என்று இல்லை!! இது போல சில நல்ல உறவுகளும் இருக்கத்தான் செய்கிறது நம்மிடையே….
"யோவ் பங்காளி. .. என்னய்யா நடக்குது இங்க.. இவ்வளவு நேரம் அவன் வந்து மலர்புள்ளைய போட்டு அந்த பாடு படுத்துறான்னு சொன்னா ஒருத்தரும் கேட்காம.. நீ என்ன பைத்தியமா அப்படிங்கிற ரேஞ்சுக்கு என்னை பார்த்துட்டு போறாய்ங்க… எனக்கு தான் புரியல! இந்த விஷயத்தில் நீ கரை கண்டவன் தானே.. நீயாவது சொல்லுயா?" என்று களஞ்சியத்தின் வாயை புடுங்க…
களஞ்சியமோ அவனை நிமிர்ந்து பார்த்தவன் "அப்போ மலர் அங்க அவன் கூட சந்தோஷமா இல்ல.. அப்படித்தானே சொல்ற?"
"ஆமாய்யா.. அடிச்சு சொல்லுவேன்! நம்ம குலதெய்வம் அய்யனார் முன்ன சூடம் ஏத்தி அடிச்சு சொல்லுவேன். மலர்புள்ள அங்கன சந்தோசமா இல்ல.. இந்த பையன் அரட்டி உருட்டி அவளை படுத்தி எடுக்கிறான்" என்றான்.
களஞ்சியத்தின் எண்ணம் எப்படி இருந்தது என்றால்.. அன்று நாம் விட்ட வார்த்தைக்காக தான் மலரை தூக்கி அவன் திருமணம் செய்து இருக்கிறான் என்று புரிந்தது.
ஆனால் இது யாரிடமும் சொல்ல முடியாது அதைவிட மலர்விழிக்கு முன்னே அவனை தெரியுமா தெரியாதா என்றும் இவனுக்கு தெரியவில்லை. இவர்களை அவன் அவதானித்த வரை ஒட்டி ஒட்டாமல் பட்டும் படாமல் இருக்கிறார்கள் என்று புரிந்தவனுக்கு மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது கண்ணா என்றபடியே எழுந்தவன் "நான் போய் பாத்துட்டு வரேன் பங்கு! அதுக்கப்புறம் நம்ம முடிவு பண்ணலாம்.." என்றவன் தன் வண்டியை எடுத்துக்கொண்டு மாணிக்கவேலின் கடையை நோக்கி வந்தான்.
கடைக்கு காலையிலேயே வந்து விட்ட மாணிக்கவேல் காலையில் நடந்தவற்றை நினைக்கையில் அவன் தடித்து அதிரங்கள் கூட அழகாக சிரித்தது. அதிலும் கதிரேசனுக்கு முன்னால் மனைவியை சீண்டி விட்டு.. பின் தீண்டும்போது அந்த சுகமே சுகம்!!
ஊடலுக்குப் பின்னான காதல் கூட அழகுதான் என்று நினைத்துக் கொண்டு வேலையில் பார்த்தவனுக்கு, அவளுக்கு என்று திருமணத்திற்கு தான் ஒன்றும் எடுத்துக் கொடுக்காதது நினைவில் வர.. ஜீவனுக்கு ஃபோன் செய்தான்.
"ஜீவா கல்யாணத்துக்கு உங்களுக்கெல்லாம் ஏற்கனவே துணிமணி எடுத்தாச்சு தானே?" என்று கேட்க..
"அதெல்லாம் ஆச்சி அப்பவே பக்காவா எடுத்துட்டாங்க மாமா! ஏன் மாமா உங்களுக்கு எதுவும் வாங்கணுமா?" என்றதும் "எனக்கு இல்லடா உங்க அத்தைக்கு தான் வாங்கோணும்" என்றான்.
"இல்ல மாமா.. அன்னிக்கு அவிய்ங்க கடைக்கு போகும் போது முகூர்த்த புடவை எல்லாம் அத்தைக்கு புடிச்ச மாதிரி தான் வீடியோ கால்ல போன் போட்டு கேட்டு வாங்கினாங்க" என்றான் ஜீவன்.
"டேய் அது அவங்க எடுத்து கொடுத்ததுடா! நான் அவளுக்கு ஏதாவது எடுத்து கொடுக்கணும்னு ஆசைப்படறேன். இப்போ அவளை நான் தனியா அழைச்சிட்டு போக முடியாது. நீ என்ன பண்ற உன் அக்காளுங்கள ரெண்டு பேரையும் கூட்டிட்டு ஏதாவது சினிமாவுக்கு போ" என்றான்.
"அப்போ கடை மாமா?"
"அது கிடக்குது! அப்புறம் பாத்துக்கலாம்!!" என்றான் மாணிக்கவேல்.
"சொன்னது நீதானா??
சொல் சொல் என் உயிரே…" என்று ஜீவன் மறுபக்கம் இருந்து பாட்டு பட..
"எதுக்குடா இந்த பாட்டு பாடுற?" என்று இங்கே மாணிக்கவேல் பல்லை கடிக்க..
"அதில்ல மாமா இத்தனை வருஷத்துல நான் லேட்டா வந்தா அத்தனை திட்டு திட்டுவ.. இப்ப என்னன்னா பட்ட பகலுல் கடையை மூட்டிட்டு என்னை சினிமாவுக்கு போக சொல்ற பாத்தியா.. அதுதான் எனக்கு சந்தேகமாக இருக்கு? பேசுறது நீதானானு பாட்டு மூலமா நான் கேட்டேன்" என்றான்.
"டேய். ஒழுங்கா நான் சொன்னது செய்! இல்ல.." என்றதும், ஜீவனுக்கு மீண்டும் மாமனை சீண்ட ஆசை பிளாக்கிங்.. "என்ன மாமா… அப்போ பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா எங்களை எல்லாம் விட்டுடுவ அப்படித்தானே? அப்ப நாங்க எல்லாம் ஆரோ தானே!" என்று இவன் வராத கண்ணீரை துடைத்துக் கொண்டே பேச மீண்டும் அத்தனை கோபம் மாணிக்கவேலுக்கு..
"ஏன்டா உங்களுக்கு மாமனா எதுலடா நான் கொற வச்சேன்? என் பொண்டாட்டிக்கு இப்பதான் முதல் முதல ஒன்னு எடுத்து கொடுக்கிறேன். அவ கூட தேனுவையும் வள்ளியையும் கூட்டிட்டு போனா.. நல்லாவா இருக்கும் சொல்லு? ஏற்கனவே அவங்களுக்கும் இவளுக்கும் முட்டிக்குது! இவங்க ஏதாவது சொல்லி அவ மனசு கஷ்டப்பட்டால்.. சொன்னதை புரிஞ்சுக்கடா! சில பல விஷயங்களை இப்படித்தான் நம்ம பேலன்ஸ் பண்ணனும்" என்றான்.
"மாமா.. நீ ரொம்ப தேறிட்ட!! வர வர சம்சாரி ஆகிட்டே வர போ போ" என்று சிரித்தவன், "அப்படியே ஒரு ஐயாயிரம் கூகுள் பேல அனுப்பு. உன் அக்கா மகளுங்க ரெண்டு பேரும் வாய தொறந்தாளுங்கனா மூடவே மாட்டாளுங்க! இதுக்கெல்லாம் காசுக்கு நான் எங்க போறது?" என்றதும் அவன் சொன்னபடி பணத்தை அனுப்பி வைத்து மூவரையும் படத்துக்கு அனுப்பி விட்டு, "டேய் அப்படியே உங்க அய்த்தைம எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வர சொல்லு! அவளுக்கு சர்ப்ரைஸா நான் கூட்டிட்டு போறேன்" என்றான் மாணிக்கவேல்.
*மாமா.. ம்ம்ம்.. நீ நடத்து! நடத்து!! என்ஜாய் மாமோய்!" என்றான்.
வீட்டிற்கு சென்றவன், "அய்த்த மாமா உங்களை சாப்பாடு எடுத்துட்டு வரச் சொன்னாரு" என்றவன், "நான் சினிமாக்கு போலாம்ன்னு இருக்கேன்! நீங்க வரிங்களா?" என்று கேட்டதும்..
"போடா.. எங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்ல!" என்றனர்.
"சரி போங்க.. நீங்க ரெண்டு பேரும் தான் தனியா இருக்கணும்!" என்றதும் "தனியா வீட்டில் இருந்து போர் அடிப்பதற்கு அங்க போய் கொஞ்ச நேரம் தியேட்டர்லையாவது இருந்துட்டு வரலாம் வாடி" என்று தேன வள்ளியை கிளப்ப, இருவரும் ஜீவனோடு சென்றார்கள்.
மலர்விழிக்கு அவர்களோடு செல்ல விருப்பம் இல்லை. அன்று வாஞ்சையோடு கண்கள் நிறைய திருப்தியோடு மன்னவன் தன் கைப்பக்குவத்தை சாப்பிட்டதே மனதில் நிறைந்திருக்க.. முதல் நாள் என்று சைவமாக செய்தவள் இன்று அசைவம் செய்து கொண்டு எடுத்துச் சென்றாள்.
அதேசமயம் களஞ்சியம் மாணிக்கவேலின் கடைக்குள் நுழைந்து இருந்தான், அவன் முன் கட்டாக பணத்தை எடுத்து வைத்தான்.
*என்னது?" என்று அவன் கேட்க..
"முன்னையாவது நீ வேற.. எனக்கு கடன் கொடுத்தவன் மட்டும். இப்பதான் சொந்தமா போய்ட்டோமே.. அதனாலதான் பணத்தை திருப்பி கொடுக்க வந்து இருக்கேன்! என்னனு பாத்து பைசல் பண்ணிவிடு" என்றான்.
உறவு வேற தொழில் வேற என்று மாணிக்கவேல் தெளிவாக இருக்க.. கணக்கு எடுத்துப் பார்த்தவன் வட்டியை அவனுக்காக குறைத்துக் போட்டு சரியா இருக்கு என்று கடனுக்காக எழுதிக் கொடுத்த பத்திரத்தை கேன்சல் செய்து அவன் கையில் கொடுத்தான்.
"சரி. நான் என் கடனை கொடுத்
துட்டேன்! நீ எப்போ என் அத்தை பொண்ணு தர போற?" என்று கேட்டான் களஞ்சியம்!
திடுக்கிட்டு மாணிக்கவேல் அவனை பார்த்தான்.
