7
கீசா நீலாம்பரி முகத்தை பார்த்துக் கொண்டே ஸ்ரீராமன் கையை தொட்டு விட..
சட்டென்று அவனுக்குள் ஒரு மின்னல்!!
அந்நியனாக மாறி கண்களில் கனல் கக்கி செய்யாத தப்புக்கு தன்னை மாட்டி விடுவதாக முறுக்கிக்கொண்டு சட்டம் பேசியன்.. இப்போது ரெமோ மூடுக்கு மாற கண்களில் காதல் வழிந்தது.
டிராகன் ஆக மாறி கண்ணு வாயெல்லாம் நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தவன்.. சட்டென ரோமியோ.. அம்பிகாபதி ரேஞ்சில் கண்களில் காதலை வழிய விட்டு பார்த்தவனை கண்ட நீலாம்பரிக்கு புரிந்துவிட்டது அனைத்தும்!!
இரண்டே எட்டில் அவளை அணுகியவன் அவள் கரம் பிடித்து காதல் வசனங்கள் பேச ஆரம்பித்தான்.
"கண்ணே கனியமுதே..
மாசரு தங்கமே..
ஆனி முத்தே" என்று அவன் ஆரம்பிக்க..
இவள் கீசாவை முறைக்க..
'ஆமாம்ல, நம்ம நீலுக்குட்டி செந்தமிழில் பேச கூடாதுன்னு நமக்கு எச்சரிக்க விட்டுயிருக்கால' என்று சட்டென்று ஞாபகம் வர.. சட்டென்று அது கையை சூழட்ட, ஸ்ரீராமின் பேச்சும் மாறியது.
"ஹாய் செல்லம்..
எதுக்கு பப்ளிக் ப்ளேஸ்ல பெண்ணே..
லவ் பண்ண வைக்கிற உன்னை..
இங்கே இருக்கிறதெல்லாம் பண்ணை..
விடமாட்டார்கள் லவ் செய்ய என்னை.
வா சென்று விடலாம் சென்னை.."
இடையிட்ட நாராயணன் "தம்பி!!" என்று அதட்ட..
"எவன்டா அவன் வெண்ணை"
டிஆர் ஸ்டைலில் ஆரம்பித்து வெளுத்து வாங்க.. நீலாம்பரியோ திணறித்தான் போனாள்.
''ஐயையோ!! இதென்னடா வம்பா போச்சு.. செந்தமிழில பேசாதேனு தானே சொன்னா, எதுகை மோனையில் பேசிக் கொல்லுறானே.. அடேய் கீசா போதும்டா உன்னோட ஆட்டம் பாவம்டா பஞ்சாயத்துக்கு வந்தவுக எல்லாம்' என்று தன்னை சுற்றி பார்க்க..
நண்டு சிண்டு முதல் நரை விழுந்த கிழடுகள் வரை அனைவரும் ஸ்ரீராமனின் இந்த புதிய அவதாரத்தை ஆவென வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீராமனோ கையில் பிடித்திருந்த அவள் கையை ஒரு சுழட்டு சுழட்ட, அதை எதிர்பார்க்காத நீலாம்பரியோ சுற்றி சுழல, சட்டென்று அவள் இடுப்பை பிடித்து தன்னருகே இழுத்து சுற்றியவளை சாய்த்து அவள் முகம் பார்த்து அடுத்த காதல் வசனங்களை பேச தயாரானான். நாராயணனுக்கு இங்கே நடந்தது எதுவும் சற்றும் நம்ப முடியவில்லை தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்ணை நன்றாக கசக்கி விட்டு மீண்டும் பார்க்க..
ஸ்ரீராமனா இது..
நம் கண் எதிரே வளர்ந்த ஸ்ரீராமனா இது.. அனுமனுக்கே டப் கொடுத்த ஸ்ரீராமனா இது.. என்று அதிர்ச்சியானார்.
"நீ முதல்ல உன்ற கையை எடுடா என்ற இடுப்பிலிருந்து.. நீ எடுக்கல உனக்கு முட்ட மந்திருச்சி வைச்சுடுவேன்" என்று நீலாம்பரி கண்களை உருட்டி அவனை பயமுறுத்த..
"ஏற்கனவே மந்திரிச்சி விட்ட மாதிரி தானே உன்னையே சுத்திட்டு இருக்கிறேன்.. இதுல முட்டையும் மந்திரிச்சி வச்சா.. இன்னும் நல்லா பத்திக்கும்.. அப்புறம் பத்தாவது மாசமே குவா.. குவா தான்" என்றவன் ஒரு விரலால் அவள் கன்னத்தை நிமிண்டியவாரே கூறினான்.
நாராயணனும் அதிர்ந்து எழுந்து " டேய் ஸ்ரீராமா.. அந்த பொண்ண என்றா பண்ற..
விடுடா.. எத்தன பேரு கூடி நிற்குறோம் பஞ்சாயத்துல.. என்ற முன்னாடியே அந்த பொண்ண இந்தப் பாடு படுத்துற அப்போ தனியா இருந்தா இன்னும் என்னென்ன பண்ணி இருப்ப" என்று அவனிடம் கோபமாக கத்த..
அப்படி ஒரு ஜீவன் அருகிலிருந்து கத்துவதை கூட சற்றும் கண்டு கொள்ளாமல் இவன் காதல் செய்து கொண்டிருந்தான். தன்னை சிறிதும் கண்டு கொள்ளாமல் இருப்பவனைப் பார்த்து நாராயணனுக்கு இன்னும் பிபி எகிற.. அவருக்குப்பின் நின்றிருந்த அல்லகைகளோ நாட்டாமையின் உத்தரவின்றி எதுவும் செய்ய முடியாது என்று கையை பிசைந்து கொண்டு நிற்க.. சங்கரபாண்டியன் இதையெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்.
'இவ்வளவு நாளாக நாட்டாமை இருக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டமன்னு நீ தெரிஞ்சுக்கோ' என்று நினைத்தவாறு மகனின் சேட்டையும்.. நாராயணனின் கோபக் கோட்டையையும் கண்டு அசட்டையாக அமர்ந்திருந்தார்.
இவ்வளவுக்கும் காரணமான கீசாவோ, குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது நீலாம்பரியை பார்த்தவாறு..
ஸ்ரீராமனோ அவள் கண்கள் மூக்கு உதடுகள் என்று ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்துக் கொண்டே இருந்தான். நீலாம்பரிக்கோ அவனது பிடியில் இருந்து ஒரு இன்ச் கூட நகர முடியாமல் இருந்தது.
அதேநேரம் நாட்டாமை வீட்டுக்கு சென்ற அவ்வூரைச் சேர்ந்த ஒருத்தன், "ஏஏ அப்பத்தா நீ இங்கன என்ன பண்ணிட்டு இருக்க.. உன்ற பேரன் பஞ்சாயத்துல எல்லாரு முன்னாடியும் அந்த பொண்ணு லவ் பண்றேன்னு அலம்பு பண்ணிட்டு நிற்கிறான்.. சீக்கிரம் வந்து அந்த பொண்ண காப்பாத்து" என்று கூறி விட்டு செல்ல, சொர்ணமும் நாச்சியும் பதறிக்கொண்டு பஞ்சாயத்துக்கு ஓடி வந்தனர்.
ஸ்ரீராமன் செய்வதை தாங்கமுடியாத நாராயணன் சங்கரபாண்டியன் பார்த்து "என்றா சங்கரா இதெல்லாம்? இவ்வளவு நேரமும் உன் மூஞ்சுக்காக தான் பார்த்தேன்.. இனியும் இவன் செய்றதை பார்த்து சும்மா இருக்க மாட்டேன்.. அப்புறம் கொடுக்குற தண்டனைய ஏத்துக்கனும்" என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு அவர் வீராவேசமாக பேசு.. சங்கரபாண்டியனோ கால் மீது கால் போட்டு "உன்றனால என்ன முடிஞ்சது பார்த்துக்கோ நான் எதுக்கும் தலையிட மாட்டேன்" என்றார்.
முகம் முழுதும் காதலோடு..
முறுக்கிய மீசையும்.. கட்டுமஸ்தான உடலும்.. விரிந்த மார்பும்.. திரண்ட புஜங்களும்.. அந்த பசங்களுக்கு இடையே கட்டுண்டு இருந்த தானும்.. என்ன மாதிரி தான் உணருகிறோம் என்று நீலாம்பரிக்கு புரியவே இல்லை.. உண்மையில் சுயநினைவோடு ஸ்ரீராமன் அவளை நெருங்கவில்லை தான். ஆனாலும் அருகிருந்த வசீகரத் தோற்றம் அவளின் பூட்டி வைத்திருந்த ஆள்மனதையும் சற்றே அசைத்து தான் பார்த்தது. ஆனால் சட்டென்று நீலவேணியும், நல்லமருதுவும் கண்கள் முன்னே வந்து போக.. மனதில் சில நிமிடமே ஆனாலும் வந்த சலனத்தை மறைத்தாள் அவள்.
தன் பலம் கொண்ட மட்டும் ஒரே தள்ளாத ஸ்ரீராமனை தள்ளிவிட்டு அவள் முயற்சிக்க..
அந்தோ பரிதாபம் ஏற்கனவே உடல் வலிமை கொண்ட ஆண் மகன், கூடவே கீசாவின் மந்திரமும் சேர அவளால் ஒரு அடி கூட அவனை நகர்த்த முடியவில்லை.
"வேணாம் கீசா.. இதுக்கு மேல தாங்காது.. ஒழுங்கா இவன விட்டு தள்ளிப் போ..
பேஸ்மென்ட் ரொம்பவே வீக்" என்று அவள் மனதுக்குள்ளேயே கீசாவிடம் கதற..
சட்டென்று அவளது அருகில் வந்து நின்றது கீசா. இதனிடம் கோபப்பட்டால் வேலைக்காகாது என்று புரிந்த நீலாம்பரி..
"கீஷ் குட்டி.. கீஷ் குட்டி.. நல்ல பையன இல்ல.. தயவுசெஞ்சு இவன விட்டு நாலெட்டு போடா..
உடும்ப புடியா புடிச்சிருக்கான்டா.. புரிஞ்சுக்கோடா" என்று அவள் மெல்ல முனுமுனுத்தாள்.
"அப்படின்னா எனக்கு ஒரு முத்தம் பார்சல் பண்ணு.. நான் அவனை விட்டறேன்" என்று வெட்கப்பட்டுக்கொண்டே முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அது கேட்டது.
'கொடுக்க சொன்னது என்னைய.. வெட்கப்படுறது அது' என்று நொந்தவள்..
"சரி போனா போகுது.. ஒன்னே ஒன்னு அதுவும் பறக்கும் முத்தம் தான் தருவேன்.. பாஞ்சு புடிச்சுகிட்டு போய்டணும்" என்று அவள் டீல் பேச..
அதுவும் ஓகே என்று வேக வேகமாக தலையாட்டியது.
மெல்ல தன் இதழ்களை குவித்து நீலாம்பரி முத்தத்தை பறக்க விட எத்தனிக்க.. சட்டென்று குவிந்த செவ்விதழ்களை தன் இதழ்களுக்குள் ஸ்ரீராமன் விழுங்கிவிட.. இது எதிர்பாராத நீலாம்பரி விழிகள் தெறிக்க அவனை பார்க்க.. அமர்ந்திருந்த சங்கரபாண்டியன் முதல் நாராயணன் வரை அனைவரும் அதிர்ச்சியில் எழுந்து நின்றே விட... அங்கிருந்த தாய்மார்கள் கூச்சத்தில் தங்களது முகத்தை மூடிக் கொண்டு அருகில் இருந்த தன் பிள்ளைகளின் முகத்தையும் கைகள் கொண்டு மறைக்க.. இளசுகளோ ஆ ஊஊஊ என்று கத்தி ஆர்ப்பரிக்க.. பெருசுகளும் கலிகாலம்.. கலிகாலம் என்று தங்கள் தலையில் அடித்துக்கொள்ள..
இவ்வளவு பேர் இவ்வளவு உணர்ச்சிகளை தங்கள் முகத்தில் காட்டிக் கொண்டு அந்த பஞ்சாயத்தே ரணகளமாக இருக்க..
அந்த நேரம் பார்த்து நான் நாச்சியும் சொர்ணமும் பஞ்சாயத்துக்குள் நுழைந்துயிருந்தனர்.
கீஷோ வட போச்சே என்று ஆழ்ந்த வருத்தத்தில், ஸ்ரீராமனை கட்டு வைத்திருந்த கட்டை விட்டுவிட..
முழுதாக கீசாவின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவந்த ஸ்ரீராமன், தான் ஒரு பெண்ணை அணைத்து முத்தமிட்டு கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் கண்களை விரித்தவன், அடுத்த நொடி அவளை அப்படியே விட்டுவிட்டு "ஐயோ அம்மா என்னைய யாராவது காப்பாத்துங்க.. என் கற்பு போச்சு.. போச்சு.. ஜெய் பஜ்ரங்கபலி!! ஜெய் பஜ்ரங்கபலி!!" என்றான்.
நிலை தடுமாறி கீழே விழுந்த நீலாம்பரி மெதுவாக கையை ஊன்றி இடுப்பு போச்சே என்று எழுந்து நின்றாள்.
"இப்படியாடா போட்டு உடைப்ப.. இடுப்பு போச்சு" என்று அவள் வச பாட..
"கொஞ்சமாவது பொம்பள புள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இதெல்லாம் இருக்கா உனக்கு.. பட்டப் பகல்ல.. நட்ட நடு பஞ்சாயத்தில.. முத்தம் கொடுக்குற.. அதுவும் ஒரு கட்டை பிரம்மச்சாரியான அனுமன் பக்தனுக்கே.." என்று தன் வாயை பொத்தி அதிர்ந்து அவன் கூற.. இதுதான் உண்மையான ஸ்ரீராமன் என்று புரியாத அதிர்ச்சியில் இருந்த அவ்வூர் மக்கள்.. "என்னமா நடிக்கிறான்யா.. அந்நியன் பார்த்திருக்கோம்.. சந்திரமுகி பார்த்திருக்கோம் அதுவும் பல டப்பிங் படங்கள எத்தனவாட்டி பார்த்திருப்போம்.. இது என்ன புதுசா இருக்கு?" என்று கூட்டத்தில் ஒருவன் கேட்க..
"ஒருவேள இது பஜ்ரங்கபலி ஆயிருக்குமடா" என்று மற்றவன் கிண்டல் செய்ய..
நாராயண கோ கோபம் எல்லை மீற, அருகே வந்து "இங்கே பாரு இப்ப இந்த இடத்துல நான் சொல்றது தான் முடிவு. சொல்றதுக்கு எல்லாரும் கட்டுப்பட்டே ஆகனும்" என்று உறுமினார்.
அவர் கோபப்படுவதை பார்த்த நாச்சியோ பாய்ந்து தன் மகனை காப்பாற்ற முயல சட்டென்று அவளது கையைப் பிடித்து தடுத்தார் சொர்ணம். "அவசரப்படாத நாச்சி.. அந்த கேண பைய நாராயண அப்படி என்னதான் தீர்ப்பு சொல்லுறானு பாப்போம்.. ஒருவேளை தீர்ப்பு நமக்கு சாதகமாக மாறினாலும் மாறலாம்" என்றப்படி நாச்சியை சொர்ணம் அடக்கி வைத்தார்.
"ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாமல் அந்த பெண்ணை பாக்குறதே, பின்தொடறதே தப்பு.. ஆனா நீ அதை எல்லாம் தாண்டி இந்த பஞ்சாயத்துல இத்தனை பேருக்கு முன்னாடி நின்னு கட்டிபிடிக்கிற.. காதல் வசனம் பேசுற.. முத்தம் கொடுக்கிற.. இனிமே இந்தப் பிள்ளைய எவன் கட்டிக்குவான்.. பொம்பள பிள்ளைங்க கிட்ட வம்பு பண்றவங்களுக்கு காலங்காலமா நம்ப பஞ்சாயத்தில கொடுக்கிற தண்டன அந்த பொண்ணுங்க கையாலேயே சவுக்கடி தான்.. இல்லனா அந்த பொண்ணையே உனக்கு கட்டி வைக்கிறது. பொண்ணுக்கு உன்ற மேல விருப்பமில்லன்னு தெரிஞ்சுச்சு, அதனால அந்த பொண்ணு கையிலையே அவனுக்கு சவுக்கடி கொடுக்க வைப்போம்" என்று நாராயணன் நாட்டாமை மாதிரி தீர்ப்பு கூற..
சங்கரபாண்டியன் அமைதியாக இருந்தார் அதேநேரம் அவர் மகன் செய்தது பெரிய தவறு என்று அவரும் புரிந்திருந்தார். ஒரு தகப்பனாக பார்க்காமல் நாட்டாமையாக.. நல்ல மனிதனாக.. இந்த தண்டனை அவனுக்கு தேவைதான் என்று பொறுமையாக இருந்தார்.
நாச்சிக்கும் சொர்ணத்திற்கும் மனம் வலித்தது. நாட்டாமையின் பேச்சை மீற முடியாது அதே நேரம் தன் பேரன் வலிபடுவதும் அவரால் காண முடியாது. அவர் எதிர்பார்த்த தீர்ப்பு என்னவோ வேறு தான்..
எங்கிருந்தோ வந்த ஒரு கட்டுமஸ்தான உடம்பு காரன் ஒரு சவுக்கை நீலாம்பரின் கைகள் கொடுத்துவிட்டு செல்ல.. ஸ்ரீராமனுக்கு பயங்கர கோபமாக வந்தது.
அதேசமயம் அவன் தன் நிலைக்கு திரும்பும்போது அந்த பெண்ணை முத்தமிட்டு கொண்டிருந்தது உண்மை தானே!! தன்னை அறியாமல் ஏதோ நடக்கிறது என்பதை புரிந்து கொண்டான். மந்திர மாயம் என்ற ஏதோ செய்து இவள் தான் தன்னை அந்த மாதிரி மாற்றி வைத்திருக்கிறாள் என்ற எண்ணமும் அவனுக்கு தோன்றியது.
ஸ்ரீராமனை தண்டிக்க நீலாம்பரிக்கு மனது வரவே இல்லை.. எல்லாம் கீசாவால் வந்தது என்று அதை முறைத்துக்கொண்டே.. 'ஏதாவது செய்யேன் பாவம் அவன்' என்று இவள் கண்களால் கெஞ்ச..
கீசாவோ நின்ற இடத்தில் நின்றவாறே விரல்களால் ஒரு சொடுக்க, அடுத்த கணம் முற்றிலுமாக மாறி இருந்த ஸ்ரீராமன் சட்டென்று தனது சட்டைப் பொத்தான்களை ஒவ்வொன்றாக கழட்டி சட்டையை தூர எறிந்து தனது வாளிப்பான உடலை கைகளை மேலே உயர்த்தி காட்டி.. "நான் எந்த தீர்ப்புக்கும் தயார்தான்" என்றான்.
"நாட்டாமைகாரரே.. ஒரு பொண்ண கலங்கப்படுத்துனவனுக்கே அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறீக.. அப்போ மட்டும் அந்த பொண்ணோட விருப்பம் முக்கியமில்லையா? நான் ஒரு முத்தம் கொடுத்தா எனக்கு சவுக்கடியா?? இது எந்த ஊர் நியாயம்? இப்ப சவுக்கடி வாங்கிக்கிறேன், அப்புறமா கல்யாணம் கட்டிக்கிறேன்.. கசா முசா பண்ணிட்டு.. அடுத்த பஞ்சாயத்து கூட்ட ரெடியா இருங்க என்ற கல்யாணத்துக்கு" என்றவாறு அடி என்பது போல இருகைகளையும் விரித்து நீலாம்பரியை பார்த்தான் ஸ்ரீராம்.
உருண்டு திரண்ட புஜங்களுமாய்.. விரிந்த அகன்ற மார்புமாய்.. இருகைகளையும் விரித்து ஏதோ ஆணழகன் போட்டிக்கு போவது போல, நின்றிருந்த ஸ்ரீராமை பஞ்சாயத்து கன்னிகள் முதல் காளைகள் வரை ஆவென்று பார்க்க.. அடுக்கடுக்கான படிக்கட்டுகள் போல அமைந்திருந்த ஸ்ரீராமின் சிக்ஸ் பேக்கை பார்த்த நீலாம்பரிக்கும் இந்த ரணக்களத்தையும் மீறி
உள்ளே இருந்த சின்ன ரசிகை உள்ளம் ஜொள்ள தான் செய்தது.
அதை பார்த்த கீசா "நீலுக்குட்டி முழியே சரியில்லையே???" என்று யோசனையோடு இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தது.
அதே பஞ்சாயத்தில் ஆலமரத்திற்கு மேலே கிளையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு கீழே நடக்கும் கூத்துக்களையும் தன் காதல் கீசாவையும் பார்த்து பார்த்து மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தது மோகினி..
நீலாம்பரி
யை பார்த்தால் அடிக்க ரெடி போல் தெரியவில்லை.. அணைக்க ரெடி என்பது போல் அல்லவா தெரிகிறது!!
ரெடியா?? அணைக்கவா?? அடிக்கவா??
