அவள் கதவை தட்டியதும், அவனே வந்து கதவை திறந்து அவளுக்கு வழி விட்டான்.
அவள் உள்ளே நுழைந்ததும், தாளிட்டு கொண்டான்.
இவளோ, உள்ளே நுழைந்தது முதல் அறையை சுத்தி பார்த்தாள், 'அந்த கால முறையிலனாலும் நல்லா விசாலமான வீடு தான்'
கட்டிலும் மிதமான அலங்காரத்தில் காட்சி அளித்தது.. பட்டும் படாமலும் பார்வையை ஓடவிட்டவள்.. 'எங்க அந்த வளந்து கெட்டவன்' என திரும்பி பார்த்தாள்..
அவனோ கைய மார்பில் குறுக்காக கட்டி அவளையே பார்த்தான்..
"இந்தாங்க, பால் ஷேர் பண்ணிதான் குடிக்கணும்னு அத்தை சொன்னாங்க" கையில் இருக்கும் குவளையை நீட்டினாள்..
அவன் அதை மதிக்காமல், "ஹ்ம்ம்" என டேபிளில் இருந்த ஒரு டம்ளர் எடுத்து நீட்டினான்.
"ஹ்ம்க்கும், இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை துரைக்கு" முனு முனுத்தபடியே அவனுக்கு அதில் ஊற்றினாள்..
பின், அவனும் இவளும் ஒரே நேரத்தில் குடித்து கொண்டார்கள் அவர்கள் அறியாமலே!!
இவள் அவனை மட்டுமே நோட்டம் விட்டுகொண்டிருந்தாள்.. 'என்ன பயபுள்ள இப்பவும் சிரிச்சு தொலைய மாட்டிக்கி' என்னவா இருக்கும் என யோசித்தபடி, அவன் குடித்த டம்ளரை வாங்க நீட்டிக் கொண்டே "என்ன ஒரு மாதிரியா இருக்கீங்க, பயமா இருக்கா" நக்கலாக கேட்டாள்..
அவளை நிதானமாக ஏறிட்டவன் "பின்ன இல்லையா, பைர்ஸ்ட் நைட் அன்னிக்கு ரே*ப்ல பண்ணுவேனு சொல்லிருக்கீங்க" அவனும் எகத்தாளமாகவே பதில் சொன்னான்.
என்ன உளறுறான் என யோசித்த படியே, அவன் கையிலிருந்த கிளாசை கிட்டத்தட்ட பிடுங்கினாள், பிடுங்கும் போது தான் அவள் மண்டையில் விளக்கு எரிந்தது..
"ஓஹ், அப்போ ஒட்டு கேட்ருக்கீங்க"
"காதுல விலாம இருக்குறதுக்கு நீங்க என்ன மெல்லமாவா பேசிட்டு இருந்தீங்க"
"ஹலோ ஹலோ, நாங்க எங்களுக்குள்ள பர்சனல் ஆஹ் பேசிட்டு இருந்தோம்"
"ஓஹ் ஹோ" என தன் தாடையை தடவிய படி "அப்போ அந்த பர்சனல்ள என்னை இழுத்துருக்க கூடாது"
"நான் ஒண்ணும் நீங்க தான் அதுன்னு வெளிச்சம் போட்டு காட்டி, உங்கள இழுக்கலயே.. அவளுக்கு எதுவுமே தெரியாது"
அவள் சொல்லுவது ஒரு வகையில் புரிந்தாலும், சிறிதும் அவனால் இறங்கி வந்து பேச முடியவில்லை..
" இருந்தாலும், அப்டி கூட என்ன உங்க பேச்சுக்குள்ள இழுக்கிறத நான் விருப்ப படல"
'போடா' என வெளியே தெரியாதவாரு முறு முறுத்துக் கொண்டு தலையை மட்டும் அசைத்தாள்..
கட்டில் கிங் சைஸில் இருந்தது. வலது புறமாக இருந்த சுவர் ஓரம் போட பட்டிருந்தது, அந்த சுவரில் ஜன்னலும் இருந்தது.
ஜன்னலின் வழியே சிலு சிலுவென காற்று வந்தாலும், என்னவோ கச கசப்பை உணர்ந்தாள்.
இவனோ எனக்கு என்னவென்று கட்டிலின் நடு மத்தியில் படுத்துவிட்டான்.
அவளுக்கு அயற்சி ஒரு பக்கம், சேலை படுத்தும் பாடு ஒரு பக்கம், கூடவே இவனிடம் இருந்து ஒரு ஆறுதலான பார்வை இல்லை என்பது எல்லாம் ஒரு விதமாக கடுப்பாக்கியது..
இதில் இவளுக்கு கொஞ்சம் கூட இடம் விடாமல் சட்டமா படுத்திருப்பது மண்டைய சூடாக்கியது..
இது சரி வராது என நினைத்தவள், முந்தானை பிலீட்ஸ் ஒற்றையாக விட்டாள்.. பேன்(fan ) வேகம் கூட கொஞ்சம் அதிகமா வைத்தாள்...
சுவற்றின் ஓரம் அவள் குறுக்கி படுக்கும் அளவு இடம் இருந்தது. அதை பார்த்தவள், லைட் அணைத்து விட்டு, அவனை தாண்டி போக முற்பட்டாள்..
ஏதோ பஞ்சு பொதி ஏறுன மாதிரி அவன் உணர்ந்தான்.. அவள் தான் என்று தெரிந்தாலும், " ஏய், இங்க என்ன பண்ற" என கத்திய படி காலை இழுத்து கொண்டான்..
நல்ல வேளை, அவன் மேல் விழாமல் தன்னை சமாளித்து கொண்டவள்..
"ஹ்ம்ம், சமைக்க வந்தேன்"
இவனிடத்தில் யாரும் இப்படி பேசுனது இல்லை, தள்ளியே நிற்பார்கள்.. இல்லை ஒரு வார்த்தை இரு வார்த்தையில் முடித்து கொள்ளுவர்..
இவள் குத்தர்க்கமா பேசுவது அவனுக்கு ஒரு விதமாய் சுவரசியத்தை குடுத்தது..
"நான் தான் இங்க படுத்துருக்கேன்ல, கீழ படுக்கலாம்ல.."
"ஏன் அத நீங்களே பண்ண வேண்டியது தானே"
"இது என் வீடு, நான் ஏன் கீழ படுக்கணும், நீ போய் கீழ படு.."
அவன் சொன்னவிதத்தில் அவளின் மனம் காய பட்டுப்போனது.. 'இதல்லாம் பார்த்தா முடியுமா.. விடு விடு' என அவன் சொன்னதை மனதிலே ஏற்றி கொள்ளாமல், "ஓஹ் ஹோ, கல்யாணம் ஆகிட்டுனா.. நீ பாதி நான் பாதி கேள்வி பட்டது இல்லையா.. அப்டினா உங்களில் பாதி நான்.. சோ, உங்களில் பாதியா இருக்குற எனக்கு, இந்த கட்டில்லயும் பாதி எனக்கு தான்.. ரொம்ப டயர்டு நான்... எனக்கு தூக்கமும் வருது.. குட் நைட் " என ஜன்னல் பக்கம் திரும்பி படுத்து கொண்டாள்..
அவன் வேணும் என்றே தான் அப்டி சொன்னான்.. அவள் கூட படுக்க விருப்பம் இல்லை.. அப்டி சொன்னால் ரோசம் வந்து கீழே போய் விடுவாள் என்று நினைத்தே அப்டி கூறினான்..
ஆனால் இப்படி ஒரு பதிலை எதிர் பார்க்கவில்லை.. கிறு கிறுத்துவிட்டது..
திரும்பி படுத்த அவளுக்கும் சற்று வியப்பு தான், தானா இவ்ளோ வாயாடுகிறோம்.. இத்தனைக்கும் அவனோடு பழகுனதும் இல்லை.. ஹ்ம்ம், ஏதோ ஒரு விதத்துல அவன் மேல ஒரு அபிப்ராயம் இருக்குதோ என்று எண்ணிய படி தூங்கிவிட்டாள்..
இவனும் அவளுக்கு முதுகு காட்டியப்படி திரும்பி படுத்துக் கொண்டான்..
நடுவில் இன்னோருவர் படுக்கும் அளவில் இடம் விட்டு படுத்திருந்தனர்!!!!
இடைவெளி நிரப்பப்படுமா - பொறுத்திருப்போம் ❤️
கதை பிடித்திருக்கிறதா... நிறை குறைகளை கூறவும்.. ❤️❤️ எதிர்பார்க்கிறேன்..