அழகன் 5

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அழகன் 5

 

 

மெல்ல உள்ளே முதலிரவு அறையினுள் வந்தான் கள்ளழகன் கூர் கண்களால், தன்னவளை அழுத்தமாக பார்த்தப்படி..!

 

“அச்சோ பெருமாளே.. இந்த மாமா ஏன் இப்படி அக்யூஸ்ட் பாக்குற போலீஸ்காரர் மாதிரியே பாக்குறாரு.. நேக்கு ஏன் தப்பு செய்த அக்யூஸ்ட் ஃபீலிங் வர்றது?” என்று சர்வமும் ஒடுங்க தன்னை நெருங்கியவனை பார்த்தே நின்றாள் ஆண்டாள்.

 

மெல்ல மெல்ல அவளை நெருங்கியவன் வன் தேக்கு மர தேகமோ அவளது கொடி இடை முல்லை தேகத்தோடு உரசி விடாதவாறு நின்றான்.

 

அவன் நின்றிருந்த கோலம் மற்றவர்களுக்கு ஏன் ஆண்டாளுக்குமே கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்கின்ற தோரணையே கொடுக்கும்.. 

 

ஆனால் அவன் நின்றதோ.. ‘இந்த தேக்கு மரத் தேகக்காரனின் உடம்பில் முல்லை கொடிப் போல பற்றி கொள்ளடி..!’ என்று கண்களின் கவித்துவ பாஷையில்…!

 

ஆனால் பயத்திலேயும் படப்படப்பிலேயும் நின்றியிருந்து ஆண்டாளுக்கு இந்த நயன பாஷையெல்லாம் எங்கிருந்து புரிந்தது? 

 

அவளுக்கு புரிந்ததெல்லாம் அத்தை பையன் சற்று முரட்டு தேகக்காரன்.. கோபம் வந்தால் யார் என்று பார்க்காமல் கையை வீசுவிடும் ஆத்திரக்காரன்.. எந்த வம்பு சண்டைக்கும் தானாக சொல்ல மாட்டான், ஆனாலும்.. வந்து வம்பு சண்டையை சும்மா விடாத சண்டியக்காரன்.. என்று இப்படியாக பலவிதமாக அவள் உருவகப்படுத்திக் கொண்டிருந்தவனின் உள்ளத்தின் ஓரத்தில் இவள் ஒருத்திக்காக உருவாகியிருக்கும் அந்த நேசத்தை உணர்ந்து இருப்பாளா? 

 

ம்ஹூம்.. வாய்ப்பே இல்ல ராசா..!

 

அதற்காக இவள் மேல் ஒரு தலை காதல் கொண்டு எல்லாம் அவன் சுற்றவில்லை. 

 

ஆனால் இருவருக்கும் தான் திருமணம் என்ற பின்.. அவளை மனதில் நிறுத்திப் பார்த்தான்.. மனைவியாய்..!

 

“இந்த பொம்மையையா நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்?” என்று சிரிப்புதான் வந்தது அவனுக்கு. அதிலிருந்து அவனின் செல்ல ‘பொம்மா’ ஆனாள் ஆண்டாள். அவளுக்கு தெரியாமலேயே..!

 

“ஏன் இப்படி பயந்து ஓரமா நிக்குற? வா.. வந்து.. அங்கன உட்காரு..” என்றவன் அவளது கையை பற்றியவுடன், இன்னும் நடுங்கினாள் ஆண்டாள்.

 

கல்யாணம் முடிந்ததிலிருந்து இவள் முதல் இரவு அறைக்குள் நுழையும் வரை.. விதவிதமாக வித்தியாசமாக அறிவுரைகள் அவளுக்கு..!

 

உள்ளே சென்றவுடன், எப்படி கணவனை வணங்க வேண்டும்? எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்? என்று அத்தனை பாடம் படித்தார் இரங்கநாயகி..!

 

அவர்களின் அந்தரங்கத்துக்குள் அசிங்கமாக தலையிடாமல் பொத்தாம் பொதுவாக பெண்ணுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார்..!

 

இந்த அறையில் கால் வைக்கும் நொடி வரை.. “மாமா வந்தா பால் சொம்பை கொடுக்கணும்? அப்புறம் அவரை சேவிக்கணும்? மாமா மனசு கோனாம பேசணும்? என்று உரு போட்டுக் கொண்டிருந்தவளுக்கு அறைக்குள் கால் வைத்து அடுத்த நொடி..

 

மிதமான அலங்காரத்தில் இருந்த கட்டிலையும், அதற்கு அருகில் இருந்த தட்டில் இருந்த பழங்களையும் கண்டு அவளுக்கு அன்னை சொன்னதெல்லாம் மறந்து போனது. 

 

பற்றாக்குறைக்கு ஏற்கனவே அவன் அடித்தது வேறு சமய சந்தர்ப்பம் இன்றி இந்நேரத்தில் தான் அவளுக்கு ஞாபகத்திற்கு வர வேண்டுமா? இரங்கநாதா..!!

 

அக்கணம் முதல் அவன் அடித்தபோது நின்றிருந்த அந்த அவனின் கோப தோரணையை மனதிற்குள் அவளுக்கு உருவகம் எடுக்க.. அன்னை சொல்லிக் கொடுத்தது… போதாதுக்கு ருக்மணி மற்றும் பெரியவர்கள் போதித்த அறிவுரைகள் அத்தனையும் மறந்து போனது..!

 

இப்படி அவள் தன்னுள்‌ யோசனையில் இருக்க மெல்ல அவளது கைகளைப் பிடித்து மென்மையாக இழுத்தான் கள்ளழகன்.

அவளோ ஏற்கனவே சற்று மெல்லிய தேகமுடையவள், அவளின் மென்மையான இழுப்பிற்கு பொத்து என்று அவன் மீது வந்து சரிந்தாள் பாவை..!

கண்களை கொள்ளை கொள்ளும் அழகிய மனைவி..! அதுவும் புத்தம் புதிய மனைவி..!

பாலில் இழைத்த வெண்ணிற மென்மையான தேகத்தோடு.. கருவிழிகள் இரண்டும் அந்த நீள்விழிகளில் அலைந்தாட.. இவன் சற்று அழுத்தமாக மூச்சு விட்டால் சிவந்துவிடும் கனிந்த கன்னங்களோடு.. பயத்தில் துடுக்கும் உதடுகளோடு.. மிதமான அலங்காரத்தில் தலையில் சூடியிருந்த மதுரை மல்லியின் வாசத்தோடு.. தன் அருகில் தனக்கே உரிய கஸ்தூரி மஞ்சள் வாசத்தோடு நின்றிருக்கும் மனையாளை கண்டதே அவனுக்கு பெரும் போதை என்றால்.. 

கழுத்து வளைவில் திமிறும் இளமை எழுச்சியை அதீத மோகத் தவிப்புடன் ரசித்தான் கொண்டவனாய்..! அவளை கொள்ளை கொள்ள போகிறவனாய்..!

அவனது கண்களில் ஏறிய மோகம் அதனை சிவக்க செய்ய.. பேதை அவளோ கணவன் கோபம் கொண்டான் என்று தப்பர்த்தம் செய்து கொள்ள..

“சாரி மாமா.. சாரி மாமா.. அம்மா சொல்லித்தான் விட்டா நேக்கு தான் கொஞ்சம் டென்ஷனுல மறந்துடுச்சு. செத்த தள்ளுங்கோ..” என்றவள்,

“மொதல்ல பாலை கொடுக்கணும்..” என்று சிறிது நேரம் தனக்குள்ளே குழம்பியவள்..

“சரி முதல்ல சேவிச்சுட்டு அதுக்கப்புறம் பால கொடுப்போம்” என்று சடார் என்று அவன் காலில் விழ இவனோ அவளிடம் இதை எதிர்பாராமல் பதறி இரண்டு எட்டு பின்னால் நகர..

“என்னடி செய்ற?” என்று கேட்டான்.

“சீக்கிரம் என்ன ஆசிர்வாதம் செய்யுங்கோ னா.. அடுத்தடுத்து வேலை இருக்கோனோ?” என்று அவள் கேட்ட தினுசில்..

அவனுக்கு ‘நம்ம மாமன் மகள் ஆண்டாள எப்படி? நம்ம மேல உள்ள பயம் போயிடுச்சா இவ்வளவு தெளிவா பேசுற?’ என்று ஒரு கணம் ஜெர்கானாலும்,

‘இல்ல.. இல்ல.. அதுக்கெல்லாம் இவள் லாயக்கே இல்ல..!’ என்று புரிந்தவன்,

“இதெல்லாம் உனக்கு யாருடி கற்றுக் கொடுத்தா? முதல்ல எழுந்திரு..!” என்று அவளை எழுப்ப..

“அதுல முடியாது மாமா. முதல்ல நான் ஆசீர்வாதம் பண்ணுங்கோ?” என்று அவள் அடம் பிடிக்க..

“சரி ஆசீர்வாதம் பண்ணிட்டேன் நூறு வருஷம் தீர்க்க சுமங்கலி இரு..! இப்ப எந்திரிக்கிரியா?” என்றான் அழகன்.

“தேங்க்ஸ் னா..!” என்றவள் சற்று முன் அவள் கொண்டு வந்து வைத்திருந்த வெள்ளி சொம்பிலிருந்து பாலை அவனுக்கு ஊற்றி கொடுக்க..

“இங்கன பாரு.. இந்த நமத்து போன ஈர வெங்காய சடங்கு எல்லாம் முதல்ல விடுடி..! என்று அவன் சொல்லி கொண்டு இருக்க..

“அச்சோ நீங்க இத வாங்கி குடிங்க னா.. இல்லன்னா நாளைக்கு காத்தால அம்மா கேப்பா” என்று உதடு பெருக்கி சற்றே சோகமாக கேட்டது மனைவியின் உதட்டில் நிலைத்தது அவனது மோக கண்கள். 

“எது இந்த பால உங்க அம்மா கேட்பாங்களா?” என்று அவன் சற்று நக்கலாக கேட்க..

“அது இல்ல.. அது இல்ல.. னா.. இந்த மாதிரி.. இந்த மாதிரி.. நீ சேவிச்சியா? இந்த மாதிரி.. இந்த மாதிரி.. உன் ஆத்துக்காரருக்கு பால் குடுத்தியா? னு கேட்பா னா?” என்று அவள் சொல்லிய விதம் சிறு பிள்ளை போல் அழகாக இருந்தாலும்.. தங்கள் அந்தரங்கத்தை ஏன் இருங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவித எரிச்சல் படற நெற்றியை நீவிக்கொண்டான் அழகன். 

குடிக்காமல் இவள் விட மாட்டாள் என்று புரிந்தவன், “கொண்டா.. எனக்கு டம்ளர் எல்லாம் பத்தாது.. சொம்போட கொடு” என்று வாங்கி மடமடக்கென்று குடித்தவனை, தன்னை மறந்து ஆவென்று வாயை பிளந்து பார்த்தவளை கண்டவன், கொஞ்சம் அவளிடம் குறும்பு பண்ண தோன்ற, 

அவள் புறம் குனிந்து அவள் இதழ்கள் அருகே தன் இதழ்களை வைத்து.. ‘தன் வாயில் இருக்கும் பால் வேணுமா?’ என்று கண்களால் கேட்க.. அவ்ளோ தான் ஆண்டாள், வெலவெலத்து போனவள்,

“வேணாம்.. வேணாம் னா..!” என்று வேகமாக தலையை ஆட்டியவள், கட்டிலின் ஓரம் சென்று நின்று கொண்டாள். 

மெல்ல அவள் தன் கைகளை தூக்கிப் பார்க்க அதுவும் கிடு கிடுகிடுவென்று வெடவெடுத்துக் கொண்டிருந்தது.

“என்ன இந்த மாமா இப்படி எல்லாம் கேட்கிறார்.. ச்சே.. யாராவது எச்சில சாப்பிடுவாளானோ? அபச்சாரம்.. அபச்சாரம்..!” என்று தாம்பத்தியத்தின் அரிச்சுவடியே தெரியாமல் முதலிரவு அறைக்குள் வந்தவளுக்கோ தேகம் எங்கும் நடுங்கியது..!

“இப்போ உள்ள புள்ளைங்க எல்லாம் எவ்வளவு விவரமா இருக்கு. அந்த வெப் சீரிஸ் இந்த வெப் சீரிஸ் பாக்குதுங்க.. இன்னும் ஏன்..‌ கிராமத்தில் உள்ள புள்ளைங்க கூட படு வெவரம். இவ எல்லாம் என்னத்த வாழ்ந்தா.. என்னத்த வளர்ந்தான்னு தெரியலையே? இவள புடிச்சி என் தலையில வேற கட்டி வச்சி.. இந்த தாய்க்கிழவி..” என்று மீண்டும் பல்லை கடித்தவன், 

“நமக்கு விதிச்சது இதுதான்..! இவள எப்படியாவது பேசி பேசி கரெக்ட் பண்ணி இப்ப ஃபர்ஸ்ட் நைட் முடிப்போம்” என்று முடிவு எடுத்து மெல்ல அவள் அருகே நெருங்கினான்.

ஆண்டாளோ இவன் கிட்ட நெருங்கியதுமே பட்டென்று தலையை கீழே குனிந்து கொண்டாள்.

 

“ஆண்டாளு.. என்னை பாரேன்” வலது கையால் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தினான். சொன்ன உடனே எல்லாம் அவள் தன் முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்க்கவில்லை.

இரண்டு மூன்று முறை அவனை பேச வைத்து, அவன் பொறுமையை சோதித்தே, மெல்ல அவள் முகத்தை நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். இருவரின் பார்வைகளும் மிக ஆழமாகப் பாய்ந்து இதயத்தில் லயித்தது.

 

 

“புடிச்சிருக்கா மாமன?” என்று அவன் பேச.. அவள் பார்வை மட்டுமே பேசியது..!

ஆனால்.. அழகனுக்கோ அவள் பார்வையின் பொருள் புரியவேயில்லை..!

அவளின் முகத்துக்கு அருகே காற்றில் ஆடும் முடிக் கற்றைகளை ஒதுக்கி காதோரம் ஒதுக்கி விட்டான். 

இவனை இவ்வளவு அருகே கண்டதும் நெற்றியில் அவளுக்கு வியர்க்க.. மினுக்கும் வியர்வைத் துளிகளை தன் ஒன்றே விரலால் துடைத்து விட்டான். 

பின் அவளுக்கு நெருக்கமாக முகத்தை முன்னால் கொண்டு போய் அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டான். 

உண்மையான முதல் முத்தம்..! இருவருக்குமே சிலிர்த்து சுருங்கியது தேகம்..!

அப்பாவை தவிர வேறு ஆண்களை அவள் தொட்டு பேசியதில்லை. அதுபோலத்தான் அழகனும் அம்மா தங்கை அப்பத்தா தவிர மற்ற பெண்களிடம் இரண்டடி தள்ளி நின்று தான் பேசுவான்.

அவனின் இரு இதழ்களின் பரிசம் அவளுக்குள் என்னவோ செய்தது. அதை வார்த்தைகளால் வடிக்க இயலாது. ஏதோ ஒரு உணர்வு சற்றென்று நரம்புகளில் ஊடுருவி விரைவில் உடல் எல்லாம் பரவி விரவ.. அந்த உணர்ச்சி குவியல்களை தாங்க இயலாது அவள் சட்டென கண்களை மூடினாள். 

அவனுக்கு அவன் முத்தமிட்டு அந்த மென்மையான பால் தேகக்காரியின் அந்த மென்மை பிடித்து விட.. அவள் கண் மூடா நின்று அழகில் மனதை தொலைத்தவன்,

அவளின் மூடிய கண்களை இமைகளின் மேல் அழுத்தமாக முத்தமிட்டான். பின் அவள் மூக்கில் தன் மூக்கைத் தேய்த்தான். அவளின் சிலிர்ப்பை ரசித்து அவள் மூக்கு நுனியை நாக்கால் வருடினான். 

அவள் மூச்சுக் காற்று விசுக்கென வெளிப்பட முகத்தை திருப்பினாள். அவள் கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும் முகத்தை நேராக இழுத்தான். அவள் பாதிக் கண்ணை திறத்து பயத்தில் அவனைப் பார்த்தாள். அவன் உதடுகள் அவள் உதடுகளை நெருங்கின.

“வேணாம் னா..” அழுத்திச் சொன்னாள்.

 

 

“என்ன வேணாம்?” என்றவன்‌ முகமோ அவளது காது மடலை கவ்வி ரகசியம் பேசியது.

 

 

“அது.. அது.. இந்த.. ஃபர்ஸ்ட் நைட்..!” என்று திக்கி திணறி சொல்லி விட,

 

 

“அப்போ.. ஃபர்ஸ்ட் பகல் ஓகெ வா டி பொம்மா” என்றுவன் அவள் கழுத்தில் தன் கற்றை மீசையால் குறுகுறுத்தப்படி கேட்க,

 

 

“இல்ல.. இல்ல.. கொஞ்ச நாளு.. நானும்.. நீங்களும்.. புரிஞ்சு.. அப்புறம்..?” அவள் இழுக்க..

 

 

“ஏட்டி.. நீ என்னடி இன்னும் எட்டீஸ் கிட் மாதிரி பேசிட்டு இருக்க.. உங்க அம்மாவோட சேர்ந்து அதிகமா பழைய படம் பாப்பியோ?” என்று நிமிர்ந்து அவளை பார்த்து கேட்க, ஆமாம் என்று அவள் தலையசைக்க 

 

 

“போச்சு..! இங்கன பாரு பொம்மா.. எப்ப நடந்தாலும் என்னைக்கு நடந்தாலும் நம்ம ரெண்டு பேருக்குள்ள அது நடக்க தான் போகுது. சரியா? இன்னைக்கு பயந்து.. நாளைக்கு பயந்து.. நாளன்னைக்கு தள்ளி போட்டுக்கிட்டே இருந்தா.. நாளும் கிழமையும் கூடவே நம்ம இளமை தான் சேர்ந்து போகுமே தவிர.. வேற ஒன்னும் நடக்க போறது இல்ல..!

நான் சொல்றது புரிஞ்சுதா?” என்று அவள் கன்னத்தை வருடியப்படி அழகன் கேட்க.. அவளோ எச்சில் விளங்கியபடி அவனையே பார்த்தாள்.

 

 

“அடியே ஸ்கூல் போனவ தானே நீ? உங்க மிஸஸ் ஸ்கூல்ல என்ன சொல்லி கொடுத்திருக்காங்க? அன்னனைனுக்கு பாடத்த அன்னனைக்கு முடிக்கணும்னு சொல்லி கொடுத்தாய்ங்களா இல்லையா?” என்று அவன் சற்றே வேகமாக கேட்க..

 

 

“ஆமா.. ஆமா..! நானும் ரொம்ப குட் கேர்ள் ஸ்கூல்ல அன்னனைக்கு ஹோம் வொர்க்க அப்பவே நான் முடிச்சிடுவேன் னா..!” என்றாள் அவசரமாக..

‘நான் ஒரு நல்ல பெண். நன்றாக படிக்கும் பெண்.!’ என்று அவனிடம் காட்ட வேண்டும் என்று..!

 

 

“அது சரி..! குட்..! அப்போ அதே மாதிரி தான் குடும்ப வாழ்க்கையும். அன்னனைக்கு ஒர்க்க அன்னனைக்கே முடிச்சிடனும்” என்றவன் அவளை இழுத்து அணைக்க அவள் உடலோ மழையில் நனைந்த புறா குஞ்சு போலவே நடுநடுங்கியது.

 

 

“ஏற்கனவே கல்யாண அலைச்சல்.. இதுல பக்கம் பக்கமா பேசி.. ம்ஹூம்.. இன்னைக்கு ஆவதற்கு இல்ல..” என்றவன் அவளை அப்படியே அலேக்காக தூக்கி கட்டிலில் போட்டு அவளை நெருங்க.. அவளின் மருண்ட மிரண்ட பார்வை அவனை ஏதோ செய்தது. 

 

 

“கொஞ்ச நேரம் இப்படி பாக்காதடி கிஸ் மட்டும் அடிச்சிக்கறேன.. இதுவும் இல்லனா எத்தனை வருஷம் பிரம்மச்சரிய வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லமா போய்டும்” என்றவன், அவளது அதரங்களை தன் அதரங்களின் இடைவெளியில் மென்று தின்றான்.

 

 

மெல்ல மெல்ல அவனது கைகள் அவள் உடலில் உறவாட.. அவளோ அவனது கை பற்றி தடுத்தாள்.

 

 

“ஏய்.. என்னாச்சு?” அவள் இடையை வருடியபடி கேட்டான். அவன் முகம் அவளது கழுத்தை முட்டியது.

 

“வ்வேணாம்ம்.. னா..” தலையாட்டி முனகினாள்.

 

“என்ன வேணாம்?” குறும்பாய் அவன்..!

 

“அங்கெல்லாம்.. தொட வேணாம்.. ஏதோ பண்றது” அவன் கையைப் பிடித்து இறுக்கினாள். ஆனால் இடையை விட்டு அவன் கையை நகர்த்தவில்லை.

 

“ஏய்.. தொட மட்டும்தான்”

 

“ஒரு மாதிரியாயிருக்கு னா.. நேக்கு” அவன் பக்கம் முகத்தை கொண்டு வந்தாள்.

 

“என்ன மாதிரி?” மோகனமாய் அவன்..!

 

“சொல்ல தெரியல னா…” தவிப்புடன் அவள்..! முணகிய அவள் உதடுகளை அவன் உதடுகளால் உரசினான்.

 

“அருவருப்பா இருக்கா?”

 

“இல்ல்ல்ல்ல” அவசரமாய் மறுத்தாள்.

 

“என் அருகாமையை விட்டு உடனே ஓடணும்னு தோணுதா?” மீண்டும் தெளிவுபடுத்திக்கொள்ள கேட்டான். 

 

“இல்ல இல்ல அப்படியெல்லாம் இல்ல னா” என்றாள் ஆண்டாள் அவசரமாக, தன்னை தப்பாக எடுத்துக் கொள்வானோ என்று பயந்து.

 

”இல்லையில்ல..! அப்போ இந்த சிறு சிறு தொடுக எல்லாம் பழகிக்கோ..” எனச் சொல்லிவிட்டு லபக்கென்று அவளின் தவித்த உதட்டை கவ்வினான். 

 

அவள் இன்னொரு கையை அவன் கழுத்தில் போட்டு முதுகில் இறுக்கியபடி தன் நகக் கண்களை அங்கே பதித்தாள்.

 

அதிலேயே அவளது நிலையைப் புரிந்தவன், இன்று இதற்கு மேல் அவளை படுத்த வேண்டாம் என்று எண்ணி அவள் விட்டு பிரிந்தவன் “சரி தூங்கு..!” என்றதும் நிஜமாவா என்று விழிகளில் சற்று நிம்மதி மின்ன கேட்டவளை கண்டவன் தன் உதட்டை கடித்து அவளை முறைத்து பார்த்தான். 

 

“நீ சொன்னியே அந்த பழகி பார்க்கலாம் அது வரைக்கும்..! ஆனா.. மாசக்கணக்கா எடுத்தன்னே அப்புறம் அந்த மாமனோட முரட்டுத்தனத்தை பார்ப்ப டி என் பொய்யா” என்றவன் அவளை தன் அருகிலேயே வைத்துக் கொண்டு உறங்கினான். அவளை இம்மியும் நகர விடவில்லை. 

 

மலை பாம்பு போல கைகளால் தன்னை இழுத்து வளைத்துக் கொண்டு உறங்கும் கணவனை கண்டவளோ பெருமூச்சு விட்டபடி “இப்படி இறுக்கி பிடிச்சு இருந்த எப்படி ஃப்ரீயா தூங்குறது?” என்று கணவன் தூங்கி விட்டான் என்று எண்ணி மெல்லிய குரலில் அவள் முணுமுணுக்க.. அதுவோ அவனது காதுகளில் தெளிவாக விழ,

 

“அப்போ.. ஃப்ரீயாவே படு..!” என்று அவள் முந்தானையில் கை வைக்க..

 

“அச்சோ னா.. நான் இந்த ப்ரீயா சொல்லல..! நீங்க கட்டிக்கிட்டே படுங்க” என்று கண்களை இறுக்க மூடிக்கொண்டவளை கண்டவனுக்கு மீசைக்கு அடியில் துடித்த சிரிப்பை அவளது கழுத்து மறைவில் மறைத்தான்.

 

மறுநாள் காலை சொக்கியம்மா அப்பத்தாவோ தன் முன்னால் தலைக்கு குளித்து முடித்து அழகே உருவாய் அடக்கமாய் நின்றிருந்த பேத்தியின் முகத்தை தான் அத்தனை கூர்ந்து பார்த்தார்..! அவர்‌ அனுபவத்தில் அறியாததா?

 

அவரின் பார்வையை அவளுக்கு நடுக்கம் முறை செய்தது “அச்சோ இந்த ஆச்சி நேத்து நடந்ததெல்லாம் கேட்டுருவாளோ? ஒண்ணுமே நடக்கலன்னு சொன்னா என் மேல கோபப்படுவாளோ?” என்று அவள் கைகளை பிசைந்து கொண்டு நான்று தோரணையிலேயே அவளை படித்தவர், 

 

“குளிச்சு வந்து முதல்ல விளக்கேத்தனும் கண்ணு. போய் விளக்கேத்தி சாமி கும்பிட்டுடு.. ஈர தலையை வெயில்ல உலாத்து. அப்போதான் தலைக்கு நீர் கோர்க்காம இருக்கும்” என்று வேற எதுவும் பேசாமல்.. கேட்காமல்.. அனுப்பி வைத்ததும் தான் அவளுக்கு அப்பாடி என்று நிம்மதியாக இருந்தது.

 

அப்பத்தா வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க வெயிலில் தலை உணர்த்திக் கொண்டிருக்கும் பேத்தியை அவர் பார்த்திருக்க..

 

அதே நேரம் மாடியில் இருந்து அவளைப் பார்த்து இருந்து அழகனோ, “ஏய் பொம்மா.. என்ன அதுக்குள்ள கீழ வந்துட்ட.. மாமனுக்கு செய்ய வேண்டிய வேலை எவ்வளவு இருக்கு.. வா வா.. சீக்கிரம் மேல வா” என்று சத்தமாக அழைத்தவனை கண்டு திடுக்கிட்டவள்.. பாசு தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கும் அப்பத்தாவைக் கண்டு ஈஈ எ

ன்று காதுவரை உதட்டை இழுத்து “மாமா கூப்பிடுறாங்க” என்று வேகமாக மேலே ஓடினாள்.

 

பேரன் வாழ்ந்திடுவான் என்று நம்பிக்கை முகத்தில் வர மெல்ல சிரித்துக் கொண்டார்.

 

தொடரும்..

 

This thread was modified 2 months ago by Jiya Janavi

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top